பக்கங்கள்

இதுதான் காதல் என்பதோ !!! நிறைவுப் பகுதி

நாராயணன் காதல் சொன்ன முதல் சில நாட்கள் படபடப்பாகவும் கொஞ்சம் பரவசமாகவும் சுதாவுக்கு இருந்தது. மனம் வேலையிலும் மற்ற விசயங்களிலும் பிடிப்பு கொள்ளாமல், இதே சிந்தனை சுழன்று சுழன்று வந்த்து. மெதுவாய் அம்மாவிடம் முதலில் சொல்ல, யார், எந்த ஊர், குடும்பம் எப்படி என கேள்விகள் வந்தன. அப்பாவிடம் விசயம் செல்ல, அப்பாவோ என்ன படிப்பு, எங்கே வேலை, எவ்வளவு சம்பளம் என அடுத்த துருவத்தில் கேள்விகளை முன் வைத்தார்.

அம்மாவின் கேள்விக்கு திருப்தியான பதில் நாராயணனின் வாழ்வில் இருக்க, அம்மா ஓகே என சிரித்தபடி சொன்னார். வேலையும் சம்பளமும் சரி இல்லாததால் அப்பாவுக்கு கவலை. ஆழமாய் யோசித்து, வேண்டாம் இது சரியாகாது. உன்னை விட குறைவாய் சம்பாதிக்கும் ஒருவன் வாழ்க்கையில் கஷ்டம், விட்டுறு என தீர்க்கமாய் தீர்மானமாய் சொன்னார். சரி நேரில் பார்க்காமல் ஒரு தீர்மானம் சொல்ல முடியாது , எனவே வரச்சொல். பார்த்தபின் பைனலாய் சொல்லலாமே என சந்திக்க தேதி குறிக்கப்பட்ட்து.

காலை பத்து மணிக்கு வீட்டுக்கு வாங்களேன், அப்பா அம்மாவுக்கு பேசணுமாம், சுதா மெல்லியமாய் சொன்னாள். வீட்டுக்கு வாங்க எனத்தான் சொன்னாளே அன்றி அழைப்பிதழில் இன்னும் காதல் அங்கிகாரம் கொடுக்கப்படவில்லை, ஆனாலும் நாராயணன் குஷியானான்.
சொன்ன தேதியில் சுதா பரிதவித்து கொண்டிருந்தாள். பத்து மணி கடந்து கடிகாரம் ஓடிக் கொண்டிருக்க, ஆளை காணவில்லை. கண்கள் கடிகாரமும் வாசலும் பார்த்து பார்த்து சலித்தது. வெறும் பார்வையிலேயே திட்டிக் கொண்டிருந்த தந்தை நேரம் ஆக ஆக வார்த்தையாய் கொட்டினார் ‘பாரு சொன்ன நேரத்துக்கு வரல, நிரந்தரமான வேலையும் இல்ல, இப்படி ஒரு ஆளு தேவையா’ சுதா பதிலேதும் சொல்லாது அமைதி காத்து நின்றிருந்தாள்.

சரியாய் 12 மணிக்கு இரண்டு மணி நேர தாமதிப்பில் பளிர் சிவப்பு நிற மேல் சட்டையில் வந்து நின்றான். சாலை நெரிசல் என சாக்கு சொன்னான், வேர்த்து விறுவிறுத்து நனைந்திருந்தான். சட்டை வேறு கலர்ல போட்டுருந்திருக்கணும் என சுதா நினைத்தாளே தவிர, நாராயணன் அதையெல்லாம் கவனம் செலுத்தாத மன நிலையிலே இருந்தான்.

உணவு, பேச்சு என சில மணிகள் கடந்தன. சந்திப்பின் முடிவில் பெற்றோர் இருவரும் அவர்களின் முதல் அபிப்பிராயத்திலே தீர்மானமாய் சொன்னார்கள். அம்மா, பையன் பார்த்தா புத்திசாலியா இருக்கான் சரியாத்தான் இருக்கும் என சம்மதம் சொல்ல. அப்பாவோ அவனிடம் உன் வாழ்வின் லட்சியம் என்ன என கேட்க, அரசியலில் சேர்ந்து உழைக்கணும், அனாதை ஆசிரம் நடத்தி சேவை செய்யணும் என பதில் சொல்லியிருக்கிறான். ஏம்மா!!! இன்னிக்கு வாய்க்கும் கைக்குமா சம்பாதிக்கிறவனுக்கு இது என்ன நடக்க கூடியதா. வாழ்க்கைன்னா என்ன்ன்னு புரியல, என் சஜேஷன் விட்டுறு.

ஆனாலும் என்னவோ, சுதாவுக்கு இப்போது நாராயணனை பிடித்த்து. முதலில் தோன்றாத காதல் நாராயணனிடம் இப்போது தோன்றியது. அவன் நேர்மை, அணுகுமுறை எல்லாம் இவன் தான் புருஷன் என சொல்லியது. பெற்றோர்களிடம் எனக்கு அவன் தான் என முடிவு எடுத்துவிட்டேன், நீங்கள் இருவரும் முழு மனதோடு சம்மதம் தரும் வரை நான் காத்திருப்பேன் என தீர்மானமாய் சொன்னாள். சொல்லும் போது தெரியவில்லை மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும் என. பொறுமையாய் காத்திருக்க வேண்டியதாயிற்று. மூன்று வருடங்கள், என்றாலும் அது அவர்கள் உறவை பலப்படுத்த உதவியது. இந்த மூன்று வருடங்களும் ஒரு டைப்பான காதலில் கழிந்தது.

ஒரு மாலை வேளையில் உணவகத்தில் சந்தித்த போது, புத்தகம் லட்சியம் என இனிமையாய் பொழுது கழிந்த்து. பில் வந்த போது, என்கிட்ட இன்னிக்கு காசு இல்ல, நீ கொடுத்துறு. எழுதி வைச்சுக்கோ அப்புறமா திருப்பி தந்திடுறேன், கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் நாராயணன் சொன்னான். உன்னை காதலித்த பாவத்துக்கு கடனும் கொடுத்து அதை ஒரு நோட்டில் எழுதியும் வைத்து 4000 ரூபாய் என கணக்கும் வைத்திருந்து, கடைசி வரை நீ கொடுக்கவே இல்லை. நம் திருமணம் ஆன சில வருடங்களில் சிரித்துக் கொண்டே கிழித்தேன்.

அவர்கள் இருவரும் நினைவு கலைத்து இன்றைக்கு வந்தனர். வர வைத்த்வர் சர்வர். சார் என்ஜாய் யூவர் டீ. பவ்யமாய் வைக்கப்பட்ட டீ கோப்பை, புகைவிட்டு மணமும் பரப்பியது. குளிர்ந்த அந்த மாலைப் பொழுது அதன் குணத்தை பட்டையிட்டு தந்தது.

யோசிச்சு சொல்றீயா, நிச்சயம் கம்பெனி தொடங்கணுமா, சுதா நாராயணனின் முகம் பார்த்து கேட்டாள். ஆம் அதுதான் சரி என நினைக்கிறேன், தீர ஆலோசித்து விட்டேன். சற்று நேர அமைதியில் சுதா சொன்னாள், சரி செய். உன் லட்சியத்தை துரத்து, உனக்கு 3 வருடம் டைம். இந்த மூன்று வருட்த்தில் குடும்பம் பற்றியோ, நம் உணவு பற்றியோ, குழந்தைகள் பற்றியோ எந்த கவலையும் வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தா, நம் கஷ்ட காலத்தில் பயன் தரும் என நான் சேமித்து வைத்த 10,000 ரூபாயும் வைத்துக் கொள், உனக்கு உதவும். உன் லட்சியத்தில் வெற்றியடைய வாழ்த்துக்கள். வெற்றி பெற வில்லையென்றாலும் பரவாயில்லை, மூன்று வருட்த்தில் மீண்டும் வேலைக்கு செல்லும் திடத்தோடு திட்ட்த்தோடு திரும்பி வா, நான் இருக்கிறேன்.

நாராயணன் மும்முரமானான், முன்னிலும் முனைப்பாய் தன் கம்பெனியின் பணி செய்தான். பசி தூக்கம் மறந்தான், வெற்றிக்காய் வெறியானான். வெற்றியும் பெற்றான். இடைப்பட்ட இந்த காலத்தில் சுதா அவன் கம்பெனிக்கென உழைத்தாள், உதவினாள். அவளையும் பிஸினஸில் சேர்த்துக் கொள்ளலாமே என நண்பர்கள் சக ஊழியர்கள் ஆலோசனை தந்த போது, நாராயணன் தீர்மானமாய் மறுத்தான். கணவன் மனைவி இருவரும் ஒரே இட்த்தில் பணி புரிவது நல்லது அல்ல. உனக்கு மிகவும் விருப்பம் என்றால் எந்த லஜ்ஜையுமில்லாமல் நான் விலகி விடுகிறேன். சந்தோசமாய் இந்த முடிவெடுப்பேன்.

சுதா அதிர்ந்தாள். மேல் சாவனிஸ்ட் இல்லையே, பின் ஏன் இப்படி சொல்கிறான். நிர்வாகம் எனும் கட்டமைப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பாடுபடுவது குடும்பத்தை பதம் பார்க்கும் எனும் தொலை நோக்கு பார்வையை சுதாவும் உணர்ந்து சமனமானாள்.

இந்தியாவின் முண்ணனி நிறுவனமான இன்போஸிஸ் உருவாக்கிய நிறுவனர் நாராயண மூர்த்தி, சுதா நாராயணமூர்த்தியை பற்றிய மின்ன்ஞ்சல் தந்த தகவல்கள் என்னை ஈர்த்தது, அதையே இரு பகுதிகளாக பதிவிட்டேன். வாழ்வின் மெல்லிய ஆழமான உணர்வுகளை இத்தகவல் உணர்த்தியது. ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் எனும் வாசகம் வாஸ்தவம் என தோன்றியது.

உண்மை காதல் வாழ்க ...

6 கருத்துகள்:

  1. நண்பர் செல்லதுரை எழுதிய “முதல் காதல்” கதையின் தொடர்ச்சியாய் அருமை நண்பர் படுக்காளியிடம் இருந்து வெளி வந்த இரண்டாம் காதல் படிக்க வித்தியாசமாகவும் மிகவும் சுவாரசியமாகவும் இருந்தது...

    இதோடு இன்னொன்றும் என் நினைவுக்கு வருகிறது.... “சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது”...........

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் ஜி! நன்றி.

    ஆம் காதல் கதைக்கு தாக்கம் ஏற்படுத்தியது நண்பர் செல்லத்துரையின் முதல் காதல் தான்.

    பதிலளிநீக்கு
  3. "உன்னை காதலித்த பாவத்துக்கு கடனும் கொடுத்து அதை ஒரு நோட்டில் எழுதியும் வைத்து 4000 ரூபாய் என கணக்கும் வைத்திருந்து, கடைசி வரை நீ கொடுக்கவே இல்லை"
    நான் ரசித்த வரிகள்.. வெற்றி, உழைப்பு, சாதனை இதன் மகத்துவம் இன்னும் உயரம் செல்ல.. துணையாய் ஒரு ஆத்மார்த்தமான காதல் தேவைப்படுகிறது..
    இதிலேர்ந்து என்னோட பழைய தத்துவம்தான் ஞாபகத்துக்கு வருது..
    " கிடைக்கிறவன் சாதிக்கிறான்.. கிடைக்காதவன் சும்மானாச்சுக்கும் சோதிக்கிறான் மத்தவங்கள "

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஒரு லட்சிய காதல்...காதல் மனிதனை எப்படி உயர்த்தும், பண்படுத்தும் என்பதற்கு ஒர் சான்று... காத‌லை ஊக்குவிப்போம்.. வெற்றி பெறுவோம்...

    முதல் காதலை பரிமாணிக்க... பார்க்கவும் http://idhayame.blogspot.com/

    காதலர் தின வாழ்த்துக்கள்....

    காதலுலடன்...

    செல்லத்துரை

    பதிலளிநீக்கு
  5. வாங்க. பஹ்ரைன் பாபா வந்து வாசித்து பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

    /// "உன்னை காதலித்த பாவத்துக்கு கடனும் கொடுத்து அதை ஒரு நோட்டில் எழுதியும் வைத்து 4000 ரூபாய் என கணக்கும் வைத்திருந்து, கடைசி வரை நீ கொடுக்கவே இல்லை"
    நான் ரசித்த வரிகள்.. /////

    குறிப்பாய் இதை ரசித்தேன் என சொன்னதுக்கு நன்றி.

    யதார்த்தமாய் இப்படித்தான் பேசியிருப்பார்களோ என கற்பனை செய்து எழுதும் போது அங்கிகரித்து பாராட்டுவது, இன்னும் எழுத சிந்திக்க என ஊக்கம் தருகிறது.

    //// வெற்றி, உழைப்பு, சாதனை இதன் மகத்துவம் இன்னும் உயரம் செல்ல.. துணையாய் ஒரு ஆத்மார்த்தமான காதல் தேவைப்படுகிறது..
    இதிலேர்ந்து என்னோட பழைய தத்துவம்தான் ஞாபகத்துக்கு வருது..
    " கிடைக்கிறவன் சாதிக்கிறான்.. கிடைக்காதவன் சும்மானாச்சுக்கும் சோதிக்கிறான் மத்தவங்கள " ////

    நல்ல ஆழமான தங்கள் கருத்து நகைச்சுவையில் மின்னி நிறைகிறது.

    பதிலளிநீக்கு
  6. வாங்க cdhurai, படித்து பின்னூட்டம் எழுதியதற்கு மிக்க நன்றி.

    //// நல்ல ஒரு லட்சிய காதல் மனிதனை எப்படி உயர்த்தும், பண்படுத்தும் என்பதற்கு ஒர் சான்று... காத‌லை ஊக்குவிப்போம்.. வெற்றி பெறுவோம்...

    முதல் காதலை பரிமாணிக்க... பார்க்கவும் http://idhayame.blogspot.com/

    காதலர் தின வாழ்த்துக்கள்....////

    சரியான சந்தர்ப்பத்தில் வேலண்டைனை நினைவு படுத்தி வாழ்த்தியதற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

    படுக்காளி

    பதிலளிநீக்கு