
சர்வதேச அளவில் இந்த சர்ச்சை வெடித்த போதும், சமீபத்தில் இந்தியாவில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த போதும் எழுதத் தோன்றினாலும், அமைதியாய் இருந்து விட்டேன். விவகாரம் வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் பின்னால் அரங்கேறிய சில நிகழ்வுகள் என் மவுனம் கலைத்தது.
ஒரினச் சேர்க்கை செய்பவன் சமூக விரோதி, அவனை கொல், என்பவர் ஒரு புறம்.
இது தனி மனித சுதந்திரம் அதில் தலை இடாதே என்ற எதிர் முகாம் மற்றோரு விதம்.
இருவருமே பார்க்க மறந்த கோணத்தை பட்டியலிடுவோம்.
அதற்கு முன் : எழுத தூண்டிய நிகழ்வுகள்.

தன் வரைக்கும் என்ன செய்து கொண்டு இருந்தாலும் ஒ.கே. ஆனால் நம்மை தொந்தரவு செய்வது தான் எரிச்சல்.
சக நண்பர் சொன்னார் "டேய்... இது கடப்பாரை கேசு" சரி விலகலாம் என்று நகர்ந்த போது எங்களை நோக்கி வந்தார். "கடலின் ஆழம் எவ்வளவு" என்பது போன்ற உப்பு சப்பு இல்லாத கேள்வி கேட்டு விட்டு எங்கள் பதிலின் தொனி கண்டு விலகி சென்றார். நாங்களும் நிம்மதி பெரு மூச்சு விட்டு குளித்தோம்.
நிகழ்வு 2: இந்தி திரைப்படத்தில் நகைச்சுவை என்ற போர்வையில் இரு ஆண்கள் ஒரின உறவில் உள்ளதாய் காண்பித்தார்கள்.
சரி நம் கோணம் என்ன :
அறுவறுப்பும் எரிச்சலும் விலக்கி,சமன் நிலை எய்து பார்ப்போம்.
இனவிருத்தி, இல்லறம், இன்பம் எனும் நோக்கம் கொண்டு, இரு பாலார் இணைந்தனர்.
இன்பம் வேண்டி மட்டும் கீழ் கூறும் இரு காரணங்களால் தோன்றியது ஓரினச்சேர்க்கை.
1.பெண்ணிற்கு ஆணிடத்திலும், ஆணுக்கு பெண்ணிடத்திலும் தோன்றும் அதீத வெறுப்ப
2.எதிர் பாலார் கிடைக்காத காரணம்
இதில் வராத ஒரு முக்கிய பிரச்சனை. பிறப்பால் பகுபடாத திருநங்கைகள். சட்டம் கொண்டு வந்த திருத்தம் இந்த கோணத்தில் அவசியம் ஆகிறது. ஆணென்றும் பெண்ணென்றும் பகுபடாத நிலை வரும் போது, அவர் செயல் சட்டப்படி குற்றம் என்று சொல்வது முறையற்றது.
உடலால் பிழை இல்லாது மனப் பிழை கொண்டவர், இயல்புக்கு திரும்ப வேண்டும். இந்த கடப்பாரை கோஷ்டிகள் சேர்க்கை தேடுவது, ஒரு தனி மனித உணர்வை நசுக்குவது, கொலைக்கு சமமான் செயல். நம் இளைய தலை முறையை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. இதை நாகரீகம் என்றோ, நல்லது என்றோ, தனி மனித சுதந்திரம் என்றோ பகுப்பது ஆரோக்கியம் அல்ல.