பக்கங்கள்

ஒரினச்சேர்க்கை ஓகேயா !!!


சர்வதேச அளவில் இந்த சர்ச்சை வெடித்த போதும், சமீபத்தில் இந்தியாவில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த போதும் எழுதத் தோன்றினாலும், அமைதியாய் இருந்து விட்டேன். விவகாரம் வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் பின்னால் அரங்கேறிய சில நிகழ்வுகள் என் மவுன‌ம் கலைத்தது.


ஒரினச் சேர்க்கை செய்பவன் சமூக விரோதி, அவனை கொல், என்பவர் ஒரு புற‌ம்.
இது தனி மனித சுதந்திரம் அதில் தலை இடாதே என்ற எதிர் முகாம் ம‌ற்றோரு வித‌ம்.

இருவ‌ருமே பார்க்க‌ ம‌றந்த கோணத்தை பட்டியலிடுவோம்.

அதற்கு முன் : எழுத தூண்டிய நிகழ்வுகள்.

நிகழ்வு 1: கடந்த வார இறுதியில் நண்பர்கள் நால்வரும் கடல் குளிக்க சென்றோம். குஷியும் கும்மாளமுமாய் கடற்கரை அடைந்த போது, ஒரு மனிதரை பார்த்து முகம் சுழித்தோம். ஐம்பது வயது இருக்க வேண்டும், சுட்ட அப்பளத்தை தலையில் கவிழ்த்தது போல் வழுக்கை. பணக்காரர்கள் அணியும் குளியலறை கவுன் அணிந்து அநாகரிக செயல் செய்து கொண்டு இருந்தார்.

தன் வரைக்கும் என்ன செய்து கொண்டு இருந்தாலும் ஒ.கே. ஆனால் நம்மை தொந்தரவு செய்வது தான் எரிச்சல்.

சக நண்பர் சொன்னார் "டேய்... இது கடப்பாரை கேசு" சரி விலகலாம் என்று நகர்ந்த போது எங்களை நோக்கி வந்தார். "கடலின் ஆழம் எவ்வளவு" என்பது போன்ற உப்பு சப்பு இல்லாத கேள்வி கேட்டு விட்டு எங்கள் பதிலின் தொனி கண்டு விலகி சென்றார். நாங்களும் நிம்மதி பெரு மூச்சு விட்டு குளித்தோம்.

நிகழ்வு 2: இந்தி திரைப்படத்தில் நகைச்சுவை என்ற போர்வையில் இரு ஆண்கள் ஒரின உறவில் உள்ளதாய் காண்பித்தார்கள்.

சரி நம் கோணம் என்ன :

அறுவறுப்பும் எரிச்சலும் விலக்கி,சமன் நிலை எய்து பார்ப்போம்.

இனவிருத்தி, இல்லறம், இன்பம் எனும் நோக்கம் கொண்டு, இரு பாலார் இணைந்தனர்.

இன்பம் வேண்டி மட்டும் கீழ் கூறும் இரு காரணங்களால் தோன்றியது ஓரினச்சேர்க்கை.
1.பெண்ணிற்கு ஆணிடத்திலும், ஆணுக்கு பெண்ணிடத்திலும் தோன்றும் அதீத வெறுப்ப
2.‍எதிர் பாலார் கிடைக்காத காரணம்

இதில் வராத ஒரு முக்கிய பிரச்சனை. பிறப்பால் பகுபடாத திருநங்கைகள். சட்டம் கொண்டு வந்த திருத்தம் இந்த கோணத்தில் அவசியம் ஆகிறது. ஆணென்றும் பெண்ணென்றும் பகுபடாத நிலை வரும் போது, அவர் செயல் சட்டப்படி குற்றம் என்று சொல்வது முறைய‌ற்றது.

உடலால் பிழை இல்லாது மனப் பிழை கொண்டவர், இயல்புக்கு திரும்ப வேண்டும். இந்த கடப்பாரை கோஷ்டிகள் சேர்க்கை தேடுவது, ஒரு தனி மனித உணர்வை நசுக்குவது, கொலைக்கு சமமான் செயல். நம் இளைய தலை முறையை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. இதை நாகரீகம் என்றோ, நல்லது என்றோ, தனி மனித சுதந்திரம் என்றோ பகுப்பது ஆரோக்கியம் அல்ல.

7 கருத்துகள்:

  1. படுக்காளி.....
    ஒரு நல்ல அலசல்..... நான் சொல்வதென்றால்.... இதுபோன்று கையில் "கடப்பாரை" தூக்கி கொண்டு அலையும் "கட்டதுரை"களிடம் இருந்து எங்களை காத்து கொள்ளும் மன உறுதியும், ஸ்டீல் பாடியும் தர வேண்டும் என்று அந்த அய்யனாரையும், பாடிகாட் முனீஸ்வரனையும் வேண்டுவோம்...

    கோபி

    பதிலளிநீக்கு
  2. ஹா... ஹா....

    நல்ல கருத்து. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    படுக்காளி.....

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள படுகாளிக்கு,

    நல்ல ஒரு அலசல். விவாதம் மட்டும் தொடர்கிறது உலகில் வெகு காலம் ...யாராலும் முடிவு சொல்ல இயலாது என்பது மட்டும் உண்மை. இந்த உலகில் எந்த விஷயத்திற்கும் ஒரு இறுதியான முடிவு கிடையாது..

    இன்றுள்ள ஒரு நல்ல விஷயம் நாளை தவறாகலாம், கெட்ட விஷயம் நல்லது ஆக்கலாம் அல்லது ஆக்கபடலாம்.

    உலகில் உள்ள எந்த உயிரினமும் சந்தோஷ பட உடலுறுவில் இடுபடுவதில்லை மனிதனை தவிர... ஏன்? - மனிதன் விளங்கினதைவிட கெட்டவன் இயற்கைய் சிரளிபதில்!!!!!! அவன் எல்லாம் செய்வான்... செய்து விட்டு சொல்லுவான் உலகில் நான் தான் ஐந்து அறிவு உள்ள மிருகம் என்று..!!!!!!

    செல்லதுரை.

    குறிப்பு:

    செல்லதுரை தான் கட்டதுரை என்று நினைத்தால் இந்த செல்லதுரை மிருகம் பொறுப்பு அல்ல.

    பதிலளிநீக்கு
  4. அன்பு செல்லதுரை,

    தரமான தத்துவார்த்தமான பின்னூட்டத்துக்கு நன்றி. மிக சரியாக சொன்னீர்கள். நான் கூட காரணத்தை சொல்ல வில்லை, நீங்கள் சொல்லி விட்டீர்கள் இயற்கையை சீரளிக்க என்று.

    வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. படுக்காளி சார்.....

    இந்த பதிவின் தலைப்பே ‍

    "கட்டதுரை"யும் கடப்பாறையும் என்று வைத்து இருக்கலாமே......

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. மருத்துவ துறையின் அவலங்களையும், அவர்களது உண்மை கஷ்டங்களை அள்ளி தருவேன் / தருகிறேன்.. எள்ளிநகையாட.. பொறுத்திருங்கள் நண்பர்களே..
    http://drjayakumar1999.blogspot.com/
    கோபம் தாங்காமல் கொப்பளித்த வார்த்தைகளை புரட்டி பாரும்..

    பதிலளிநீக்கு