
அதெல்லாம் இல்ல, மேசப டொமியா காலத்தில இருந்தே என 4000 வருட பாரம்பரியம் காட்டினாலும் ஒகே. கொண்டாட்டம் தான முக்கியம், சந்தோசம் தான முக்கியம்.
இந்த கொண்டாட்டங்களின் சிறப்பு அம்சம் கிறிஸ்துமஸ் அடையாளங்களே. மெனக்கெட்டு செய்யப்படும் கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் சில பேருக்கும் ஒரு மாத உற்சாகம். கிறிஸ்மஸ் டிரி, குடில், ஸ்டார், வண்ண விளக்கு, சாண்டா கிளாஸ், நள்ளிரவு செபம், அன்பளிப்பு, இப்படி ஏகப்பட்ட சமாச்சாரங்கள். ஏன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு வண்ணம் கூட ஒரு முக்கிய அடையாளம்.
மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான டாடி ம்ம்மிக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன். வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம் எனவும் சொல்ல்லாம்.
இது நம்பிக்கையின் நாள்.
நம்மை வழி நட்த்த, நெறி படுத்த மனு உரு எடுத்த இறையின் உதயம் இன்று. இருள் விலகட்டும்,
இனிமை பிறக்கட்டும்,
நம் நெஞ்சங்களில் மகிழ்ச்சி குடியேறட்டும்.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புரிகிறது. அது என்ன பாக்ஸிங் டே. இத சொல்லி லண்டன்ல லீவெல்லாம் விடுறாங்களே, நாமளும் கிளவுஸ் போட்டு போய் குத்தணுமா. யாரன்னு சொல்லுங்க செஞ்சுருவோம் என கேட்கும் சில வாசகருக்காக இந்த பத்தி.

கப்பல் செய்து, திரை கடல் ஓடி திரவியம் தேடும் படகு தொழிலாளர்கள் வாழ்வு என்பது கேள்விக்குறி. அதுவும் தகவல் தொடர்பில் முன்னேறாத கால கட்ட்த்தில், தொடர்ந்தால் தொடரும், முடிந்தால் முடியும் இதுதான் எங்கள் வாழ்க்கை என சோர்வாய் இருக்கும் மனித்னை தட்டி எழுப்பி,
இங்க பாரு இது களிமண்ணால் செய்த பாக்ஸ், இதில் காசு போட்டு வைத்து இருக்கிறேன், இந்த பெட்டியும் நீயும் பத்திரமாய் திரும்பி வருவீர்கள். வந்த பின் இதை திறந்து ஏழை எளியவருக்கு கொடுப்போம், என பாதிரி கொடுப்பார்.
இவன் கடல் பயணத்தில் நம்பிக்கை இந்த களிமண் பெட்டிதான். நல்ல படியாய் கரை திரும்ப வேண்டும் என இவனும் இதில் காசு போடுவான். வெற்றிகரமாய் திரும்பி வந்த பின் சந்தோசமாய் அந்த பெட்டியை உடைத்து பங்களிப்பதே இந்த பாக்ஸிங் டே.
கிறிஸ்துமஸின் அடுத்த தினம் நம்ம பாக்ஸிங் டே..... அதுக்கும் வாழ்த்துக்கள்.