பக்கங்கள்

அம்மா பசிக்குதே

தமிழக கரையோரமாய் ஒதுங்கிய ஒரு படகில் பத்து பேர் இறந்து கிடந்தாய் செய்திகளில் அறிந்தோம். மரணத்தின் காரணம் உணவின்றி நீரின்றி.

படுக்காளி வேறு ஒரு பிரச்சினையை பற்றி பேச போகிறானோ என்று எண்ண வேண்டாம். அரசியல் வாதி அல்ல நான். மனித நேயம் உள்ளவன். இலங்கைக்காக மட்டும் அல்ல சோமாலியா, பாகிஸ்தான், என்று கண்ணிர் வடிக்கும் ஜாதி நான்.

சில மணி நேர பசி நமக்கு தரும் வேதனை அறிந்தவர் நாம். இறக்கும் வரை செல்லும் துன்பம் கொடுமை என்று தோன்றுகிறது. மரத்தை வைச்சவன் ஏன் தண்ணி ஊத்தலே

அரசியல், மொழி, இனம், பொருளாதாரம் என்ற எந்த சால்ஜாப்பும் சரி இல்லை. வயிறுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம். பூமியில் உள்ள வளங்கள் எல்லாருக்கும் பொது வானதே. நம்மை போலே சிலர் ஒதுக்கி வைத்து கொண்டு தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் என்ன கொடுமை இது சரவணா

பங்கிட்டு வாழும் சமுதாயம் படைக்க முடியுமா.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற முண்டாசு கவிஞனின் ஆக்ரோஷம் தீர்வாகுமா. வழக்கம் போல் கேள்விகள் மட்டுமே தொக்கி நின்று தீர்வு இல்லாத முடிப்பது புலம்பலோ………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக