பக்கங்கள்

உன்னதமான உதய சூரியன்

அரசியல் பதிவோ என்ற புருவ உயர்தல் படுகாளிக்கு புரிகிறது.
கிறிஸ்துமஸ்.
பிறந்த தேதி சரியாக தெரியாததால், ரோமானிய சூரிய தினத்தையே இயேசு கிறிஸ்து பிறந்த தினமாக உலகமே கொண்டாடி வருகிறது.
இருள் நீக்க வந்த ஒளி தானே அவர்.
இருள் என்று எதை சொல்ல… அறியாமை - மனித இயலாமை .

அன்று யூதர்கள் அவரை ஒரு அரசியல் தலைவராக பார்த்தார்கள். எதிர் பார்த்தார்கள் என்றும் சரியாக சொல்லலாம்.
ரோமானிய அரசும் அவ்விதமே. ரோமானிய அடிமை சங்கிலியில் இருந்து விடுதலை வாங்கி தருவார் என்று கணக்கிட்டு அவருக்கு ஈட்சை சாமரம் வீச, அச்சம் கொண்ட ரோமானிய அரசும் அன்று இயேசுவை கொன்றார்கள். அவர் சொல்ல வந்த கருத்தை காது கொடுத்து கேட்காத பரிதாபம்.
அவர் ஆன்மாவின் மீட்பு பற்றி பேச, அரசியல் பேசு என்று காலம் அன்று கட்டளை இட்டது.
இன்றும் பெரிய மாறுதல் இல்லையோ.
படிப்பு வேணும், காசு வேணும், வேலை வேணும், உடல் நலம் வேணும் என்ற நம் பிட்சை பிரார்த்தனைகள் – அறியோமையோ?

மதங்கள் சமூக - ஆன்மிக தேவைகளுக்காக , என்று வாதிட்டால் இறைவன் விரும்புவது பின்னதை, இறை அடியார்கள் வேண்டுவது முன்னதை.
இந்த வேறுபாடை மாத்திரம் பக்தர்கள் நாம், உணர்ந்து கொண்டால் - இந்த கிறிஸ்துமஸ் ஒரு மாபெரும் மாறுதல் தரும்.

2 கருத்துகள்:

  1. படுக்காளி

    உங்கள் எழுத்துக்கள் மிக அருமை

    என்றும் வாசிக்க இனிமை

    அர்த்தங்களோ மிகவும் புதுமை

    ஆனால்

    என்னை போன்றோர் வாசிக்க

    வார்த்தையில் - தேவை சிறிது எளிமை

    பதிலளிநீக்கு
  2. படுக்காளியின் பதிப்பு மிக நன்று!

    மதம் - மனிதனை, மனிதன் மூலமாக சமூகத்தை நெறி படுத்துவதற்கே அன்றி மூட நம்பிக்கயின் கிடங்காக சுயனலாவதிகளின் சொகுசு நாற்காலியாக மாராதிருத்தல் வேண்டும்.

    மதம் வளற்போம்
    மதம் பிடிக்காமல்!

    படுக்காளிக்கு எனது க்ரிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்!

    மேலே நண்பர் கூறியதை போல நானும் எளிமையை எதிர்பார்க்கிறேன்.

    எழுத்துக்களில் மட்டும்தான்!
    எண்ணங்களில் அல்ல!

    பதிலளிநீக்கு