பக்கங்கள்

உப்புக்கும் சீனிக்கும் கல்யாணம்

இதென்ன கலாட்டா.

கரிகின்ற உப்புக்கும் இனிக்கின்ற சீனிக்கும் சம்பந்தமே இல்லயே. எப்படி சேரும் என்பவருக்கு, எதிர் துருவம் இணைவது தானே கல்யாணம். வாளை மீனுக்கும் விளாங்கு மீனுக்கும் கல்யாணம் நடக்கும் போது, இதெல்லாம் என்ன சாதாரணம்.

சரி மேலே சொல்லு என்று நீங்கள் சொன்னால்….

உப்புக்கும் சீனிக்கும் கல்யாணம்
ஏலக்காய்க்கு ஏக குஷி.
வாய் விட்டு பலமாய் சிரிக்குது.
சிரிச்ச சிரிப்பிலே பல்லெல்லாம் வெளியே தெரிச்சிருச்சு.

உப்புமா பயலுக சேமியா எல்லாம்
கூட்டம் கூட்டமா ஒருத்தன் தோளில் ஒருத்தன் கை போட்டு நிக்குரானுக.
வளைச்சு நெளிஞ்சு கோணி நாணி நிக்குரானுக.

வெக்கை ரொம்ப ஜாஸ்தி போலே. ஒரு வேர்வை காடா இருக்கு.

கல்யாண மண்டபம் - தள்ளி நின்னு பார்த்த வெள்ளை வெளருன்னு பளிச்சுன்னு இருக்கு.

கல்யாண மண்டபம் : அலுமினிய / எவர்சில்வர் பாத்திரம்


பாயசம் செய்வது எப்படி என்று உணவு குறிப்பு எழுத சொல்லி என் நண்பர் சொன்னார்.

படுக்காளி ஆயிட்றே பேர காப்பாத்த வேண்டாமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக