
அப்போது ஒரு மாணவச் செல்வம் எலக்ட்ரிக் பல்ப் கருவியின் செயல்பாட்டை விளக்கும் சோதனை சாதனத்தின் அருகில் நின்று கொண்டிருந்ததாம். நம்மாளுக்கு ஒரே ஆர்வம் அச்செல்வத்தின் அருகில் சென்று எலக்ட்ரிசிட்டி என்றால் என்ன??? என்றாராம்.
செல்வம் விழித்து ஏதேதோ சொல்ல, எனக்கு விளங்கும் படியாய் எளிமையாய் சொல்லேன் என விண்ணப்பம் வைத்தாராம். செல்வத்துக்கு முடியாததால் ஆசிரியர் உதவிக்கு வந்தார், அவருக்கும் முடியவில்லை, பின்னர் பள்ளியின் முதல்வர் வந்தார்.
எடிசன் விழித்து நீங்கள் ஏதேதோ சொல்கிறீர்களே, சுற்றி வளைத்து அதன் குணங்கள் பற்றி சொல்லாமல், எளிமையாய் எலக்ட்ரிசிட்டி என்றால் என்ன,என சொல்லுங்களேன் என கேட்டார்.
அவர் ஒரு முனைவர் வேறு. அவருக்கும் முடியவில்லை.
விளக்க முடியாமல், தலை குனிந்த முனைவரிடம், எடிசன் சொன்னாராம். வருந்த வேண்டாம் நான் தான் எடிசன். உங்களை பரிசோதிக்கவோ, பரிகசிக்கவோ இந்த கேள்வி கேட்கவில்லை. எனக்கும் தெரியாது, அதற்கான விடைதான் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியாததை தெரிந்து கொள்ளலாமே எனத்தான் கேள்வி கேட்டேன். தவறியிருந்தால் மன்னியுங்கள் என்றாராம்..
நகைச்சுவையாய் சொல்லப்பட்டாலும் முதலில் கேட்ட போது, என்னது.... எடிசனுக்கே எலக்ட்ரிக் கரெண்ட் என்னன்னு தெரியாதா... என்ன கதை விடுறீங்க என கேட்க தோன்றுகிறதல்லவா. வாருங்கள் இதை சற்று ஆழமாய் பார்ப்போம்.
நேயர்கள் கூட கூகிள் போய், எலக்ட்ரிசிட்டி என்றால் என்ன???? என விளக்கம் தேடினால், குத்துமதிப்பாய் கிடைக்குமே அன்றி, சுருக்கமாய் கிடைக்காது.
கூகிள் தேடி, ஒரு குசும்பு விடை ஆங்கிலத்தில் எனக்கு கிடைத்தது, பாருங்களேன்.
Electricity is a mysterious incomprehensible entity which is invisible AND visible BOTH AT THE

சரி ஏன் நம்மால் விளக்க முடியவில்லை. இனிப்பு என்பதை என்ன வென்று நம்மால் உணர முடியும். திருப்பதி லட்டும் திருநெல்வேலி அல்வாவும் இனிப்புதான்.அது மட்டுமா, திருப்பதி லட்டுக்கும் திரிசூலம் லட்டுக்கும் வித்தியாசம் உண்டு. இனிப்பில் இத்தனை கிலோ என இதுவரை யூனிட்டு சொல்லவில்லை. அதனால் தான் திருப்பதி லட்டு நல்லா இருக்குங்க, திரிசூலத்துல வாங்கின லட்டு சகிக்கலைங்க என்கிறோம்.
இன்னும் விளக்கமாய் சொல்ல ஒரு நாயர் கதை கேளுங்கள். ஒரு ஊர்ல ஒரு நாயர் இருந்தாராம், அவருக்கு 21 பிள்ளைங்க. அனில் நாயர், சுனில் நாயர் அருந்ததி நாயர் இப்படி... நாயர்கிட்ட நாயர் எப்படின்னு கேட்டா அவர் என்ன சொல்வாரு. ஒவ்வொரு நாயருக்கும் ஒரு குணாதிசயம். அதனால தான்

எலக்ட்ரிசிட்டி கண்டுபிடிக்கப்பட்டு நமக்கு பயன்பாட்டுக்கு என வந்து ஒரு நூற்றாண்டு தான் ஆகிறது. இதில் கற்று கொள்ளவும், ஆராயவும் இன்னும் இருக்கிறது என்பதால் நமக்கு புரியும் வண்ணம் விளக்கம் தரும் அறிவியல் ஆய்வாளர்களின் முயற்சிசுக்கு வாழ்த்து தெரிவிப்போம்
எலக்ட்ரிசிட்டி கண்டுபிடிக்கப்படும் முன்னும் எலக்ட்ரிசிட்டி இருக்கத்தானே செய்தது.
எலக்ட்ரிசிட்டி போல், எலக்ட்ரானிக்ஸ் போல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனை சக்திகள் இருக்கின்றன. எப்பய்யா கண்டுபிடிப்பீங்க.....
//எலக்ட்ரிசிட்டி போல், எலக்ட்ரானிக்ஸ் போல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனை சக்திகள் இருக்கின்றன. எப்பய்யா கண்டுபிடிப்பீங்க....//
பதிலளிநீக்குஅதெல்லாம் கண்டுபிடிப்பாய்ங்க நம்மாளுங்க...
நீங்க “எந்திரன்” எப்போ ரிலீஸாகுதுன்னு கண்டுபிடிக்க ஏதாவது வழியிருக்குதான்னு சொல்லுங்க “தல”....
அப்படியே நம்ம எழுத்தாளர் ஏகலைவனின் அடுத்த கதை எப்போ வெளியாகும்னு கேட்டு சொல்லுங்க..
//// R.Gopi சொன்னது… நீங்க “எந்திரன்” எப்போ ரிலீஸாகுதுன்னு கண்டுபிடிக்க ஏதாவது வழியிருக்குதான்னு சொல்லுங்க “தல”....////
பதிலளிநீக்குஆஹா....
இது மில்லியன் டாலர் கேள்வி ஆச்சே !!!! சங்கருக்கும் ரஜினிக்குமாவது தேதி தெரியுமா. ஆடியோ கேக்க ரெடி ஆயிடீங்களா...
பாட்ட இப்ப கேப்போம்... படம் ரிலீஸ் பின்னால பார்போம் ஜி...
//// அப்படியே நம்ம எழுத்தாளர் ஏகலைவனின் அடுத்த கதை எப்போ வெளியாகும்னு கேட்டு சொல்லுங்க.. ////
நீங்களும்.... நானும்....!!!! மட்டும் இல்லாது வலையுலகே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏகலைவனின் அடுத்த படைப்பு தயாராகி வருவதாக எனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
நானும் ஆவலாய் காத்திருக்கிறேன்.