பக்கங்கள்

உறங்காத ராத்திரி பகுதி 3

மணி 20:20 : சென்னை சென்ட்ரல்
“அப்போ பை காணாமா போச்சு, இப்போ அம்மாவும் காணாமா போச்சு” என்ற மழலை சொல் கேட்டு திரும்பினான். சிறுபிள்ளை தனமாய் தொலைத்தது புத்தியில் உரைத்தாலும் புலம்புவதற்கு
இது நேரம் இல்லை. தீர்வு கண்டே ஆக வேண்டிய சமயம் இது.
அனிச்சையாய் கண்கள் மூடி கொண்டது, கண்கள் உள்ளிருந்து மேலே நோக்கியது. சூழ் நிலை மறந்தது. சிந்தனைகள் பிராத்தனையாய் உரு மாறியது. பிரார்த்தனைகள் கட்டளைகளாய் மலர்ந்தது.
இனி அழுவது இல்லை. கோபம் இல்லை. புலம்புவது இல்லை.
நிச்சயம் எனக்கு அந்த பை திரும்ப கிடைக்கும் . நாளை நான் நிச்சயம் துபாய் செல்வேன் .
தெளிவான வார்த்தைகள் மனதிலே வழிந்தோடியது. தன்னை புதியதாய் உணர்ந்தான் பிரபா.

பணிமனை சென்ற ரயில் எங்கே நிற்கும், கடந்து சென்ற ரயில் பணியாளை கேட்டான். தெரிந்து கொண்டு, துணைவியார் வந்து விடுவார் என்று சங்கல்பம் செய்து கொண்டு அத்தனை முட்டைகளையும் முதுகில் சுமந்து கொண்டு மகனுடன் நடக்க ஆரம்பித்தான். சுமையின் அழுத்தம் அவனை பாதிக்கவே இல்லை.

தனியே சென்ற துணைவியாரை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவிர்கள் அல்லவா, எனவே பிரபாவை விட்டு விட்டு ரயில் பெட்டிக்கு செல்வோம் வாருங்கள் .

பதட்டத்தில் அவன் சரியாக பார்காது இருந்தால் என்ற நப்பாசை யோடு தேட ஆரம்பித்த துணைவியார் நேரம் செல்ல செல்ல நம்பிக்கை இழந்தார். இன்னொரு பாஸ்போர்ட் எடுப்பது சிரமமோ, அதுவும் ஒரு ராத்திரி தானே உள்ளது என்று நினைத்த போது , இருள் சூழ்ந்தது, மின் விசிறிகள் நின்ற ஒலி கேட்டது. இருள் கருப்பு மை போலே சட்டென பெட்டியில் பரவியது. பார்வை திணறியது.
என்ன ஆச்சு, நிமிர்ந்து மேலே பார்த்த போது மின் துண்டிக்கப் பட்டு இருப்பதை உணர்ந்தார்.
சரி முழுதும் பார்த்து விடுவோமே என்று சொற்ப வெளிச்த்தில் கண்களை பழகிக் கொண்டு தேடுதலை தொடர்ந்தார். கிரிச்… என லேசான ஓசை கேட்டு பின்னால் திரும்பி பார்த்தால், ஒன்றும் இல்லை. சரி தேடுதலை தொடருவோம் என்று குனிய முற்படும் போது தான் சன்னல் வழியே அந்த விபரீதம் தெரிந்தது. வண்டி நகர்ந்து கொண்டு இருபது. ஒ… முதல் சில தப்படிகள் புகை வண்டி நகருவது கண்களுக்கு மட்டுமே புரியும். காதுகளுக்கு புரிய சிறிது வேகம் தேவை.
விபரீதம் புத்தியில் உரைத்து, செயல் சற்று தாமதம் ஆனதை உணர்ந்தார். வேக வேகமா வாசல் வந்து போது நல்ல தூரத்தில் ப்ளாட்பாரம் தெரிந்தது. குதிக்கலாமா… என்ற எண்ணம் வராமல் இல்லை. தூரமும் வேகமும் சற்றே அந்த எண்ணத்தை பலவீனபடுத்தியது. சரி எப்படியும் சற்று நேரத்தில் நிர்கத்தானே வேண்டும என்ற எண்ணத்தின் ஊடே ஒரு பேச்சு குரல் கேட்டது.

சற்றே நம்பிக்கை துளிர் விட்டது. யாராய் இருக்கும்...குரல் வந்த திசை நோக்கி, குறைந்த வெளிச்சம் ஆகையால் மெல்ல நடந்தார். பார்வைக்கு உருவம் வரும் முன்னரே, அவன் சாராய நெடி. எச்சரிகை ஒலி லேசாய் மனதில்.
"யாரம்மா அது" குரல் வந்த போது சற்றே நம்பிக்கை பிறந்தது. விவரம் சொல்ல, கேட்டவன் வருந்தினான். "என்னம்மா நீங்க..., சரி உடுங்க அடுத்த ரயில் புடிச்ச மறுக்கா போயிரலாம்"
வண்டி நிற்கிற வழியாய் தெரியவில்லை. இன்றைக்கு பார்த்து நல்ல வேகம் வேறு. நேரம் சற்று கடந்த போது, இன்னொரு ஆள் அரவம் கேட்டது. மெலிந்து இருந்த தேகத்தில் சாராயம் இல்லை , மடிச்சு கட்டிய லுங்கியில்அவர்களை நோக்கி .
பயம் மெல்லியதாய் பரவியது.
முதல் மனிதனை பார்த்த போது வந்த நம்பிக்கை இருவர் என்ற போது சங்கடம் தந்தது. தனிமையான நேரம், இருள், ஓடும் ரயில், தொலைத்த பை என கலவையை ஒரு சங்கடம்.

சே... வந்தது பெரிய தப்பு. என்ன நினைத்து என்ன, எப்படி யாவது போனால் சரி. வந்தவன் விவரம் கேட்டு, சொன்னான் "அம்மா இந்த வண்டி shed போயிடும். நீங்க வெளியே போய் ஆட்டோ புடிச்சீங்கண்ணா 20 ரூபா கொடுத்தாநேர சென்ட்ரல் போயிரலாம்.
சரக் என்று உறைத்தது. வெறும் கையிலே ஓடி வந்து ஏரியவளுக்கு ஏது காசு. நினைவுகள் முட்டி மோதும் வேளையில், வண்டி வேகம் குறைந்து நிற்க தயாராகியது. ப்ளாட்பாரம் இல்லாததால் இறங்குதல் கடினமாய் இருந்தது, நினைத்ததை விட உயரம் அதிகமாய் இருந்தது. சரளை கற்களின் பாதை நடப்பதற்கு சற்று கடினமாய் இருந்தாலும், முடிந்த வரை வேகமாய் நடக்க ஆரம்பித்தார். சற்று நேர நடையில் மூலை திரும்பியதும், வெளிச்சமாய் பார்த்த திட்டு, ஆறுதலாய் இருந்தது.

இருவருமே உடன் வந்து ஆட்டோ அமர்த்தி உதவி செய்து விட்டு சென்றனர். ஆட்டோ ஓட துவங்கியதும் குளிர் காற்று முகத்தில் பட்டதும் இது வரை இருக்கமாய் இருந்த உடம்பை லேசாய் தளர்த்தி கொண்டார். தொலைந்து போன பை கிடைத்திருக்குமா, தனியாய் போனதற்கு திட்டுவானா என்ற நினைவுகளுக்கு மத்தியில் நகர நெரிசலில் ஆட்டோ வேகமாய் நகர்ந்தது. தொடரும் ...

1 கருத்து: