என்னடா படுக்காளி ஒண்ணும் புரியலயே.
குதமுகுதபி!!!! திட்டலயே.
கெட்ட வார்த்தைக்கு, அக்கா அல்லது தங்கச்சி மாதிரியும் இருக்கு, அசிங்கமான வார்த்தைக்கு அடுத்த வீடு மாதிரியும் இருக்கு என நினைப்பவருக்கு தன்னிலை விளக்கம்.
சப்ஜெக்ட் காலம் ரொம்ப சின்னதா இருக்கு.
’ குழந்தை தலை எடுக்கும் முன் ; குழந்தை தலை எடுத்த பின்’
என்று எழுத முடியல. ப்ளாக்கர் கிட்ட சொன்னா தேவல, இல்லன்னா மன்சூர் அலிகான் பிளாக் தொடங்கினா ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட ........ ‘ எனும் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த படத்த எப்படி எழுதுவாரு.
செய்யுள் பதிவுரைக்கு விளக்க உரை எழுதலாம், டைட்டிலுக்கே ஒரு கோனார் நோட்ஸ் போடுறதெல்லாம் ரொம்ப ஓவர். சரி பதிவுக்கு போவோம்.
சச்சின் டெண்டுல்கர்,
கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி எல்லோராலும் விரும்பப்டும் ஒரு மனிதன். மட்டையை எடித்து களத்தில் நுழைந்தால், தானே செல்வது போல், ஒவ்வொருவரும் நினைப்பார். கொஞ்ச நேரம் அவரை விட்டு அப்பா டெண்டுல்கர் பற்றி யோசிப்போம். சராசரி அரசு ஊழியர், சிக்கன வாழ்க்கை, சின்ன சின்ன சாதனைகள்.
அவரது 40 – 45 வயதில் ஒரு பெரிய மாற்றம். 16 வயது மகன் பட்டையை கிளப்ப தொடங்கினான். சாதனைகள் அவன் பின் வந்தது. புகழ் பணம் எல்லாம் எதிர்பார்த்த்தற்கு மேல் வந்த்து. ச்ச்சினின் தகப்பன் என உலகம் அங்கிகரித்த்து. நல்ல பிள்ளையை பெத்துருக்கீயா என கொஞ்சியது. வாழ்க்கை தரம், சாதனை, அங்கீகாரம், பொருளாதாரம் எல்லாமே அவரது முனைப்பு இல்லாமல் கூரையை பிச்சிக் கொண்டு கொட்டியது.
நிற்க, இன்னொரு தகப்பனை பார்ப்போம். ஆட்டோ சங்கரின் அப்பா.
முகவரி இல்லாத, முகம் தொலைந்த அந்த மனிதனை நினைக்கிறேன். சராசரி வாழ்வாய் வாழ்ந்த அவரது வாழ்வின் மத்தியில் சூராவளி வீசியிருக்க வேண்டும். தவம் இருந்து பெத்த மகனை, ஒரு முழ கயிறில் அரசாங்கமே நீ வாழ தகுதி இல்லாதவன். நீ வேண்டாம், என பலவந்தமாய் உயிரை பறித்த போது பெத்த மனம் எப்படி இருந்திருக்கும். சமூகம், உறவுகள் அவரை எப்படி பார்த்திருக்கும். எஞ்சிய காலத்தை அவர் எவ்வளவு தர்மசங்கட்த்தில் வாழ வேண்டி இருந்திருக்கும்.
இந்த சிந்தனை எனை வேறு திசைக்கு இட்டு செல்கிறது.
மனித வாழ்வு இரு கூறாய் இருக்கிறது. நம் படிப்பு, உத்தியோகம் என தனது திறமையால் வரும் சமூக அங்கீகாரம் முதல் படி. இரண்டாம் படி நம் இளைய தலை முறை திறமையால் நமக்கு திணிக்க படும் அடுத்த வாழ்வு இரண்டாம் படி.
மத்திம வயதில் இது நடக்கும். 40 – 45 வயதுள்ளோர் அனைவரும் இதை உணர வேண்டும். உங்களை பரீசீலித்து ஒரு மார்க்கும் போட்டு உங்கள் தேர்வின் அரை இறுதி பரிட்சை ரிசல்ட் வந்து விட்ட்து.
இனி இருப்பது முழு பரிட்சை.
ஒரு கேள்வி நல்லது என தோணுது. முழு பரிட்சையின் முடிவுக்கு தங்களின் முயற்சி என்ன ????
கு.த.மு...கு.த.பி...
பதிலளிநீக்குவாங்க படுக்காளி
த.வி.இ...ப.எ.இ...
(தலைப்பு வித்தியாசமா இருக்கு... படைப்பு எப்படி இருக்குமோ??!!)
ஒரு மட்டையடி வீரரையும், மண்டை உடை வீரரையும் ஒப்பிட்டு வாழ்க்கையை விளக்கியது நன்று...
இங்க மறுபடியும் பிரிதுவக்க.... ஆரம்பிக்க வேண்டாமென்று நினைக்கிறேன்... வேற மாதிரி சொல்லணும்னா...
"பிரிதுவ......................
தன் தன் மகனை ரௌடி என கண்ட தந்தை"...
என்ன கொடுமை சார் இது... இதுக்கு கூடவா குறள் யூஸ் பண்ணுவாய்ங்க...!!??
//மத்திம வயதில் இது நடக்கும். 40 – 45 வயதுள்ளோர் அனைவரும் இதை உணர வேண்டும். உங்களை பரீசீலித்து ஒரு மார்க்கும் போட்டு உங்கள் தேர்வின் அரை இறுதி பரிட்சை ரிசல்ட் வந்து விட்ட்து.
இனி இருப்பது முழு பரிட்சை.
ஒரு கேள்வி நல்லது என தோணுது. முழு பரிட்சையின் முடிவுக்கு தங்களின் முயற்சி என்ன ???? //
நல்ல சிந்தனை தான்... முழு பரீட்சையின் முடிவுக்கு எங்கள் முயற்சி...??!! அதானே பண்றோம்... சொல்லுவோம் விரைவில்...
நல்ல பரீட்சார்த்தமான முயற்சி.
பதிலளிநீக்குவாங்க செல்வகுமார். வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.
பதிலளிநீக்கு