ஒரு ஊருல ஒரு நரி...... சரி......
குதிச்சு குதிச்சு திராட்சைய புடுங்க பார்த்துச்சு. சரி, வெரி நைஸ்.
கிடைக்காத்துனாலே, சீ சீ இந்த பழம் புளிக்கும் எனக்கு நாட் நெஸசரி என புட்டுக்கிச்சாம்.

கதை ஒகே, நீ என்ன சொல்ல வர்ரே அத சொல்லு என்பவருக்கு,
உங்களுக்கு CEO ஆகணுமா?
இல்லை என பதிலுரைப்பவர் ஒரு குழு. ஆம் என சொல்லுபவரில் இரு குழுக்கள்.
ஒருவர் CEO ஆனவர், மற்றவர் ஆவதற்கு முயல்பவர்.
இல்லை எனும் குழு பற்றிய கவலை இல்லை. சிஈஓ ஆனவர் தங்கள் பணியை மேலும் செம்மையாய் செய்யவும், முயல்பவர்கள் தெளிவு பெற்று முன்னும் முனைப்புடன் செயல்படவும் இப்பதிவு உதவும் என நம்புகிறேன்.
தலைவன் பதவியின் பரிசு முள் கிரிடம் என காட்டிய யேசு, எவன் ஒருவன் தலைவன் ஆக ஆசைப்படுகிறானோ அவன் அவர்கள் பாதங்களை கழுவி, தான் தொண்டர்களின் தொண்டன் என காட்டு என போதித்தவர்.
கிருபானந்த வாரியார் சொல்வார், தலைமைப் பீடத்தில் உனக்கு கிடைக்கும் சக்தியை உன்னை சார்ந்திருக்கும் கூட்ட்த்தின் மேன்மைக்காக பாடுபட கிடைத்த நிலை என்றே கொள்ள வேண்டும், இல்லாமல் உனக்கு கிடைத்த சுதந்திரமாய் மட்டும் கொண்டால் நீ தோற்பாய் என்பார்.

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுதந்திரமும் பொறுப்பும் எதிர் எதிர் தட்டில் உள்ள தராசு. உன்னை யாரும் கேட்க கூடாது என நினைக்கிறாயோ அந்த அளவுக்கு உன் பொறுப்புணர்ச்சி வளர வேண்டும் என்பார்.
மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் வெறுமனே வாசித்து கடந்து செல்லும் தகவல்கள் அல்ல. மறுபடி மறுபடி படித்து புரிந்து அதை விவாதித்து தெளிவடைய வேண்டிய சமாச்சாரம்.
யாரும் அவர கேக்கிறதுல்ல, புடிச்ச்சா ஆபிஸுக்கு வர்றார், நினைச்சா அமெரிக்கா போறார். என்ன காரு, என்ன வீடு, அடேயப்பா அவர் எப்படியிருக்காரு என புற சமிக்கைகளை பார்த்து ஒருவர் தலைமை பீட்த்துக்கு ஆசைப்பட்டால் விவகாரமாகிவிடும்.
தலைமை என்பது பொறுப்பு, உங்கள் கீழே வேலை செய்யும் எல்லாரையும் சில சமயம் உங்களுக்கு தெரியாது. வாசலில் நிற்கும் வாயில் காப்போன் யார், அவன் பெயர் என்ன, அவன் குடும்பம் என்ன, பிள்ளைகள் எத்தனை, எங்கு படிக்கிறார்கள் என எதுவும் தெரியாது இருக்கலாம். ஆனாலும் உங்கள் வளர்ச்சியில் தான் அவன் வாழ்க்கை இருக்கிறது. அவனுக்கு ஒரு பத்து ரூபா

சந்தையிலே உங்கள் கம்பெனி வளர்ந்தால், அவன் சமூக மதிப்பு உயரும். அந்த கம்பெனியிலயா வேலை செய்யுற, நல்ல கம்பெனியாச்சேப்பா என சமூகம் அங்கிகாரம் தரும்.
இதை செய்யும் திடமும், தெளிவும், துணிவும், தீர்க்கமும் இருக்கிறதா. தென் ஆல் த பெஸ்ட், இல்லையா இதை செய்ய வேறு யாருக்காவது வழி விட்டு நாம் விலகுவது நல்லது. தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் தகராறு செய்தல் சிறுபிள்ளைத்தனம்.
(CEO)வின் வாழ்க்கை வாழ ஆசைப்படுவதில் தவறே இல்லை. அந்த வாழ்க்கைதான் வேண்டும் என்றால் ஒரு நாள், அல்லது ஒரு வாரம், ஒரு மாதம் வாழ்ந்து முடித்துவிடுவது நலம்.
பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவசியமே இல்லை, பால் பூத்துல போனா பட்டன் அழுத்தினா பால் வரும்
அத விட்டுபுட்டு வெறுமே ஒரு டம்ளர் பால் குடிக்க, பால்மாட வாங்கி

தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சேவைதான் தலைமை பதவி. அரசியல், பிசினஸ், ஆன்மீகம் என எந்த தலைமைக்கும் இது பொருந்தும். நம் வாழ்க்கையை அப்படி தாரை வார்க்க ரெடியென்றால் அதை தலைமை (CEO) நோக்கி நகரணும், இல்லையா எனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுட்டுஅத நோக்கி நகரணும்.