நான் போட்ட தேர்தல் நிலவரம் பதிவு மறுபடி படிச்சு பார்த்தேன்.
கேரளா, மூன்றாம் அணி பத்தி சொன்னது சரி ஆச்சு.
ஆனா அம்மா பத்தி சொன்னது ரிவேர்ஸ் ஆச்சு.
குதிரை பேரம் நடக்கும் என்று நான் சொன்னது தப்பா ஆச்சு.
கூட்டணியிலே விட்ட கோட்டை பெரிய ஓட்டையா தான் இருக்கு என்று நான் சொல்ல - காலம் அதை திருத்தி இப்படி எழுதி விட்டது.
கூட்டணியில் விட்ட கோட்டை நல்ல வேட்டை.
இல்லேனா அனாவசியமா இடது, லாலு, மாம்பளம்னு தேவை இல்லாம வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கனும். குடும்பத்துல உள்ள எல்லோருக்கும் பதவி கேட்பது ஒரு தொந்தரவுதான், ஆனா ஊடு செங்கல் உருவறது இல்லாததால தி மு கா பரவாயில்லை என்று காங்கிரஸ் நினைத்திருக்கும்.
காங்கிரஸ் காட்டிலே மழை.
அடிப்படையா பார்த்தா - மன் மோகன், அத்வானி, இவர்களில் முன்னவர் பெட்டர். வாக்காளர் இப்படி யோசிச்ச முடிவு மாதிரி தெரியுது. இப்ப ஓட்டை போடுங்க, நாங்க கூடி கும்மி அடிச்சு ஒரு தலைவன அல்லது தலைவிய தேர்ந்தெடுப்போம் என்ற வாதம் பிடிக்கவில்லை போல் தோன்றுகிறது
தோல்வியை ஒத்து கொண்டு - எதிர்பாராதது, காங்கிரசுக்கு வாழ்த்துகள் என்று தொலைபேசியில் பேசிய அத்வானியை பிடித்தது. ஆனா இதே ஆளு அந்த அப்புராணி மன் மோகன் சிங்கை சோம்பேறி என்று பிரச்சாரத்தில் பேசியது நினைவுக்கு வந்து மறந்தும் போனது.
ஜெயிச்சது சரி. அதுக்கு காரணம் ராகுல் அவர மந்திரி ஆக்குவேன், என்ற பேச்சு காங்கிரசுக்கு வேண்டுமா. செய்யனுமுனா செய்ங்க, செய்யுறதா சத்தம் இல்லாம செய்யுங்களேன்பா
டாக்டர் ஐயா சுறுசுறுப்பாய் அணியை மாத்தி அம்மாகிட்ட வந்ததும், கூட்டணி பலம் ஆனதும் வெற்றி நமக்கே என்ற தோரணையில் அம்மா நடந்ததும் கொஞ்சம் ஆட வெட்டுறதுக்கு முன்னாலே ______ சுட்ட கதையோ.
விஜய காந்த பலம் பரவாயில்லை. ஆனா நாயர் பிடிச்ச புலி வால் கதையா, அம்மாவையும் ஐயாவையும் சரி இல்லேனு சொல்லிட்டு கூட்டணியும் வைக்க முடியாம, ஜெயிக்கவும் முடியாம தவிக்கிராரோ.
வை கோ வின் இந்த தேர்தல் தோல்வி துக்கம் தான். ஆனால் எல்லார் கையிலேயும் நோட்ட திணிச்சு என்ன தோக்க அடிச்சிட்டாங்க என்று சொல்லுவது, தலைவனுக்கு அழகா. வெற்றியை சமாளிக்க எந்த முட்டாள்களாலும் முடியும், ஆனால் தோல்வியை சந்திக்க ஒரு வீரம் விவேகம் வேண்டும் என்ற பழமொழி நினைவில் கொண்டால் இந்த அடி ஒரு படி ஆகும்.
தேர்தலில் செயிப்பது எப்படி என்று அஞ்சா நெஞ்சன் கிளாஸ் எடுக்கலாம். சொல்லி சொல்லி நோட்டையும் ஆட்களையும் வெற்றியையும் அடிப்பது அவரின் தனித்துவம்.
காசு வாங்கிகிட்டு ஒட்டு போட்டாங்க என்ற குற்ற சாட்டு எப்போதும் உண்டு.
எனக்கு தெரியலே, அதால கேட்கிறேன். உயர் மட்டத்திற்கும், நடுத்தர வர்கத்திற்கும் இவங்க காசு கொடுக்கிரதில்லே. அப்போ ஏழை பாளை மட்டும் தான் இந்த காசு வாங்கிகிட்டு ஒட்டு போடுரன்களோ. சரி காச வாங்கிட்டு மாத்தி போடுங்கன்னு சொன்னாலும் கேட்காம சரியாதான் குத்துராங்க இப்ப அமுக்குராங்க.
சிங்கம், கரடி - கார்த்திக், விஜய ராஜேந்தர் அணில் முயல் எல்லாம் அடுத்த தேர்தல் வரை ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த தேர்தல் வந்ததும் மறுபடி வந்து எங்களை கிச்சு கிச்சு முட்டனும்னு சங்கம் சார்பா கேட்டுகிறேன்.
வெற்றி பெற்ற இன்னொரு சிங்கத்துக்கு (ஜெ கே ரித்தீஷ் )சங்கம் சார்பா வாழ்துக்கள் .
அஞ்சு வருஷம் ஆண்ட அதே ராசா மறுபடி பதவிக்கு வந்து இருக்கிறார், சில மாற்றங்களோடு. ஆனா இவர் தான் ராசா இது இப்படி தான் அது அப்படிதான்னு சொல்லுரகுக்கு வேற எதாவது மார்க்கம் இருந்துச்சுனா நாம செலவழிச்ச தேர்தல் பணத்திலே நாட்ட தூக்கி நட்ட குத்தல் ஆக்கியிருக்கலாமே என்று ஒரு நப்பாசை.
வேற ஒண்ணும் இல்லை, இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாத மன்னர் ஆட்சியில வாழ்ந்து கொண்டு இருக்கிற பாதிப்பு படுக்காளிக்கு