பக்கங்கள்

தந்தை தவறிய போது

நண்பா!!!!
சொன்னதை செய்து விட்டேன்.

நான் உணர்ந்த்தை உரை நடையில் சொல்ல, கவி நடையில் சொல்லேன் என னிய நண்பர் சொன்னார்.

தந்தை தவறிய போது ....

சொல்லத் தவறினேனே,
சொல்லாய் சொல்லியிருக்க வேண்டுமே,
நடு வீட்டில் உடல் கிடத்தியபோது,
உணராத உடலிடம்,
எறும்பு உலாவிய கைகளில்,
ரோஜா மலருக்கிடையில் மரணமடைந்தவரிடம்
டாடி ஐ லவ் யூ என திரும்ப திரும்ப சொன்னேன்....

இன்னும் நான் பார்த்திருக்கணுமோ.... தவறி விட்டேனோ,
காலனிடம் நீங்கள் கால அவகாசம் வாங்கியிருக்கணுமோ.
கேள்வி க(ள்)ல் சிந்தையில் எறிகிறது.
வேள்வித்தீயில் உணர்வு எரிகிறது.

என் எல்லாமே தங்கள் பிச்சைதானே, உடல், படிப்பு, எண்ணம்
நான் உங்கள் மறுபிம்பம் தானே....
நன்றி அவசியமில்லையோ.
வார்த்தை வன்முறையோ.

ஏன் இந்த அழுகை, புலம்பல்.
யோசித்த்தில் புரிகிறது.
எனக்கு பிடித்த கவித்துவத்தை சிந்தையில் கலந்த்தும்,
தத்துவ தர்க்கத்தை தனதாக்கிக் கொண்ட்தும்.
கண்ணீரை பிரசவிக்கின்றன.
ஏக்கத்தை மூச்சில் கலப்படம் செய்கின்றன.
இல்லையேல் எண்பது வயசு தகப்பன் சாவு சமனம் தானே.

போன விடுப்பில் உங்களை பார்த்தேன்.
ஆள் பாதியாய்.
ஆடையில் பாதியாய்,
இடுப்புப் பட்டி இல்லாவிடில் கால் சட்டை தரை தவளும்.
கன்னத்து சதை காற்றில் கரைந்திருக்க,
கண்களிடத்தில் கருங்குழி கவிதை வாசித்திருந்ததே....
கோர்வை இல்லா பேச்சு,
நிச்சயமில்லா நினைவு
என காலம் தங்களை கலைத்திருந்தனவே

சொன்னா கேக்குறதில்ல, சுகரெல்லாம் இருக்கு,
பிஸ்கட் சாப்பிடலாமா என அக்கம்
அக்கரையாய் சொன்ன போது
பொக்கை வாய் காட்டி பதிலேதும் சொல்லாமல்,
அலங்க மலங்க பார்த்த்துமே புரிந்த்து.
நான் அறிந்த தந்தை காணாமல் போயாச்சு..

மலர்ந்த சிரிப்பு, நிமிர்த்திய தோள்,
வீசிய கை என நீங்கள் நடந்தால்
நாங்கள் பெறுமையுருவோமே,
இதெல்லாம் ஒண்ணுமில்ல, போனாப் போகுது
என பிரச்சனை சுனாமி குடும்பத்தை
பதம் பார்க்க வந்தபோது உரமாய் உரைத்தீரே
நான் இருக்கிறேன் குடும்பத்துக்கு என நம்பிக்கை விதைத்தீரே.
எங்கே அந்த தந்தை....

இப்போது பார்த்தேன், அடுத்த முறை பார்ப்பேனா,
தெரியாது என பதில் சொல்லி,
விதைத்த நினைவினால் அருகமர்ந்தேனே...
வெற்றுப் பார்வையில் அலறும் மெளனத்தில்
பூங்காவில் இருந்தோமே... பூப்போல
- பூவுக்கு மத்தியில்
கடமையெல்லாம் முடிஞ்சுச்சு, கடவுள் கூப்பிட்டா போ வேண்டியதுதான்,
என மரணத்துக்கு புது விளக்கம்.

விநோதமாய் பார்த்தேன்,
கடமை முடிக்கும் தளமாய்த்தான் வாழ்வை கொண்டீர்களா,
அவசரக்குடுக்கையாய் அறிவுரை சொல்லாது,
வேறு என்ன ஆசை,
உடுக்கணுமா, உண்ணனுமா, சினிமா போகணுமா,
அரைகுறையாய் ஜோக் சொல்லி சிரிக்க வைக்க நான்,
கிடந்தால் தேவல, பையன் பேசிக்கிட்டே போறானே
என உள்ளுக்குள் என உள்ளுக்குள் நினைத்திருப்பீர்களோ....

புரியாத மரணத்தில் பயமே பிரதானம்,
வெல்ல முடியா இயற்கையில் இயலாமையே பல் இளிக்கும்.
அன்பாய் அலட்டாமல்... தெரியுமப்பா என சாவ முடியுமா.
இல்லை, உறக்கத்தில் மறைந்த்தும்,
மடிப்பு கலையாத போர்வையிலும்
மரணத்தை நீங்கள் வென்று விட்டீர்கள்.

ஆன்மாவெல்லாம் கிடையாது,
அடம் பிடிக்கும் அறிவியல்.
உடம்பு தான் மனிதன் அதை தாண்டி ஒன்றும் இல்லை,
செத்துப் போன காரணம்... இதயம் நின்று போனது
என மூர்க்கமாய் முழங்கும்.
ஏன் நின்றது...
அது அப்படித்தான் என
அறிந்த்தை மட்டும் அறிவியல் சொல்லும்

தெரிந்ததில் தொடங்கி தெரியாது என முடிப்பது ஆன்மீகம்
தெரியாததில் தொடங்கி தெரியும் என முடிப்பது அறிவியல்

ஆவியை இறைவனிடம் ஒப்புக் கொடுக்கிறேன்
எனும் எண்ணத்துக்கு,
என்னத்துக்கு !!!
என கேட்டு அறியாமை என அட்ரஸ் தரும்.
ஒதுக்கி வைக்கப்பட்ட மனஇயல் கூட
பிற்பாடு ஒட்டிக் கொண்ட்து.
இன்று ஆன்மீகம் ஆசிரமம் தாண்டி
ஆஸ்பத்திரியில் நுழைகிறது.
ரெய்க்கி, பிரானிக் ஹீலீங் எனும்
அப்பல்லோவின் புதிய முயற்சி
ஆச்சர்யதின் அஸ்திவாரம்.

அன்னைக்கு இலக்கிய புலமை,
ஏறக்குறைய எல்லாம் தெரியும் சங்கமோ சமகாலமோ....
தமிழும் கிடைக்காத போன கிரந்தமும் விரல்நுனியில்,
கல்வெட்டின் முனைவர் எனும் முயற்சியும் முற்றுப் பெறாமல்
காலன் வந்து உயிரைப் பறித்த போது,
கோபம் தீயாய் கழன்றது.
எங்கே புலமை, எங்கே உயிர்.
இதுதான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும்.

உங்கள் இன்றும் அதே மரணம் உங்கள் மரணம்,
வேறு திசையில் இழுத்து செல்கிறது.

கவலைப் படவோ அலட்டிக் கொள்ளவோ ஒன்றும் இல்லை,
என சமனமாக்குகிறது.

மறைமுகமாய் என் மரணத்திற்கு பறை அறைகிறது
அதன் ஒலியில் என் செவிப்பறை கிழிகிறது
என் பதவிசு, பொக்கிஷம், கவலைகள்
சுவடு தெரியாமல் காணாமல் போகிறது.
என் மரணம் பற்றிய தீர்மானத்தில்
வாழ்வு வேறு ஒரு திசையை காட்டுகிறது.

நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம்.
என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக