பக்கங்கள்

வித்தையடி நானுனக்கு (திரை விமர்சனம்)



படம் எப்படி இருக்கு… ? 

என நீங்கள் கேட்டால், ஒற்றை வார்த்தையில் சொல்லணும்ன்னா…
In-Thing…  என்று சொல்வார்களே அது போலIn-Movie என சொல்லலாம்…
ஆமாம்…. In-Thing…  
Intense
Interesting

இன்றைய காலத்திற்க்கேற்ப உளவியல் சார்ந்த திரில்லர்.

சரி கதை என்ன…..

ஒரு இளம் பெண்… வாழ்க்கையின் ஸ்டார்ட்டிங் பாயிண்டிங்கில் இருக்கிறாள். உலகம் புரியாத அல்லது புடிபடாத வயசு… உலகம் பற்றியும் உறவு பற்றியும்… ஏன் தன்னைப்பற்றியுமே அறியாத பெண்…

அவள் வாழ்க்கையில் ஒரு சவாலான சந்தர்ப்பத்தில், தன் பலவீனத்தை உணர்கிறாள்.. குடும்பமும் சமூகமும் தன்னிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒன்றை தன்னால் தர முடியாது என உணர்கிறாள்… குருவி தலையில் பனம் பழம்…

தன்னால் இனி முன் செல்வது எப்படி என மலைத்து…, தவித்து.. இனி என்ன செய்வது என அறியாமல்…  நிற்கும் வேளையில் அவள் காரும் நிற்கிறது…. அந்த ஆள் அரவம் இல்லா, மலையில், ஒருவனை சந்திக்கிறாள்…

அவன்… ஆல் மோஸ்ட் வாழ்வின் அத்தனை பரிமாணங்களையும் பார்த்து, வாழ்ந்து, அனுபவித்து… இப்போது தனிமை விரும்பி, இந்த உலகில் இருந்தே ஒதுங்கி வாழ்பவன்….

இவர்கள் இடையில் இருக்கும் சில உரசல்கள் விரிசல்கள்…… சில தினங்கள்.. சில தருணங்கள்… எப்படி அவள் வாழ்க்கையை மாற்றுகிறது எனும் சுவையான ஓட்டம் தான் கதை…   

ஆரம்ப காட்சியிலேயே அந்த இண்டென்ஸ் தொடங்கி விடுகிறது… கோபமும் இயலாமையும் மேலிட… ம்மா… இதுக்கு மேல ஏதாவது பேசினா தூக்க மாத்திரை வைச்சிருக்கேன்… போட்டுருவேன்.. என்ன விடு.. என ஃபோனை துண்டிக்கும் போது நம்மையுமறிமால் அந்த கதா நாயகியோடும்.. காட்சிகளோடும் நாம் இணைந்து விடுகிறோம்…

திரைப்படம் ஆரம்பித்ததும்.. மங்கலான விளக்குகள் வண்ணத்தில் மிளிர, ஒரு இளம் பெண் பதறி பதறி செல்ல… திரை… சட்டென.. நிறம் மாறி கருப்பு வெள்ளையாகும் தருணத்தில் போட வைக்கும்……. அட….!!!! படம் முழுக்க விரவி இருக்கிறது… ஒரு தேர்ந்த டெக்னிக்கல் டீம் இப்படத்தின் பின்னால் செய்திருக்கும் வேலை… பளிச்சென தெரிய துவங்குகிறது.

அதிலும்… கருப்பு வெள்ளையில்… காலை விடிகிறது… திரையின் மொத்தமும் கருப்பு வெள்ளையில் இருக்க…. ஒரே ஒரு பொருள்.. அதாவது அந்த அலார்ம் மட்டும்.. நீல நிறத்தில் பளிச்சிடுகிறது… 

அது போல்.. நாயகி ஓடிச் சென்று… 


காரை ஸ்டார்ட் செய்யும் போது.. தொங்கும் பொம்மையின் ஒற்றை வண்ணம் மட்டும் சிவப்பு நிறத்தில் பளிரீடுகிறது… இந்த வண்ண மாற்றம் ஒரு சில நொடிகள் தான்.. பின் எல்லாம் இயல்பாய் கருப்பு வெள்ளையில் வருகிறது… 

இயக்குனர்….. வண்ணத்தை உபயோகப்படுத்தி காட்சியின் உணர்வை… கலரில் சொல்லி… கோடி காட்டும் புத்திசாலித்தனம் என நுணுக்கமான வித்தைகள் நிரம்பி கிடக்கிறது இந்த வித்தையடி நானுனக்கு திரைப்படத்தில்…

ஒளிப்பதிவு அற்புதம்… இத்திரைப்படத்தின் ஆன்மா ஃபோட்டாகிராபி என்றால் மிகையில்லை. கருப்பு வெள்ளை காட்சியமைப்பில்… கேமரா கோணங்கள் கொண்டே .. திகில் ஏற்படுத்தும்.. அற்புதமான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் அறிமுக கேமராமேன்.. காட்சிக்கு தேவையானதை மட்டும் தந்து, அவசியமில்லாமல்… எதையும் திணிக்காத நேர்த்தியான ஃபோட்டோகிராபி… அற்புத கேமரா கோணங்களும், அளவான லைட்டிங்கும் என ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்… ஆனால் அவர் இறந்து விட்டார் என்றும்… இதுதான் அவர் முதல்.. மற்றும் கடைசி படம் என தெரிய வரும்போது.. தமிழ்த்திரையுலகம் ஒரு அற்புத கலைஞனை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது…

இப்படத்தின் நாயகி.. ஒரு நல்ல கண்டுபிடிப்பு…

இப்படித்தான் பொண்ணுங்கள மடக்குவீங்களா… என வெள்ளந்தியாக சிரிக்கும் போதாகட்டும், மாடிப்படியில் இறங்கி வந்து மூக்கில் கண்ணீர் வழிய உருகும் காட்சியிலாகட்டும் புதுமுக நாயகி சவுரா சயித்… சபாஷ் போட வைக்கிறார்.

உருவத்திலும் பார்வையிலும் கொடூரம், ஆனால் பரிமாற்றத்தில் பாந்தம், பாலிஷ்ட் என தன் கதாபாத்திரத்தை முழுதும் உள்வாங்கி, நிறைவான நடிப்பை ராம் நாதன் பகவதி வழங்கியிருக்கிறார்…

திரைக்கதையும் வசனங்களும் ஆழமாகவும்,  ஷார்ப்பாகவும் தெறிக்கிறது…

காலை எழுந்து பார்க்கும் போது… முந்தின இரவில் உடுத்தியிருந்த, அவள் உடை மாறியிருக்க.. அது பற்றி வினவும் போது…

“என்னை பாத்தீங்களா”
“ம்…. இப்ப கூட பாத்துக்கிட்டு தான இருக்கேன்…”
“ஹூகும்.. அதில்ல… யூ நோ.. வாட் ஐ மீன்”
“ஹாங்… அது நிறைய பாத்தாச்சு… அதிலெல்லாம் ஒண்ணுமே இல்ல”
என்பன போன்ற பல இடங்கள் சபாஷ் போட வைக்கிறது…

காட்சியமைப்பிலும் கூட சில சிந்தனைகள்… அட போட வைக்கிறது…

ம்…கம்மான்.. மொட்ட மாடியில பண்ணினீங்களே… அத இப்ப செய்யுங்க… என அழைக்கும் பெண்னை… சிரித்தபடி… இப்பத்தான் நல்லாயிருக்க என மெலிதாய் விலக்கி விட்டு செல்லும் ஸ்டைல் என சில காட்சிகள் நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது…

இப்படத்தின் இண்டென்ஸ்… இதுதான் இப்படத்தின் பலம்… ஆனால் அது சில இடங்களில் பலவீனமாகவும் தெரிகிறது… இன்னும் கொஞ்சம் இலகுவாக இருந்திருக்கலாமோ என சில இடங்களில் தோன்றுகிறது….    

கை விலங்கு காட்டும் போதும் சரி, உச்சகட்ட காட்சியில் இருவர் மோதும் இடங்களிலும்.. பிண்ணனி இசை.. காட்சிக்கு திரில் சேர்க்கிறது… பாரதி பாட்டும் ,அந்த கொஞ்ச நேரமே வரும் பாப் பாடலும்.. இசையமைப்பாளர் விவேக் நாராயணனுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை சொல்கிறது.   
இப்படி இருந்திருக்கலாமோ… அல்லது இப்படி செய்திருக்கலாமோ என சில இடங்களில் தோன்றாமல் இல்லை.. என்றாலும்… புத்தம் புதிய குழுவின் திட்டமிட்ட இந்த உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும்..

ஆல் த பெஸ்ட் … 

அடுத்த படைப்பில்.. இன்னும் ஒரு படி மேல் சென்று… அட்டகாசமான திரைப்படம் தர வேண்டிக் கொண்டு.. ஒரு தரமான நல்ல திரைப்படத்தை தந்ததற்க்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக