பக்கங்கள்

ஆதலினால் காதல் செய்வீர்

அது என்ன
இந்த பூ மட்டும் நகர்கிறதே
என வண்ணத்துப் பூச்சி வியந்தது.
ஓ! அவள் என் காதலி


இன்னொரு கவிதை;

என் பெண்ணே !!
நீ பூச்சுடி வலம் வரும் போது
பூ சொன்னது
கூந்தலின் இறுபுறமும் பூ!!!

காதல் தெய்வீகமானது என ஒரு குழு சொல்ல, காதல் வெறும் உடல் பசி, மனிதனை மனிதனே ஏமாற்றும் குறளி வித்தை என இன்னொருவர் சொல்வர். காதலை விரும்ப வெறுக்க என மனிதர்கள் பிரிந்து கிடக்கின்றனரே. ஏன் இந்த பாகுபாடு என யோசித்த போது தோன்றியது.

கடற்கரை ஓரத்தில் ஒரு மூன்று நிலை வீடு. வீட்டின் கிரவுண்ட் ப்ளோரில் இருந்து பார்த்தால் புல் தரை தெரியும் மரத்தின் கிளையும் இலைகளும் தெரிகிறது. படிக்கட்டு ஏறி முதல் நிலை வந்தால் புல் தரை மற்றும் மரத்தின் முழுதும் தெரிகிறது. மூன்றாம் நிலை வரும்போதுதான் புல் தரையும், மரமும் அதை தாண்டி தூரத்து கடற்கரையும் தெரிகிறது.

காதலும் அது போலத்தான். வாழ்வின் சில பருவங்களை கடந்து வரும் போது அதன் முழு பரிமாணம் தெரியும்.

காதலை பற்றி புரியும் முன் ஒரு பெண்ணை அறிந்து கொள்ள வேண்டாமா, பிரசவ ஆஸ்பத்திரி போய் பார், என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் சொல்வார். எத்தனை நெஞ்சுரம் கொண்ட ஆண் கூட திணறிப் போவான். அங்கு பெண்கள் தெய்வமாய் தாய் எனும் அவதாரம் எடுப்பர்.

காதலையும் குடித்தனத்தையும் குழப்பக்கூடாது. காதலோடு கூடிய குடித்தனம் ஆரோக்கியமானது. காதலே இல்லாத குடித்தனம் துரதிருஷ்டவசமானது. எனில் காதல் என்றால் என்ன.

எவர் ஒருவரிடம் எந்த வருத்தமும் இல்லாமல் தோற்க நம்மால் முடிகிறதோ அவரிடத்தில் தோன்றும் உணர்வே காதல். இன கவர்ச்சியின் கடந்தபின் காதல். நட்பின் வேறு பரிமாணம் காதல்.

நட்பின் சாராம்சம் என்ன. அண்மைக்கு ஆசைப்படும், எவ்வளவு பேசினாலும் அடுத்து பேச பேலன்ஸ் இருக்கும். மனதில் தோன்றியதை வாயில் வரும் எந்த வார்த்தையையும் கொட்டித் தீர்த்த பின்னும் நாளை எந்த பிரச்சனையும் இல்லாமல் ‘சாரி, நேத்து ரொம்ப தப்பா பேசிட்டேன்’ என சொல்லும் அண்மை, உரிமை.

ஆதலினால் காதல் செய்வீர்

1 கருத்து:

  1. அருமையான காதல் கருத்துக்கள். வாழ்வின் சில பருவங்களை கடந்து வரும் போது அதன் முழு பரிமாணம் தெரியும் என்ற வார்த்தைகள் முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு