மணி 21:00 : சென்னை சென்ட்ரல்
எத்தனை பேர் காவல நிலையம் சென்று புகார் செய்து இருப்பிர்கள் என்று தெரியாது. செய்திருந்தால் நான் சொல்லுவது புதுசு அல்ல. புகார் செய்யும் நம்மையே திருடனாய் பார்க்கும் பார்வை அவர்களுக்கு. சந்தேகம் கூட பிறந்ததோ என்று தோன்றும்.
பதட்டத்தை மறைத்து கொண்டு சுருக்கமாய் விவரித்தான் பிரபா. பிரட்சினையின் தாக்கத்தை புரிந்த காவலர், ரயில் நிலைய உயர் அதிகாரியை தொடர்பு கொண்டார். அமைதியாய் கேட்டவர், அதிரடியாய் சொன்னார்.
பை தொலைத்திருந்தால், அதுவும் ஒரு ஐந்து நிமிடங்களுக்குள் என்றால் நிச்சயம் களவு இல்லை. மேலும் அது சக பிரயாணிகளிடம் சென்று இருப்பதே வாய்புக்கள் அதிகம். கோச் லிஸ்ட் பார்த்து தொலைபேசியில் பேசி முயற்சிக்கலாம்.
பிரபாவுக்கு இந்த சிந்தனை புதிது. நம்பிக்கை துளிர் விட்டது. புதிய கோணம் அவனுக்கு உத்வேகம் தந்தது. தான் மட்டும் தனியாய் இல்லை என்று புரிந்தது. ஒரு குழுவே அவனுக்காக அவன் பிரட்சினைக்காக எனும் போது உணர்வு வித்தியாசம் ஆனது. ஒரு நாடு அதன் கட்டமைப்பு புரிந்தது. அரை மனதோடு அழுது அலுத்து கட்டிய வருமான வரி நினைப்பு வலித்தது.
பார்வையை தளர விட்டு சன்னல் கம்பி உடே பார்த்த போது துணைவியார் வருவது தெரிந்தது. கைகளை கால் சட்டை பையின் உள் செலுத்தி காசு எடுத்து சன்னல் கம்பிகளின் ஊடே கொடுத்தான். சில சமயங்களில் நாம் விரும்பினாலும் பேச சநதர்ப்பம் அமைவதில்லை. பேசாமல் கண்களாலே, இருவரும் சூழ்நிலையை புரிந்து கொண்டனர். மௌனம் அங்கே கவிதையாய் மலர்ந்தது. ஆயிரம் வார்த்தை சொல்ல வேண்டியதை, ஒரு பரிவை, ஒரு கோபத்தை, ஒரு இயலாமையை பார்வை உணர்த்தியது.
அமைதியை கிழித்துக் கொண்டு மெல்லியதாய் சிணுங்கியது பிரபாவின் தொலை பேசி. அவன் செயலை மாற்றி அமைக்க போகும் அந்த அற்புத தொலை பேசி சாராம்சம் புரியாமலே காதுகளில் கொடுத்தான். அழைத்தது மைத்துனன். திருவனந்தபுரத்தில் இருந்து . மைத்துனன் அதிரடியாய் கேட்ட கேள்வி ஆச்சர்யம் தந்தது . "நீங்கள் பச்சை நிறத்தில் ஒரு பையை தொலைத்திர்களா "
என்ன இது. இது எப்படி இவருக்கு தெரிந்தது.
"ஒருவர் அழைத்திருந்தார் அவர் அந்த பை வைத்திருப்பதாய் சொன்னார்" என்று கேட்ட போது அடி வயிற்றில் சந்தோசம் பரவியது. யார் அவர், எங்கிருக்கிறார், அவர் தொலை பேசி என்ன என்ற சர மாரி கேள்விகளுக்கு தெரியாது என்ற ஒற்றை பதில் அலுப்பை தந்தது.
புத்தி வேகமாய் சிந்தித்து அழைத்தவரின் தொலைபேசி எண்ணை கைபேசியில் பார்க்க சொன்னது. ஒ. சென்னை இலக்கம் அது.
காவலர் குழுவும் சுறு சுறுருப்பானது. தொலைபேசி அலுவலகம் அழைத்து இந்த நம்பரின் முகவரி கேட்க அது சென்னை சென்ட்ரல் பொது தொலைபேசி கூண்டின் இலக்கம் என்ற பதில் கிடைத்தது. என்றால் பெயரில்லா அந்த ஆத்மா பையை எடுத்து இதே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பேசிஇருக்கிறார் . பேசியவர் எப்படி திருவனந்த புரம் பேசினார். அவருக்கு மைத்துனரின் நம்பர் எப்படி கிடைத்தது. புரியவில்லை, என்றாலும் அதற்கு இது நேரமில்லை. கையில் சேகரித்த நம்பருடன் துணைக்கு ஒரு காவலருடன் பிரபா வேகமாய் ஓடினான்.
தொடரும் ...
உறங்காத ராத்திரி பகுதி 4
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக