பக்கங்கள்

அவதார் – திரை விமர்சனம்

மாபெரும் டைட்டானிக் வெற்றி, 1200 கோடி செலவிலான மெகா பட்ஜெட் முயற்சி, ஏறக்குறைய 15 வருட உழைப்பு என அவதார் பற்றிய எக்ஸ்பெக்டேஷன் மீட்டர் எக்கச்சக்கமாய் எகிறிவிட்ட்து. எவ்வளவு எதிர்பார்த்து போனாலும் அதையும் மிஞ்சி படம் சூப்பரா இருக்கு என சில நண்பர்களும். டைட்டானிக் மாதிரி இல்லைங்க, ரொம்ப எதிர்பார்க்காதீங்க, படம் பரவாயில்லை என சில நண்பர்களும் சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் தான் இந்த வார இறுதியில் பார்த்தேன்.

ஒற்றை வரியில் சொல்லணும்னா, நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு. தாங்கள் செலவிட்ட நேரத்துக்கும் பணத்துக்கும் முழு உத்தரவாதம். வீட்டின் கடைக்குட்டி முதல் மூத்தவர் வரை ரசித்து பார்க்கும் வண்ணம் தைரியமாய் தியேட்டர் போய் பார்க்கலாம்.

அவதார் என சுத்த சமஸ்கிருத்த்தில் நம் இந்திய சிந்தையை உள்ளடக்கிய கதைக் கருதான். சரி கதை என்ன. வெள்ளைக்காரன் படத்துல ஒரு குறை உண்டு. கதை என்பது அரைகுறையாத்தான் எனக்கு புரியும். என்னைப் போல் பாதி புரிபவர்களுக்கு கீழ் உள்ள பேரா நல்லது. இல்லையா உங்களுக்கு கதை புரியும் என்றாலோ அல்லது கதை கேட்டு படம் பார்த்தா புடிக்காது என்றாலோ ஒரு ஜம்ப் செய்து அடுத்த்து சென்று விடுங்கள்.

(பிராஜெக்ட் டகால்டி 12345 என பெயரிட்டு படுக்காளி வலைத்தளத்தில் நான் எழுதிய தொடரின் கதை ஏறக்குறைய இதே கதைக்கரு)

பூமிக்கு அப்பால் ஒரு கிரகம். அங்கே நம் கிரகம் போல் உயிரினங்கள் செடி கொடிகள், நீர் எல்லாம் உண்டு. இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்கள் நாவி இனமும் உண்டு. அங்குள்ள சீதோஷனத்தின் புண்ணியத்தில் அடாப்ட் செய்த்தால் நீண்ட உருவமும், ஆக்ஸிஷன் குறைவால் நீல நிறமும் பெற்று ஏறக்குறைய அழகாகவே இருக்கிறார்கள். இதை எப்படியோ வலை வீசி கண்டும் பிடித்து விட்டார்கள் நம் செல்லக்குட்டிகள். இதை கண்டுபிடித்த நம் பூமியில் உள்ள மனிதனுக்கு அவர்கள் மீதெல்லாம் அக்கறை இல்லை. அங்கு கிடைக்கும் ஒரு தனிமத்தின் மீது கொள்ளை பிரியம். அதன் பயனும் விலையும் அலாதியானது. எப்படியாவது இதை எடுக்க வேண்டும் என அங்கே பட்டரை போடுகிறது அந்த சக்தி வாய்ந்த குழு.

அவர்கள் செய்யும் கூசக்களித்தனம் இதுதான். மனித டி.என்.ஏ துணையுடன் நாவியின் டி.என்.ஏ. இணைத்து நாவி போல் உடலமைப்பு செய்து விடுகிறார்கள். உடம்பு செய்தவர்கள், உயிர் செய்ய முடியவில்லை. அது ஆண்டவன் வேலை அல்லவா. மனித உயிரை பிரித்து எடுத்து அதை நாவி உடம்பில் செலுத்தி நாவிகள் குழுவிலே நம்மாளை வேவு வேலை பார்க்க சொல்கிறார்கள். அப்படி வேவு வேலை பார்க்க வந்த கதா நாயகன், இறந்து விட அவன் இரட்டைச் சகோதரனை கதா நாயகனாக்கி கதை தொடங்குகிறது. பாவம் பிறவியில் கால் ஊனமானவன் நம் ஹீரோ. அவனை அழைத்து வந்து அண்ணன் உடல் காண்பித்து, அஞ்சலி செய்த பின் நாவியின் உடல் காண்பிக்கிறார்கள். அதன் உயரம் பார்த்து ஆச்சர்யிக்கிறான். சரி உன் அண்ணன் டி.என்.ஏ. வில் இருந்து (அதாவது உன்னிதும் தான்) உருவாக்கியதை பார் எனும் போது, பாசத்துடன் அந்த கண்ணாடிப் பேழையை பார்க்கிறான். சரி வா உன் உயிரை பிய்த்து அங்கே செலுத்தி கூடு விட்டு கூடு பாய்வோம் என்கிறார்கள்.

பிறவியிலே நடக்க முடியாதவன், கால்கள் பார்த்து பூரிக்கிறான். கால் துவளும் வரை ஓடுகிறான். அந்த உடலை அவன் உயிர் நேசிக்கிறது. இப்போது பண்டோரா எனும் கிரகத்துக்கு செல்கிறான். ஆர்வக் கோளாறினால் கொஞ்சம் எல்லை கடக்க, அங்குள்ள மிருகத்தின் துரத்தலுக்கு பயந்து ஓடும் போது, தன் குழுவை பிரிகிறான். இரவில் வெளிச்சம் வேண்டி தீ பத்தவைக்க, நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல், அந்த தீயின் வெளிச்சத்திலே அவனை கொல்ல விலங்குகள் வருகிறது. வருவது வீரியமான டிராகன் அமைப்பு உள்ள பறக்கும் கோர பற்கள் கொண்ட விநோதம்.

இந்த ஆபத்துக்கு மேல, டாப்பில இருந்து இன்னொரு டேஞ்சர். சரி இந்த பயல போட்டு தள்ளிர வேண்டியதுதான் என நாவி குழுவை சேர்ந்த தலைவனின் புதல்வி மரத்துக்கு மேலே. அம்பு எடுத்து, நாணில் பூட்டி விடும் சமயத்தில், வேண்டாம் என ஒரு சக்தி தடுக்கிறது. அவன் நல்லவன் வல்லவன் என கோடி காட்ட, அவனை காத்து விலங்குகளை துரத்தி விட்டு. யப்பா நீ போ, இங்கே இருக்காதே.... நீ பச்சபுள்ள என அறிவுரை சொல்கிறாள். விடுவானா, அவளை பின் தொடர்ந்து சென்று என்னையும் சேர்த்துக் கொள் என மன்றாடுகிறான். குழுவின் தலைவி சில சோதனைகள் செய்த பின், இவன் நல்லவன் என அத்தாட்சி அழிக்க, சரி இவனுக்கு தேவையான பழக்க வழக்கங்களை நீயே கற்றுக் கொடு என ஒத்துக் கொள்கிறார்கள்.

உணவு, போக்குவரத்து, தற்காப்பு, பிரார்த்தனை என அந்த வாழ்வியல் முறையை கற்றுக் கொள்கிறான். அவனுக்கு அது பிடித்தும் போய் விடுகிறது. இவனை அனுப்பிய மனுசப் பயலுவ என்ன செய்யுறாங்க, பரபரப்பான அந்த காட்சிகள் என்ன என்பதை எல்லாம், வெண் திரை விளக்கும்.

அவதார் ஒரு அனுபவம். திரைப்பட்த்தின் புதிய பரிமாணத்தில் மகிழ்ந்திருக்க ஒரு சந்தர்ப்பம். நடிக்க ஆள் வேண்டாம், கம்புயூட்டர் வச்சு நானே வரைஞ்சிக்கிறேன் என டைரக்டர் களம் இறங்கினால் என்ன செய்வது. இறைவன் உருவாக்கிய பூமியை, மனுசப்பய அதுல மரம் வெட்டலைன்னா, இப்படித்தான் இருந்திருக்குமோ என சிந்திக்க வைக்க ஒரு முயற்ச்சி. பரம சுகம் 3டி அனுபவம். 3டி என்பதால் கண்ணுக்கு நேரா அம்பு விடு, கைக்கெட்டுற தூரத்துல ஐஸ்கீரிம் காட்டு என்பதாய் எலிமெண்டரி ஸ்கூல் எபக்ட்ஸ் இல்லை. கண்ணை உறுத்தாத நம் மிக அருகில் வந்து பூச்சாண்டி எல்லாம் காட்டாது, நேர்த்தியான செயல் திட்டம்.

அடர்ந்த காடு, உயர்ந்த மரம், பெரிய நீர்வீழ்ச்சி, ஆக்ரோஷமான மிருகம் என நம் கற்பனை கடந்து, அடேயப்பா என அதிசயிக்க வைக்கும். இசை, ஒளிப்பதிவு என பிரித்துப் பார்த்து இது நல்லா இருக்கு, என பிரிக்க முடியாத வண்ணம் அனுபவத்தில் நம்மை இணைக்கும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த வறுமையில் உழன்று, வீட்டு வாடகை எல்லாம் கொடுக்க முடியாது தன் காரில் குடித்தனம் செய்த ஒரு துணை நடிகரையே ஹீரோவாக்கினார் ஜேம்ஸ் கேமரூன் எனும் போது அவர் புத்திசாலித்தனம் தெரிகிறது. அவரது முகத்தையும் மார்பையும் பார்க்கும் போது அவர் ஊனமுற்றவராக இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. துவளும் காலும் அவரது பாடி லேங்குவேஜும் அவர் உண்மையிலேயே ஊனமுற்றவரோ என கேள்வியும் கேட்கிறது. விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். மிச்ச எல்லாம் கம்புயூட்டர் ஜெனரேட்ட்ட் என்பதால், நல்லா ஆக்ட் கொடுத்துருக்காங்க என சொல்ல வேண்டிய அவசியம் எல்லாம் இல்லாமல் போச்சு.

டைட்டானிக் காதல் சொன்ன படம். அழகான ஹீரோ, ஹீரோயின் ஏன் வில்லன் கூட அம்சம் என அழகுணர்ச்சி த்தும்பிய படம். சொன்ன மேட்டர் வேர லவ்ஸ். அந்த பழங்கஞ்சிதான் இப்பவும் வேணும், அதேதான் எனக்கு மறுபடி வேணும் என அடம் பிடிக்காமல், புதிய அனுபவம் மாறுபட்ட சிந்தனைக்காக அவதார் நிச்சயம் பார்க்கலாம்.

6 கருத்துகள்:

  1. படுக்காளி அவர்களே... தங்கள் “அவதார்” திரைவிமர்சனம் பார்த்தேன்... (படித்தேன் என்பது தான் சரியாக இருக்கும்).... படித்த போதே, படம் பார்த்த திருப்தி எனக்கு... என்ன கையில் ஒரு 3டி கண்ணாடி போட்டு படித்திருந்தால், படமே பார்த்த எஃபெக்ட் இருந்திருக்கும்...

    அவ்வளவு நேர்த்தியாக இருந்தது உங்களின் விமர்சனம்...

    என்னதான் சொல்லுங்க “தல”... இந்த படம் நம்ம இளைய தளபதி (தலைவலி) நடித்த வேட்டைக்காரன் அளவுக்கு இல்லையாமே... அதுவும் “அவதார்” ல புலி உறுமுது, இடி இடிக்குது...... நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாளு தூங்க மாட்ட போன்ற கருத்தாழம் மிக்க பாடல்கள் இல்லையே.

    அதுவே வேட்டைக்காரன் கிட்ட ”அவதார்” படம் தோற்றதற்கு முக்கிய காரணம்...

    பதிலளிநீக்கு
  2. வாங்க கோபி....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    கரெக்ட் தலை. ஒரு புலி உறுமுது பாட்டும், காதலிய பார்த்தவுடனே சுர்ருங்குது, விர்ருங்குது, கிர்ருங்குது, டர்ருங்குது எனும் பாடலும் இல்லாதது குறையே...

    ஆனா நம்ம இளைய தளபதி கேங்குல, ஜேம்ஸ் கேமருனுக்கு போன் போட்டு நமக்கு ஒரு சினிமா எடுக்க சொல்லுங்களேன். ரெண்டு குத்து பாட்டு, மூணு பஞ்ச் டயலாக், நாலு அதிரடி பைட்னு பட்டய கிளப்பிறலாம்ன்னு ஐடியா கொடுத்த மேட்டர் கீத்தாமே.... மெய்யாலுமா....

    பதிலளிநீக்கு
  3. வீட்டின் கடைக்குட்டி முதல் மூத்தவர் வரை ரசித்து பார்க்கும் வண்ணம் தைரியமாய் தியேட்டர் போய் பார்க்கலாம்.
    //

    அப்ப நான் போய் பாத்துர்றேங்க.. இன்னும் பாக்கல..

    பதிலளிநீக்கு
  4. வாங்க கடைக்குட்டி,

    நானும் எங்க வீட்டு கடைக்குட்டிதான். கடைக்குட்டின்னாலே எப்பவும் அன்பு ஜாஸ்தி.

    தற்செயலா கடைக்குட்டின்னு நான் எழுத, நீங்க வந்து பார்த்து பின்னூட்டம் இட்டது ரொம்ப சந்தோஷம்.

    அடிக்கடி வாங்க..

    பை த பை உங்க வலைக்கு வந்தேன். நல்லா இருக்கு. மறுபடியும் வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. Hi Padukali,

    Nice review.

    I think the hero is not born with physical disability. As per the story, the hero is a US marine, who loses both his legs during combat on earth.

    Though 'Avatar' is a delight to watch, that too in 3D, with its fantastic visuals & CG, somehow, I was not able to emotionally connect with the movie the same way like I did with Cameron's past offerings like 'Titanic' or even 'Terminator 2'.

    Arun

    பதிலளிநீக்கு
  6. வாங்க அருண், மிக்க நன்றி.

    ஹீரோ பற்றி, தாங்கள் சொன்ன தகவலில் பார்க்கும் போது, மிக பிரமாதமான நடிப்பு என்றே சொல்ல வேண்டும். துவளும் கால்களும், அதை தூக்கி வைக்கும் பாங்கும் என அசத்தி விட்டார்.

    உண்மை, அவதாரில் கொஞ்சம் அழகுணர்ச்சி கம்மி. டெர்மினேட்டரை எடுத்துக் கொண்டால் கூட ஸ்டைல் பிரமாதமாயிருக்கும்.

    வந்து கருத்து தந்து, சந்தேகம் தீர்த்தற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு