பக்கங்கள்

பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு

நம்ம எக்ஸ் இன்போசிஸ் நந்தன் நீலகேனி இப்ப என்ன செய்யுறாருன்னா. இந்திய Unique Identification Authority of India வின் சேர்மன். UIDAI …. உடே...ய்.... பற்றி தெரிந்தவர் ஒரு பாராவை உட்டு விடு ஜீட் என நகரலாம். இல்லாதவர் கீழே வாங்க.

பத்து வருசத்துக்கு முந்தியே.... சவுதி அரேபியாவை நான் முதலில் பார்த்த போது பரவசம் வந்தது. புதிராகவும் பிரமிப்பாகவும் இருந்த்து, எங்கனயாச்சும் ரோட்டுல நடமாடினா, ஹோட்டல்ல ரூம்பு போட்டா, ஏதாவது புதுசா வாங்கினீங்கன்னா பில் போட, டிக்கட் புக்கிங் என என்ன செஞ்சாலும் போலீசு அல்லது அதிகாரிகள் நம்மகிட்ட வந்து கேக்குறது ஒரே வார்த்தை தான். ‘இக்காமா ப்ளீஸ்’ அவ்வளவுதேன்.

அதென்ன இக்காமா. அக்கா மாமா தெரியும், அவருக்கும் இவருக்கும் என்ன உறவு என்று கேட்பவருக்கு. இக்காமா என்றால் அடையாள அட்டை எனும் அரேபிய சொல், அம்புட்டுதேன்.

நம்ம கையில இருக்குற அந்த அடையாள அட்டைய பார்த்து அவர்கள் கம்புயூட்டர்ல தட்டினா யாரு, என்ன விவரம் எல்லாம் புட்டு புட்டு வைச்சுரும். ஏமாத்தவோ, பேர மாத்தி சொல்லவோ சான்ஸே இல்ல.

அலுவலகங்களும், போலீஸ் கார்களும் கூட கம்புயூட்டர் இணைப்பின் மூலம் இந்த தகவலை பெற்றுக் கொள்ளலாம். யப்பா, என்ன சிஸ்டம்டா சாமி, நம்ம நாட்டுக்கும் வந்தா நல்லா இருக்காது என ஏங்கி ஏப்பம் இட வைத்தது.

நீங்க மதுரைக்கார்ர்ன்னு வையுங்க, மெட்ராஸூக்கு போகணும்னா, ஊரெல்லைல இருக்கிற எல்லை காவலர்கிட்ட உங்க இக்காமா நம்பர சொல்லிட்டு போயிட வேண்டியதுதான். ஏதோ ஒரு அவசர தேவை உங்ககிட்ட அரசாங்கம் ஏதாவது அவசர சேதி சொல்லணும்னா, கம்புயூட்டர் பார்த்தா போதும் எங்க இருக்கீங்கன்னு சொல்லிடும். அந்த நாட்டின் ஒரு காவலர் பெருமையாய் என்னிடம் சொன்னார். யாரையாவது தூக்கணும்னா (யப்பாடி... சாக்கிரதையா இருக்கணும்) ஒரு 20 நிமிசத்துல நாங்க ரவுண்ட் அப் செய்துரலாம்ன்னார்.

சின்ன ஊரு, ராஜா ஆட்சி, சர்ப்ளெஸ் காசு எல்லாம் இத சாதிக்க முடிஞ்சுச்சு. நம்ம நாடு ரொம்ப பெரிசு. வீடு இல்லாம, ரோட்டுல கூட குடித்தனம் நட்த்துரவுங்கன்னு மக்கள் நிறைய பேர் உண்டு. ஊர மாத்தி, லோகேஷன மாத்தி பொழப்ப பார்க்க வேண்டியதும் உண்டு. இப்படி எத்தனை சாக்கு போக்கு சொன்னாலும் நம்ம இந்திய அரசாங்கம் இதன் முக்கியத்தனம் உணர்ந்து, அதை கையில் எடுத்துள்ளது. பிளானிங் கமிஷனுக்கு கீழே இத உண்டாக்கி முனைப்பாக செய்கிறார்கள்.

கொசுறு ஆச்சரியம், ஆண்டவனப் பத்தியது. அது எப்படிங்க இப்படி!!!! எல்லா மனிசனும் யூனிக். படைக்கப்பட்ட எல்லா மனிதனும் கண் திரைகளிலும், விரல் ரேகைகளிலும் வித்தியாசப்படுவது ஆச்சரியத்தின் அத்திரி பாட்சா.

சரி உடேய் என்ன செய்யப் போகுது, அத சொல்லுங்க. இந்திய குடிமக்கள் அனைவரும் பட்டியலிடப்பட்டு, அவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒரு பொது இடத்தில் பாதுகாக்கப்பட்டு, பரிமாறப்பட்ட விருக்கிறது.... மக்கா, அது ரொம்ப பெரிய விசயம்ப்பா........

இது மட்டும் நடந்தால், மிகப் பெரிய மாறுதல் நடக்கும். அது நடக்க வாழ்த்துக்கள்.

செப்டம்பர் 2009 தேதியின் படி, இந்த உடேய் (பேரு நல்லா இருக்குங்க....அதுவும் நம்ம தாய் மொழியில் சொல்றப்போ ஜிவ்வுங்குது) உத்தரவாதம் தந்திருப்பது, இன்னும் மூன்று வருடங்களில் டில்லியில் இது அமுல் படுத்தி விடுவோம் என்று.

என்னங்க இது, சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டாமா, இழுத்துட்டு போறது நல்லாவா இருக்கு என நாம் நினைப்பது சரியே. தாமதத்துக்குக்கான காரணங்களை, நடைமுறை சிக்கல்களையும் கீழ் உள்ள புள்ளி விவரங்கள் விளக்கும்.

தில்லியில் திட்டமிட்ட இந்த செயல் 9 லட்சம் குடிமனைகள் உள்ளடக்கிய 4.2 கோடி மக்களின் பெயர், பிறந்த தேதி, விலாசம், பெற்றோர் விவரம், ரேகை, கண் இமைகளின் விவரம் எல்லாம் இதில் அடங்கும். தில்லி என்பது உ.பி., ராஜஸ்தான் எனும் அக்கம் பக்கத்தை சேர்க்காததே.
ஆனாலும் தில்லி இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம், உலகத்தின் எட்டாவது மிக பெரிய நகரமும் இதுவே.

3 கருத்துகள்:

 1. " ஊரெல்லைல இருக்கிற எல்லை காவலர்கிட்ட உங்க இக்காமா நம்பர சொல்லிட்டு போயிட வேண்டியதுதான் "

  முத முதல்ல வளைகுடா நாடு வந்தப்ப ஆரம்பித்து இன்று வரை எனக்குள் ஏன் இது இந்தியாவில் இல்லை என்ற இந்த எண்ணம் மேலோங்கிதான் இருக்கிறது.. ஆம்.. ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுக்கான அடையாள அட்டை.. இது எவ்வளவு அரசு வேலைகளை சுலபமாக்கும்.. ஏன் தனிமனிதனுக்கும் அரசுக்குமான தகவல் ரீதியான அடிப்படை விசயங்களை இல்லாமலாக்கும். வேலையும் சுலபமாக முடியும்..
  ஆமா இக்காமான்றீங்க.. இப்போ எங்க இருக்கீங்க.. சவுதியிலா??
  நல்லதொரு தகவல்..

  பதிலளிநீக்கு
 2. ///// பஹ்ரைன் பாபா சொன்னது…
  " முத முதல்ல வளைகுடா நாடு வந்தப்ப ஆரம்பித்து இன்று வரை எனக்குள் ஏன் இது இந்தியாவில் இல்லை என்ற இந்த எண்ணம் மேலோங்கிதான் இருக்கிறது.. ஆம்.. ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுக்கான அடையாள அட்டை.. இது எவ்வளவு அரசு வேலைகளை சுலபமாக்கும்.. ஏன் தனிமனிதனுக்கும் அரசுக்குமான தகவல் ரீதியான அடிப்படை விசயங்களை இல்லாமலாக்கும். வேலையும் சுலபமாக முடியும்../////

  மிக்க நன்றி. மிக சரி. விளக்கமாய், சாராம்சமாய் அழகாக சொல்லி விட்டீர்கள்.

  ///// ஆமா இக்காமான்றீங்க.. இப்போ எங்க இருக்கீங்க.. சவுதியிலா??
  நல்லதொரு தகவல்.. /////

  இல்ல தலைவா, இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான்.

  பதிலளிநீக்கு
 3. //ஆமா இக்காமான்றீங்க.. இப்போ எங்க இருக்கீங்க.. சவுதியிலா??//

  அப்போ ஒபாமா பத்தி நான் பேசலாமா? நான் துபாயில் இருக்கிறேன்... பஹ்ரைன் பாபா பதில் சொல்லலாம்... படுக்காளியும் தங்கள் பங்குக்கு ஏதாவது சொல்லலாம்...

  நந்தன் நீலகேனி பற்றிய தகவல்கள் அருமை.. அந்த விஷயம் நடைமுறைப்படுத்தப்பட்டால் :

  நீயெந்த ஊரு, நானெந்த ஊரு
  முகவரி தேவையில்லை

  என்ற பாடலை உரக்க பாடலாம்...

  பதிலளிநீக்கு