பக்கங்கள்

சம்மனசும் சாத்தானும் / ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ்.


சமிபத்தில் திரை அரங்குகளை வந்தடைந்த டேன் பிரவுன் நாவல் ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ்.

நாவல் படித்து விட்டேன். இன்னும் படம் பார்க்கவில்லை. இந்த வார இறுதியிலே செல்ல திட்டம் உண்டு. பார்த்து விட்டு ஒரு திரை விமர்சனம் எழுதும் ஆசையும் உண்டு. அதற்கு முன்னோடியாய் இதை எழுத நினைத்தேன்.

நிறைய பேருக்கு அவரை பிடிக்காது. அவர் பெயர் கசக்கும் ஒரு எட்டி காய். எனக்குஎன்னாவோ நிறை குறையோடு பார்த்து நம் தகவல்களை தேத்தி கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. எந்த குழுவையும் நாம் சார வேண்டாம். அவர் பக்கமும் போக வேண்டாம். தகவல்கள் கேட்டு விட்டு நம் அறிவை விருத்தி செய்து கொள்வோம் என்று முடிவெடுத்தால் அவர் ஒரு தகவல் பெட்டகம்.

அவர் நிறை

துப்பறிதல் விடுகதை ஆன்மிகம் தத்துவம் அறிவியல் சரித்திரம் என்னும் அவியல் தான் அவர் கதை. ஒரு பிரச்சினை, எது நிஜம் எது கற்பனை என்று தெரியாமல் நாம் விழிப்போம்.

ஒரு கொலையில் அவர் கதையை தொடங்குவார். பரபரப்பாய் கதையை முழு வேகத்தில் ஓட்டுவார். நாயகனையும் நாயகியையும் ஓட ஓட வைப்பார். மாய்ந்து மாய்ந்து விடுகதை விடுவிக்க சொல்லுவார். நமக்கு தெரியாத புது புது தகவல்கள் சொல்லி கதையின் போக்கில் நமக்கு சரித்திர பாடம் நடத்துவார். அறிவியல் பாடம் நடத்துவார். தத்துவ விசிறி வீசி, கதை முடிந்ததும் நம்மை நிறைய யோசிக்கவும் தகவல்களை யாசிக்கவும் வைப்பார்.

கதை என்ன :

www. என்னும் வலைஉலகம் உருவாக்கியது யார். 2008 ல் உலகம் உருவானது எப்படி என்று கண்டு பிடிக்க போகிறோம் என்று கிளம்பிய... தூள் கிளப்பிய நிறுவனத்தில் தான் கதை தொடங்குகிறது.

ஐரோப்பியாவில் அமைந்துள்ள CERN - அறிவியல் ஆய்வு கூடத்தில் ஒரு புதிய கண்டு பிடிப்பு. ஒரே எடை கொண்டுள்ள ஆனால் கனிம கூறுகளில் எதிர் மறை கொண்ட 'ஆண்டி மேட்டர்' என்று ஒரு மேட்டர்.

இறைவன் உலகை படைக்க இந்த செய்முறை தான் செய்து இருபரோ என்று ஒரு கேள்வியோடு மண்டையை சொரிந்து கொண்டு ஒரு தாத்தா. நல்ல தாத்தா

முழுமையாய் இன்னும் கண்டு பிடிக்கலை அதுக்குள்ள இதை உபயோகப்படுத்தி ஊரை அளிக்கும் ஒரு குண்டும் செய்யலாம் என்று ஒரு உபரி குண்டு/கண்டு பிடிப்பு .

இந்த குண்டை ஒரு மத அடிப்படையிலான ஒரு கூழு லவட்டி கொண்டு சென்று விடுகிறது. எப்படி தாத்தாவை கொலை செயது அவர் மார்பில் சூடு வைத்து நாங்கள் தான் இதை செய்தது என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். அது யார். அவர்கள் தான் இல்லுமினட்டி . உலக சுற்றுப் பாதை வட்டம் இல்லை முட்டை வடிவம் என்று சொல்ல போக, பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டி வீட்டு சிறையில் பூட்டப்பட்ட கலிலியோ சார்ந்த குழு. அறிவியல் ஆராய்ச்சி யாளர்களை ஒடுக்க பார்க்க, அவர்கள் எல்லாம் சேர்ந்து உருவாகிய ஒரு குழுதான் இது. இல்லுமினட்டி.


குண்டை இவர்கள் எடுத்த அந்த கணத்தில் இருந்து சரியாக 24 மணி நேரத்தில் அது வெடிக்கும். எடுத்தவர் என்ன செய்தார் இதை கொண்டு கிறிஸ்துவ தலைமை இடமான வாடிகன் நகரில் கொண்டு வைத்து விட்டார். அங்கே அந்நேரம் பார்த்து இறந்து போன போப் ஆண்டவருக்கு மாற்று தேர்வு செய்ய உலகில் உள்ள அத்தனை கர்தினல்களும் கூடி உள்ளனர்.

குண்டு எடுத்த குண்டன் குண்டை கொண்டு அங்கே வைச்சிட்டு நாலு கர்தினல்களையும் கடத்திகிட்டு போயிட்டான். தெனா வெட்டா தொலை பேசியில் கூப்ட்டு இந்தா பாரு குண்ட வைச்சிட்டேன் நாலு பேர கடத்திட்டேன். மணிக்கு ஒருத்தரா அத்தனை பேரையும் கொல்ல போறேன். கடைசியா குண்டும் வெடிக்கும் என்று சவால் விடுகிறான்.

கொல்ல போற இடம் தெரியல. என்ன செய்யுறது. வீட்டு சிறையில் இருந்தபோ நம்ம கலிலியோ தாத்தா எழுதுன ஒரு புத்தகத்தில் உள்ள விடுகதை விடை தெரிந்தால் கொல்ல போற இடம் தெரியும்.

இடம் தெரிஞ்சுச்சா குண்டு வெடிசுச்சா என்பது தான் கதை. கதை முடிவு சொல்லி நான் எதுக்கு பாவம் கட்டிக்கிறேன்.


சின்ன சின்ன தகவல்களில் நம்மை அசத்துவார் இந்த ஆள்.

பதின் மூன்றாம் நூட்ரண்டிலே இலக்கியம் என்ன வடிவம். நிச்சயம் தாளும் அச்சு பிரதியும் இல்லை. பின் எப்படி ? பப்பய்ரஸ் என்னும் வடிவம் பற்றி நமக்கு விளக்குவார். இன்று இந்த பப்பய்ரஸ் எப்படி பதப் படுத்தப்படுகிறது என்பதை பற்றியும் விளக்குவார்.

ஆனால் என்ன இன்னும் ஒரு நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்னும் சந்தர்பத்தில் வாடிகன் நகரில் சிலைகளின் மர்ம உறுப்பு உடைக்கப் பட்டது போப் ஆண்டவரின் உத்தரவில் என்ற தகவல் தருவார். கொலை நடந்த இடத்தில பிணத்தை வைத்து கொண்டு இல்லுமினட்டி குழு வரலாறு பாடம். ஆம்பிக்ராம் என்றழைக்கப்படும் தலைகீழாக திருப்பினாலும் அதே எழுத்துக்கள் தெரியும் வண்ணம் எழுதும் முறை. ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ் என்ற எழுத்தை தலை கீழாய் படித்து பாருங்களேன்

நான் மேலே சொன்ன கதை சுருக்கத்திலே புரிந்து இருக்கும்.
துப்பறிதல் விடுகதை ஆன்மிகம் தத்துவம் அறிவியல் சரித்திரம் என்னும் அவியல் தான் அவர் கதை.

எல்லாம் சரி தான், படுக்காளி பசியாளி ஆகி அவியல் மாதிரின்னுட்டனே.


3 கருத்துகள்:

  1. Vow ! Great !! WOnderful !!!

    You have brought out the gist of the complicated story in your inimitable style with interlaced sense of humour. Well Done. We all look forward to your post after watching th emovie also.

    பதிலளிநீக்கு
  2. அண்ணா, கோபி
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு