பக்கங்கள்

கிரிட்டிகல் டெம்பெரேச்சர்

என்னோடு பள்ளியில் படித்த நண்பன் சகாயம்.

எங்கிருக்கிரானோ தெரியவில்லை. அவன் நினைவுகள் மட்டும் என்னோடு. நேற்று அவனை பற்றி என் மகனிடம் சொல்லிய போது விழுந்து விழுந்து சிரித்தான். நானும் கூடவே.

என்னடா படுக்காளி இது. அடுத்தவரை கேலி செய்து சிரிக்கலாமா தப்பு இல்லையா என்று கேட்பவருக்கு. சரி தான். தப்பு தான்.

சில சந்தர்பத்தில் நானும் சகாயம் போல் செய்திருக்கிறேன். இந்த சகாயம் நம் எல்லோரிடத்திலும் உண்டு என்று தோன்றுகிறது. நம்மை நாம் கேலி செய்து சிரிப்பது…. ஓகே.

சரி விஷயத்திற்கு போவோம். அப்படி என்ன அவனை பற்றி.

புஸ்தகத்தை காப்பாத்துவதில் அவன் கெட்டி. நல்ல பாட புத்தகம் அல்லவா, அதை பிரித்து படித்து அழுக்காக்குவதிலோ கிளிப்பதிலோ அவனுக்கு துளியும் இஷ்டம் இல்லை. பரிட்ஷையே வந்தால் கூட அவன் கொள்கையில் பிடிவாதமாய் இருப்பான்.

அவன் தெளிவாக தேர்வுக்கு செல்வான். மனம் போலவே அவன் விடை தாளும் இருக்கும். எல்லோரும் அடித்து பிடித்து விடை எழுதி கொண்டு இருக்கும் போதும், பேனாவால் தலையை குத்தி கொண்டும் இருக்கும்போதும் பூ போலே சிரித்து கையை முறுக்கி முறுக்கி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதாய் பாவனை செய்வான்.

பரிட்ஷை எழுதும் நேரத்தில் சும்மா இருந்தால் வாத்தியார் ஒரு மாதிரி மேலும் கீழும் பார் பார் என்ன செய்ய. எதையாவது எழுதி கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. இதற்காக தொடங்கிய விபரீத விளையாட்டு இது. இரண்டு வார்த்தைகளை கொண்டு சிலேடை ஆடும் சேட்டை இது.

அது என்ன.

வாட் இஸ் கிரிட்டிகல் டெம்பெரேச்சர் என்று கேள்வி இருந்தால் இவன் எழுதும் பதில் இது : " கிரிட்டிகல் டெம்பெரேச்சர் இஸ் எ வெரி கிரிட்டிகல் டெம்பெரேச்சர். கிரிட்டிகல் டெம்பெரேச்சர் இஸ் டிபைன்டு அஸ் தி டெம்பெரேச்சர் விச் இஸ் வெரி கிரிட்டிகல் அண்ட் தி கிரிட்டிகல் ஆப் தி டெம்பெரேச்சர் இஸ் கிரிட்டிகல் டெம்பெரேச்சர்”

கல்லூரியில் படிக்கும் போதும் கூட நான் கேள்வி பட்டேன். என் சீனியர் ஒருவர் இது போலே 'போலீஸ் பையரிங் இன் மண்டை காடு’ என்று பக்கம் பக்கமாய் பக்காவாய் எழுதுவார் என்று கிரிட்டிகல் டெம்பெரேச்சர் போலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக