பக்கங்கள்

அஞ்சலி

நாற்பது வயதில் இந்த தொல்லை.

பிறந்த முதல் பத்து பதினைந்து வருடம் வரை விவரம் தெரியவில்லை. அடிப்படை விவரங்கள் சேகரித்தே அந்த பருவம் முடிந்து போயிற்று. பின்னர் சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்து உலகை புரிந்து கொள்ள முயற்சிக்கும் பருவதில், சக மனிதரின் வாழ்வு ந‌ம‌க்கு நினைவில் ப‌திய‌த் தொடங்கும். சமூக அங்கி காரம் என்னும் மாயத் தூலபாரத்தின் துணை கொண்டு அவர்களை உற்று நோக்கி அவர்கள் வெற்றியை மனதில் குறித்து கொண்டு அவ‌ர்க‌ளை ஆத‌ர்ச‌ன‌ குறிக்கொளாக‌வும் கொள்வோம்.

ச‌ரி இதில் என்ன‌ தொல்லை என்கிறீர்க‌ளா ???

நமக்கு நாற்பது வரும் போது அவர்கள் வாழ்ந்து முடித்து மரணம் என்ற காரணம் சொல்லி நம்மை விட்டு பிரிந்து செல்வர்.

அப்ப‌டி ஒரு பிரிவு இப்போது என‌க்கு நிக‌ழ்த‌து.

மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய என் உறவினர் இறந்து போனார் என்று கேட்டவுடன் மற்ற எந்த வேலையும் பெரிதாக தெரியவில்லை. முக்கியம் என்று நான் நினைத்த விடயங்கள் அர்த்தம் இல்லாததாக தோன்றியது. இனி அவரை பார்க்க மாட்டோமே பேச முடியாதே என்ற நினைவு நெஞ்சை அடைத்தது.

அவரை பற்றி :

பரவலான ஆழமான தகவல் பெட்டகம். படிப்பு, குடும்பம், பணம் என்ற எந்த பின் புலமும் இல்லாது தன் முயற்சியில் வணிகத்தில் முன்னேறி குடும்பம் சமைத்து இருபதிற்கும் மேற்பட்ட குடும்பத்தின் ஜீவனம் ஓட்ட வேலை கொடுத்தவர். எந்த விடயத்தை பேசினாலும் ஆர்வமாய் பங்கு பெற்று பேசுவார்.

இசை, இந்திய சட்டம், இறை, இனம், மருத்துவம், என எதுவும் பேசலாம்.

அவரது பொது அறிவை சொல்ல ஒரு விடயம்

அமரர் சுஜாதா பத்து கேள்விகள் கொடுத்து இதில் நான்குக்கு மேல் சரியாய் சொன்னால் நீங்கள் கில்லாடி என்பார். நம்மவர் அதில் ஏழு சரியாய் சொன்னார்.

உதாரணக் கேள்வி : நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு நாட்களாய் இருக்கிறது?

தற்செயலாய் சந்தித்த ஒரு பெரியவர் சொன்னார். ஒ அவரா நன்றாக தெரியும். ஒரு முறை என் தம்பியை நாலு பேர் அடித்து விட்டனர், அது மட்டும் இல்லாது தினம் தொல்லை என்ன செய்வது என்று தெரியாத போது இவர் வந்து அந்த நான்கு முரடர்களையும் அடித்து வழிக்கு கொண்டு வந்தார் என்றார்.

நம்ப முடியாத தகவல் அது. நான் சென்று கேட்ட போது உம் என்று சாதாரணமாய் சொன்னார். எப்படி என்ற போது சிறிது வர்ம கலை தெரியும் அதை வைத்து சமாளித்தேன் என்றார். வர்ம கலை தெரிந்ததை கர்வம் இல்லாது சொன்னார்.

சற்று விலகி நின்று அவரை மேலும் கீழும் பார்த்தேன். பின்னர் கேட்டேன், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவும் வண்ணம் எதாவது சொல்லுங்களேன் என்றேன். சிறிது நேர சிந்தனையில் சொன்னார். சொன்னதை இங்கே சொன்னால் வன்முறைக்கு நான் உரை எழுதியது ஆகாதா. வேண்டாம் என்னோடே இருக்கட்டும்.

தன் தொழிற் சாலையில் நடந்த ஒரு நிகழ்வில் உள்ளூர் மீனவர்கள் சுமார் ஐம்பது பேர் சேர்ந்து அடிக்க வந்த போது ஒற்றை மனிதராய் சமாளித்து அவர்களை ஓட ஓட விரட்டினார் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன்.

சரி பயம் இல்லாத மனிதர் என்று சொல்ல முடியாது. அறுவை சிகிச்சை என்றால் அப்படி ஒரு பயம், ஏன் மருத்துவமனை என்றாலே பயம் தான்.

நிறை குறை உள்ள நல்ல மனிதர்.

அவர் இறந்து விட்டது இயல்பு. எனது கேள்வி.

இத்தனை அனுபவம் செறிந்த அவரது வாழ்கை தகவல்கள் அவரோடு சென்று விட்டனவே. அந்த தகவல்கள் மாத்திரம் வேறு யாருக்காவது கிடைத்து இருந்தால் தன் வாழ்கையும் உயர்த்தி பல குடும்பங்களை வாழ வைத்து இருக்கலாமே!!!! என்று சிந்தித்த போது அவரோடு ஒரு தருணத்தில் பேசிய வார்த்தை எதிர் ஒலித்தது

அவரின் ஒரு லட்சியம். புத்தகம் எழுதுவது. எதை பற்றி என்று கேட்டேன். உலகம் பற்றி என்றார்.. புத்தகம் எழுத தொடக்கி 50 பக்கம் வரை எழுதி இருக்கிறேன் என்றார். மலையாளத்தில். மொழி அறிவு இல்லாத காரணத்தால் வாசிக்கும் வாய்ப்பு இல்லை.

புத்தகம் அது அவர் இறுதி வரை நடக்க வில்லை

முயற்சிக்கிறேன் என்னால் அவர் கனவு நிறை வேற்ற முடியுமா என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக