பக்கங்கள்

அதீதம் (கட்டுரை)

தண்ணியடிச்சா.. உடம்புக்கு கெடுதி…………… வாக்கிங் உடம்புக்கு நல்லது…………….

மேற்கூரிய இந்த இரண்டு வாக்கியத்தையும்.. தவறு… என யாராவது சொல்வார்களா……

அப்படியானால்.. எல்லோரும்……. ஒட்டு மொத்தமாக…… ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம்… ஏன் செயல்பாட்டில் மாறுகிறது..

தண்ணியடிச்சா உடம்புக்கு கெடுதி… என ஒருவர் குடிக்காமல் இருக்கிறார்… இன்னொருவரும்… தண்ணியடிச்சா உடம்புக்கு கெடுதி… என சொல்கிறார்.. நினைக்கிறார்… ஆனாலும் கூட குடிக்கிறார்….

ஏன்… ஏன் இப்படி.. எதனால்…

பாரதப் போரில் அர்ச்சுணன் இதைத்தான் கண்ணனிடம் கேட்கிறான்…
‘எதை செய்ய வேண்டும் என எனக்கு தெரிகிறது… 
ஆனால் செய்ய முடியவில்லை..

எதை செய்ய வேண்டாம் என எனக்கு தெரிகிறது… 

ஆனால் தவிர்க்க முடியவில்லை…………..’

என புலம்புகிறான்… இந்த விஷயத்தை ஆழமாக புரிந்து கொண்டால்.. வாழ்வு பற்றிய புரிதல் ஆழமாகும்… மனிதனின் மாறுபட்ட இச்சிந்தனைக்கு.. ஒரு காரணம் உண்டு… எளிமையான இக்கருத்தை இக்கட்டுரையில் கோடிட்டு காட்ட விரும்புகிறேன். இக்கருத்தை பற்றிய சிந்தனை.. உங்கள் வாழ்வை வளமாக்கும்.. துக்கங்களை குறைக்கும், உபயோகமாக இருக்கும் என ஆசிக்கிறேன். மாற்றம்… விரும்பும்.. முன்னேற்றம் பெற விரும்பும்… தோழமைக்கு உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்…

அதீதம்… அதீதம்…. இதென்ன தலைப்பு…

தம்.. தெரியும்… தீ தெரியும்… தம்முல தீ வைச்சா அடிக்கலாம்ன்னு தெரியும்… அதென்ன அதீதம்…தலைப்பு வைச்ச உன்னை அடிக்கலாம்… என சிம்பிளாக நினைக்கிறீர்களா…. வணக்கம் அன்பு வாசக தோழமையே…. சற்று கால தாமதத்திற்கு பின் எழுத்தின் வழி தங்களை அடைவதில் மகிழ்ச்சி… அதீத கற்பனை….  மிகை… மிகைப்படுத்தல்.. என நிச்சயம் கேட்டிருப்போம்…அதிகப்படி… என்பதன் ஒரு உபயோகச் சொல்.. அதீதம்…

எங்கிருந்து இது தொடங்கியது என்றால்… சும்மா போயிக்கிட்டு இருந்த என்கிட்ட ஒரு கேள்வி… கேட்டார்….  நண்பர்… ஸ்வீட் பிடிக்குமா…

இதென்னங்க… கேள்வி.. கண்டிப்பா… கொண்டாங்க ஒரு கை பார்ப்போம்… அடுத்த கேள்வி அதே ஆள் கேட்டார்… லவ்ஸ்.. பிடிக்குமா…. அக்கம் பக்கம் பார்த்தேன்… யாரும் இல்லை… முன்னும் பின்னும் பார்த்தேன்.. அங்கும் யாரும் இல்லை… இப்போது அவரை பார்த்தேன்.. மேலும் கீழும் பார்த்தேன்… இதென்னங்க கேள்வி… கண்டிப்பா.. கொண்டாங்க ஒரு கை பார்ப்போம்…. ம்… ஸ்வீட் லவுசு.. பிடிக்குமா… என அவர் கேட்க.. ஆள விடுங்க… பிடிக்குமா பிடிக்குமான்னு ஒரே உப்புமாவா இருக்கு என ஓடி வந்து விட்டேன்…

ஸ்வீட் பிடிக்கும்.. எல்லோருக்கும் பிடிக்கும். பிடிக்காத ஆளில்லை… ஆம், குழந்தை முதல் பெரியவர் வரை பிடிக்கும். வேண்டுமானால், அளவுகளில் மாறுமே அன்றி… பிடிக்காமல் போக சான்ஸ்… மிக குறைவு. எனக்கு இத்துணுண்டு பிடிக்கும், உங்களுக்கு தக்குனுண்டு பிடிக்கும் அவர்களுக்கு அம்மாம்பெரிசா பிடிக்கும்… அதாவது ஒரே பிடிக்கும்… வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது.

இது ஏன், எப்படி. ஒரே விஷயம், ஒவ்வொரு ஸ்கேலில் ஏன் இருக்கிறது. கம்புயூட்டரை எடுத்து கொள்வோம்.. டூ யூ லைக் டூ சேவ்… என கேட்டு.. யெஸ்.. நோ.. என தெளிவாக இருக்கும்.. ஒரு யெஸ்ச்சுக்கு… ஒரே அர்த்தம் தான், ஒரே அளவுதான்.. ஆனால் மனிதனுக்கு மட்டும்…. இத்துணுண்டு தக்குனுண்டு அம்மாம்பெரிசாக … வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது.
இதை விளக்க இன்னொரு உதாரணம் எடுத்து கொள்வோம். கீழே சில வாக்கியங்களை பட்டியலிட்டுள்ளேன்…

சிக்னல் ரெட்டில் இருந்தால்… கிராஸ் செய்யக் கூடாது… கடன் வாங்க கூடாது…. குளித்தால் புத்துணர்ச்சி… சேமிப்பு வாழ்க்கைக்கு அவசியம்…..
மேற்கூரிய அத்தனை வாக்கியங்களுக்கும் தங்கள் கருத்து என்னவோ.. எல்லாம் ஒக்கே.. சரி என நினைக்கிறீர்களா…… சரி… அனேகமாக எல்லோரும் ஒத்துக் கொள்வதே… ஆனாலும்… ஒத்துக் கொள்ளும் விதத்தில் எல்லோரும் ஒரு அளவாகவா இருக்கிறோம்… இல்லியே… இவருக்கு வேற மாதிரி… அவருக்கு வேற மாதிரி, இது ஏன்… இதை தெரிந்து கொள்வது நமக்கு நம்மைப் பற்றிய புரிதலை இன்னும் ஆழமாக்கும்.

போய் அடிச்சுட்டு வா.. என்றால்… எத்தனை கம்புயூட்டர் ஆனாலும் அந்த கமெண்ட்டுக்கு ஒரே மாதிரி எதிர்வினை ஆற்றும்.. ஆனால் மனிதன் மட்டுமே… ஒருவன் போல் ஒருவன் வினையாற்ற மாட்டான்… இது.. ஒரு நுண்ணிய விஷயம்…

மனிதனுக்கான ஒரு பிரத்யேக குணம்.. இது எப்படி சாத்தியமாயிற்று..
ஆரம்பத்தில் சொன்னோமே.. இது ஒரு எளிமையான விஷயம் என்று.. அது என்னவென்று பார்ப்போம்…
நம் செயல்பாட்டின் ஒரு கூறு… 

மொழி… மொழி என்பது வாய் மொழியோ தாய் மொழியோ அன்று… உள்ளுக்குள் உள்ள மொழி… மூளையும்… நரம்பும் எப்படி பேசிக் கொள்ளும்.. மூளையில் நினைவுகள் எப்படி சேமிக்கப் படும்… எவ்விதமாய் அவைகள் தங்களுக்குள் பரஸ்பரம் குசலம் விசாரிக்கும்..

உதாரணத்துக்கு மனம் சொல்கிறது.. டங்கா மாறி உதாரி.. புட்டுக்கினே நீ நாறி.. மூக்கு சொல்கிறது.. இது என்னன்னு பாரு… என கேட்க.. மூளை பதிலுக்கு சொல்கிறது.. அழுக்கு மூட்டை மீணாட்சி மூஞ்சி கழுவி நாளாச்சு என... இப்படி மண்டைக்குள் நடக்கும் கான்வெர்சேஷன் எந்த மொழி என்பது தான் கேள்வி…  

கம்புயூட்டர் பாஷையில்… பேசிக் கோட் லேங்குவேஜ்… என்ன ??????????????
கம்புயூட்டருக்கு அது… பைனரி.. நாம் என்னதான் மோடியை திட்டினாலும்… நம்பிக்கை நட்சத்திரமே என கத்தினாலும்.. கம்புயூட்டர் உள்ளுக்குள் 1…1…0..1..0.. என தான் பேசிக் கொள்ளும்…  

1 அல்லது 0….

என்ன தகவலானாலும் லாஜிக்கானாலும்.. கம்புயூட்டரின் உள் நடக்கும் சம்பாஷணைகள்……………

அதே போல்.. நம் மனித மூளையின் உள்மொழி…. நிறங்கள்…………..

என்னது.. நிறங்களா.. கலரா.. ஆம்.. நம் மூளையின் நினைவு செதில்கள், தகவல் பெட்டகங்கள், ‘யே… அது என்னன்னு பாரு…….. ஐய்யோ…… அந்த கடையில ஏதோ ஒரு ஸ்வீட் நல்லாயிருக்குமே… அட……. அவன் பேரு???????????? என மூளைக்குள் நீங்கள் குத்திக் கேட்கும் கேள்விகள் எல்லாமே.. ஒரு நிறமாக… வண்ணமாகத்தான் மூளைக்குள் சம்பாஷிக்க படும்….. தேடப்படும்……… ஸ்டோர் செய்யப்படும்…………

சரி, வண்ணங்கள் கொண்டு… நம் தகவல்கள் சேமிக்கப் படுவதாலேயே……. வேறுபாடும்… அளவின் மாறுதல்களும் வருகிறது….

ம்……. சிக்னல்ல… கிராஸ் பண்ணக்கூடாது………… கரெக்ட்டு தான்… ஆனாலும்……… என இழுத்துக் கொண்டே… வண்டியை ஒருவர் இழுத்து விடுகிறார். இன்னொருவர்…. சிக்னல்ல கிராஸ் பண்ணக் கூடாது… என விரைப்பாக நிற்கிறார்…. சேமிக்கணும்… சேமிப்பு அவசியம் தான்… என லைட் கலரில்… ஸ்டோர் செய்திருக்கும் ஒருவர்… சேமிப்பை ஒத்தி போட்டுக் கொண்டே இருக்கிறார்… சேமிக்கணும்… சேமிப்பு அவசியம் என டார்க் கலரில் ஸ்டோர் செய்திருப்பவர்… சேமிக்கிறார்…………….

இப்போது புரிகிறதா மக்களே…

ஒரே விஷயத்தை அதை உள்கொள்ளும் விதத்தில் வேறுபாடு இப்படி நிறத்தை மாற்றிக் கொள்வதால் நடக்கிறது….ஓராயிரம் ஷேட்களில் நாம் நமக்கு தோதான வகையில் விஷயங்களை எடுத்து கொள்கிறோம்..
ஆம்… டார்க் கலரில்… ஹைலைட் செய்து… கொண்டோமானால்… உடனே செயலாற்றுவோம்.. இல்லையா… லைட்டான கலர்ல உள்கொணர்ந்திருக்கிறீர்களா.. அப்ப மேட்டர லைட்டா எடுத்துப்பீங்க… 
அவ்வளவுதான்… சிம்பிளான விஷயம் இது…

இப்போது, உங்களுக்குள் செல்லுங்கள்.. கேளுங்கள்.. பாருங்கள்… இது உங்களுக்கான தருணம்.

நீங்கள் விரும்பும் எதையோ… அடைய விடாமல்… இருக்கிறீர்களா… நீங்கள் செய்யக் கூடாது என நினைக்கும் ஒரு விஷயத்தை உங்களால் தவிர்க்க முடியவில்லையா…

கலரில் இருக்குது………. ரகசியம்…………..

காலைல சீக்கிரம் ஏந்திரிச்சு…………. எக்சர்சைஸ்… கண்டிப்பா என அலார்ம் வரைக்கும் போய் விட்டு, காலையிலே… அலார்மை ஆப் பண்ணி விட்டு.. ம்.. இன்னும் 10 நிமிசம்.. நாளையில இருந்து… ஷார்ப்பா.. அலார்ம் அடிச்சவுடன ஏந்திரிச்சிரணும்…

இப்படி உங்களை அலைக்கழிக்கும் எந்த பிரச்சனையையும்… மென்னியை பிடித்து திருக.. சட்டையை பிடிச்சு கேள்வி கேட்க நினைப்பவர்களுக்கு இக்கலர் கோடிங்கும்.. சிந்தனையும்… ஒரு நல்ல ஆரம்பப் புள்ளி..
வாழ்த்துக்கள்… தோழமையே… 

2 கருத்துகள்:

  1. ஜி... வணக்கம்... நன்றி தலைவா.. உங்கள் கமெண்ட்டுக்கு.................


    /// What sort of Exercise you prescribe to us ////

    தம்.. தெரியும்… தீ தெரியும்… தம்முல தீ வைச்சா அடிக்கலாம்ன்னு தெரியும்…

    ஜி.......... இது நிச்சயமா................. நான் பரிந்துரைக்கும் எக்சர்சைஸ்.................. இல்ல................... இது ஓவர் சைசு....

    ஹா..ஹா..

    அதென்ன அதீதம்…தலைப்பு வைச்ச உன்னை அடிக்கலாம்… என சிம்பிளாக நினைக்கிறீர்களா….

    ஹ்...ஹா..ஹா... ஜி.. இது நல்ல எக்சர்சைஜ் ஜி......................

    அப்புறமும்............. நிலா வெளிச்சத்துல............. ஜுமைரா.. கடற்கரையில............ 2 மணிக்கு ராத்திரி......... ஒரு யோகா செசன்............. போட்டோமே............ அது ஞாபகத்துக்கு வருது...............

    அதிலும் குறிப்பா.. ஷேக் போட்டாரே... ஒரு போடு.......... அது பிரமாதம் தலை.............................

    பதிலளிநீக்கு