
இரண்டில் ஒன்று தலைப்பாய் கொள்ளலாம் என்று தோன்றியது. என்னடா படுக்காளி இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற... என்று கேட்பது கேட்கிறது.
பல பல நுற்றாண்டுகளாய் பாண்டி நாட்டு முத்து ரொம்ப பிரபலம். பாண்டிய நாட்டின் மிக பிரசித்தி பெற்ற முத்து நகர் சார்ந்த ஒரு தகவல் இது.

முத்து எடுப்பது என்பது, கடலில் மூழ்கி, சேற்றில் துளாவி, சிப்பி எடுத்து பின்னர் சிப்பியை பிளந்து முத்தை புடுங்குவது. சிப்பியை எடுப்பது முத்து குளிப்பது.
மேற்படி விவரங்கள்.
என்று முத்து குளிப்பது அரசு உடமையாய் ஆக்கப் பட்டு, முத்து ரத்தானதோ, அதற்கு முந்திய கால கட்டத்தில் உருவான ஒரு சமூக பழக்கம் இது.
முத்து குளிக்க கடலின் உள் செல்லும் முன், அவன் இடுப்பில் கயிறு கட்டி அதன் மறு முனையை உடன் உள்ளவனுக்கு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். கடலின் ஆழத்தில் முச்சடக்கி செல்லும் மீனவன், சில நேரம் ஆர்வம் காரணமாய் அல்லது இன்ன பிற காரணங்களினால் மயங்கி விழும் அபாயம் உண்டு. இடுப்பில் கட்டிய கயிறு பதத்தில் அதன் அசைவு கொண்டு கடலுக்கு அடியில் உள்ள விவரம் தெரியும் புத்திசாலித்தனம் உண்டு சக தோழனுக்கு.
கடலுக்கடியில் சிப்பி தேடும் அதே நேரத்தில் உன்னிப்பாய் படகிலிருந்து கயிறு தூக்கி விட வேண்டிய கட்டாயம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் கை கயிறில் உள்ளது உள்ளே சென்ற தோழனின் உயிர். உயிர் விலை தெரிந்து செய்ய வெண்டிய வேலை இது. சரி இப்படி ஒரு பொருப்பான பணியை யாரிடம் கொடுபது. மரபு படி இந்த வேலையை யார் செய்தார்கள். காலம்

கடலும் கடல் சார்ந்த இடத்தில் இப்படி ஒரு பழக்கம் என்றால், மலையும் மலை சார்ந்த இடங்களில் தேன் எடுக்க செல்லும் போதும், இந்த கயிறு கட்டி கொடுத்ததும் தாலி கயிறு தொடர்பிலே தான். மச்சான்கிட்ட்தான்.
ஒரு நிமிடம் சிந்தித்தால் இந்த ஆழமான உறவு, உயிரையே நம்பி ஒப்படைக்கும் உறவு நம்பிக்கை இன்று உண்டா....
நம் உயிரை ஒரு கயிறில் கட்டிவிட்டு அதை யாரிடம் கொடுக்க முடியும்.
இந்த கேள்வி நாம் இது வரை வாழ்ந்த்தின் வீகம் புரியும்.
Romba simple
பதிலளிநீக்குOxygen cylinder கொண்டு போலாம்; நம்ப யாருக்கு பெரிய கடன திருப்பி கொடுக்கணுமோ அவங்கள கூடிடு போலாம்; மச்சான் இல்லாதவங்கலாம் என்ன பண்ணாங்கனு பாக்கலாம்; தாலி கட்டாம மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணவங்க என்ன பண்ணாங்கனு கேகலாம் :-)
வாங்க பெயரில்லா வந்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி. ரசிக்கும்படியான நல்ல நகைச்சுவை உணர்வு தங்களிடம்.
பதிலளிநீக்குகேட்டீங்களே ஒரு நல்ல கேள்வி, மச்சான் இல்லாதவங்க என்ன செய்யுறதுன்னு, அங்க நிக்கிறீங்க தலை.
machchaan ndreengale.. avan peru madurayaa???
பதிலளிநீக்குவாங்க பாபா, நல்லா இருக்கிங்களா.
பதிலளிநீக்கு/// machchaan ndreengale.. avan peru madurayaa???
சூப்பர் மேட்டருங்க!!!!
மச்சான் பேரு மதுரை
அத்தான் ஊரும் அதுவே
என பாட்டு எழுதலாம் போல இருக்கே.
தலை தெரிஞ்சுருந்தா மதுரைக்கார மச்சான்னு இன்னொரு தலைப்ப கூட எழுதிருக்கலாமே...
பாண்டிய நாட்டிலே இப்போதெல்லாம் முத்துக் குளிப்பது தடைசெய்யப்பட்டு விட்டாலும், சங்கு குளிக்கிறார்கள். இந்தக் குளியலிலும் மச்சான்தான் கயிறு பிடித்துக் கொள்ளும் வழக்கம்.
பதிலளிநீக்கு/// ஏவிஎஸ் சொன்னது…
பதிலளிநீக்குபாண்டிய நாட்டிலே இப்போதெல்லாம் முத்துக் குளிப்பது தடைசெய்யப்பட்டு விட்டாலும், சங்கு குளிக்கிறார்கள். இந்தக் குளியலிலும் மச்சான்தான் கயிறு பிடித்துக் கொள்ளும் வழக்கம். ////
வந்து நல்ல தகவலை பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.
தங்கள் அன்பும் ஆதரவும் ஆலோசனையும் வேண்டுகிறேன்.