பக்கங்கள்

ஆன்மிக அல்வா – (பகுதி – 1)

ஆழப்புலைல நம்ம அப்புண்ணி நாயர் கையில ஆக்ஸ் ஆயில் பாட்டில  வச்சி தடவிக்கிட்டுருந்தாராம், இதென்ன கலாட்டா என வியந்து நம்ம வேங்கிட்டு வெள்ளந்தியா கேட்டாராம், ஐயா அப்புண்ணியைய்யா, ஏன்யா இப்படி பாட்டில தடவுறீங்கன்னு.

அதுக்கு நம்ம அப்புண்ணி சொன்னாராம், டாக்டர் தான் சொல்லியிருக்காரு தலைவலிச்சா இத தடவுங்கன்னு !!! எப்பூடி.... பாட்டில தொறக்காம, தைலத்த எடுக்காம, வெறும் பாட்டில்ல படம் பார்க்க முடியுமா. மூடி கழட்டாம எப்படி தலை வலி போகும்.


ஆம் நம் வாசக நண்பர்களே!! ஆன்மீகம் எனும் தொடர் எழுத உச்சேதித்ததும், சில ஆரம்ப கேள்விகள் என்னை அப்படி மூடி கழட்ட வைத்தது. அறியாத வயதில் ஆழமாய் சில நம்பிக்கைகள் நம்முள் செதுக்கப் பட்டிருக்கின்றன. நம் அடையாளமாய் பதிந்த இந்த முத்திரை பிரிக்க முடியாது நாமாகவே ஆகி, நம்முள் ஒட்டித் தான் இருக்கிறது.

மொழி, மதம், இனம், சிந்தனை என பல அடுக்குகளில் நிரவி இருக்கின்றன. சமூகமும் நம் குடும்பமும் போட்டி போட்டு கொண்ட வரைந்த சித்திரமல்லவா நாம்.

ஆனால் இன்று நம் முறை. நம்மை நாம் ஆழமாய் பார்த்து, நமது நல்லது கெட்ட்து தெரிந்து நம் வாழ்வை சீராக்க முயலும் முயற்சி இது. தன் சிலையை நாமே செதுக்கும் நிலை.

சில தகவல்களின் மூலமாய் நம்மை நம் அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளவும், சில தகவல்கள் சேர்க்கவும், நம் வாழ்வை வளமாக்கவும் இத்தொடர் அமைய வேண்டும் எனும் என் நம்பிக்கை இலக்கை அடையட்டும்.

வாருங்கள் ஒரு நடுத்தர வர்க்கத்தின் மெயின் ஹாலுக்கு போவோம், அங்கு நடக்கும் சம்பாஷனையை உற்று கேட்போமே.

டாடி, குழுந்தை எப்படி உண்டாகுது.

கணீர் குரலில் எட்டு வயது செல்ல மகன் கேட்க, பதில் யோசிக்கும் போது கொஞ்சம் திணறிப் போனார் தர்மலிங்கம்.

வார இறுதியில், ஒய்வு போர்வையை விலக்காமல் ஒருச்சாய்ஞ்சு படுத்து கொண்டிருக்கும் என்னை படுத்துறானே... படுபாவிப்பய. ஏண்டா அலர்ட்டா இருக்கிறப்போ இந்த மாதிரியெல்லாம் கேக்கக் கூடாதா. கேட்டுப் புட்டான், என்ன செய்யலாம்.

சீ போடா இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் என அவர் வேலையை எளிதாக்கி அவனுக்கு இந்த சப்ஜெக்டில் ஆர்வம் தூண்ட மனதில்லை. அப்படி செய்தால் ‘ஏய் ஏதோ பெரிய விசயம் இருக்குடா இதுல’ என ஒரு மெமரி கொடி (Flag) அவன் அனாவசியாய் வைத்துக் கொள்வான்.

சரி லெட் மீ டெல் த ட்ரூத், இதுதான் இப்படித்தான் என மருத்துவம் அறைகுறையாய் கண்டுபிடித்ததை சொல்ல்லாம், அவனுக்கு புரியுமா. சந்தேகந்தான்.

ஆண் பெண் எனும் கூடலில் சைடு வாங்கி கூட்ஸ் வண்டி விட்டாலும் விடுவான். கொதிக்கும் டீயை கோப்பையோடு அவனுக்கு புகட்டுவது போல் ஆகிவிடும். யப்பாடி, வாய், நாக்கு வயிறு எல்லாம் வெந்துல்ல போகும். மொல்லமா ஊதி ஊதி குடிச்சு, கொஞ்சம் கொஞ்சமா காலப்போக்கில அவனுக்கு அந்த சமாச்சாரம் புரிவது நல்லதாச்சே.

புரிஞ்சுக்குற பக்குவம் உடலுக்கும் மனசுக்கும் வர்ற வரைக்கும் சொல்லாம இருக்கிறது நல்லதாச்சே. அதெல்லாம் ஒகே, ஆனா இப்ப என்ன செய்வது, பதில் சொல்லியாகணுமே.

ஆங்... இது சரியாயிருக்கும்.

அது ராஜா, கடவுள் ப்ளெஸ் பண்ணி, நமக்கு பிள்ளை கொடுப்பாரு.

ஒற்றை வரியில் சொல்லி முடித்தார். ஓ அப்படியா, மகன் தலையசைத்தான். ஏதோ அரைகுறையாய் புரிந்திருக்கும், அவனது கேள்வியின் அப்போதைய தாகம் தீர்ந்திருக்கும், நகர்ந்து விட்டான்.

கேள்வி கேட்ட நொடியில் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்த்தால் கிடைத்த கொஞ்சம் அவகாசத்தில் அவசரமாய் அவர் சொன்ன பதில் அச் சூழலுக்கு சரி என பட்டது. நாளை அவன் வளர்ந்து பெரியவனாகும் போது கூட, அந்த பதில் பொருத்தமாகவும் இருக்க கூடும். அப்பாடா, இப்பதைக்கு தலை தப்பியது.

சொன்ன அந்த கடவுள் பதிலில் நமக்கே தெளிவு கொஞ்சம் குறைவே. எனினும், அந்த பதிலில் சௌகரியம் உண்டு. மிக எளிது. எது வரையறுக்க முடியவில்லையோ, எது தெரிய/ தெளிய முடிவில்லையோ அப்போது கையை உயர்த்தி மேலே காட்டி கடவுளப்பா என சொல்வது ஈசி.

பிரச்சனை பெரிசாக நம்மிடம் பூச்சாண்டி காட்டும் போது ஹூம் என ஒரு நீண்ட பெறுமூச்செரிந்து எல்லாம் இறைவன் செயலப்பா என சொல்வதில் நம் கவலைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது.

மேற்கூரிய சம்பவம் நம் சிந்தையில் ஒரு கேள்வியை பூக்கிறது. ஒரு வேளை, விளக்கிச் சொல்லும் வியாக்கியானம் வேண்டாம் என நம் முன்னோர் நினைத்ததால் கடவுளிசம் தோன்றியதா, அல்லது கடவுள் எனும் அவசியம் ஏன் வந்தது.

நீயூக்ளியர் பிஸிக்ஸின் நேவியர் ஸ்டோக்ஸ் இகுவேஷன் சால்வ் பண்ண உட்கார்ந்தால் எப்படி மண்டை காய்கிறது. இல்லாத தூக்கம் எல்லாம் அடித்து பிடித்து வருகிறது. சே சாய்ஸில் இந்த கொஸ்டினை விட முடியுமா என திட்டம் வட்டமடிக்குது. வாழப் போற எழுபது எம்பது வயசுல எவ்வளவு தான் தெரிஞ்சுக்குறது, இந்த உலகத்து விசயம் எல்லாம் கத்துக்க முடியுமா, கரையேற முடியுமா.

எல்லா குளத்துலயும் இறங்கி தண்ணி குடிக்காம, வீட்டு குழாயில தண்ணீ குடிச்சு தாகம் தீர்த்தா போறாது என நம் நலன் கருதி முடிவெடுத்தார்கள் முதாதையர்கள்.... என தத்துவம் சொல்கிறார் நம்ம முள்ளுக்காட்டு மூக்கு நோண்டி சித்தர்.

கடவுள் பற்றியும், ஆன்மீகம் பற்றிய நம் விவாத்த்திற்கு அடிப்படையாய் மனித ஜனத்தொகையையும் மதங்களை பற்றியும் இன்றைய நிலவரப்படி, United Nations தகவல் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா. மனிதர்களை பற்றிய தகவலில் தொடங்கினால் நம் கருத்துக்களும் நீரோட்டம் போல அமையுமல்லவா.

இன்றைய நிலவரப்படி நாம் கண் இமைக்கும் ஒவ்வொரு நொடியிலும் அதாவது ஒவ்வொரு செகண்டிலும் 4 புதிய மனித உயிர்கள் இப்பூமியில் பிறக்கின்றன. அதே ஒரு நொடியில் 2 உயிர்கள் இவ்வுலகை விட்டு மறைகின்றன.

அடேயப்பா நெசமாலுமா. நல்ல தகவலாவில்ல இருக்கு. வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது எனும் திரைப்பாடல் நம்ம TMS குரல்ல பாடுதே . சினிமா தியேட்டர்ல மார்னிங் ஷோ பார்க்க டிக்கட் வாங்கினா ஷோ முடியுற வரைக்கும் தான் விடுவாங்க, அப்புறம் நம்ம இடத்த காலி பண்ணினாதான் மார்ட்டினி ஆளுங்க உள்ள வரவும் அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கும். யேயப்பா.... இந்த விளையாட்டு ரொம்ப பெரிசாவும் புதிராவும்ல இருக்கு.

பூமியில் மொத்தம் 226 நாடுகள் உள்ளன, இதில் 50% மனித உயிர்கள் 10 நாடுகளில் வாழ்கின்றனர். சீனா, இந்தியா, யூ.எஸ். இந்தோனேஷியா, பிரேசில், பாக்கிஸ்தான், வங்காள தேசம், நைஜீரியா, ரஷ்யா, ஜப்பான். அவ்வளவுதான். மிச்சமா இருக்கிற 216 சொச்ச நாடுகள்ல ஜனத்தொகை பாக்கி 50%.

பத்து நாடுன்னு பேசுனோமே, அதுலயும் ஒரு சுவாரசியமான தகவல். மொத்த ஜனத்தொகையில் 1/5 பகுதி சீனர்கள். அதாவது ஒரே நாட்டிலேயே அத்தனை பேரு இருக்காங்க. ஆத்தாடி சீனர்கள் சிலுப்பிகிட்டு தான் அலையுறாங்க.

மொத்த மனித எண்ணிக்கையில் நூற்றில் 60% ஆசியாவை சேர்ந்தவர்கள்.
இந்த தகவல்கள் எல்லாம் நல்லாயிருக்கு ஆனா போற ரூட்டுதான் புரியல என்பவருக்கு. மனிதர்களை அவர்கள் வாழும் இடங்களை தெரிந்து கொண்ட நாம் படிப்படியாய் அவர்களின் வாழ்வியல் முறைக்கும், மதங்கள் துளிர்த்த விதமும் புரிய ஏதுவாயிருக்குமல்லவா.

செய்யலாமே, நம் விவாதம் தொடரும் முன் இப்பகுதியில் சொன்னவற்றை அசை போடவும், ஆராயவும் நேரம் எடுப்போமா, கொஞ்சம் இடைவெளி கொடுப்போமா.

அன்புடன் அடுத்த பகுதியில் சந்திப்போம்.


தொடரும். ....

7 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் ஆன்மீக ஆசிரியர்களே....
  எப்பவும்போல உங்கள் ஸ்டைலிஸில் சுவாரஸ்யமாய் நடைக்கொண்டு எழுதும் உங்கள் பாணிக்கு ஆன்மீகம் நல்லத் தீணி...

  தொடருங்கள் உங்களைத் தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  பதிலளிநீக்கு
 3. தமிழிஷ் இணையதளத்தில் தங்களின் மேலான வாக்குகளை அளித்து இப்பதிவை பிரபலமாக்கிய அத்தனை அன்பு தோழமைக்கும்

  என் சிரந்தாழ்ந்த நன்றியும் வணக்கங்களும்.

  முன்னுரைக்கு மட்டுமல்லாது முதல் பகுதிக்கும் தங்கள் வாக்குகள் அளித்து இப்பதிவை பிரபலமாக்கியதன் மூலம் நம் எண்ணம் ஈடேறும் எனும் நம்பிக்கை வருகிறது. மிக்க நன்றி.

  1. balasee
  2. paarvai
  3. suthir1974
  4. ldnkarthik
  5. ganpath
  6. jegadeesh
  7. ambuli
  8. kvadivelan
  9. hihi12
  10. tharun
  11. ashok92
  12. jntube
  13. jetliidli

  பதிலளிநீக்கு
 4. /// கிளியனூர் இஸ்மத் சொன்னது…
  வாழ்த்துக்கள் ....எப்பவும்போல உங்கள் ஸ்டைலிஸில் சுவாரஸ்யமாய் நடைக்கொண்டு எழுதும் உங்கள் பாணிக்கு ஆன்மீகம் நல்லத் தீணி...

  தொடருங்கள் உங்களைத் தொடர்கிறேன்! /////


  வாங்க இஸ்மத், வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. கடவுள் மனிதர்களைப் படைத்தாரா ? அல்லது மனிதர்கள் கடவுள்களைப் படைத்தார்களா ? - இந்தக் கேள்விக்கு விடை சற்றே கடினமானது.

  ஆனால் ”மனிதன் மதங்களைப் படைத்தான்” என்பதில் விவாதமில்லை.

  ”மதங்கள் மனிதர்களைப் படைக்கிறதா ?” என்று பாரதிராஜா ’வேதம் புதிது” படத்தின் முன்னுரையில் ஒரு வினா எழுப்பினார்.

  விடை தெரியாமல் இன்றும் எனக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் இவ்வினாவிற்கு விடையளிக்க உங்கள் பகுதி-1 பயணிக்கிறது. மக்கள் தொகைக் கணக்கை நீங்கள் அடிப்படையாகக் கொண்டு துவக்கி இருப்பதால் உங்கள் ம(னி)தவாதம் சரியான திசையில் செல்வதாய் உணர்கிறேன்.

  தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
 6. //// JoeBasker சொன்னது… கடவுள் மனிதர்களைப் படைத்தாரா ? அல்லது மனிதர்கள் கடவுள்களைப் படைத்தார்களா ? - இந்தக் கேள்விக்கு விடை சற்றே கடினமானது. ஆனால் ”மனிதன் மதங்களைப் படைத்தான்” என்பதில் விவாதமில்லை. ”மதங்கள் மனிதர்களைப் படைக்கிறதா ?”

  விடை தெரியாமல் இன்றும் எனக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் இவ்வினாவிற்கு விடையளிக்க உங்கள் பகுதி-1 பயணிக்கிறது. /////

  உண்மையிலும் உண்மையான கேள்வி. இக்கேள்வியின் பரிமாணம் மிக பெரியது. இதற்கான பதில் தேடும் முயற்சியே நம் இத்தொடர்.

  தங்கள் போன்றோரின் ஆழமான, அறிவுபூர்வமான சிந்தனைகள் பகர்ந்தால், நம் எல்லோருக்கும் தெளிவு வரும் என நம்புகிறேன்.

  ///// மக்கள் தொகைக் கணக்கை நீங்கள் அடிப்படையாகக் கொண்டு துவக்கி இருப்பதால் உங்கள் ம(னி)தவாதம் சரியான திசையில் செல்வதாய் உணர்கிறேன்.

  தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். /////

  மிக்க நன்றி.

  அடுத்த பகுதிகளிலோ, அல்லது எப்போதாவது எங்காவது ரூட் மாறும் போதும் ஒரு குட்டு குட்டி, சரியான பாதைக்கு திசை திருப்ப வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. கடவுளை காணும் வழி

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/219

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/198

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/886

  http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/223

  பதிலளிநீக்கு