பக்கங்கள்

நண்பனுக்கு ஒரு கடிதம்...

அன்பு சகா,
சௌக்கியமா…
புதிய யுகம் தொலைக்காட்சியில் உங்க இண்டர்வியூ பாத்தேன்…


நீங்க பேசுன டாபிக் சூப்பர்…. கப்புன்னு ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு…
அதற்கான காரணம்… திரையில் உங்களை பார்த்ததும் வந்த பெருமை…. உங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கான பூரிப்பு… நிறைவு… இனிமை…
இன்னும்.. இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்…

சட்டென மனம் பழைய நினைவுகளை நோக்கி செல்கிறது… இருபது வருடங்களுக்கு முன்னால், கை கோர்த்து நாம் நடந்த தினங்கள் நினைவுக்கு வருகிறது.

ஆல்பர்ட் தியேட்டரின் நீண்ட படிக்கட்டுகளில், நிழலில் நாம் … சூரியனுக்கு பயந்து மதிய வேளையில் தஞ்சம் கொண்டிருக்கிறோம்.. நம்மை சுற்றிலும் கச கச ஜனங்கள், அவர்கள் மாட்னி ஷோவுக்கு டிக்கெட் புக் செய்து விட்டு, சினிமா பார்க்கும் ஆவலில் இருக்கிறார்கள்… உரத்த குரலும் சிரிப்பும், வேர்வையின் அதீத மணமுமாக அமர்க்களமான அட்மாஸ்பியர்….

நாம் இருவர் மட்டும் வேறு உலகில் இருக்கிறோம்.. என் அலுவலக பையில் இருந்து ஒரு புத்தகம் வெளியில் எடுக்கிறேன்… சில்வா மைண்ட் கண்ட்ரோல்.. பத்து தினங்களுக்கு முன், ஸ்பென்ஸர் ப்ளாசா வாசலில் 25 ரூபாய் கொடுத்து வாங்கியது….

சஹா… மனுச மூளை ஃப்ரிக்குவென்ஸி… மூணு பேண்டா பிரிக்கலாமாம்.. இந்த ஆல்ஃபா பிரிக்குவென்ஸி போய்ட்டா…  நிறைய செய்யலாமாம்… ம்… அத எப்படி போகணுன்னு இங்க வருது பாருங்க…. அப்புறம்… கிளாஸ் ஆப் வாட்டர்ன்னு ஒரு சொல்யூஷன்… மெண்டல் ஸ்கிரின்னு இன்னொரு சொல்யூஷன்… எல்லா பிரச்சனைக்கும் ஒவ்வொரு மாதிரி செய்யணுமாம்… என சொல்லி, அந்த புத்தகத்தை உங்கள் கையில் நான் கொடுக்கிறேன்…
ஹிப்னாசிஸம் பற்றிய தகவல் நீங்கள் சொல்ல, நான் ஆவலாய் அதனுள் மூழ்குகிறேன்… 

நீங்கள் தொடருகிறீர்கள்.. பாஸ்.. மேஜிக் ஷோ ஒண்ணு ப்ளான் பண்றேன், தூர்தர்ஷன்ல வாய்ப்பு வரும்ன்னு தோணுது… என நீங்கள் சொல்ல…

சூப்பர், சஹா… ஆல் த பெஸ்ட்… ம்.. நான் கூட வேற முயற்சிக்கிறேன்… ஆல் இந்தியா ரேடியோவில, ஒரு சினிமா விமர்சனம் பண்ணினேன்… அடுத்து டிராமாவுக்கும் டிரை பண்றேன்… என நான் தொடர்கிறேன்…

அலுவலகத்தில் நாம் பணி புரிந்தாலும், நம் இரண்டாம் குதிரையாக கலைத்துறையில் முயற்சி செய்கிறோம்… அடங்காத ஆவலுடன், ஆன்மீகம் குறித்து உரையாடுவோம்… இப்படி நிறைய நமக்குள் ஒற்றுமைகள்… உங்கள் ஆளுமையில் நான் என்னையே அடையாளம் காண்பேன்… அதனாலேயோ என்னவோ உங்களுடன் பேசுவது என்றுமே பிடித்து இருந்தது.

ஏனெனில் ஆக்கபூர்வமாய், ஆர்க்குயூமெண்டே இல்லாமல்.. எளிதாக தகவல் பரிமாற்றம் மட்டுமே நடக்கும்…

நம் இருவருக்கும், கலையில் ஆர்வமும், வாழ்க்கையில் முனைப்பும் இருக்கிறது.. அதே போல் இன்னொரு விஷயத்தில் நாம் ஒரே பாதையில் பயணித்தோம்..
ஆம்… நம் கலை ஆர்வம், சமூக மாற்றத்துக்கும் / சக மனித நேயத்துக்கும் முக்கியத்துவம் தந்தே முன்னேறியது……

உங்கள் தொலைக்காட்சி பேட்டி பார்த்ததும், அந்த அமைதியும், சிரிப்பும் என்னை வெகுவாக கவர்ந்தது. நீங்கள் உரையாடிய கருத்துக்கள் சில நல்ல சிந்தனைகளை விதைத்தது…

என்னுள் சில நல்ல கேள்விகள் மலர்ந்து, அதற்க்கான விடை தேடும் முயற்சியில் நான் இறங்கினேன்… அதனால் மகிழ்கிறேன்…

இந்த பேட்டி, நிறைய பேருக்கு உதவட்டும், உங்களால் ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் தரும் அற்புதம் நிகழட்டும் என விரும்புகிறேன்…

நிற்க, இன்று தாங்கள் பேசியவற்றில் என்னை கவர்ந்த சிலவற்றை இங்கே மீண்டும் எழுதி… என் நினைவுகளை புதுப்பித்து கொள்கிறேன்…
1.  

  • ”எந்த பிரச்ச்னைக்கும்.. அந்த பிரச்ச்னைக்கு உள்ள இருந்தா சொல்யூஷன் வராது…”

வாவ்… வலிமையான வாதம்… மிக மிக ஆழமான கருத்து… ஒற்றை வரியில் வாசித்து விட்டு சென்றால் பலனில்லை…இதை அமைதியாய் அசை போட்டு, இதன் வேர் வரை சென்றால்… அல்லது இதை சரிவர புரிந்து கொண்டால், மிகப்பெரிய நன்மை… 

உதாரணத்துக்கு சில கேள்விகள்…

நான் எங்கிருந்து இயங்குகிறேன்… என் சிந்தனை எது, என் சிந்தனை எது சார்ந்து இயங்குகிறது… என் நிலைப்பாடு எதனால் ஏற்படுகிறது, என் இலக்கு எது… எதை நோக்கி நான் பயணிக்க வேண்டும்… இப்படி இப்படி….
  • 2.   பிரச்சனைய தீர்க்க… ஒன்றல்ல பல வழிமுறைகள்… அவற்றின் முக்கிய வகைகளாக நீங்கள் குறிப்பிட்டது.. உடன் தீர்க்க வேண்டியது… விட்டு புடி கேட்டகரி… .. விட்டுட்டு ஓடு எனும் ஆப்ஷன்…

  • 3.   ஆர்க்குமெண்ட  அவாய்ட் பண்ணலாம்..

ஹா..ஹா… சஹா… ஏதோ பேசும் போது இண்டர்வியூல ஒரு இடத்துல.. போற போக்குல சொல்லிட்டு போனீங்க…  நல்லா இருந்துச்சு… 

டக்குன்னு நார்மன் லீவிஸ் சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு… வாக்குவாதத்தில் வெல்ல முடியாது, ஆனால் வெறுப்பை மட்டுமே சம்பாதிக்கலாம்… You can never win an argument but can earn Hatred..

  • 4.   ஃப்ரேக்.. எடுத்துக்கோங்க… லைஃப் ரொட்டினா போயிக்கிட்டுருக்கும்.. சரி போகுதேன்னு அது போக்குல போகாம… கொஞ்சம் நிறுத்தி… செல்ஃப் இண்ட்ராஸ்பெக்‌ஷன் பண்ணுங்க…

வாவ்.. நல்லா இருக்கு சஹா…
  • 5.   செல்ஃப் இண்ட்ராஸ்பெக்‌ஷன்.. பண்ணுங்க… எனக்கு ஏன் கோபம் வருது.. ஏன் துக்கம் வருது… ஏன் கவலை வருது.. ஏன் காமம் வருது…

சூப்பர்… சூப்பர்… நம்ம ஒவ்வொருத்தரும்.. இந்த கேள்விகள் கேட்டு இந்த கேள்விக்கான விடை மட்டும் கண்டு கொண்டால்… ஆஹா..ஆஹஹா… சுகமோ சுகம்
  • 6.   ஒரு வேல செய்யுங்களேன்… ஒரு பேப்பர் எடுத்து, பேப்பர்ல பத்து நிமிசம் என்ன நினைச்சீங்களோ அத எழுதிப் பாருங்க… யாருகிட்டயும் காமிக்க வேண்டாம், நீங்களே பாருங்க.. உங்க மனசு எவ்வளவு பெரிய பொலிட்டிஷியன்னு… புரியும்… ஹூ்ம்…. Prime ordeal politician நம்ம மனசு தான்…

ஹா… ஹா…. பிரமாதம்… பிரமாதம்..
ரொம்ப சந்தோஷம்… வாழ்த்துக்கள்….

மன நிறைவுடன்
லாரன்ஸ்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக