பக்கங்கள்

உறங்காத ராத்திரி பகுதி 5

மணி 22:00 : சென்னை சென்ட்ரல்

தொலைபேசி கூண்டு. அழுக்காய் பிரயாணம் முடித்தவர்களும், சுத்தமாய் பிரயாணம் போவோர்க்களுமாய், வரிசையாய் ஆட்கள். காவலருடன் சென்றதால் உடனே பேசும் வாய்ப்பு கிடைத்தது. மெலிந்த தேகமாய், கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து அங்கே பார்வை இழந்த அலுவலர். கையில் உள்ள எண்ணை உரக்க சொன்னான் பிரபா. "இல்லையே இது நம்ம நம்பர் இல்லைங்க" என்று பிரபாவின் ஆர்வத்தில் ஆசிட் உதறினார்.

வழிந்தோடிய உற்சாகம் அவரின் அடுத்த பதிலால் மேலும் சறுக்கியது. சற்று நேர சிந்தனையில் சொன்னார் "மொத்தம் 94 பூத்து இருக்கு, கஷ்டம் சார் கண்டு பிடிக்கிறது ". தொடர்ந்து அந்த எண்ணை முயர்சித்தும் யாரும் எடுக்காத சூட்சமம் இப்போது புரிந்தது.

கண்கள் பார்த்தும் மனம் கணக்கிட்டதும் ஒரு 5 அல்லது பத்து இருக்கும் என்று தானே. இத்தனை பூத்து உள்ளது ஆச்சர்யம் தானே . 94 மிகப் பெரிசு அல்லவா, எப்படி கண்டு பிடிப்பது என்று லேசாய் ஒரு மிரளல், என்றாலும் முயற்சியை தளர விட வில்லை. கண்ணில் கண்ட மேலும் சில கூண்டுகளை ஓட்டமும் நடையுமாய் வினவினான். எல்லாம் இல்லைகளே. இரக்கமில்லாமல் நேரம் மட்டும் நகர்ந்து கொண்டே இருண்டது.

இது பலன் அளிக்காத முயற்சி என்பதாய் காவலர் லேசாய், நடையில் காட்டினர். பிரபா மட்டும் ஓடி கொண்டே இருந்தான். அவன் விடாமுயற்சி பலன் அழித்து. விதியும் தன் கோர பற்களை
விலக்கி கொண்டு 19 வது கூண்டை நெருங்கும்போது புன்னகை செய்தது.

இலக்கம் கேட்டு குனிந்து இருந்தவர், நிமிர்ந்து சொன்னார் "இது சிட்டி வாசலிலே பழக கடை பக்கத்திலே " ஆச்சரியமாய் ஏறிட்டான் பிரபா. பிரதேயகமாய் சிலருக்கு இப்படி எண்கள் நினைவில் நிறுத்துவது ஒரு பழக்கம். இறைவனாய் தெரிந்தார் அந்த பெரியவர். வியர்த்த கைகளை பிடித்து கண்ணில் ஒற்றி கொண்டான் பிரபா. இது தான் சக மனிதரில் இறைவனை காணும் உத்தியோ / வித்தையோ. நன்றியை வெறும் வாயால் சொல்லாது ஏன் தொட வேண்டும். உணர்ச்சியை வெளிப்படுத்தும் பொது வார்த்தைகள் சுலபமாய் தோற்கும். மெய் தீண்டுதல் அதை சுலபமாய் செய்யும். ஆம். தன் உணர்வு முழுவதுமாய் உணர்த்தப்பட்டத்தாய் பிரபா உணர்ந்தான். அதை உணர வேண்டிய அந்த மறு ஜீவனும் அதையே உணர்ந்தது . வாசர்கள் அனுமதித்தால் இன்னும் ஒரே ஒரு வரி. காதல் உணர்த்தும் செயலாய் காமம் உட்கொண்டால், எத்தனை பெரிய சமுக மாற்றம் இந்த மனித சந்ததி பெரும்.

ஒரு பழக்கடையின் ஓரத்தில் ஒளிந்திருத்தது அந்த தொலைபேசிக் கூண்டு . இலக்கத்தை பார்த்து உருதி செய்தார். ஆம் இது எங்க நம்பர் தான். சுருக்கமாய் விவரம் சொன்னான் பிரபா. உதவ தயாராகி வியாபாரத்தை விட்டு விட்டு சிந்திக்க, மைத்துனரின் இலக்கம் காண்பித்தான் பிரபா. பட்டியலை பார்த்து உறுதி செய்தார் "ஆமா சார், 9.45 போன் பண்ணி இருகாங்க . கண்கள் கடிகாரத்துக்கு தாவியது. இப்போது 10.45 . என்றால் சரியாக ஒரு மணி நேரம் முன்பாக. மேலும் விவரம் சேர்க்க காவலர் உதவிஉடன் கேள்விகளால் துருவினான். வந்தது இருவர். "ஆமா சார், கையிலே ஒரு பச்சை கலர் பாக் வச்சிருந்தாங்க, இங்கே வச்சிட்டு தான் அங்கே போன் பண்ணினாங்க " கை தன்னிசையாய் மேசையை தடவியது. இரண்டு தொலைபேசி எண்களை முயற்சி செய்து ஒன்றில் மட்டும் பேசினார்கள். ஆர்வம் தலைகேறியது அந்த இன்னொரு நம்பர் என்ன. "கால் கநெக்ட் ஆனாதான் சார் பதிவாகும் " கை கேட்டும் தூரத்தில் அவர்கள். அவர்கள் கையிலே பை. ஒரு மணி நேர தூரத்தில் நான். கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் காலைக்குள் கிடைக்க வேண்டுமே நேரம் செல்ல செல்ல, "இனி இங்கிருந்து என்ன பயன் ".

சோர்வான குடும்பம், குழப்பமான மனதோடு ரயில் நிலையம் விட்டு கிளம்ப முடிவு செய்தான். நெரிசல் இல்லாத சாலையில் உறங்கும் நகரத்தின் ஊடே விரைந்தது அந்த வாடகை கார்.

தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக