பக்கங்கள்

இடை வெளி

பத்து நாளா இந்த பய படுக்காளியும் காணோம் பதிவையும் காணோம் என்று தேடிய உங்களிடம் ஒரு சாரி.

ஒரு வாரம். இந்திய பயணம். விடுமுறை எனும் அற்புதம்

சந்தோசமாய் பெட்டி கட்டி கொண்டு குடும்பத்தோடு தாய் நாடு பயணம். தாய் மண்ணையும் தந்தையும் உடன் பிறந்தவனையும் உறவினரையும் தமிழையும் பார்த்து வருஷம் ஆச்சு. தலை நகரில் தொடக்கி கன்னியாகுமரி வரை சென்று வந்தேன். சென்னை வழியாக சேர நாடு வரை. இன்னும் கூட லேசான பயணக் களைப்பு.

படுக்காளி கேட்டது ஒரு மாத விடுப்பு. பொருளாதார நிலவரம் சொல்லி கலவரம் ஆன முதலாளி சொன்னார் நோ !!!. மண்டையை சொரிந்து பார்த்தேன். நடக்கவில்லை. கை காலை உதைத்து அழுதும் பார்த்தேன். இறுதியில் கிடைத்து ஒரு வாரம்.

சரி நினைத்து கிடைக்க வில்லை என்றால் என்ன கிடைத்ததை பிடித்து விடுவோமே என்று சென்று விட்டேன்.

திவ்யமான பயணம். ஒரு வார பரபரப்பு அடங்கி மறுபடியும் ஓட்ட பாதைக்கு வந்து விட்டேன். இனி என்ன. வழக்கமான வேலை தான்.

2 கருத்துகள்:

 1. நல்வரவு ... தங்கள் பயணம் எனிதை நடை பெற செய்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி.... வாழ்த்துகிறேன்...

  என்றும் அன்புடன்
  செல்லதுரை

  பதிலளிநீக்கு
 2. அன்பு செல்லதுரை

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு