பக்கங்கள்

உன்னை போல் ஒருவன் - விமர்சனம்


திரைப் பட திட்டமிடலில் இரு வகை. வியாபாரம், பரிசோதனை.

ஏண்டா படம் எப்படின்னு கேட்டா நீ ஏண்டா கிளாஸ் எடுக்கிர என்று நீங்கள் நினைப்பதுவே எனது மனதிலும், இருந்தாலும் கேளுங்களேன்.

கதைன்னு புதுசா எல்லாம் யோசிக்காத, சேஃபா ஒடுன பட்த்த எடு, இல்ல பழைய படத்தில இருந்து சுடு. கதா நாயகனுக்கு நல்லா மேக்கப் போட்டு ஒரு பத்து இருவது வயச குரை. மார்க்கட்டில சூடான நாயகிய போடு. நடிக்க வெல்லாம் வேண்டாம். காட்டினா போதும் நடிக்கிற மாதிரி. பட்த்துக்கோ கதைக்கோ சம்பந்தம் இல்லன்னாக்கூட பரவாயில்ல, ஒரு காமெடி டிராக் போடு. ஒரு அஞ்சு பாட்டு, கேட்டா தீ பிடிக்கிற மாதிரி குத்தனும். இது ஒரு வகை. வெகு ஜனம் எங்கு இருக்கிறதோ, அங்கு போய் கும்மியடித்து விட்டு, காசு பார்ப்பது. நமக்கும் குடும்பத்தோட போயி பிள்ள குட்டிகளா பாக்கிறதுக்கு சேஃப்.

மற்றது, தனக்கு பிடித்த தளத்துக்கு கலைஞர்கள் போயி, நமக்கு பரிச்சயமில்லாத இட்த்துக்கு ‘எல்லாரும் இங்கே வாங்க’ என்று கூப்பிடுவது. இந்த படம் அந்த வகை.

மிகுந்த எதிர்பார்ப்பு இல்லாமை, பொறுமை, சரி போட்டத பார்ப்போம் எனும் மன நிலை உங்க்ளுக்கு இருந்தால்,

அல்லது நல்லா இல்லை பாஸ் என்று நண்பர்கள் சொன்ன பின் நீங்கள் பார்த்தாலோ,

கலை கண்ணோட்டம், கிரியேட்டிவா சினிமாவை பார்ப்பது உங்கள் பழக்கம் என்றாலோ,

மேற் கூறிய மூன்று பிரிவுகளில் நீங்கள் எதை சார்ந்து இருந்தாலும் உங்களுக்கு படம் பிடிக்கும், மூன்றில் இல்லை என்றால் பிடிக்காது.

கதை என்ன:
மும்பை திவிரவாத தாக்குதல் நடந்த நேரத்தில், என்.டி.டி.வி. ரிப்போர்ட்டர், கேட்க, ஒரு சாமான்யன் நரம்பு புடைக்க, உச்ச ஸ்தாயியில் சொல்வான். ‘அரசியல் வாதி வேண்டாம், எங்களிடம் இந்த நகரத்தை கொடுங்கள், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டு நின்றார்களே, அது தான் கதை.

தீவிரவாத தாக்குதல் மிகுந்து வரும் இந்த காலகட்ட்த்தில் நமது சட்டமும், காவலரும் பின்பற்றும் ஆதிகால அணுகுமுறை வேலைக்கு ஆவாது. எப்போ எது நடக்கும் என்று தெரியாத இந்த சூழ்நிலையிலும், பயம் மேலிட நான் எதாவது செய்ய முடியுமா என்ற கேள்வியோடு வாழும் மத்திய தர வர்க்கம், என்னைப் போல், உன்னைப் போல் ஒருவன். (பேரு சரி இல்லை பாஸ், பிராண்டிங் பத்தி.... கமல்!!! தெரியாதவரா நீங்கள். அல்லது ‘பேர் சொல்லும் பிள்ளை, அல்லாம் இன்ப மயம் எனும் லெமூரியா பழக்க வழக்கம் இன்னும் போகலையா)

என் குடும்பம் இல்லாமல், என் இனம் மதம் இல்லாமல், சக மனிதனுக்கு நடக்கும் கொடுமையை பார்த்து கொதித்து எழும் புத்திசாலி மனிதன். சரி இவர் என்ன செய்கிறார். இரண்டு வாரம் வலை உலகில் மேய்ந்து பாம் செய்வது எப்படி எனக் கற்றுக் கொள்கிறார். கூடுதலாய் கைபேசி ஜாதகம் கண்டு பிடிக்கும், காவலர் பொறியை எப்படி ஏமாற்றுவது என்பதையும் உபரியாய்.
காலையில் கிளம்பி முந்திரிப்பருப்பு, கிஸ்முஸ், முருங்கைக்காய், தக்காளி வாங்கி விட்டு, பாதிக் கட்டிக்கிட்டு இருக்கிற ஒரு உயர்ந்த மாடியின் மேல் உட்கார்ந்து விட்டு, முதல்வர், கமிஷனர், சீப் செக்கரட்டரி கண்ணில் விரல் விட்டு ஆட்டுகிறார். என்ன எப்படி என்று சொல்லி நான் ஏன் பாவத்தை கட்டிக் கொள்கிறேன். நீங்களே படம் பாருங்கள்.

புதுமை.

கதையின் நாயகன் மோகன் லால், வில்லன் கமல். இல்ல சரியாத்தான் வாசிச்சிங்க, கமல் வில்லன்தான். கதா நாயகி இல்லை, கவர்ச்சி இல்லை, பாட்டு இல்லை, கதைக்கு தேவைப்படாத எதுவும் இல்லை.

நடிப்பு:

சலனப் படம் தொடங்கிய கால கட்ட்த்தில் பாடுவது நடிப்பு. பின்னர் நம்ம அண்ணன் சிவாஜி காலத்தில அழுவதும், அழ வைப்பதும் நடிப்பு.
கலகலப்பு, காமெடி, காதல் ரசம் இது எதுவுமே நடிப்பு இல்லை. இல்லைன்னா எம்.ஜி,யாருக்கு, ரஜினுக்கு நடிக்க வராது என்று சொல்வது எந்த வகையில் சேர்த்தி. கற்பனையிலோ, காகிதத்திலோ வடித்த கதாபாத்திரத்தை தன் மனதில் வாங்கி, சரிதான் இப்படித்தான் இந்த கதாபாத்திரம் இருந்திருக்கும் என ரசிகரை ஏற்றுக் கொள்ள வைப்பது முதல் படி, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, இன்ஸ்பிரேஷன் தந்தால் அது இரண்டாம் படி.

ஆனால் தமிழை பொருத்தவரை, தானும் அழாமல், அடுத்தவரையும் அழ வைக்காமல் இருந்தால் அது நடிப்பு இல்லை. படுக்காளி ரூட் மாறி மேட்டரு எங்கேயோ போகுது என தாங்கள் நினைப்பது போலே நானும் உணர்கிறேன். தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்.

அமைதியாய் அட்டகாசம் செய்ய முடியுமா. லாலேட்டனை அறிந்தவர் ஒத்துக் கொள்வார். மோகன் லால் தனது தேசிய விருது வாங்கித்தந்த சங்கத்திற்கு பிறகு பின்னியிருக்கிறார் என்பது தாழ்மையான கருத்து. சீன் ஸ்டீலிங்கில் ஸ்கோர் செய்வது மிக்க கடினம். அப்படி ஒரு ராட்சஸன் அவர். கொஞ்சம் அசந்தால் கூட நடிப்பவரை தூக்கி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு விடுவார்.

ஆனால் கமல் அவருக்கு ஈடு கொடுத்து ஒரு உக்கிரமான போராட்டம் நடக்கிறது. சீன் ஸ்டீலிங்கெல்லாம் ஸ்கீரினில் பார்த்து எத்தனை நாளாச்சு. கதா நாயகனும் வில்லனும் நேரில் சந்திப்பதே இல்லை, கடைசியில் பார்த்துக் கொள்ளும் காட்சியில் கூட, நீ யாரோ நான் யாரோ எனும் பாணியில் பேசி கொள்வது சூப்பர்.

தயாரிப்பாளர், சீனியர், என்ற பல் வேறு அந்தஸ்து இருந்தாலும், மோ.லாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, தனக்கு உள்ள சின்ன சீனானாலும் வாய்ப்பு கிடைக்கும் போது கொளுத்திவிடுகிறார் கமல். இல்லை என்றால் சண்டை போட இரு இளம் ஆக்‌ஷன் ஹீரோக்கள், ஒரு லால் என ஒரு எக்கச்சக்கமான களத்தை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெறுவது என்பது, கமலுக்கே முடியும்.

மாற்றாத அதே சாதாரண உடை (படம் முழுக்க ஒரே சட்டை!!!! இதெல்லாம் நடக்குமா) மிகை இல்லாத அங்க அசைவு என நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

பத்திரிக்கையாளரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, திடிரென கோபம் பொத்துக் கொண்டு வர, வார்த்தை வராமல் உதடு துடிக்க ஒரு சில நொடிகள் மவுனமாய் இருக்க, லைன் கட்டாகி விட்டதோ என பதறி, ரிப்போர்ட்டர் ஹலோ ஹலோ என கேட்க, சற்றும் குறையாத கோபத்தோடு ம்.... ம்.... இருக்கேன் எனும் போது தியேட்டரே கைதட்டி அதிறுகிறது.

தன் நிலை விளக்கம் தரும் காட்சியில், கோபம், இயலாமை, பரிதாவம், பச்சாதாவம் என்பதை கலந்து அந்த குளோசப் பிரேமில் விளாசும் ஸ்டைல் கமல் ஏற்கனவே பல படங்களில் செய்து இருந்தாலும் திகட்டாத ஆஹாஸ்கர் நடிப்பு (ஆஸ்கர் என எழுதலாம், அவங்களுக்கும் பிடிப்பதில்லை, அவருக்கும் பிடிப்பதில்லை).

கர கர குரலில் முதல்வர் சொல்கிறார் ‘இதுக்கு எல்லாம் நான் பேசினா சரியா வருமா, நீங்களே பேசுங்க’ எனும் போது நமக்கு தோணும் ‘ஆமா கரெக்ட் தான’ இதுவே கமலிடம் லால் சொல்ல, ‘ஓட்டு வாங்கி கோட்டைக்கு போகும் போது, என்ன கும்பிட்டு எனக்காக சேவை செய்யுரேன்னு சொல்லிட்டு இப்போ இல்லையா’ எனும் போது கை தட்டலும் ஆஹா... ஒசையும் தியேட்டரை அள்ளுகிறது. வசனகர்த்தா முருகனுக்கு கை குலுக்கி பாராட்டலாம்.

போலீசுக்கு உதவும் டெக்னோகிராட், ரிப்போர்டர், லட்சுமி, தீவிரவாதி, இன்ஸ்பெக்டர் சிவாஜி என படம் முழுக்க இயக்குனரின் டச் டக்கர்.

இசை பற்றி ஞானம் எனக்கு இல்லை. பிரித்து பேச முடியாமல் இசை படத்தோடு கலந்து அவசியமானதாய் இருந்த்து என்று சொல்லுவேன்.

படம் ஓடுமா என கேட்டால், வெகு ஜனம் ரசிக்க வாய்ப்பு குறைவே. மிக நல்ல முயற்ச்சி. இன்னும் நல்லா செய்திருக்கலாமோ என ஒரு நினைப்பு வருகிறது.

மொத்த்த்தில் பாராட்டப் பட வேண்டிய படம், துணிச்சலான முயற்ச்சி, நல்ல நடிப்பு.

ஆறுதலான, ஆரோக்கியமான தமிழ் சினிமா வளர்ச்சி.

3 கருத்துகள்:

  1. //கதைன்னு புதுசா எல்லாம் யோசிக்காத, சேஃபா ஒடுன பட்த்த எடு, இல்ல பழைய படத்தில இருந்து சுடு. கதா நாயகனுக்கு நல்லா மேக்கப் போட்டு ஒரு பத்து இருவது வயச குரை. ஒரு அஞ்சு பாட்டு, கேட்டா தீ பிடிக்கிற மாதிரி குத்தனும். இது ஒரு வகை.//

    இந்த வகையிலதான இப்போ எல்லா படமும் வருது...

    //மற்றது, தனக்கு பிடித்த தளத்துக்கு கலைஞர்கள் போயி, நமக்கு பரிச்சயமில்லாத இட்த்துக்கு ‘எல்லாரும் இங்கே வாங்க’ என்று கூப்பிடுவது. இந்த படம் அந்த வகை.//

    அப்படியா??

    //மிகுந்த எதிர்பார்ப்பு இல்லாமை, பொறுமை, சரி போட்டத பார்ப்போம் எனும் மன நிலை உங்க்ளுக்கு இருந்தால்,

    அல்லது நல்லா இல்லை பாஸ் என்று நண்பர்கள் சொன்ன பின் நீங்கள் பார்த்தாலோ,

    கலை கண்ணோட்டம், கிரியேட்டிவா சினிமாவை பார்ப்பது உங்கள் பழக்கம் என்றாலோ,

    மேற் கூறிய மூன்று பிரிவுகளில் நீங்கள் எதை சார்ந்து இருந்தாலும் உங்களுக்கு படம் பிடிக்கும், மூன்றில் இல்லை என்றால் பிடிக்காது.//

    இது பெரிய உள்குத்து எழுத்தா இருக்கே படுக்காளி...

    //(பேரு சரி இல்லை பாஸ், பிராண்டிங் பத்தி.... கமல்!!! தெரியாதவரா நீங்கள். அல்லது ‘பேர் சொல்லும் பிள்ளை, அல்லாம் இன்ப மயம் எனும் லெமூரியா பழக்க வழக்கம் இன்னும் போகலையா)//

    ஏன்... இதுக்கு முன்னாடி "எனக்குள் ஒருவன்" எடுத்தேனே என்கிறார் கமல்..

    // என்ன எப்படி என்று சொல்லி நான் ஏன் பாவத்தை கட்டிக் கொள்கிறேன். நீங்களே படம் பாருங்கள்.//

    நீங்க நிகில் முருகனுக்கு தெரிஞ்சவரா??

    //புதுமை.

    கதையின் நாயகன் மோகன் லால், வில்லன் கமல். கதா நாயகி இல்லை, கவர்ச்சி இல்லை, பாட்டு இல்லை, கதைக்கு தேவைப்படாத எதுவும் இல்லை.//

    புதுமைன்னா... கமலுக்கு புதுமைதான்... கொஞ்சி, கட்டி பிடித்து, புட்டம் கடித்து, முத்தம் கொடுத்து... இது எல்லாம் இல்லையே... கரெக்ட்..

    //சீன் ஸ்டீலிங்கெல்லாம் ஸ்கீரினில் பார்த்து எத்தனை நாளாச்சு. கதா நாயகனும் வில்லனும் நேரில் சந்திப்பதே இல்லை, கடைசியில் பார்த்துக் கொள்ளும் காட்சியில் கூட, நீ யாரோ நான் யாரோ எனும் பாணியில் பேசி கொள்வது சூப்பர்.//

    நீங்க மிகையா சொல்றீங்க... எம்.ஆர்.ராதா, பாலையாவிற்கு பிறகு, எவ்வளவோ ஸீன் ஸ்டீலர்ஸ் இருந்திருக்காங்க படுக்காளி... அவங்களையும் கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்க...

    //தயாரிப்பாளர், சீனியர், என்ற பல் வேறு அந்தஸ்து இருந்தாலும், மோ.லாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, தனக்கு உள்ள சின்ன சீனானாலும் வாய்ப்பு கிடைக்கும் போது கொளுத்திவிடுகிறார் கமல்.//

    அய்யோ...இது பெரிய ஜல்லியா இருக்கே...சந்தான பாரதிக்கு அப்புறம், கமலுக்கு இவ்ளோ ஜல்லி அடிச்சது நம்ம படுக்காளியா தான் இருக்கும்..

    //மாற்றாத அதே சாதாரண உடை (படம் முழுக்க ஒரே சட்டை!!!! இதெல்லாம் நடக்குமா) மிகை இல்லாத அங்க அசைவு என நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.//

    பின்ன, மார்க்கெட்டுக்கு போகும்போது, இதெல்லாமா எடுத்துட்டு போவாங்க...

    //தன் நிலை விளக்கம் தரும் காட்சியில், கோபம், இயலாமை, பரிதாவம், பச்சாதாவம் என்பதை கலந்து அந்த குளோசப் பிரேமில் விளாசும் ஸ்டைல் கமல் ஏற்கனவே பல படங்களில் செய்து இருந்தாலும் திகட்டாத ஆஹாஸ்கர் நடிப்பு (ஆஸ்கர் என எழுதலாம், அவங்களுக்கும் பிடிப்பதில்லை, அவருக்கும் பிடிப்பதில்லை).//

    அது சரி... இந்த படம் ஆஸ்காருக்கு போகுமா??? தலைக்கு ஆஸ்கார் கிடைக்குமா?

    //‘ஓட்டு வாங்கி கோட்டைக்கு போகும் போது, என்ன கும்பிட்டு எனக்காக சேவை செய்யுரேன்னு சொல்லிட்டு இப்போ இல்லையா’ எனும் போது கை தட்டலும் ஆஹா... ஒசையும் தியேட்டரை அள்ளுகிறது. வசனகர்த்தா முருகனுக்கு கை குலுக்கி பாராட்டலாம்.//

    ஸ்ருதி பேர் டைட்டிலில் முதலில் போடும் கமல், கைதட்டல் பெறும் வசனம் எழுதிய முருகனின் பெயரை படத்தில் முடிவில் போட்டாரே...அதுக்கும் அவருக்கு ஒரு சபாஷ் சொல்லுங்களேன்..

    //போலீசுக்கு உதவும் டெக்னோகிராட், ரிப்போர்டர், லட்சுமி, தீவிரவாதி, இன்ஸ்பெக்டர் சிவாஜி என படம் முழுக்க இயக்குனரின் டச் டக்கர்.//

    அதுவும் அந்த லக்ஷ்மி மூஞ்சிய க்ளோஸ்அப்ல பார்த்து விட்டு நாலு நாளாச்சு தூங்கி... கண்ண மூடுனா.. பயமுறுத்துது...இவிய்ங்களுக்காவது மைக்கேல் வெஸ்மோர் கிட்ட கொஞ்சம் மாவு வாங்கி இருக்கலாம்...

    //ஓடுமா என கேட்டால், வெகு ஜனம் ரசிக்க வாய்ப்பு குறைவே. துணிச்சலான முயற்ச்சி, நல்ல நடிப்பு. ஆறுதலான, ஆரோக்கியமான தமிழ் சினிமா வளர்ச்சி. //

    முடிச்சாச்சா விமர்சனம்....அய்யா படுக்காளி...

    படத்தோட வசனமே ஒன்றரை பக்கம்தான்... ஆனால், படுக்காளியின் விமர்சனம் மூணு பக்கம்... என்னோட பின்னூட்டம் நாலு பக்கம்...

    என்ன நடக்குது இங்க மக்கா......

    பின்குறிப்பு : தீவிரவாதத்தை அழிப்பது / ஒழிப்பது தீவிரவாதத்தால் தான் முடியும் என்று படம் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?? எனக்கு இல்லை...

    பதிலளிநீக்கு
  2. வாங்க கோபி, வயிறு குலுங்க சிரித்தேன்.

    எளிய நடையில் தங்கள் பின்னூட்டம் ஒரு நகைச்சுவை சரவெடி. நல்ல நகைச்சுவை தங்கள் ரத்த்த்தில் கலந்து இருக்கு. வாழ்த்துக்கள்.

    ஸீன் சீடிலிங் பற்றி சொல்லி ராதா, பாலையா வை குறிப்பிட்டு ரசித்த்து சூப்பர். சத்யராஜ், பிரகாஷ் ராஜ் என பட்டியல் தொடருகிறது. கவுண்டமணியும் இதில் முக்கிய இட்த்தில் உள்ளார் என்றாலும், கொஞ்சம் ஓவரா போயி பண்பட்ட நடிகையான மனோரமாவே முகம் சுழிக்கும் போது ரசிகனாய் நாமும் அதுவே.

    // படத்தோட வசனமே ஒன்றரை பக்கம்தான்... ஆனால், படுக்காளியின் விமர்சனம் மூணு பக்கம்... என்னோட பின்னூட்டம் நாலு பக்கம்...

    என்ன நடக்குது இங்க மக்கா......///

    இது தொல்காப்பிய உரை டகால்டி போல ஆச்சோ.

    ////தீவிரவாதத்தை அழிப்பது / ஒழிப்பது தீவிரவாதத்தால் தான் முடியும் என்று படம் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?? எனக்கு இல்லை...////


    தன் உயிரை மயிர் என நினைப்பவன், அதை எந்த நேரத்திலும் விட்த் தயாரானவன், அடுத்த உயிரை குடிப்பவன் திவிரவாதி. இந்த பிரச்சனைக்கு தீர்வு, அவனை திருத்தலாம்.

    ஆனால் அவசரமாய் நாம் செய்ய வேண்டியது தடுப்பது.

    என்ன செய்யலாம். வைரத்தை வைரத்தால் அறுப்பது இப்போ நாம் செய்து கொண்டு இருப்பது.

    வேர் வரை சென்று சாதி இல்லை, மதம் இல்லை, நாடு இல்லை. மனிதம் மனித நேயம் மாத்திரமே உள்ளது என சொல்லி, அவன் இது வரை இழந்த்தை, இன்னல் பட்ட்தை மறக்க செய்தால் மேட்டர் ஒவர்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல விமர்சனம்.. ரசித்தேன்...

    யப்பா சாமி, தல கோபி, போனா போதுன்னு என்னை விட்டுடாருன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு