பக்கங்கள்

ஒரு கோப்பையிலே நம் குடியிருப்பு....!!!

ஒட்டு மொத்த தேசமுமே, பேட், பால் எடுத்துட்டு அதிரடியா நுழைஞ்சு, கிரிக்கெட் விளையாடி, 2011 உலக கோப்பைய செயிச்சுருச்சு. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு ஆர்வலர், திரை உலகத்தினர், பொது மக்கள் என எல்லோருமே…. அத்தனை இந்தியருமே… மொகாலியிலும், மும்பையிலும் டேரா போட்டு, டிவி/ ரேடியோ முன்னால பட்டரைய போட்டு, உற்சாகப்படுத்தி வெற்றி பெற்றனர்.


இந்த ரெண்டு நாட்களுமே நாட்டுல எந்த வேலையுமே பெரிசா நடக்கல. ஆபிஸுக்கு மட்டம் போட்டுட்டு, ஸ்கூலுக்கு ஸ்கூட்டடிச்சுட்டு, அரசியல்வாதி கூட ஆபிசுக்கு லீவு விட்டுட்டு ஒரு 9-10 மணி நேரம் இந்த விளையாட்டுக்கு வீரராயிட்டாங்க… ஒரு தேசமே… ஒரே உணர்வோட ஒன்றிணைந்து உணர்ச்சிகரமா நின்னது…. நினைக்கும் போது பெருமையா இருக்குது.


நாட்டையும் நாட்டு மக்களையும் ஒண்ணா சேர்த்த கிரிக்கெட்டுக்கு ஒரு சலாம்.


ஒவ்வொரு படியா கவனமா ஏறி, வெற்றியின் இலக்கை எட்டியது மிக நல்ல சாதனை. நம் நாட்டு விளையாட்டு அணியின் எல்லோருக்கும் ஒரு சபாஷ்.


தோசை சுட்டவன்… சாப்பிட்டதா சரித்திரம் இல்ல!!!. மேட்ச் நடத்துனவன் நாட்டுக்கு கப்பு கிடைச்சதில்லைன்னு ஒரு குருட்டு நம்பிக்கை ஸ்டாட்டிஸ்டிக்ஸாம்… அடப் போங்கடான்னு நம்ம செல்லக் குட்டிகள் பெற்ற வெற்றி பட்டைய கிளப்பிறுச்சு. இந்த வெற்றி, மூட நம்பிக்கைய மூடி விட்டு, சுடர் விட்டு ஒளிர்ந்த பகுத்தறிவின் பிரகாசம்.


வெற்றிக்கு முக்கிய காரணம் இத்தனை கோடி மக்களின் எண்ணமும் பிரார்த்தனையும் தான் என்றால் மிகையில்லை. எல்லைக் கோட்டுக்கு வெளியில் நின்று கொண்டு பிரார்த்தனை செய்த அந்த வயசு முதிர்ந்த பெண்ணையும், பந்து எல்லைக் கோட்டை கடந்ததும் உட்கார முடியாமல் எழுந்து கூக்குரலிட்ட சிறு குழந்தையையும்… கண்ணில் நீர் பனிக்கத்தான் நாம் பார்த்தோம்.


இது எப்படிங்க என கேட்க, கேப்டன் தோனி இதற்கு குழுவே முக்கிய காரணம் என்றார். உண்மைதான், ஒத்துக் கொள்வோம்…. என்றாலும் மலை அசைந்தாலும் கலங்காத மன உறுதியுடன் நின்ற தலைவனின் தோரணை… சூப்பர். தோனி, தோணி மாதிரி நின்னு செயிச்சாரு. இவர நினைக்கும் போது ஒரு பாட்டு மனசுல ஒடுது.


ஆளானாலும் ஆளு, இவரு அழுத்தமான ஆளு,


மிச்ச விவரம் வேணும்ன்னா …


மச்சான் தோனிய கேளு…. கேளு,,,


சேவாக்கும், சச்சினும் அவுட்டானதும், துருப்பு சீட்டான யுவராஜாவ இருக்க சொல்லிட்டு, நான் வர்றேண்டா என களம் இறங்கிய முடிவாகட்டும். எடுத்த முடிவில் அசையாது இருந்து, 91 ரன்களை குருவி சேர்த்த மாதிரி சேர்த்த பாங்காகட்டும்… தோனி… நீ நிச்சயமா ஞானிதான்…


இந்த வெற்றியை சச்சினுக்கு அர்பணிக்கிறோம் என தோளில் தூக்கி கொண்டு கண்ணில் நீருடன் வலம் வந்த குழுவின் அந்த எளிமைக்கு, வயசில் பெரியவங்களுக்கு நம் கலாச்சாரம் தரும் மரியாதை மின்னுகிறது. அதே லெவல்ல, வெளி நாட்ட சேர்ந்தாலும் கோச்சையும் தூக்கி சுத்துனது சூப்பர்டா. நன்றி மறக்காத அந்த குணம், மனித நேயம் மின்னிய அந்த செயல், நம்ம நாட்டுக்கே பெருமைடா சிங்கக் குட்டிங்களா….


சூப்பரா நினைச்சத முடிச்சுட்டீங்க. இனி நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நாடு கொஞ்சம் அதெது வேலைய பார்க்கட்டும். இப்ப ரிலீஸ் பண்ணா, படம் படுத்துறும்ன்னு, பயந்து போயி பம்முன திரையுலகம் அது பங்குக்கு … கலை????!!!! வளர்க்கட்டும். இதையே திருப்பி திருப்பி போட்டு நீயூஸ்ன்னு சொல்ற ஊடகங்கள், மிச்ச விசயத்த கவர் பண்ணட்டும். சராசரி மனுசன் தன் கடமைகள் செய்யட்டும்.

2 கருத்துகள்:

  1. உலக கோப்பை வென்றதை கூட இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா என்று ரசிக்க வைத்த பதிவு இது...

    கூடவே அட்டகாசமான கார்ட்டூன்ஸ் & களுக்கென்று சிரிக்க வைக்கும் கமெண்ட்ஸ்..

    தோனி - நீ
    இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்ற தோணி...

    (“தல” இந்த மாதிரி ஒரு அட்டகாசமான கவிதை எழுதி இருக்க வேண்டியது.. என்ன பண்ணறது, அவரு இப்போ பிரச்சாரத்துல நெம்ப பிசியாமாம்....)

    பதிலளிநீக்கு
  2. /// R.Gopi சொன்னது…
    உலக கோப்பை வென்றதை கூட இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா என்று ரசிக்க வைத்த பதிவு இது...///

    வாங்க ஜி, வருகை தந்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி.

    உங்கள் கவிதை நல்லா இருந்துச்சு, லேசா பிராண்டினேன்....

    தோனி
    நீ
    இந்திய அணியை
    வெற்றியை நோக்கி அழைத்து சென்ற தோணி...

    கல்விக்கொரு வாணி
    நீயோ...
    ஏற்றங்களை பெற்று தந்த ஏணி

    இத்தனை வயசிலும் இன்னும் நான் தேனீ...
    எதிரணியில் நிற்கிறார்களே நாணி கோணி
    வா நீ!
    கழகத்தில் கலகம் செய்யலாமே
    கொடுப்பேன் நிலம் ஒரு காணி
    அன்புடன்

    பதிலளிநீக்கு