பக்கங்கள்

கம்யூனிச கடுகு – விவாத விருட்சம்

தகவல் பரிமாற, தர்கிக்க, என தரமாக நம் வலைப்பதிவு வளர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஆச்சி படுக்காளி, அஞ்சரைப்பெட்டியில் கம்யூனிசத்தை தாளித்ததை, பின்னூட்டம் இட்ட திரு. ஜோ பாஸ்கர் அவர்களது எண்ணத்த்தை ஒரு பதிவாக்கி நேயர்களுக்கு அளிக்க, அதில் பின்னூட்டமாய் இன்னொரு கருத்து முத்து வந்தது. அதையும் இங்கு பதித்து இருக்கிறேன். தனிப் பதிவாய்.

தெரிய வேண்டும் என தேடலும், சக மனித மரியாதையும், மனித நேயமும் தமிழ் தொண்டுமாய் கைகள் பற்றி நாம் நடக்க வேண்டிய தூரம் இன்னும் உண்டு.


திரு. ஜோ பாஸ்கர் சொன்னது

// தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .//

பெயரில்லா சொன்னது...
உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன், கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை பரப்ப சொன்னாரா? அவர்தான் இந்த மதத்தை தொடங்க சொன்னாரா? உங்கள் கருத்து எந்த அளவுக்கு சரி? நான் படித்த வரையில் அவர் கடைசி வரை யூதர் என்று தான் சொல்லபட்டிருந்தது எது உண்மை? அவரை தூற்றியவர்கள் தான் பின்னர் கட்சி மாறி அவற்றின் பெயரால் கிறிஸ்துவத்தை பரப்பினார்கள் என்பது எந்த அளவுக்கு சரி? தயவு செய்து விளக்கம் தரவும். ( இது விவாதத்திற்கு அல்ல உண்மையில் ஒரு கருத்து பரிமாற்றதிர்க்காகத்தான் கேட்கிறேன்)

மர தமிழன்:

அடங்கியிருக்கும் சுவாரஸ்யமான சில கேள்விகளை நாம் மதத்தையும், கடவுளையும் தள்ளி வைத்து ஆராய்ந்தால் ஒருவேளை கடவுள் எங்கே இருக்கிறார் என்பது புலப்பட்டாலும் ஆச்சர்யமில்லை!!

7 கருத்துகள்:

 1. மதத்தின் பேரால் மனிதர்கள் நடத்திய அலங்கோலங்கள் இறைவனுக்கு பெயர் வைத்தது முதல் அவருக்கு ராங்கிங் கொடுப்பது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது JUSUS பற்றிய தகவல்கள் ஒரு விவாதமாய் இந்த வலை தளத்தில் அலசப்பட்டிருக்கிறது http://debate.org.uk/topics/theo/jes-paul.htm இதனுள் அடங்கியிருக்கும் சுவாரஸ்யமான சில கேள்விகளை நாம் மதத்தையும், கடவுளையும் தள்ளி வைத்து ஆராய்ந்தால் ஒருவேளை கடவுள் எங்கே இருக்கிறார் என்பது புலப்பட்டாலும் ஆச்சர்யமில்லை!!

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள "பெயரில்லா"

  தங்களின் அறிவுப்பசிக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்.

  தங்களோடு விவாதிக்கும் அளவுக்கு நான் வித்தகனுமில்லை ....
  அறியாமை இருள் போக்கும் அறிவுச்சுடருமில்லை ...

  எனினும்

  உங்களின் வினாவிற்கு விரிவாக விளக்கமாக விடையளிக்க விரும்புகிறேன்.

  ஆழமாமாகச்சிந்திக்க அலசி ஆராய வாய்ப்பளித்த உங்களுக்கும் படுக்காளிக்கும் ஆச்சிக்கும் எனது நன்றிகள்.

  ..... தொடரும்.

  பதிலளிநீக்கு
 3. உங்களின் வினாவிற்கு குறும் பதில் :
  இயேசு கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை துவக்கினார். அவர் பிறப்பால் யூதர். ஆனால் முழுக்க முழுக்க யூத மத பழக்க வழக்கங்களையும் கொள்கைகளையும் எதிர்த்து, போதித்து, செயலாற்றி அதன் காரணமாக யூதர்களால் கொலை செய்யப்ப்பட்டவர்.

  1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது.
  2. யூதர்கள் அன்றும் இன்றும் என்றும் கிறிஸ்துவை கிறிஸ்துவத்தை எதிர்ப்பவர்கள்.
  3. இயேசு தானே கிறிஸ்துவத்தை நிறுவி, அதன் கொள்கைகளை வகுத்து, செயல் பாடுகளை விளக்கி தனக்குப்பின் ஒரு தலைவரையும் நியமித்து அவருக்கு சாவியை வழங்கி அந்தப்பாறையின் மீது திருச்சபையை கட்டி வளர்ப்பவரும் அவரே.

  மேற்கண்ட இந்த மூன்று கருத்துக்க்களை விரிவாக ஆதாரந்களோடு அடிப்படைகளோடு விளக்க வருகிறது எனது விரிவான பதில் :

  ... தொடரும்

  பதிலளிநீக்கு
 4. 1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது :

  பன்னிரண்டு வயதிலேயே தாய் தந்தையை தவித்து தேட விட்டு விட்டு யூத மத அறிஞர்களோடு எதிர் வாதம் புரிந்தவர் இயேசு.

  "கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல்" - இது யூத மத நெறி. "எதிரிக்கும் அன்பு செய் - ஓர் கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" - இது இயேசுவின் நெறி.

  ஒய்வு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற சட்டத்தை எதிர்த்தவர்.

  "விபச்சாரம் செய்பவளை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்" - யூத சட்டம். "உங்களில் பாவம் இல்லாதவன் அவள் மீது முதல் கல் எறியட்டும்" என்று மன்னிப்பது இயேசு. மதலேன் மரியாளை மனமார மன்னித்த மனிதாபிமானி இயேசு.

  "யூத இனம் தவிர மற்ற இனங்களெல்லாம் தாழ்த்தபபத்டவை; அவர்கள் தீண்டத்தகதவர்கள்" - இது யூதம். ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்த சீர் திருத்தவாதி இயேசு.

  ஒருவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் முடிக்கலாம். அதே போல் ஒரு பெண்ணும் குழந்தை இல்லாமல் ஒரு கணவன் இறந்தால் அவன் சகோதரர்களே அவளை மணக்கலாம். இது போன்றவற்றை எதிர்த்துக்குரல் எழுப்பியவர் இயேசு.

  மீட்பர் ஒருவர் வருவார் விடிவு தருவார் என்று இன்னும் எதிர் பார்த்த்துக்கொண்டிருக்கிறது யூதம். தானே அந்த மீட்பர் மெசியா என்கிறார் இயேசு.

  குருக்கள் மன்னர்களுக்கு சமமானவர்கள் - வரை முறை களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் - எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் - இது யூதம். ஆனால் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு உங்களில் தலைவனாக விரும்புபவன்
  எல்லோருக்கும் வேலையாளாக இருக்கட்டும் என்றவர் இயேசு.

  தொழு நோயாளிகளை ஊருக்குள்ளேயே அனுமதிக்காமல் நீக்கி வைத்தது யூதம் - அவர்களை தேடி சென்று பாவங்களை மன்னித்து ஊர்க்குளத்தில் குளிக்க்கச்சொல்லி குணமாக்கி சமுதாயத்தில் சேர்த்துக்கொண்டவர் இயேசு.

  ஒவ்வொருவன் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும் அவனது பாவமே காரணம். அதை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு - இது யூதம். தானே பாவங்களை மன்னித்து குணமளித்து யுத்தத்தை குட்டியது இயேசு.

  ரோமைப் பேரரசு யூதர்களின் எதிரி எனவே வரி கட்டக்கூடாது என்றனர் சில யூதர். ஆனால் "சீசருக்குரியதை சீசருக்கும் இறைவனுக்குரியத்தை இறைவனுக்கும் கொடு" என்றவர் இயேசு.

  யூத மதத்தின் மையமும் மிகவும் புனிதமனதுமான எருசலேம் ஆலயத்தை இடித்து விடுங்கள் - அதை மூன்றே நாளில் மீண்டும் கட்டி எழுப்புவேன் - என்றவர் இயேசு.

  யூதர்களின் எருசலேம் ஆலயம் முழவதும் இடிந்து விடும் - ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் கூட நிற்காது என்று கணித்துச்சொன்னவர் இயேசு.

  இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

  அடுத்து நமது இரண்டாவது கருத்துக்கும் வருவோம்.

  ..... தொடரும்.

  பதிலளிநீக்கு
 5. இயேசு யூத மத கொள்கைகளை பின்பற்றி வாழவில்லை. மாறாக அவற்றை எதிர்த்தார் என்பதை முந்தைய பகுதி பின்னோட்டத்தில் பார்த்தோம்.

  இனி யூதர்களுக்கும் அவருக்கும் இருந்த கசப்பான உறவைப்பற்றி இரண்டாவது விரிவில் பார்ப்போம்.

  2. யூதர்கள் அன்றும் இன்றும் என்றும் கிறிஸ்துவை கிறிஸ்துவத்தை எதிர்ப்பவர்கள்.

  இயேசு பிறந்த சில தினங்களிலேயே யூத அரசன் ஏரோது அவரை கொல்ல முயன்றான். முடியாததால் ஒரு வயதுக்குட்பட்ட எல்லா சிறுவர்களையும் கொன்றான்.

  யூதர்களுக்கும் யூத மதக் குருக்களுக்க்ம் இயேசு கொடுத்த செல்ல பெயர்கள் :
  "விரியன் பாம்புக்குட்டிகள்",
  "வெள்ளையடித்த கல்லறைகள்",
  "வெளி வேடக்காரர்கள்" .. இன்ன பிற.

  பல தருணங்களில் இயேசுவை கல்லால் அடித்துக் கொல்ல யூதர்கள் முயன்றார்கள். இயேசு அவர்களிடம் இருந்து தப்பி சென்றார்.

  பல சமயங்களில் இயேசுவை விவாதத்திற்கு இழுத்து அவர் வாயைப் பிடுங்கி அவரை மாட்டி விட துடித்தவர்கள் யூதர்கள்.

  நல்ல மனம் கொண்ட நிகொதேமோ போன்ற யூத குருக்களைக் கூட இயேசு இரகசியமாகத் தான் இரவில் சந்தித்தார்.

  "மதத்திற்காக ஒருவன் சாவதே மேல்" என்று தீர்மானித்து சதித் திட்டம் தீட்டியவர்கள் யூதர்கள்.

  இயேசுவைக் கட்டிக் கொடுக்க யூதாஸுக்கு நாற்பது வெள்ளி காசு கொடுத்தது யூத மத குருக்கள் தான்

  இயேசுவைக் கைது செய்த பிறகும், அவரை தண்டிக்கும் உரிமை தங்களுக்கு இல்லை என்று தெரிந்தும், பிலாத்துவிடம் கொண்டு செல்வதற்கு முன்னர் அவரை அலைக்கழித்து சித்ரவதை செய்து அவமானப்படுத்தி பழி தீர்த்துக்கொண்டவர்கள் யூதர்கள்.

  ரோமை ஆளுனர் பிலாத்து இயேசுவிடம் குற்றம் எதுவும் காணேன் என்று விடுவிக்க தயாரான போது கூட அவரை சிலுவையில் அறைந்து கொன்றே தீர வேண்டும் என மூர்க்கம் கட்டியது யூதர்கள் தான்.

  பிலாத்து கைகளை கழுவி விட்ட பிறகும் "இந்த பாவம் எங்கள் மேலும் எங்கள் சந்ததி மேலும் சேரட்டும்" என்று திமிரோடு இயேசுவை படு கொலை செய்தது யூதர்கள் தான்.

  மரணத் தறுவாயில் இயேசு "எனக்காக அழ வேண்டம்; உங்களுக்காகவும் உங்கள் சந்ததியினருக்ககவும் அழுங்கள்" என வெதும்பியது யூத இனத்தை பார்த்துத் தான்.

  எனவே இயேசு யூதர்களால் வெறுக்கப்பட்டார்... எதிர்க்கப்ப்பட்டார்... கொல்லப் பட்டார் ...

  ...... தொடரும்

  பதிலளிநீக்கு
 6. விரிவான பதில் தொடர்கிறது ..... மூன்றாவது பகுதி இதோ .....

  3. இயேசு "தானே" கிறிஸ்துவத்தை நிறுவி, அதன் கொள்கைகளை வகுத்து, செயல் பாடுகளை விளக்கி, தனக்குப்பின் ஒரு தலைவரையும் நியமித்து, அவருக்கு சாவியை வழங்கி, அந்தப்பாறையின் மீது திருச்சபையை கட்டி வளர்ப்பவரும் அவரே.

  பன்னிரண்டு பேரை தேர்ந்த்தெடுத்து சீடர்களாக்கி கிறிஸ்துவ மதத்திற்கு வித்திட்டவர் இயேசு தான்.

  "மீன்களைப் பிடிக்கும் உங்களை மனிதர்களைப் பிடிப்போர் ஆக்குவேன்" என்று கிறிஸ்துவ மதத்திற்கு ஆள் சேர்க்கும் பணியையும் இயேசுவே தான் துவக்கி வைத்தார்.

  எல்லா விவாதப் பொருளுக்கும் ஒரு நிலைபாட்டை எடுத்து, அதை பகிரங்கமாக அறிவித்து, போதித்து, கிறிஸ்துவத்தின் கொள்கைளை நேரடியாக உருவாக்கியவர் இயேசு தான்.

  தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு ஆயிரக்ககணக்கான மக்களுக்கு சொன்னவரும் அவர்களுக்கு உணவு வழங்கியவரும் இயேசு தான்.

  புதுமைகள் நிகழ்த்தியும், நோய்களை குணமாக்கியும், பாவங்களை மன்னித்தும், கிறிஸ்துவத்திற்கு தனி ஆளாக கூட்டம் சேர்த்தவர் இயேசு தான்.

  "நானே மீட்பர் - ஒளி - வழி - வாழ்வு" என பறை சாற்றி யூத மதத்திற்கு எதிராக கிறிஸ்துவத்தை தோற்றுவித்தவர் இயேசு தான்.

  உலகெங்கும் போய் படைப்பிற்க்கெல்லாம் நற்ச்செய்தியை அறிவியுங்கள்" என்று கூறி கிறிஸ்துவத்தை உலக மயமாக்க வித்திட்டவர் இயேசுவே தான்.

  இராயப்பரை (பீட்டரை) தேர்ந்த்தெடுத்து கிறிஸ்துவத்தின் தலைவராக்கி அந்த பாறையின் மேல் தனது திருச்சபையை நிறுவியவர் இயேசுவே தான்.

  தான் இறப்பதற்கு முந்தய இரவு தனது சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு அதன் மூலம் கிறிஸ்துவத்தின் அடிப்படையான குருத்துவத்தை உருவாக்கியதும் இயேசுவே தான்.

  சீடர்கள் எப்படி உடுத்த வேண்டும், ஒரு ஊருக்கு சென்றதும் முதலில் எப்படி வாழ்த்த வேண்டும் எப்படி போதிக்க வேண்டும், எப்படி அதிசயங்கள் நிகழ்த்த வேண்டும், அவர்கள் ஏற்றுக்கொண்டால் எப்படி நற்செய்தி அறிவிக்க வேண்டும், இல்லையெனில் எப்படி உடையில் ஒட்டி இருக்கும் தூசியைத் தட்டி விட்டு கிளம்பி செல்ல வேண்டும், என்று விலா வரியாக ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் விளக்கி கிறிஸ்துவ பணியாளர்களின் செயல் பாடுகளை உருவாக்கியவர் இயேசு தான்.

  "நீங்கள் மண்ணகத்தில் எதையெல்லாம் கட்டுவீர்களோ அவையெல்லாம் விண்ணகத்தில் காட்டப்படும்"; என கிறிஸ்துவ பணியாளர்களின் செயல்களுக்கும் விண்ணக செயல் பாடுகளுக்கும் நேரடி தொடர்பு கொடுத்தவர் இயேசு தான்.

  அவரது மறைவிற்குப் பிறகு உயிருக்கு பயந்து ஒளிந்து கிடந்த சீடர்களை தட்டி எழுப்பி உரமூட்டி கிறிஸ்துவத்தை பரப்ப உழைத்தவர் இயேசுவே தான்.

  சீடர்கள் உலகெங்கும் சென்றார்கள். கிறிஸ்துவத்தை பரப்பினார்கள்.

  இந்தியாவுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவின் சீடர் தோமையர் (தாமஸ்) நேரடியாக வந்து இந்தியாவில் கிறிஸ்துவத்தை நிறுவினார்.

  கிறிஸ்துவத்தின் கோட்பாடுகளை நெறிமுறைப் படுத்தி ம்தவியலை (Theology)உருவாக்கிய பவுல் (பால்) யூதர் அல்ல - மாறாக அவர் ஒரு ரோமன்

  பவுல் கிறிஸ்த்தவர்களுக்கு எழுதிய எண்ணற்ற கடிதங்கள் தான் இன்றைய கிறிஸ்துவ கோட்பாடுகளின் விளக்கப் பேழை.

  எனவே இயேசுவோடு வாழ்ந்தது அவரால் கிறிஸ்தவர்கள் ஆக்கப் பட்ட யூதர்கள்
  தான் இயேசு நிறுவிய கிறிஸ்துவத்தை பரப்பினர்களே தவிர எந்த கட்சி மாறிய யூதனும் கிறிஸ்துவத்தை நிறுவவும் இல்லை - பரப்பவும் இல்லை.

  மேற்கண்ட விரிவான, விளக்கமான, தரமான, ஆணித்தரமான, ஆதாரந்களோடு கூடிய எனது விடை உங்களின் அறிவுப் பசிக்கு உணவிட்டிருக்கும் என நம்புகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. நன்றி திரு பாஸ்கர் அவர்களே!! ஒரு பெயரில்லாவிர்க்காக விரிவான உங்கள் பதிலில் மிகவுன் நெகிழ்ச்சி அடைந்தேன், மற்றபடிக்கு தேவை இல்லாத பின்னூட்டங்களை தவிர்க்கவே பெயரில்லாமல் வந்தேன். மேலும் உங்களின் விளக்கங்கள் நாணயத்தின் ஒரு பக்கமாகவே பார்கிறேன், நானும் என் பங்கிற்கு ஒரு அலசல் முடித்து ஏதேனும் சந்தேகமிருப்பின் கேட்கிறேன்... மறுபடி மிக்க நன்றி!!! - பிரிவோம் - சந்திப்போம்.

  பதிலளிநீக்கு