பக்கங்கள்

இது உங்களுக்காக

என்ன தவம் செய்தேன் இப்படி ஒரு தோழமை பெற.

வாழ்வின் அடிப்படையை நாங்கள் விவாதிக்க, விவாதத்தின் முடிவில் ஒரு கவிதை எழுதி அனுப்பினார் ஜனனி.
உன்னத தமிழில் உயர்ந்த கருத்தில் கவிதை மின்னுகிறது.
ஜனனியின் தமிழ் கனல் விதைக்கிறதே. மிக்க நன்றி.
அந்த கவிதை கிழே.

இது உங்களுக்காக
பறவைகள் தம் குஞ்சுகளுக்கு
பறக்கத்தான் சொல்லிக்கொடுக்கின்றன!
பதுங்குவதற்கு அல்ல!

விலங்குகள் தம் குட்டிகளுக்கு
வேட்டையாடத்தான் சொல்லிக்கொடுக்கின்றன!
உணவை பதப்படுத்தி வைக்க அல்ல!

தன்ணுள் இருக்கும் தண்ணீரை
துளி மிச்சமில்லாமல் தருகிறது மேகம்!
மறுநாள் தேவைப்படுமோ என்று
மூட்டை கட்டி வைப்பதில்லை!

பத்து கூடுகள் கட்ட
பட்டாம்பூச்சி நினைத்ததில்லை
பகுத்தறிவு படைத்த நீயே சொல்
உயர்திணை யார் என்று!

உலகில் படைக்கப்பட்ட
முதல் மனிதனின் சொத்து விவரம்
உனக்கு தெரியுமா ?
உன்னைப்போல் அவன்
சேர்த்துவைக்க நின்னைத்திருந்தால்
உனக்கு ஏதும் எஞ்சியிருக்குமா ?

மலர்த்தோட்டம் போடு! அதை
உன் தோட்ட்த்தில் உள்ள
மரத்திலிருக்கும் தேனிக்களுக்கு
குத்தகை விடு!
மலர்களை ரசி! தேனை ருசி!
புரிந்துகொள்ளாமல்
பூக்கடை போடுகிறவன்
பைத்தியக்காரன்!

ஈசலாய் பிறந்திருந்தால்
இன்றே வாழ்ந்திருப்பாய்!
மனிதனாய் பிறந்ததால்
மறந்து போய்விட்டாயோ ?

எல்லாவற்றிற்கும் விடை
உன்னிடம் இருக்கிறது!
கேள்வியை தேர்வு செய்ய
கற்றுக்கொள் நண்பா!

வாழ்க்கை
வாழ்வதற்குதான்!
வாடகைக்கு விடுவதற்க்கல்ல!

அன்புடன்,
ஜனனி

1 கருத்து:

  1. மிக மிக உயர்வான சிந்தனையை உள்ளடக்கிய ஒரு கவிதாயினியின் சிறப்பான கவிதை இது...

    வெறும் பேச்சுக்கென சொல்லவில்லை ஜனனி அவர்களே... நான் சமீபத்தில் படித்த மிக சிறந்த எழுத்து இது...

    அதுவும் இந்த வரிகள் மிக மிக அருமை...

    //பத்து கூடுகள் கட்ட
    பட்டாம்பூச்சி நினைத்ததில்லை
    பகுத்தறிவு படைத்த நீயே சொல்
    உயர்திணை யார் என்று!//

    //உலகில் படைக்கப்பட்ட
    முதல் மனிதனின் சொத்து விவரம்
    உனக்கு தெரியுமா ?
    உன்னைப்போல் அவன்
    சேர்த்துவைக்க நின்னைத்திருந்தால்
    உனக்கு ஏதும் எஞ்சியிருக்குமா ?//

    //புரிந்துகொள்ளாமல்
    பூக்கடை போடுகிறவன்
    பைத்தியக்காரன்!//

    //ஈசலாய் பிறந்திருந்தால்
    இன்றே வாழ்ந்திருப்பாய்!
    மனிதனாய் பிறந்ததால்
    மறந்து போய்விட்டாயோ ?//

    //வாழ்க்கை
    வாழ்வதற்குதான்!
    வாடகைக்கு விடுவதற்க்கல்ல!//

    இது பொறி பறக்கும் எழுத்து... இதில் பொதிந்துள்ளது ஆயிரமாயிரம் கருத்து...

    மீண்டுமொருமுறை வாழ்த்துக்கள் ஜனனி அவர்களே....

    பதிலளிநீக்கு