பக்கங்கள்

மிதக்கும் அதிசயம்... உங்களாலும் முடியும்!!!

சின்னஞ்சிறு வயதில் நீரில் மிதக்கும் மனிதர்களை பற்றிய செய்தி கேட்டிருக்கிறேன். ஸ்ரீரங்கத்து அரங்க நாதனின் வரலாறில் நீர் மேல் நடப்பான் பற்றி படித்த போது ஆரம்பித்தது, பைபிளில் யேசு, கடல் நீரில் நடந்து வருவதாகவும் வாசிக்க கேட்டேன்.

நடைமுறையில் நீரில் மிதப்பது சாத்தியமில்லை என பெர்மூடாஸ் ட்ரையங்குள் ரீதியில் மனதில் தோன்றியதால் கதை, பேண்டஸி என முத்திரை குத்தப்பட்டு, அன்றைய காலக் கட்டாயத்தில், அது நினைவில் பதிக்கப் பட்டது.

காலம் சற்று சுழன்றோட, அதே நீரில் மிதக்கும் தகவல் வேறு ரூபத்தில் வந்தது. தாடி மீசை வைத்திருந்த ஒரு சாமியார், ஆற்றில் மிதந்து கொண்டிருப்பது போல், புகைப்படத்தில் பார்த்த போது, சற்று அதிர்ந்து போனேன். இதெல்லாம் கற்பனை என நான் நினைத்திருந்தது, இறங்கி வந்து, சாத்தியம், ஆனால் மகான்களுக்கும், யோகிகளுக்கும் மட்டுமே சாத்தியம் என ஆனது.

பின்னர், சென்ற முறை விடுமுறை சென்ற போது, அண்ணன் மகன்…. வெகு அனாசியமாக நீச்சல் குளத்தில், இதையே செய்து காட்டிய போது, வியப்பும் ஆச்சரியமும் என்னுள் மேலோங்கியது. அவனோ, சித்தப்பு, இது ஈசிதான் என எனக்கு செய்முறை விளக்கம் சொல்லி தந்தான். உடனே முயன்றேன், முடியவில்லை.

பின்னர் ஒரு நாளில் தனியனாய் இருந்த போது, ஆழம் குறைந்த கடலில் இதை பரிசோதித்தேன். கால்கள் அகற்றி நிற்க வேண்டும், வயிற்று பகுதியை முன்னுக்கு தள்ளி, தோள் விரித்து, நெஞ்சு நிமிர்த்தி, தலை பின்னுக்கு தள்ளி உடலை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

எந்த தசையிலும் பிடிப்பு இல்லாமல், ஒரு தியானம் செய்யும் உடல் நிலையில் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…. என கட்டளை கொடுத்து கொண்டே இருந்தேன். அப்போது அந்த அதிசயம் நடந்தது. என் வயிற்று பகுதி மெதுவாக மேலேழுந்து, கடலின் வெளியே நீர் மட்டத்துக்கு உயர்ந்தது. கால்கள் கூட லேசாய் மேல் நோக்கி நகர்ந்தது.

சட்டென்று பகுத்தறிவோ!!!.... என்னவோ முழித்தது… என்னது நான் மிதக்கிறேனா. இப்படி ஒரு கேள்வியை எனக்குள் தூக்கி போட்டது. அந்த நினைவின் தாக்கத்தில், அந்த ஒரு நொடியில், அந்த ஒரு நினைப்பில் சட்டென்று நீருக்குள் அமிழ்ந்தேன்….. அடடா…. என மனம் சலித்து கொண்டாலும். மீண்டும் செய்வோம்…. என முயற்சி கட்டளை இட்டது.

இப்போது, எதிர்பார்ப்பு, இருப்பதால், உடல் தளரும் வினை கொஞ்சம் சிரமமானது. நேரம் அதிகரித்து கொண்டே இருக்க, உடல் இலகுவாவதில் தாமதம் உள்ளதால், மிதக்க முடியவில்லை.

சரி, எதிர்பார்ப்பை உதறுவோம், என சொல்லி, சிந்தனையை வெக்கேஷன் அனுப்பி விட்டு. செய்ய வேண்டிய வேலை ஒன்றும் இல்லை, எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை. சும்மா இரு…. அமைதியாய் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… என சொல்ல துவங்கினேன். சட்டென வயிறு உயர, கால்கள் உயர, மிதக்க துவங்கினேன். முந்தைய அனுபவம் தந்த நினைவால், சிந்தனையை கட்டுக்குள் வைத்திருந்து, உடலை முடிந்த வரை ரிலாக்ஸ்டாக வைத்திருக்க… யெஸ்… என்னால் மிதக்க முடிந்தது.

கைகள் விரித்தேன். கால்கள் சற்று விரித்தேன். மிக சரியாக உடல் ஒரு தக்கை போல், நீரில் மிதக்க துவங்கியது. அப்படியே சில நிமிடங்கள் படுத்திருந்தேன்.

கற்பனை என நான் நினைத்தது, மகான்களுக்கு மட்டுமே முடியும் என எண்ணியது, என்னைப் போல் சாமான்யனுக்கும் முடியும் என உணர்ந்த போது, கான்பிடன்ஸ் மின்னியது.

என்ன இது விந்தை. மனித உடலை வெறுமே ரிலாக்ஸ் செய்தால் இப்படியும் நடக்குமா. அப்படியென்றால், நீரில் மூழ்கி உயிர் விடுவது, பயத்தினால் தானா.

நான்…. எனது….. என்னை காப்பாற்றுவேன்…. என நாமே நினைத்து கொள்ளும் தகிடுதத்தம் தானா …!!!! நம்மை கொல்கிறது. நடப்பது நடக்கட்டும் என இருந்தால் நம்மால் அதிசயங்கள் செய்ய முடியுமோ….

தெரிந்து கொண்ட சில தகவல்களை சொல்லும் ஆர்வத்தில் இந்த பதிவு எழுதியுள்ளேன், என் முயற்சி ஒரு 2 அல்லது மூன்று மணி நேரத்தில் முடிந்திருக்கும். அடுத்த முறை தண்ணீருக்கு செல்லும் போது, முயற்சித்து பாருங்கள். உங்களாலும் முடியும்….

ஆம்… நம் மனித சக்தியின், மர்மங்களும் மகோன்னதங்களும் !!!! நம்மால் இன்னும் உணர பட வேண்டியதே….

4 கருத்துகள்:

  1. தல.....

    என்னாடா நம்மாளு கொஞ்ச நாளா நெம்ப மிதக்கறாரேன்னு நெனச்சேன்... மேட்டரு இது தானா?

    தல... நீங்க தண்ணி மேல நடப்பீயளா? நம்மூர்ல டாஸ்மாக் வுட்டுட்டு அல்லாரும் அப்டி தான் போறாய்ங்களாம்.. பெரிய “தல” சொன்னாரு...

    பதிலளிநீக்கு
  2. //// R.Gopi சொன்னது… நீங்க தண்ணி மேல நடப்பீயளா? நம்மூர்ல டாஸ்மாக் வுட்டுட்டு அல்லாரும் அப்டி தான் போறாய்ங்களாம்..../////

    தலை.... மிதக்குறதுல இப்படி ஒரு சிறப்பு பிரிவு இருக்குன்னு சொல்லி... பதிவ கலகலன்னு ஆக்கிட்டீங்க... தேங்க்ஸ்....

    ஆல்கஹால் ரத்தத்தில கலந்து, மூளைய மந்தமாக்கி கவலைகளை டெம்பரவரியா... மறக்கச் செய்வதனால் அப்பாவி மக்கள் அங்கே விழுந்து கிடக்கும் பரிதாவம், ரொம்ப கஷ்டம்....

    நம்ம பதிவு கோடிட்டு காட்டும்... இதே எபக்ட் தான்... சைலன்சிங் த தாட்ஸ் தான். மதுவின் சப்போர்ட் இல்லாமலேயே... வாழ்க்கையில எவ்வளவோ பீல் பண்ணலாம்..... அதை எப்படி புரிய வைக்கணும் எனும்....

    “யோசனையில... புரியலையே...!!!!”

    குடியை ஒழிக்க நாம் ஏதாவது செய்ய வேணும் எனும் தங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது தலைவரே.....

    பதிலளிநீக்கு
  3. படுக்காளிக்கு,

    முயன்றால் மனிதனால் முடியாதது எதுவும் கிடையாது! . . அறிவியல் படி பிறந்த குழந்தையால் நன்றாக நிச்சல் அடிக்க முடியும்.. ஏனோ மனிதன் மட்டும் இப்படி... தெரியவில்லை... பறக்க மட்டுமே ஆசை படுகிறான்..

    செல்லத்துரை

    பதிலளிநீக்கு
  4. /// cdhurai சொன்னது… முயன்றால் மனிதனால் முடியாதது எதுவும் கிடையாது! . . அறிவியல் படி பிறந்த குழந்தையால் நன்றாக நிச்சல் அடிக்க முடியும்.. /////

    தங்கள் கருத்துக்கு, மிக்க நன்றி...

    யெஸ்... ஒரு வேளை நீந்த தெரியும் என்பது மழலையாக இருக்கும் போது தெரிகிறது...

    விவரம் தெரிந்து, நாம் பகுத்தறிவுக்கு...!!!!???? பக்குவப் படும்போது தான்.... பப்பரப்பே.... என ஆகி விடுகிறோமோ.....!!!!!!

    ////ஏனோ மனிதன் மட்டும் பறக்க மட்டுமே ஆசை படுகிறான்..////

    வேதனை கலந்த உண்மை... அதைத்தான் இதே பதிவில் ஒரு கேலிச் சித்திரமாக குறிப்பிட்டுள்ளேன்..

    நம் கருத்துக்கள் ஒரே கோட்டில், இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி....

    கலக்குங்க... செல்லா....

    பதிலளிநீக்கு