பக்கங்கள்

மரியாதை

நம்ம இடக்கு மடக்கு காரர் அடிக்கடி சொல்லுவாரே .... மரியாதையா ’மரியாதய’ ஆஸ்கருக்கு !!! அனுப்புங்கப்பா, அம்புட்டு ஆஸ்கரயும் அள்ளிக்கிட்டு வந்துரும்னு... அது கிடையாது. இது வேற மேட்டர்.

டேய் அவசரமா தேங்கா சில்லு வேணும்.

போய் மேட்டுக்கடையில் வாங்கிட்டு வா. பஸ்ஸ்டாப்பு அண்ணாச்சிகிட்ட போறேன்னு நேரத்த சுணக்காத, என அம்மா உச்சஸ்தாயியில் சொல்ல, நம்ம பொடியன் யோசிக்கிறான்.

அது ஏன் நமக்கு பஸ் ஸ்டாப்பு பக்கத்தில இருக்கிற அண்ணாச்சிய பிடிச்சுது. தூரம் அதிகந்தானே. மேட்டுக்கடை இங்கனக்குள்ள இருக்கு, அத விட்டுபுட்டு நடையா நடந்து அங்க ஏன் போகணும்.

ம்... அங்க போனா மரியாதயா வாங்க என்ன வேணும் என்பார். பார்வையிலும், நட்த்தையிலும், பேச்சிலும், வார்த்தையிலும் மரியாதை இருக்கும். இதுவே மேட்டுக் கடையில் என்னல வேணும் என ஒருமையில் பேச்சு, அசிரத்தையாய் பொதியும் பேப்பர் பொட்டணம், என வாங்கும் அனுபவம் சங்கடமே.

என்ன இது மரியாதை வேண்டி தான், என் மனம் அலைகிறதோ....

எப்படி தொடங்கியது. நினைவுகள் கிண்டி இந்த நிகழ்வை சொன்னது.

ஒரு நாள் குளிக்கிற சோப்பு வாங்க சென்ற போது, எள் போட்டா எண்ணையாகும் கூட்டம். அண்ணாச்சியும் பாவம் வேர்த்து விறுவிறுத்து தளர்ந்து இருந்தார். என்னவோ தோணுச்சு. அங்கன இருந்த பானைத் தண்ணீருல ஒரு டம்ளர் மோந்து அண்ணாச்சி குடிங்க என்றேன்.

எதிர் பார்க்க வில்லை போலும். சிரித்த முகமாய் வாங்கி மொடக் மொடக் என குடித்தார். என்ன வேணும் ரகசிய குரலில் கேட்டார். பரவாயில்ல அண்ணாச்சி, கூட்ட்த்த பாருங்க. மீண்டும் அதே ரகசிய குரலில் பதில்.

பரவாயில்ல என்பதாய் சொல்லு என்றார். நான் வாங்க வேண்டிய சோப்பை கை காட்ட டக்கென எடுத்து கொடுத்தார். நானும் கையில் இருந்த காசை கொடுத்து விட்டு, சில்லறை அப்புறமா வாங்கிக்கறேன், என விறு விறுவென நடந்து விட்டேன். அன்று தொடங்கியது இந்த மரியாதை.

நம்பிக்கை,
உயர்வான அபிப்பிராயம்,
இந்த உறவு வேண்டும்
எனும் நினைப்புக்கள் நம்மை மரியாதையாக்கும்.

காந்தி தாத்தா சொன்னது போல், நம் மரியாதை நம்மிடம் உள்ளது, அது அடுத்தவர் இட்த்தில் இருப்பதாய் நினைப்பதே நம் பிரச்சனையின் ஆணி வேர்.

2 கருத்துகள்:

  1. அண்ணாச்சி படுக்காளிக்கு,

    நமது மரியாத நமது கையில்….ஆம்… நல்ல கருத்து….அப்ப ஏன் நம்மள மாத்திக்கிடனும் மத்தவங்களுக்காக… நீ நல்லவன்….உன்னைப் போலவை வாழ ஆசைப் படு…. அப்பொது தெரியும் நமது குணம் மற்றவர்களுக்கு…….

    செல்லத்துரை….

    பதிலளிநீக்கு
  2. வாங்க அண்ணாச்சி,

    /// cdhurai சொன்னது…

    நமது மரியாத நமது கையில்….ஆம்… நல்ல கருத்து….அப்ப ஏன் நம்மள மாத்திக்கிடனும் மத்தவங்களுக்காக… ////

    மாத்த வேணாமே... நாம் நாமாய் இருப்பது நமக்கு சவுகரியம்.


    //// நீ நல்லவன்….உன்னைப் போலவை வாழ ஆசைப் படு…. அப்பொது தெரியும் நமது குணம் மற்றவர்களுக்கு…….////

    நல்ல சிந்தனை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு