பக்கங்கள்

ஸ்மார்ட் ஃபோன்…. (சிறுகதை)

ஆடம்பர மால் ஒன்றில்… எக்க்க்கச்ச்சக்கககமான…. அழகோடு ஒரு பெண் எங்களை கடந்த போது தான் அந்த டெலிஃபோன் கால் வந்தது. 

ஒரு கால்…. என்னடா இது, தினத்துக்கு பத்து நூறு கால் வருது, இதுல அந்த… டெலிஃபோன்…கால்… என ஏன் இழுக்கிறாய் என்று கேட்கிறீர்களா..

அது ஒரு ஸ்பெஷல் கால்தான். ஏனெனில், இக்கதையே அக்காலால் தான் உருவானது.

நானும் என் நண்பனும்… வாழ்க்கையை புரிந்து கொள்ளவும், உலகத்தை அறிந்து கொள்ளவும், செயல் திடம் தெளிவும் பெற வேண்டி, நகரத்தின் நடு மையத்தில் இருக்கும் செண்ட்ரல் மாலுக்கு வந்தோம், வாங்காத கடைகள் எல்லாம் வராந்தாவில் நிறைந்து இருக்க, எதையோ நாங்கள் இருவரும் சீரியஸாய் தேடிக் கொண்டிருந்தோம். அப்படி வந்த போது என் நண்பனின் ஸ்மார்ட் ஃபோனில் சிணுங்கியபடி வந்த கால்தான் இக்கால்.
அவனது ஒன் சைட் உரையாடலை கேளுங்கள்… மீதியை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்களேன்.

‘ஹாய்…’
‘இல்லேடா…
10 மணிக்கு…
நானா… ஒக்கே… ட்ரை பண்றேன்…
ம்…
ம்….
ம்…
பாய்……..’

ஃபோனை டிஸ்கனெக்ட் செய்து விட்டு… போடா என்றான்… என்னைப் பார்த்தல்ல, ஃபோனைப் பார்த்தபடி.. நான் அந்த ஃபோனை உற்று நோக்கிய போது… நோக்கியா என்று எழுதியிருந்தது. அதையும் தாண்டி, ஸ்கிரினில் ‘கழுத்தறுப்பு’ என லாஸ்ட் கால், காலர் நேம் என இருந்தது.
மச்சி.. யாருடா

ம்… சரியான கழுத்தறுப்பு. இன்சூரன்ஸ், மல்ட்டி லேயர் மார்க்கெட்டிங், இப்படி ஏதாவது புதுசு புதுசா.. லேட்டஸ்ட் டைம் வேஸ்டர்ஸ்சுக்கு எல்லாம் கூப்பிடுவான். ஒரு வகையில பாத்தா, எனக்கு உறவுக்காரன், அதனால் மூஞ்சிக்கு நேரா நோ சொல்ல முடியாது… என்ன செய்யுறது. அதான் அட்ரஸ் புக்ல அவன கழுத்தறுப்புன்னு ஸ்டோர் பண்ணியிருக்கேன்… பேர் ப்ளாஷ் ஆச்சின்னா… உஷாராயிடலாம்ல… இவன மாத்திரம் இல்லடா, என் அட்ரஸ் புக் பூராவும் இப்படித்தான்… இடம் சுட்டி காரணப் பெயரா….. ஸ்டோர் பண்ணியிருக்கேன்…

அப்படியா…
ம்.. ஏடிஎம்.. அப்பாவுக்கு … எனி டைம் மணி அவர்தானே தர்றாறு…
க்ளாக் கேலண்டர்… அம்மாவுக்கு… டைம் ஆச்சு ஏந்திரி, இவ்வளவு நேரமாச்சு சாப்பிடாம எங்க போன… அப்படின்னு கேக்குறதால…

டேய்.. ஜாக்கிரதை.. இது வீபரிதம்… ம்… என்ன காலம் இது.. டேட்டா இண்டெலிஜென்ஸ் காலம். உன் அட்ரஸ் புக்க நோண்டி, எங்கேயோ ஒரு மூலையில உக்கார்த்துகிட்டு, ஹெடிடிப்பி மூலமா…. காண்டக்ட்ஸ்ச எடுத்து, பிச்சி பீராய்ஞ்சு… அப்புறம்.. டேட்டா பேட்டர்ன் மேட்ச்சிங், நம்பர் மேட்ச்சிங் எல்லாம் பண்ணிக்கிட்டு ஒரு குரூப்பு இருக்குது…. கிடைக்கிற இந்த டேட்டாவ குத்து மதிப்பா… வித்தா வாங்குவானான்னு ஆள் தேடிக்கிட்டும் இருக்குது…

ஹா..ஹா.. விக்கட்டும் விக்கட்டும்.. எனக்கென்ன… நல்லது தானே.. கிடைக்கிற டேட்டா இன்னும் குவாலிபைடு டேட்டாவா கிடைக்கும்… டேட்டா மைனிங்கில இவன கழுத்தறுப்புன்னு ப்ராண்ட் பண்ணிட்டா உலகத்துக்கு நல்லது ஊருக்கு நல்லது.

சொல்லிவிட்டு சிரித்த நண்பனுடன் நானும் இணைந்தேன். ஆனால் சிரிக்கும் போது ஒரு பளிச்…… சரி… இவன் நண்பன் தான்.. ம்.. இப்படி எல்லோருக்கும் பட்டப்பெயர்.. பூனைப்பெயர் எல்லாம் வைக்கிறானே.. அப்ப எனக்கும் வைச்சுருப்பானோ…ம்… இருக்கும் இருக்கும்…. வைத்திருந்தாலும் வைத்திருப்பான்… சிரங்கு கை.. அரிக்கத்தானே செய்யும்… இப்படி ஒரு மனம் உள்ளவன்… அப்பா அம்மாவையே விட்டு வைக்காதவன்… என்னை எப்படி விட்டிருப்பான்…
வைத்திருப்பான், நிச்சயம் வைத்திருப்பான்.

சரி.. என்னை என்ன மாதிரி வைத்திருப்பான்… சாவுகிறாக்கி என்றா… ம்.. ப்ளேடு என்றா.. ஒட்டுப்புல் என்றா…

சீ… என்னடா… எதனால் இப்படியெல்லாம் யோசிக்கிறாய்… ஏன் உன்னையும் தாழ்த்தி.. உன் நண்பனையும்.. தாழ்த்தி.. உங்கள்.. அதி தூய…. ம்… நட்பையும் தாழ்த்துகிறாய்… நல்ல விதமாகத்தான் யோசியேன்.. என மனம் சொல்லிக்கொண்டிருந்தாலும்… எனக்கு என்ன பெயர்.. என தெரிந்து கொள்ளும் ஆவல் என்னுள் … கொழுந்து விட்டது.. அது என்னை பிராண்டிக் கொண்டே இருந்தது.

என்ன செய்யலாம். அவனிடம் நேரடியாக கேட்போமா.. உண்மை சொல்வானா.. போனை புடுங்கி… சே… என்னடா புடுங்கி மாதிரி யோசிக்கிற… கொஞ்சம் நாசுக்கா… டிக்னிப்பைட்டா யோசியேன்…

என்ன .. என்ன செய்யலாம்… கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.. அவன் அறியாது தெரிந்து கொண்டால் இன்னும் நலம்…

சரி, ஃபோன் கிடைத்தால் கூட எப்படி தேடுவது… ஒரிஜினலாய் என் பெயர் போட்டால் எப்படி கிடைக்கும்… ம்.. இவன் எடக்கு மடக்காய் பெயர் போட்டு வைத்திருக்கிறான்…  நான் என்னவென்று தேடுவது… என ஒரு யோசனை பிராண்டியது… அப்போது கூடவே… ம்… அட.. இதுவாடா பிரச்ச்னை… அவன் நம்பர் தான் உனக்கு தெரியுமே.. அப்புறம் என்ன… உன்னுடைய ஃபோனில் இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போகிறது…. சரி அப்படி செய்தால் போச்சு..

இப்படி பொறுமையுடன் நான் தவித்து கொண்டிருந்தேன்.. சரி கூடத்தானே இருக்கிறோம்… எப்படியும் ஒரு சந்தர்ப்பம் வரும்… அப்போது பார்த்துக் கொள்ளலாம்… என நான் நகம் கடித்து.. கடிகாரத்தை பார்த்து… கால் மாற்றி மாற்றி நின்று.. இப்படியும் அப்படியும் நெளிந்து கொண்டிருந்த போது… கடைசியாக ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

’டேய்.. இத புடி.. நான் டாய்லெட்டுக்கு போயிட்டு வந்துர்றேன்… ‘
என் கையில் ஃபோனை கொடுத்து விட்டு நண்பன் சென்றான். நோக்கியா இப்போது என் கையில் .. கை விரல்களின் இடையில் இருந்து கொண்டு.. என்னை முழுசாக முறைத்து கொண்டிருந்தது.  நான் செய்யப்போகும் திருட்டுத்தனத்துக்கு என்னை திட்டுவது போலவே அந்த முறைப்பு இருந்தது… நண்பன் நிதானமாக நடந்து வாஷ் ரூமை சமீபித்து.. கதவை திறந்து அதன் உள் நுழைந்தான்..

அவன் தலை மறைந்ததும்.. நான் சுருசுருப்பானேன்.. சட்டென உடல் பரபரப்பானது.. என் ஃபோனை எடுக்க கையை கீழே செலுத்தினேன்… ம்… இல்லை… அங்கு இல்லை… நான் தேடினேன்… அது கால்சட்டையில் இல்லை.. சே… எங்கே போனது… ம்.. மேல் சட்டையிலும் இல்லை. அட… நான் தானே வைத்திருந்தேன்.. எங்கே.. எங்கே… வீட்டில் வைத்து விட்டு வந்தேனோ.. இல்லையே… கொண்டு வந்தேனே.. அப்ப ஒரு வேளை கீழே விழுந்து விட்டதோ…

பட்டென நினைப்பு வந்தது… அட… சே.. சே… என்ன ஒரு முட்டாள்.. ஃபோன் எங்கும் போகவில்லை.. என் கையிலே தான் இருந்தது. நண்பனின் போன் வாங்கி கையில் வைத்த போது, இரண்டு ஃபோனும் இணைந்து என் கையில் தான் இருந்தது. ஒன்றுக்கு பின் ஒன்றாய்.. நோக்கியாவின் முதுகுக்கு பின் எனது ஃபோன்… ம்.. சட்டென ஒரு பெருமூச்சு வந்தது.

ம்.. சரி சரி… சீக்கிரம்.. நண்பன் எந்த நேரத்திலும் வந்து விடலாம்..ம்..க்குயிக்…ம்..குயிக்… என் கைகள் பரபரத்தது.

நான் நண்பனின் ஃபோனை கீழே வைத்துவிட்டு, என் ஃபோனை கையில் எடுத்தேன். அட்ரஸ் புக் துழாவி, என் நண்பனின் நம்பரை தேடி, கால் எனும் பொத்தானை அழுத்தினேன்… ம்… என் ஃபோனை என் காதோரம் வைத்தேன்… கொர்..கொர்… எனும் சத்த காத்திருப்புக்கு பின்… காதில் கொடுத்த ஃபோனில்.. ரிங் போனது… ட்ரிங்..ட்ரிங்… ம்… யெஸ்… கால் போகிறது… நான் அவசர அவசரமாய், கீழே குனிந்து, நண்பனின் ஃபோனை நோக்கினேன்.

ஓ..ஓ..ஓ…

ஒரு வினாடி… ஒரு வினாடி தான்… அது ஒளிபெற்று.. பின் சட்டென இருளானது… காதில் இருந்த என் ஃபோனில்.. கொய்ங்..கொய்ங்… என சத்தம் கேட்டது.. என்கேஜ்ட்டின் ட்யூண்.. வாட்.. வாட் இஸ் ஹேப்பனிங்…
நான் திரும்பி கீழே பார்த்தேன்… நண்பனின் ஃபோன்.. கருப்பாய் அழகாய் இருந்தது.. நோக்கியா எனும் எழுத்து பளிச்சிட்டது… ஓ… மை காட்… பவர் இல்லை… நான் பின்பக்கம் திருப்பி, ஆன் பட்டனை நிமிண்டினேன்… சட்டென ஒளி பரவ… ஆரம்பித்து… என் நெற்றியில் அவசரமாய் பூத்த வேர்வை பூவை.. புறங்கையால்… அறுவடை செய்தேன்…

ஃபோன்….. அப்படியே அல்பாயுசில்.. ஒளி இழந்தது.. மறுபடியும் மறுபடியும்… முயற்சித்தேன்..  நான் நிமிண்டியதும்… எழும்புவதும்.. உடனே மறைவதுமாய் நோக்கியா என்னோடு மல்லுக் கட்டியது… என் இதய துடிப்பு என் காதுகளுக்கே கேட்டது…

என்னாச்சு.. வாட்ஸ் த ட்ரபிள்…

ஓ…ஒ… ஓ… சட்டென காதருகே கேட்ட ஒலியால் நான் திடுக்கிட்டேன். நண்பன் தான்..

ம்…அது… இல்ல.. இல்ல.. கால் வந்துச்சு… ம்.. ஃபோன்..
வார்த்தைகள் சிக்கி கொண்டு திணறின… நண்பன் கூலாக சொன்னான்…
ஆங்… பேட்டரி.. கிரிக்கிட்டக்கலி லோ… பவர் போயிருக்கும்… இட்ஸ் ஒக்கே… சரி விடு.. என்ன சொத்து எழுதிக் கொடுக்க… பில் கிளிண்டனா ஃபோன் பண்ணுவாறு.. காலர் ட்யூண் ட்ரை பண்றீங்களான்னு எவளாவது கூப்பிடுவா.. நீ விடு…

எனக்கு ஏமாற்றம். நினைத்தது நடக்கவில்லை. சரி அடுத்து என்ன செய்வது. நான் தீவிரமாய் யோசிக்க துவங்கினேன்…

என் முகத்தீவிரம் பார்த்த நண்பன் கேட்டான்..
ஆர் யூ ஆல்ரைட்…

யெஸ்.. யெஸ்..ஐ அம் ஒக்க்கே…. நான்.. ஒன் மினிட்.. இப்ப வந்துர்றேன்…. 
என என் கையில் இருந்த அத்தனையையும் அவன் கையில் திணித்து விட்டு… டாய்லெட்டை நோக்கி ஓடினேன்… கதவு திறந்து… என்னை உள் நுழைத்து … மூடும் நேரத்தில் நண்பன் இருக்கும் திசையை திரும்பி பாத்தேன்..

அங்கு அவன் என் ஃபோனை நிமிண்டிக் கொண்டிருந்தது தெரிந்தது.
அவன்.. அவன்… என்ன பார்க்கிறான்… ஒரு வேளை லேட்டஸ்ட் கால் லிஸ்ட் பார்ப்போனோ… பார்த்தால் அவனை கூப்பிட்டது தெரிந்திருக்குமே… ம்…

டாய்லெட்டில் கடமைகளை முடித்து விட்டு, முகம் கழுவி வெளியில் வந்த போது நண்பனை காணவில்லை. சட்டென துணுக் என இருந்தது. கண்களை துழாவி, ஓரத்தில் இருந்த கடையில் பார்த்த போது, கண்ணாடி வழியாக நண்பன் ஏதோ ஒரு துணிக்கடையை வேடிக்கை பார்த்து கொண்டு நின்றிருந்தான்…
நான் மெல்ல நடையில், அவனை நெருங்கினேன்… என் கால்கள் எனக்கு .. இல்லை இல்லை என் கால் ஷூஸ் எனக்கு கனமாக தோன்றியது.

4 கருத்துகள்:

 1. கதை இன்னும் முடியாத மாதிரியே ஒரு உணர்வு....

  பதிலளிநீக்கு
 2. நன்றி... ஸ்கூல் பையன்....... மிக்க நன்றி....

  /// கதை இன்னும் முடியாத மாதிரியே ஒரு உணர்வு....////////

  உங்கள்... கருத்துதான் எனக்கும்........... என்னுள்ளும் இப்படியே தோன்றுகிறது....

  என்றாலும் இது ஒரு பரிசோதனை முயற்சி... சும்மா ஒரு ஐடியா... ஏன் இப்படி எழுதி பார்க்கக்கூடாது என்று...

  அதாவது, கதை எழுதும் போது...இதுதான் கதை.. இதுதான் பாத்திரப்படைப்பு... இதுதான் முடிவு என தீர்மானமாய் சொல்லுவது ஒரு கதை சொல்லும் உத்தி... அதையே... எக்கோட்பாடுகளிலும் அடைக்காது, வாசகர்களுக்கு ஃபுல் ப்ரீடம்.. சுதந்திரம்.....

  ஆம்... வாசகர்கள் தங்களுக்கு தோன்றிய விதமாய் இதை வாசிக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது...

  இன்றைய நவீன இலக்கியங்கள் ... இவ்விதம்..... கதையை லேயர்களாக கொள்கிறது.. வாசிக்கும் வாசகர்களின் கோணங்களில் கதைகூட மாறிவிடும்.. வாசகர்களுக்கு அவர்களுக்கு தோதான ஒரு அவதானிப்பை கொள்ள வைக்கிற ஒரு ஃபார்மேட்.. முயற்சி செய்தேன்... இன்னும் இது போல்.. எழுதி பார்க்க வேண்டும்..........

  கதையையும் அதன் அத்தனை பரிமாணங்களையும் விளக்கிச் சொல்லாமல்... சற்று பூசி மெழுகி... முடிவும் சொல்லாமல்... அப்படியே ஒப்பனாய் விட்டு விடுவது..... என்றாலும்... நீங்கள் சொல்வது போல, முற்று பெறாமல்... நிற்க கூடாது என தோன்றுகிறது... அடுத்த முயற்சியில் அதை ட்ரை பண்ணுகிறேன்..

  மிக்க நன்றி...........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது எழுத்து நடை ரசிக்கவைத்தது சார்.. சில கவிதைகள் இதேபோன்று முடிவில்லாததாகத் தோன்றும்... ஆனால் அவற்றை நாம் ரசித்துவிட்டுச் சென்றுவிடுவோம்...

   சுஜாதாவின் சிறுகதைகளில் சிலவற்றில் முடிவு என்ற ஒன்று இருக்காது. அவற்றை வாசகர்களின் மனநிலைக்கு விட்டுவிடுவார்... இரண்டு விதமான முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். அம்மாதிரியான ஒரு முடிவுதான் இந்தக் கதையில் வந்திருப்பது.

   நீக்கு
 3. மிக்க நன்றி... ஸ்கூல் பையன்.............. உங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு