பக்கங்கள்

'சித்தம்' இயக்குனர்களுடன் ஒரு சந்திப்பு

படுக்காளி: வணக்கம், தங்கள் சித்தம் குறும்படம் பார்த்தேன்.

சித்தம்: ரொம்ப சந்தோசம்.

படுக்காளி: அதென்ன புதுசா இருக்கே பேர் சித்தம்….?

சித்தம்: சித்தம் என்பது மிகவும் சுவாரசியமான ஒரு மனித உணர்வு. மனித இயலாமையின் உச்சம் வரும் போது…. யப்பா… முடியல…. நான் இல்லை, எனக்கு மேல் ஒரு சக்தி உண்டு என ஒத்துக் கொண்டு நாம் சொல்லுவது இந்த சித்தம் எனும் வார்த்தை.

படுக்காளி: புரியலீங்களே…

சித்தம்: நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது, நம்மால் முயன்ற வரை முட்டி மோதி பார்த்து விட்டு, ஒன்றுமே முடியாத போது… இனி நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை எனும் போது… ஹூம்…. ஆண்டவனுக்கு சித்தம் இருந்தா நடக்கட்டும் அல்லது விதியோட சித்தப்படி நடக்கும் என சொல்வது நம் மனித குலத்தின் மிகப் பெரிய பலம்..

படுக்காளி: சரி, இக்குறும்படத்தின் நோக்கம் என்ன…

சித்தம்: அவ்வுணர்ச்சியை கோடிட்டு காட்டி, ஒரு உணர்வின் பாசிட்டிவ் விதை விதைப்பதே எங்கள் எண்ணம் இந்த குறும்படம் பார்வையாளருக்கு ஒரு ஆக்கபூர்வமான சிந்தனையை விதைத்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி, நிறைவு.

படுக்காளி : சரி சித்தத்தின் கதை என்ன, ஒரு வரிக்கதை சொல்லுங்களேன்….

சித்தம்: ஒரு வரி என்ன… ஒரு வார்த்தையில் சொல்கிறோம். பணப்பயணம்.

கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு காத்துலயா போயிடும். நிச்சயம் இல்லை எனும் தத்துவத்தின் அடிப்படையில், ஆட்டய போட்ட அமௌண்ட்ல ஒட்டைய போட்டு, எப்படி !!! அவனையே கதறிகிட்டு கொண்டு வர வைக்கிறார்கள். அதன் பின் பணம் கைக்கு வரும் வேளையில் அது எங்கு போகிறது எனும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் சித்தம்.

படுக்காளி: தங்கள் குழுவைப் பற்றி சொல்லுங்களேன்.

சித்தம்: அனுபவங்கள் இல்லாமல், ஆர்வம் மட்டும் மிகுந்த நண்பர் குழு.

படுக்காளி: சித்தம் தொடங்கியது எப்படி

சித்தம்: நாலு கேரக்டருக்குள்ள…. நமக்குள்ள இருக்கிற ஆட்களுக்கு தகுந்த மாதிரி இருக்கணும், பெரிய உடையலங்காரமோ, மேக்கப்போ, செட்டிங்ஸ் அல்லது ரயில்வே ஸ்டேஷன் இதுமாதிரி எந்த பின்புலமோ, இருக்க கூடாது. எதார்த்தமா, 10-15 நிமிசத்துல சொல்லி முடிக்கிற மாதிரி இருக்கணும். என்றாலும் வலிமையான ஒரு கருத்தை முன் வைக்கணும் என எங்களது எல்லைகளின் வரைமுறைகளை தெரிந்தும் புரிந்தும் நாங்கள் அமைத்துக் கொண்ட களமே சித்தம்.

படுக்காளி: வாசகர்களுக்கான வேண்டுகோள்

சித்தம்: மழலை நடை, மழலை பேச்சு என்பது திரைப்பட உருவாக்கத்துக்கும் பொருந்தும் தானே. சித்தம் திரையாக்கத்தில் இன்னும் மேம்பாடுகள் செய்யலாம் என்பது எங்களுக்கும் தெரிகிறது / புரிகிறது. அதை நோக்கி பயணிக்கிறோம். இந்த கன்னி முயற்சிக்கு அனுசரணையும்ஆலோசனையும் மிக மிக அவசியம்.

படுக்காளி: வாழ்த்துக்கள். தங்களின் எதிர்காலத் திட்டம்

சித்தம்: எல்லாம் ஆண்டவன் சித்தங்க… நம்ம கையில என்ன இருக்கு

என்று அவர்கள் என்னிடம் திருப்பி சொல்ல, படுக்காளி நான் திகைத்து நின்றேன்.

சித்தம் குறும்படத்தின் பகுதி - 1

http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL

சித்தம் குறும்படத்தின் பகுதி - 2

http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw

13 கருத்துகள்:

 1. நல்ல முயற்சி! இமாலய சாதனை !!

  இயல்பான நடிப்பு, சாதாரண கோணங்கள், துடிப்பான இசை, மனப்பாடம் செய்து ஒப்பிக்காத உரையாடல்கள், “ஊருக்காக” உழைப்பவர்களின் ஊமை வலிகள், உயர்ந்து நிற்கும் மனித நேயம், மொத்தத்தில் “சித்தம்” மனதுக்கு நிறைவு தரும் நல்ல குறும்படம்.

  கதையில் வரும் அனைவருமே நல்லவர்கள் - உங்களைப்போலவே !!

  வாழ்த்துக்கள்.

  மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க மனமார்ந்த்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. /// Joe Basker சொன்னது…
  நல்ல முயற்சி! இமாலய சாதனை !!////

  மிக்க நன்றி. தங்கள் அன்புக்கும் ஊக்குவித்தலுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  /// கதையில் வரும் அனைவருமே நல்லவர்கள் - உங்களைப்போலவே !!////

  மிக ஆழமான ஒரு கருத்துரை.

  நாம் உருவாக்கும் கதாபாத்திரங்கள் நம்மை பிரதிபலிக்கிறது. ஆம்... எவ்வளவு நிதர்சனம்.

  ஆனாலும் வருங்காலத்தில் சுவை கூட்ட, இந்த வட்டத்தில் இருந்து வெளி வருவது முக்கியம் என எனக்கு இப்போது படுகிறது. மிக கவனமாக நம்மை விடுத்து, அண்டை அசலின் மூலங்களை எடுத்து கையாளலாம் என தங்கள் அறிவுரையாகவும் ஏற்றுக் கொள்கிறேன்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நல்ல கதை. நல்ல நடிப்பு. முதல் முயற்சியாக இருந்தாலும், இந்த முயற்சியே இவ்விஷயத்தில் உங்கள் 'முதல்'. மேலும் அசத்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. அருமை.யு டியூபில் கருத்து சொல்லிருக்கிறேன்.யதார்த்தமான நடிப்பு.கடவுள் சித்தம் அப்படியிருக்கும் பொழுது அன்பால் என்ன செய்ய முடியும்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்...

  சித்தம் குறும்படம் கண்டேன்...

  இதை அப்படியே டெவலப் செய்து முழுநீள திரைப்படமாக எடுக்க முயற்சிக்கலாம்...

  ராசாராம் ஆக நடித்தவருக்கு சினிமாவில் பெரிய அளவில் பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது... அவர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சவரா? இல்லையென்றால் மேடை நாடகம் நடித்த அனுபவம் உள்ளவரா?

  அவருக்கு ஸ்பெஷலாக என் வாழ்த்து தெரிவிக்கிறேன்...

  திரைப்படமாக உருவெடுக்கும் பட்சத்தில், நல்ல குத்துப்பாட்டு ஒன்று வைக்கவும்...

  பதிலளிநீக்கு
 6. /// Mrs. Krishnan சொன்னது…
  நல்ல கதை. நல்ல நடிப்பு. முதல் முயற்சியாக இருந்தாலும், இந்த முயற்சியே இவ்விஷயத்தில் உங்கள் 'முதல்'. மேலும் அசத்த வாழ்த்துக்கள்////

  மிக்க நன்றி. எனக்கும் எங்கள் குழுவுக்கும் நல்ல ஊக்குவிக்கும் வார்த்தைகள்.

  பதிலளிநீக்கு
 7. //// asiya omar சொன்னது… அருமை.கடவுள் சித்தம் அப்படியிருக்கும் பொழுது அன்பால் என்ன செய்ய முடியும்.////


  மிக்க நன்றி சார், இதத்தான் எதிர்பார்த்தோம்.

  சித்தம்!!! என சொல்லும்...... உணர்வை நமக்குள் நினைவு படுத்தி, பாசிட்டிவ் இன்ஸ்பிரேஷன் தருவதே இக்குறும்படத்தின் நோக்கம்.

  சோதனைகள் நம்மைத்தாக்கும் போது, நான் இல்லை, எனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது, அதன் சித்தம் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது எனச் சொல்லும் போது, நம்மால் அடுத்த கட்டத்துக்கு எளிதாய் நகர முடியும்.

  தாங்கள் சொல்வது போல், ஆம்.. அந்த பணம் ராசாராமின் அம்மா ஆப்பரேஷன் செலவுக்கென்பது ஆண்டவன் சித்தம்.

  யார் கண்டது, ஒரு வேளை அன்பு தங்கையின் கல்யாணத்துக்கு வேறு ஏதாவது சித்தம் இருக்கலாம்.

  மிக்க நன்றி, தங்கள் கருத்துக்கும், பின்னூட்டத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 8. /// பெயரில்லா சொன்னது… சித்தம் ...இதை அப்படியே டெவலப் செய்து முழுநீள திரைப்படமாக எடுக்க முயற்சிக்கலாம்... ////

  நல்ல ஐடியா, செய்யலாம் தோழரே....

  //// ராசாராம் ஆக நடித்தவருக்கு சினிமாவில் பெரிய அளவில் பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது... அவர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சவரா? இல்லையென்றால் மேடை நாடகம் நடித்த அனுபவம் உள்ளவரா?அவருக்கு ஸ்பெஷலாக என் வாழ்த்து தெரிவிக்கிறேன்... ////

  வாழ்க்கை எனும் பள்ளியில் பயின்று, அனுபவங்களை உள் வாங்கி ரசனை எனும் டிஸ்டிங்ஷன் வாங்கியது மட்டுமே....

  நடிப்பு பயிற்சி என எந்த பள்ளியிலும் மழைக்கு கூட ஒதுங்காதவர். எனக்கும் அவரது நடிப்பு மிகவும் பிடித்தது. அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். அதிலும் தங்கள் அன்பும் பாராட்டுதலும் அவரை மேலும் வளர்க்கும்.

  //// திரைப்படமாக உருவெடுக்கும் பட்சத்தில், நல்ல குத்துப்பாட்டு ஒன்று வைக்கவும்... /////

  கத்தி எடுத்தா குத்தம்
  குத்தி சாய்ச்சா ரத்தம்
  வேண்டாமே நமக்கு யுத்தம்
  சித்தந்தான் நமக்கு நித்தம்

  வச்சுருவோம்... தலை.. குத்துப்பாட்டு இல்லாத படமா...

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துகள் நண்பர்களுக்கு.. இன்னும் குறும்படம் காணவில்லை. பார்த்தபின் கருத்து கூறவியல்கிறேன்.

  அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. /// சென்ஷி சொன்னது… வாழ்த்துகள் நண்பர்களுக்கு.. ////

  மிக்க நன்றி. தங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறோம்...

  பதிலளிநீக்கு
 11. குறும்படம் எடுத்து அசத்திய படுக்காளி குழு அடுத்து ஒரு நெடும்படம் எடுத்து டெர்ரர் படுத்துமா?

  பதிலளிநீக்கு
 12. எல்லாம் ஆண்டவன் சித்தங்க
  அறியத்தந்தமைக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 13. /// இராஜராஜேஸ்வரி சொன்னது…
  எல்லாம் ஆண்டவன் சித்தங்க
  அறியத்தந்தமைக்கு நன்றிகள் ////

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு