பக்கங்கள்

ஏன்ஜெல்ஸ் அண்ட் டேமன்ஸ் - விமர்சனம்.


இது வெகு ஜன படம் இல்லை.
நாவல் தந்த தாக்கத்திலே உருவான அலை, மெதுவாய் அடங்கி விடும். சினிமா சரித்திரத்தில் மைல்கல்லாய் நின்ற டைட்டானிக், பென் ஹர் போலே நிற்கும் வாய்ப்பு இல்லை.

எனும் போது படம் சரி இல்லையா, என்றால் நிச்சயம் இல்லை. நல்ல தொழில் நுட்பத்துடன் ரசனையாய் எடுக்கப்பட்டே இருக்கிறது. சரி ஏன் இப்படி சொல்லுர, என்பவருக்கு, படத்தின் கதையில் தொடங்குவோம். மறைந்த சாண்டோ சின்னப்பா தேவர், போலே கேட்டால்,
'ஒற்றை வரியில் கதை சொல்லு'
'அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அடிதடி'
மூன்று வார்த்தையில் முடி ந்து போச்சே. இன்னும் விரிவாய் சொல்லு.

பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய கலிலியோ கத்தோலிக்க குருமார்கள் சண்டை நீண்டு இருபத்தோராம் நூற்றாண்டிலேயும் தொடருகிறது.

இந்த சாராம்சம் படத்தில் இல்லையே.

தெரிந்ததில் தொடங்கி தெரியவில்ல்லையே அல்லது தெரியாது என்று முடிப்பது ஆன்மீகம். தெரியாததில் தொடங்கி தெரிந்து விட்டது என்று முடிப்பது அறிவியல்.

நம் நாட்டில் இந்த சண்டை குறைவு. கருப்பு சட்டை பொட்டு பகுத்தறிவு பேசும் கூட்டம் கூட ஒரு மதத்தை சாடுவதையே முக்கியமாக கொள்ளுவார். அமரர் சுஜாதா தொடங்கி அப்துல் கலாம் வரை சராசரி மனிதன் வரை அறிவியலையும் ஆன்மீகத்தையும் சரி சமமாய் கொள்ளுவான்.

உடைந்த கப்பல் பற்றிய படம் தானே என்று மெத்தனமாக இல்லாமல் வருஷங்களாய் ஆராய்ச்சி செய்து தம் பிடித்து கடலுக்கடியில் போய் விவரம் சேகரித்து திரையில் தரும் போது, அதன் தரமே தனி.
அப்படி ஒரு மெனக்கெடல் இதில் தெரியவில்லை. நாவலை மட்டுமே நம்பியது பொல் தோன்றுகிறது.

நாவல் திரை வடிவம் பெரும்போது எக்கச்சக்க சிக்கல். ஒன்றே ஒன்று மட்டும் உதாரணத்துக்கு.

விக்ரம் பூரா ப்ரொப்ளெம்.

அமரர் சுஜதா கதையாய் எழுதியபோது,

"இந்த எல்லையை மீறி செல்பவர் கைது செய்யப் படுவார்கள் " என்ற எச்சரிக்கையும் தனிப்பட்டு எழுதி இருந்தது. இதை படிக்க தெரியாத, இதை பற்றிய எந்தவித பயமும் இல்லாமல் ஒரு கருங்குருவி அதன் மேல் உட்கர்ந்து கொண்டு இருக்க, ................."

என்று செல்லும் அந்த வரி. இதை எடுக்கிறேன் பேர்வழி என்று சென்ற கலை ஞானி கும்பல் தேடி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்று புறாவை பிடித்து பெயிண்ட் அடித்து இரண்டு நாள் தாமதத்தில் (இந்த புறா காட்சிகக மட்டும்) படமாக்கினார்களாம்.

சரி விளைவு என்ன. கதை வாசிக்காத ஒருவரும் இந்த உணர்வை பெற வாய்ப்பு இல்லை.

ஒன்று புரிகிறது. இலக்கியம் வேறு திரைப்படம் வேறு.

திரை க்கதையில் நிறைய மாறுதல் செய்துள்ளார்கள். மிக நல்லது. மிக பெரிய ஆன்டி மட்டர் கண்டுபிடிப்பை செய்தது ஒற்றை தாத்தாவும் ஊர் சுற்றும் மகளும் என்கிறது நாவல். திரையில் அப்படி இல்லை. ஒரு குழுவே உண்டு.

டேன் ப்ரௌனின் பிம்பமே கதா நாயகன் லங்க்டன். அதனால் தானோ என்னவோ செர்ன் இல் நடக்கும் கொலையை துப்பு துலக்க தூங்கி கொண்டு இருக்கும் பேராசிரியரை கொண்டு வருவார்கள். மகளுக்கு முன்னால் முந்திரி கொட்டையாய் இவர் வந்து இவர் மேல் கதை நகரும். திரையில் அதுவும் இல்லை.

பிரசினை செய்ய கூடிய சில விடயங்கள், அரேபிய கொலை காரன், போப் ஆண்டவருக்கு சோதனை கூழாய் மூலம் பிறந்த மகன் என்று உள்ளதை தவிர்த்து விட்டார்கள். புத்திசாலிகள்.

ஆன்மீகத்தை சார்ந்து அறிவியலை சாடுவதாய் மத குரு பேசும் ஒரு வாதம் எனக்கு நாவலில் ரொம்ப பிடித்த இடம்.

"ப்ரொட்டான், ந்யு ட்ரான் என்று விளக்கி காரணம் சொல்லி விட்டு நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன. சராசரி மனித வாழ்க்கையில் இறைவன் என்ற பிம்பத்தினால் அவனுக்கு பெரும் நம்பிக்கையும் நிறைவும் அமைதியும் தர ஏன் முயற்ச்சிகவில்லை. காரணமே இல்லாது நோக்கமே இல்லாது தானாய் உருவாக்கபட்ட சதை பிண்டம் தான் மனிதன் என்று நிருபிப்பதின் மூலம் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள். என்று உணர்ச்சி வயப்பட்டு கேட்பார்.

என் கோணத்தில் நான் யோசித்தது இது.

நடு ரோட்டில் ஒரு சராசரி கிற்ஸ்துவனை நிருத்தி புனித தெரசம்மாள் பற்றி சொல்லு என்றால். நே!! என்று விழிப்பான். இன்னும் கேட்டால் தலை சொரி ந்து கொண்டு பெரிய கோவில்களின் பக்க வாட்டில் ஒளிந்து கொண்டு இருக்கும் அந்த சிலையின் வடிவை சொல்லுவான். இதற்கும் மேலாய் ஒன்றும் தெரியும் வாய்ப்பு குறைவு.

ஒரு கன்னியாஸ்திரி புனிதர் ஆக காரணம், சர்ச்சை உள்ளாக்கி அது ஆன்மீகமா லொகிகமா என்று வெடித்து அதை அடிப்படையாய் கொண்டு உருவாகிய சிலை கோவிலுக்குள் வைக்க தகுதி அற்றது என்ற போப் ஆண்டவரின் ஆணையை தொடர்ந்து அது பேர் இல்லா கோவிலுக்கு மாற்றப் பட்டது என்று அறிவது சராசரி மனிதனுக்கு எந்த வகையில் உபயோகம்.

ஒரு சுற்றுலா பயணியின் ஆர்வத்தோடு பாப்பானவர் அறை, அவர் தேர்வு, ஆலயங்கள்,சாலைகள் என ரோமை சுற்றி சுற்றி கலக்கி இருக்கிறார்கள். புகை பிடிக்கும் கர்தினால் நிதர்சனம்.

மைக்கேல் ஆஞ்சேல்லோ டிசைன் செய்த காவலர் உடை சூப்பர். மாசு படக் கூடாது என்று குறைக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு அறையில் பதைபதைக்கும் அந்த புத்தகத் தேடல் ஒரு சபாஷ்.

மொத்ததில் ஒகே. இன்னும் நல்லா இருந்து இருக்கலாம்.

3 கருத்துகள்:

  1. செந்தில் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. படத்திற்கான தங்கள் விமர்சனம் அருமை.....

    படமும் அருமை.... என்பதை பார்த்து விட்டு சொல்கிறேன்......

    அப்படியே...தமிழ்ல "தங்கத்தலைவி நமீதா" நடித்த "இந்திரா விழா" படத்திற்கும் விமர்சனம் எழுதவும்.......

    டாஸ்மாக் கபாலி

    பதிலளிநீக்கு