பக்கங்கள்

நாற்றம் புடித்த வேர்கள்

பொருளாதார தலைநகரம் மும்பை சிரமப்பட்டு தன் மேல் விழுந்த தூசிகளை அகற்ற வேண்டியதாய் ஆயிற்று.

மூளை சலவை செய்யப்பற்று தன் உயிரை மதிக்காதவன் சக உயிரை மதிப்பானா அவனை துப்பாக்கி போல ஜடபொருளைதான் கொள்ள முடியும். பிரச்சனை அவன் மட்டும் அல்ல. அவனை தயார் செய்தானே. அவன்.

அவன் யார் ?

மதிக்கத்தக்க மனிதன் என்ற போர்வையில் ஒளிந்து இருக்கும் அவனை தோண்டி எடுத்து களையும் வரை சராசரி மனிதன் கவனமாய் இருக்க வேண்டும.

சாலை மெரிசல் பரிசில்

" இரண்டு இப்போது நாலானதுசக்கரங்கள் கூடுதல் காலானது

அறிவியலை ஆதரி நிகழ் காலத்தை நேசி மனித நேயம் மலர செய் "


காலையில் சாலையில் - பார்த்ததும், பாதித்ததையும் பதித்தபோது விழுந்த் பதிலுரைகள் மேலே ...

இனிப்பான வார்த்தைகள், இதமான வாதங்கள் ...

பெருகி வரும் வாகனமும் வெப்பமும் நிதர்சனம் அல்லவா
சாலையில் தனி மனித ஒழுங்கீனங்கள் மலிந்ததை மறுக்க முடியுமா
குறை கண்டால் தானே களைய முடியும்.

நம்பியார் நல்ல நம்பியார்

ஒரு முறை ஒரு மூதாட்டிஎம். ஜீ. ஆர். கிட்டே சொனாரம், நீ நல்லவன்தான், எல்லாத்தையும் சமாளிச்சுருவ, இருந்தாலும் அந்த நம்பியார் கிட்ட மட்டும்ஜாக்கிரதையா இரு என்றாரம்.

தன் நடிப்பால் இத்தக்கைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய நடிப்பின் சொந்தகாரர் இன்று நம்மிடையே இல்லை. அவரின் நினைவுகளை பட்டியலிடுகிறேன்
* ஒரு காலில் எட்டு, ஒரு காலில் ஒன்பது - என ஷூ போட்டு கொண்டு, டேபிள் மேல் போட்டு ஆட்டுவார்.
* காகிதம் செய்வோம் நல்ல ஆயிதம் செய்வோம் - அதான் கள்ள நோட்டு அடிக்கிறேன், துப்பாக்கி செய்றேன் என்று விளக்கம் தருவார்
* நாய்க்கு பதிலாக , வீட்டில் புலியை வளர்ப்பார், அதையும் காலடியில் வைத்து கொண்டு தடவி கொடுப்பார்.
* பிற்காலத்தில் குணசித்திரமும் நகைச்சுவையும் பிரதானமாய் நடித்தார்
* திரை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார்
* பலகுரல் கலைஞர்களுக்கு பிழைப்பு இன்று வரை வழங்குகிறார்

சாலை மெரிசல்

சாலை எங்கும் வாகனங்கள்
வண்டிக்குள்ளே வானரங்கள் !!!
நகரமெல்லாம் நெருக்கமாச்சு
நெருப்பு போலே நரகமாச்சு...

பொழுது போக்கு என்று கடமை ஆனது

விடுமுறை, பண்டிகை நாட்களில் பள்ளி எழுச்சியில், நாம் தேடுவது தொலை காட்சி அல்லவா. மாலையில் வீடு திரும்பியதும் நாம்சரண் அடைவதும் அங்கல்லவா.

நாடகங்கள், நாட்டியங்கள்- மாலை, இரவு காட்சிகள் மட்டுமே என உள்ள போது, திரைப்படம் மட்டும் ஏன் காலை காட்சிகளை கட்டவிழ்த்து விட்டன.

ஏன் இந்த கோளாறு. ?

செய்திகள் இன்றியமையாதது என்று வாதாடினாலும், பொழுது போக்கு என்று கடமை ஆனது !!!

நன்றி: பிரிய நண்பன் கோபி ஆதங்கத்துடன் சொன்னதை பதித்திருக்கிறேன்

வளைகுடாவில் வானவில்

உள்ளுரில் விலை போகாத சரக்கு, துபாய் வேலை வாங்கி அரபு மண்ணில் கால் பாதிக்கும். வெப்ப்க் காத்தோடு, சாதிக்கும் பாதிக்கும் விடயங்களை படுக்காளி பட்டியல் இடுகிறேன்.


* அபரிமிதம் - இரண்டு கிலோ சிக்கன், ஒரு கிலோ இறைச்சி என உளமார வாங்கி அடித்தட்டு இந்தியன் வயிறார உண்ன முடியும். திட்டமே இல்லாது, கடைக்கு போன பிறகு தொலைபேசி, தொலைக்காட்சி என வாங்க முடியும். உரில் ஒருவருக்கு பத்தாயிரம் கொடுத்து விட்டு, கொடுக்கலை என்றால் பரவாயில்லை என ஒதுக்க முடியும்.

* சிதோஷனம்

காகா காதை

காக்கா... கத்துனதாலே அந்த பேர் வந்துச்சோ !!! காகா பறக்கும்! நடக்குமா? .. இல்லே , அதுக்கு ஒரு கதை இருக்கு .

முன் ஒரு காலத்திலே படுக்காளி பிறகிரதுக்கு முன்னாலே, படிக்கிற நீங்க பிறகிரதுக்கு முன்னாலே காகா நல்லா நடந்துட்டு இருந்துச்சு. அழகா நடக்குற அன்னத்தை பார்த்து அது போலே நடக்க ஆசை பட்டுச்சு. எவ்ளோ முயன்றும் முடியலே.

அன்ன நடையும் வராம, தன் நடையும் மறந்து போய், அத்துவானத்திலே தத்தி தத்தி குதிச்சுதாம்

கலாச்சாரத்தின் கயமைத்தனம்

பூத்துக்குலுங்கும் ஒரு செடியை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது?

எனக்கு இப்படி தோன்றுகிறது. ம்… ஒரு சக ஜீவன். என்னைப்போல் அதுவும் ஒரு உயிர், அதன் படைப்பு என்னை மகிழ்வு கொள்ள செய்கிறது. அதன் நிறம் பச்சை எனக்கு நல்லதாய் தெரிகிறது. அதன் வடிவமும், இன்னும் அழகும் என் கண்ணில் நிறைந்து…. பின் மனதில் நகர்ந்து இறுதியாக  உணர்வில் சேர்கிறது.

ஒரு செடி, எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி, இதம் தந்து, என்னுள் அமைதி படர்த்தி மனசை லேசாக்குகிறது. இல்லையா, உங்களுக்கும் அப்படித்தான்.

இதுவரை விவகாரமில்லை… ஆனால் விவகாரமே இனிதான்….

செடியை பார்த்துக் கொண்டே நின்றிருந்த எனக்கு சிந்தனை கிளம்பி கிளை விட்டு கொஞ்சம் சைடில் படர்ந்தது. படர்ந்தது ஒகே, ஆனால் அது சென்ற திசை கொஞ்சம் டேஞ்சரானது.

அது என்ன டேஞ்சர் ஏரியா? 

என்று நீங்கள் புருவத்தை சுருக்கி உயர்த்தினாலும்,ஏண்டா எங்கயிருந்து எங்கடா போற என நினைத்தாலும், எதையும் பாத்தா பார்த்துப்புட்டு வந்திடுறதில்லையா, ஏதாவது பீலீங்ஸ் விட்டுட்டு நிக்கிறியே என எண்ணினாலும்….  தங்கள் நியாயமான எண்ணத்துக்கு வணங்கி, தொடர்கிறேன் ....

என்னை கவர்ந்து, இழுத்து நிறுத்தி ரசிக்க வைத்த செடியின் குணம் கவர்ச்சி தானே. அழகை ரசிக்கும் என் ரசனைதானே என்னை நிற்க வைத்த்து. அழகை ரசிப்பது நல்லதா… கெட்டதா….

அழகு ரசிப்பதை பாவம் என கூட சிலர் சொல்கிறார்களே.. அது சரியா…

சரி அழகை ரசிக்கிறேன்… அதே நான்… பட்டு போன மரத்தை நின்று ரசிப்பேனா. அது எனக்கு மகிழ்வு தருமா… அமைதி தருமா. இல்லை என்றே தோன்றுகிறது.

சரி செடி பார்த்தேன். அதே போல் குழந்தை பார்த்து ரசித்திருக்கிறேனே..

ம்… சரி உங்களிடம் ஒரு கேள்வி…

ஒரு குழந்தை உங்களை பார்த்து சிரிக்கிறது என வைத்துக் கொள்வோம். சிரித்ததும் நாம் செய்வது என்ன. வெறுமனே பதிலுக்கு சிரித்து விட்டு நகர்வோமா.... இல்லையே. அதன் அருகில் நகர்ந்து அச்செயலை அங்கிகரிப்பதோ இல்லை நம் அன்பை காட்டுவதாகவோ ஒரு வினை செய்கிறோமே….

ம்…. அனேகமாக தொடவோ, முத்தமிடவோ, அல்லது ஏதாவது தொட்டு செய்கிறோமே… அது ஏன்……….. நம் அதீத உணர்வை சொல்ல, அன்பை தெரிவிக்க… மெய் தீண்டல் அவசியம் ஆகிறதோ.

ஆம், ஒரு செடியை பார்த்ததோடு நில்லாமல் தொட்டு, தடவி, முகர்ந்து, பார்த்து மகிழச் சொல்வது எது. என்னுள் தோன்றும் தன்னகப்படுத்தும் எண்ணமா.

அழகை வெறுமே நின்று ரசித்து விட்டு செல்லாமல் எனக்கு உரிமையாக்கும் எண்ணம் எதனால் வருகிறது.

பார்த்து, உணர்ந்து நான் நிற்பது ஒட்டு மொத்த செடியிடமா.. அல்லது அந்த செடியின் அங்கங்களிடமா… ஆழமாக ஒரு அங்கம் பார்த்துத்தான் நான் செடியை ரசிக்கிறேனா… தண்டு பெரிய ரசனையில்லை… இலையை ரசிக்கிறேன், அதன் வடிவம் கவனிக்கிறேன், பூவை தேடுகிறேன். அதன் காம்புகள் கூட எனக்கு கவனம் இல்லை…

செடியின் அங்கங்கள் தண்டும், இலையும், மலரும் அதன் உடம்பல்லவா.  அந்த செடியிடம் அதனை ரசிக்க அனுமதி வாங்கினேனா… எனக்கு அனுமதி உண்டா. கிடைக்க வாய்ப்புண்டா…

காய்ந்த மரம் ரசிக்காத எனக்கு, என் கண்களுக்கு ….. பச்சை இலைகள் சொல்வது அச்செடியின் ஆரோக்கியந்தானே. பட்ட மரம் ரசிக்காத என் தன்மை எனக்கு ஆழமாய் சொல்வது என்ன. ……..????
 
ஆரோக்கியம் எனக்கு மகிழ்ச்சி தருகிறதா. நம்பிக்கை தருகிறதா.

சரி ஒத்துக் கொள்கிறேன்… ஆரோக்கியமான இலையை தாண்டி என் உணர்வுகள் அலைவது எங்கே…

இலைகள் தாண்டி, என்னை மேலும் பரவசப் படுத்துவது பூக்கள் அல்லவா.

பூ பூக்கும் செடி, எனக்கு பச்சை செடியை விட உன்மத்தமாய் தெரிவது ஏன். பூக்கள் எனக்கு சொல்வதென்ன, உணர்த்துவது எதை. வெறும் நிறம் மட்டுமா பூவின் குணம். இல்லையே… வெறும் நிறத்தால் மட்டுமா எனக்கு பூவை புடிக்கிறது…. அதென்ன என் சிந்தனை, செயல் எல்லாம் பொருளுக்கு பொருள் மாறுபடுகிறதே…...

பூக்கள் இன பெருக்கத்தை அல்லவா சொல்கிறது. ஒரு வேளை என் ஆழ் மனம் அதன் பயனை பட்டியல் இடுகிறதோ… படைக்கும் திறன் உள்ளவை அற்புதமாய் படுகிறதா. ஆச்சரியமாய் தோன்றுகிறதா. அழகாய் தெரிகிறதா.


யாரோ ஒருவர் என்னிடம் வந்து, செடி நல்லா இருக்குங்க, தொட்டுப் பாருங்க, என்ன ஸ்மெல், எவ்வளவு பியூட்டிங்க என சொல்லும் போது. ஆச்சரியமாய் பார்த்து, அடேயப்பா அவன் பெரிய கலாரசிகன் என சொல்லும் அதே நான். அவன் பூவுக்கு செய்ததை பூவைக்கு செய்தேன் என சொன்னால்… என்னை செய் என சொன்னால் ………… நான் அவனை  காமந்தகாரன் என்று அல்லவா சொல்வேன்.

கலாரசிகன் எனவும், காமாந்தகாரன் எனவும் எத்தனை மாறுபாடு…

ஒரே செயலுக்கு, ஒரே உணர்வுக்கு,
ஏன் இந்த மாறுபாடு, ஏன் இந்த சிந்தனை தாறுமாரு…
இப்படி மாறுபாட்டை சமைத்தது இயல்பு அல்ல, இயற்கை அல்ல.
என்னை அப்படி மாற்றி சொல்ல வைத்த்து நான் சார்ந்த கலாச்சாரம் தானே.
இக்கலாச்சாரம் சில முன்னோர்களால், மூத்தோர்களால்… நல்லதற்கென ஆக்கப்பட்டது தானே…. இக்கலாச்சார வரைவுகள் நம்மை பலப்படுத்தியதா… இல்லை பலவீனப்படுத்தியதா… நம்மை எளிமையாக்கியதா இல்லை சிக்கலாக்கியதா…
பாவம் என இயல்பை திரித்து, நம்மை முடமாக்கியதா… முற்றும் உணராமல் நம்மை முடமாக்கியதா…
ஆழ செல்வோம், நம் இயல்புகளை உணர்வோம், கலாச்சார வரைவுகளை இனம்கொள்வோம், அதை புரிவோம், பின்னர் தெளிவோம். வாழ்க்கை வாழ்வதற்க்கே…