பக்கங்கள்

பிரபாகரன் - கண்ணீர் தேசம்

தமிழ் என்ற உணர்வு ரத்தத்தில் கொஞ்சம் அதிகப்படியாக இடம் பிடித்த கூட்டம் நாம். வேறு எந்த மொழி பேசுபவருக்கும் இல்லாத ஒரு பிரத்யேக மொழி வாஞ்சை, முரட்டு அன்பு நமக்கு உண்டு.

நம் அண்டை நாட்டில் நம் மொழி பேசும் கூட்டம், அதை நம் கூட்டம் என்று மனதில் கொண்டுள்ளோம்.

இன்று மிக துன்பத்தில் உள்ளது.

பிரபாகரன் நமக்கு நன்கு அறிமுகமாகி இன்று நம்மை விட்டு பிரிந்தும் இருக்கிறார். அவர் இறப்பை எப்படி பார்க்க என்று குழம்பி இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.

இறந்து போன ஒரு மனிதரை பழித்து பேசுவது முறை அல்ல என்ற தார்மீக சிந்தனை அல்லாது, ஓவ்வொரு மனிதனின் செயலும் சூழ்நிலையின் வெளிபாடு என்று நம்புவதால் எழுந்த எண்ணம் இது.

வன்முறை ஆதரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என்றாலும் ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்ற புனித சிந்தனை சாமானியருக்கும் வருமா என்ற கேள்வியும் உண்டு.

ஒரு தனி மனிதனாய் தொடங்கிய பயணம் ஒரு நாட்டையே ஆட்டி படைத்தது என்றால் ஜீரணிக்க கஷ்டம் ஆனா ஒரு வாழ்கை அது. பெரிய ஆற்றல் உடைய மனிதர் தான் இதை செய்ய முடியும்.

ஆற்றலும் வீரமும் விவேகமும் உள்ள ஒரு கூட்டத்தை சமைத்து விடுதலை தேடிய அவர் வேட்கை புரிவது கொஞ்சம் கஷ்டம். சராசரி பாதுகாப்பான நம் வாழ்கை போல் அல்லாது ரத்தத்திலும் மரணத்திலும் துரோகத்திலும் வாழ வேண்டிய ஒரு துர்பாக்கியமான வாழ்வு பெற்ற அவருக்கு நம் இரங்கல்கள்.

அவரின் தாக்கும் அணுகுமுறை நமக்கு சற்றே அன்னியம். என்றாலும் அவர் அந்த ஆயுதத்தை கையில் எடுக்க வாய்த்த சூழ்நிலையும் நமக்கு அன்னியம்.

தாய் தந்தையை கண் முன்னால் சுட்டு கொன்று, ஆறு மிருகங்கள் ஒரே நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்த பின் ஒரு பெண் / அல்லது பூவை குளித்து முடித்து அஹிம்சை போதிக்க வேண்டும் என்று நாம் சொல்லுவதோ எதிர்பார்ப்பதோ மடமை.

புலிகளின் வீழ்ச்சி ஒரு தீர்வாகுமா.

என் மொழி பேசுவதால் என் சகோதரன் சகோதரியாய் நான் பார்க்கும் இந்த மக்கள் கூட்டம் அமைதி பெறுமா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக