பக்கங்கள்

உறங்காத ராத்திரி - பகுதி 2

மணி 20:00 : சென்னை சென்ட்ரல்
சோம்பேறித்தனமாக பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், நிற்க தயாராக ஓடிக் கொண்டு . இறங்குவதற்கு ஆயத்தம் ஆனாலும் சென்னை மண்ணை மிதிக்கும் குதுகலத்தையும் பிரபா மறக்கவில்லை. குனிந்து சன்னல்களின் ஊடே பார்வையால் துளாவினான். எப்போதும் ஒரு நப்பாசை, தெரிந்தவர் யாரையாவது பார்போமா என்று.
பெருமுச்சு ஒன்றோடு, இதற்கு மேல் முடியாது என்பதாய் ரயில் நின்றது. பரபரப்பாய் ஆட்கள் உதிர்ந்தார்கள் . என்ன அவசரம். முட்டி மோதி கொண்டு ஓவொருவரும். சிவப்பு ஆடை சுமை தாங்கிகள் பயணிகளின் எதிர் திசையில். வேலைக்கு ஆலாய் பறந்து பார்வையாலே பகுத்து கொண்டு இருந்தார்கள். காலம் பொன் போன்றது . இருக்கிற நிமிடங்களில் வாடிக்கையாளரை
தேர்வு செய்ய வேண்டும்.
பிரபாவின் அருகிலே ஒரு சுமை தூக்கி. பேரம் பேச பெரிசாய் மூடு இல்லை என்றாலும் செந்தமிழில் பேசும் வாய்ப்பை இழக்க விரும்பாதவனாய் பிரபா. பேரங்கள் பேச பட்டு விலை நிர்ணயம் ஆனது.
சுமை தூக்கியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து பிரபா வேகமாய் நடக்க, முன்று வயது மகனுடன் துணைவியார் சிறிது தூரத்தில். சுரத்தில்லாமல் மூட்டைகளின் எண்ணிகையை கூட்டினார் , மூணு அஞ்சு ஆறு ஏழு , லேசாய் அதிர்ந்து மறுபடியும் எண்ண, அதே எண்ணிக்கை வர, விரைவாய் நகர்ந்து பிரபாவிடம் குறைந்ததை சொன்னார். சிரித்து கொண்டே நின்ற பிரபாவின் மனதில் பரமார்த்த குரு சீடர்கள் எண்ணிக்கை கதை.
அஞ்சு ஆறு ஏழு அவனும் அதை உணர, ஆம். ஒரு பையை காணவில்லை. அவர்களை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு அந்த பச்சை பையை தேடிஓடினான். ஓட்டமும் நடையுமாய் அவர்கள் பிரயாணித்த பகுதிக்கு வந்து தேடினான். மேலும் கீழுமாய் அலசி பார்த்ததில், குப்பைகளும் காலி பட்டில்களுமே இருந்தன, தேடி வந்த பச்சை பையை காணவில்லை.
திடிரென்று ஒரு எண்ணம் பளிச்சிட, என் பாஸ்போர்ட் வீட்டு பத்திரங்கள் என்று அத்தனை ஆவணங்களும் அதில் அல்லவா இருண்டது. அடி வயிட்றில் பயம் அப்பி பிடித்தது. மறுபடி தேடினான். லேசாய் கை நடுங்கிற்று.
இல்லை. இங்கு இல்லை. அரை மனதுடன் கீழே இறங்கினான்.

காத்திருக்க விருப்பம் இல்லாத சுமை தூக்கி சென்றதால், துணைவியார் முட்டை முடிச்சு களுடன் குழந்தையுடன் ஏறக்குறைய வெறுமையான ப்ளாட்பாரத்தில் . லேசான கலங்கிய விழிகளுடன், நடுங்கும் வார்த்தைகளில் சொன்னான், அங்கே இல்லை.

துணைவியார் ஏறிட்டு பார்த்து 'சரியா பார்த்திங்களா' என்றதும் கோபம் உச்சிக்கு ஏறியது. பார்த்துதானே சொல்றேன், வார்த்தைகள் ஓங்கி ஒலித்தன. 'ஒரு நிமிசம் இருங்க, நான் பார்த்திட்டு வரேன்' பதிலுக்கு காத்திராமல் விறு விறு வென்று நடந்தார்.
சூழ்நிலையின் தீவிரம் உரைக்க, செய்வதறியாது நின்றான் பிரபா. நாளை காலை துபாய் செல்ல வேண்டும பாஸ்போர்ட் இல்லை என்றால் எப்படி. இத்தனை நாள் காத்திருந்த அந்த தருணம் தன் கண் முன்னால தகர்வதை, கொள்ள மனம் மறுத்தது. என்ன செய்வது இப்போது.
தொலைந்து போன அந்த பை தானே வேண்டும். மற்றது போயிருந்தால் கூட பரவாயில்லை.
கோர்வை இல்லது எண்ணங்கள் முட்டி மோதி கொண்டு இருந்த
அந்த நேரத்தில் தான் அது நிகழ்த்து. பயணிகள் இறங்கியவுடன் பணிமனைக்கு செல்ல வேண்டி மெல்லிய ஓசையுடன் ரயில் நகர தொடங்கியது. சுரீர் என்று உணர்ந்தான் பிரபா. துணைவியார் இறங்குவார் என்று எதிர்பார்த்து விழிக்க, ரயில் வேகம் பெற்று திரும்பி சென்றது.
இருண்ட ப்ளாட்பாரத்தில் ஒத்தையிலே தூக்க முடியாத சுமைகளுடன் குழந்தையுடன் என்ன
செய்வது என்ற தீர்மானம் இல்லாமல் பிரபா.
தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக