பக்கங்கள்

இறைவன் இருக்கின்றாரா !!!!

ஒரு ஒரு இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள். உடனே காப்பாத்து.

கட்டளை போல் மனதில் தோன்றியது. கண் முழித்து திரும்பி பார்க்க, ஆலயத்தில் அத்தனை பேரும் பிரார்த்தனையில் மூழ்கியிருந்த்னர். எப்படி இது. மறுபடி கண் மூட, அதே குரல். திடுக்கிட்டு விழித்தேன். என்ன இது. தலை உலுக்கி ஆலயம் விட்டு என் மருத்துவமனை வந்தேன்.

பார்க்க வேண்டிய நோயாளிகள் என பெரிய கியூ ஒரு புறம், எனது ஆலோசனை கேட்க என உதவியாளர் சில மறு புறம். எனக்கு மட்டும் வேலை ஓடவில்லை. அந்த குரல் திரும்ப திரும்ப கேட்கிறது. மேசையில் உள்ள ஸ்டெதஸ்கோப்பை தோளில் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். பார்வை பட்ட இடத்தில், மார்சுவரி. பிணவறையின் முன் கூட்டம் கூட்டமாய் ஆட்கள். ஏதோ செலுத்தப்பட்டவன் போல் நான் நடக்கத் தொடங்கினேன். ஏழை பணக்கார பாகுபாடின்றி உடல்கள் சேமிக்கும் இடம். கலைந்த தலையுமாய் கண்ணில் நீருமாய் உறவுகளின் கூட்டம்.

கூட்டம் கடந்து மார்சுவரியின் முன்னறைக்கு வந்தேன். பதட்டமாய் அட்டெண்டர் ஓடி வந்தான். என்னை எதிர் பார்த்திருக்க மாட்டான். என்ன சார் நீங்க வந்திருக்கீங்க. அவனுக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை. மெளவுனமாய் நகர்ந்து உள் சென்றேன். எனை தொடர்ந்து அவனும் வந்தான். நீண்ட அறையில் வரிசையாய் மேசைகள், அடுக்கி வைக்கப்பட்ட உடல்கள். ஆசிரியர் காவலர் எனும் அடையாளம் இல்லை. பொதிந்த துணி மூட்டையில் லேபள் ஒட்டி பெயர். அமைதியாய் நடந்து ஒவ்வொரு மேசையாய் கடந்தேன். சட்டென நின்றேன். ஏன் நின்றேன் என எனக்கே தெரியவில்லை. கண் மூட அந்த குரல் கேட்ட்து. ஒரு இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள். உடனே காப்பாத்து.

நான் நின்றதை பார்த்த்தும் அவன் சொன்னான் ‘இது பூட்ட கேஸ் சார். வீட்டுல தீ பட்டு ஆக்ஸிடெண்ட். நேத்து கொணாந்தாங்க’. கை அனிச்சையாய் ஸ்டெத் எடுத்து உடலின் மார்பில் கொடுத்தேன். அமைதி. தலைக்கு மேல் சுழலும் பேன் சத்தம் கரக்... கரக்.... என கேட்ட்து. கை, கால் என தீ படாத இடங்களை தேடி தேடி பொருத்தினேன். நகர முடியாமல், சுற்றி சுற்றி வந்தேன். எனது தவிப்பு எனக்கே புரியவில்லை. அட்டெண்டெண்ட் கலவரமானான். ‘ரிலேஷனா.... சார்...’ என்னவென்று சொல்வது, மண்டைக்குள் கேட்கும் குரல் இவனுக்கு புரியுமா.... திரும்ப திர்மானித்து நடந்தேன். கால் பகுதி போர்வையின் முடிச்சுக்குள் அடங்காது வெளியில் இருந்த்து. வெண் நிற பாதம். சட்டென ஸ்டெத் காலில் வைத்தேன். லப்... டப்.... பதறிப் போனேன். எதிர்பார்க்கவில்லை. நம்பிக்கை இல்லாதவனாய் மறுபடி கேட்டேன். துல்லியமாய் தாள் லயத்தோடு இதயத் துடிப்பு. பரபரப்பானேன். அடுத்த சில நிமிடங்களில் மளமள வென நிறைய காரியம் நடந்த்து.

அவசர சிகிச்சை பிரிவுக்கு மாறுதல். சிகிச்சை. அவசரப்பட்டு இறந்த்தாய் சொன்ன மருத்துவர் மேல் புகார். எப்படி ரீயாக்ட் பண்ண வேணும் என தெரியாத உறவுகளின் நன்றி. நெஞ்சு நிமிர்த்தி எனது அடுத்த பணி செய்ய விரைவாய் நடந்தேன்.

பின் குறிப்பு :
இது கதை அல்ல. நிஜம்.
மண்ணெண்ணை ஸ்டவ் பத்த வைத்த போது விபத்தில் சிக்கி, மரணத்தை முத்தமிட்டு பின் மீண்டு வந்தவர்.

மார்சுவரியில் உடல் என மேற்குறிப்பிட்டு நான் சொன்னது என் நண்பர்.

வெற்றிகரமான சாப்ட்வேர் நிறுவனத்தின் ஸ்தாகபர்.
வலைப் பதிவர்.
அவர் வாழ்வு எனக்கு சொல்லிய பாடம் தாக்கம் பகிர்ந்து கொள்ள பெறுமை கொள்கிறேன்.

7 கருத்துகள்:

 1. Eraivanum irukkar, Stove use panna theriyatha manushangalum irukanga, arivulla doctorum irukar, poli doctorum irukar....

  itheymathiri interestinga yethuzha padukaliyum irukar; padika nanum iruken....

  பதிலளிநீக்கு
 2. ஆஹா!
  கேள்வியாய் தலைப்பு வைக்க, பின்னூட்டம் பின்னிவிட்டீர்கள்.

  இறைவன் இருக்கிறார்
  ஸ்டவ் யூஸ் பண்ண தெரியாத மனுஷங்களும் இருக்கார்
  அறிவுள்ள டாக்டரும் இருக்கார்
  போலி டாக்டரும் இருக்கார்

  இண்டெரஸ்டிங்கா எழுத படுக்காளி இருக்கார்
  படிக்க நானும் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. உள்ளுணர்வை தொலைத்து அதனால் மனிதம் தொலைத்து, இயற்கை அழித்து, செயற்கையில் அமிழ்ந்து போன நமக்கு இவைகள் அதிசயம்தான், ஆனால் அதனூடே (இயற்கை) பயணிக்கும் மனிதர்களான அந்தமானின் பழங்குடி மக்கள், உடம்பில் உடையும், நம்மை போன்ற டெக்னாலஜி - ம் இல்லாமலேயே தென்னை மரம் ஏறி சுனாமியில் தப்பித்திருகிறார்கள்... ராக்கேட் எல்லாம் எல்லாம் விட்டு லட்சக்கணக்கான பேரை இழந்துவிட்டு அதிலும் கோடிக்கணக்கான ஊழலை தினசரியில் எந்த உணர்வில்லாமலும் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம் நாமும்...

  பதிலளிநீக்கு
 4. ஏதோ என்று எண்ணிப் படிக்க, ஒரு அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

  "அவசரம் அறிவுக்கு சத்துரு" என்பது நிதர்சனமான உண்மை.

  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. வாருங்கள் மர தமிழன். என்ன ஒரு ஆழமான விடயத்தை தொடுகீறீர்கள்.

  உள்ளுணர்வு.

  ///உள்ளுணர்வை தொலைத்து அதனால் மனிதம் தொலைத்து, இயற்கை அழித்து, செயற்கையில் அமிழ்ந்து போன நமக்கு இவைகள் அதிசயம்தான்///

  உண்மை. தங்கள் கருத்துக்கு தலை வணங்கி நன்றிகள்.

  படுக்காளி

  பதிலளிநீக்கு
 6. வாருங்கள் பெயர் சொல்ல விருப்பமிலாதவரே....

  முத்தே !!!! உப்பின் உக்கிரமே !!!!

  (தாங்கள் சொல்ல வில்லை என்றாலும் உப்புக் காற்றின் ஈரமும், கனமும் தங்கள் எழுத்தில் தெரிகிறதே!!!! )

  ///ஏதோ என்று எண்ணிப் படிக்க, ஒரு அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

  "அவசரம் அறிவுக்கு சத்துரு" என்பது நிதர்சனமான உண்மை.////

  நல்ல பிரமாதமான சிந்தனை. கருத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  படுக்காளி

  பதிலளிநீக்கு
 7. உங்களை வம்புக்கு இழுத்திருக்கேன், இங்க.
  http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_28.html

  பதிலளிநீக்கு