அந்த காலத்தில் கரி வண்டியே இஞ்சின் என்பதால் வண்டி போகும் திசையோ, சன்னலோர இருக்கையோ சிலருக்கு பிடிக்காது. பறந்து வரும் கரித் துகளில் கண்ணும் எரியும், சட்டையும் நிறம் மாறும். எனவே அதை தவிர்ப்பவர் அதிகம். துவைப்பது நான் இல்லை என்பதால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை.
மணியாச்சியில் வண்டி மாறும், அதற்கு பிறகு டீசல் எஞ்சின். செங்கல்பட்டு வரை. அப்புறம் எலெக்டிரிக். 1970 ம் ஆண்டின் நிலவரம், தெரிந்தவருக்கு இது நினைவை உரசும், புதியவருக்கு நினைவு விதைக்கும் என நம்பி தொடருகிறேன்.
நடுவில் தட்டபாறை எனும் சிற்றூர். சிறுவர் சீர்திருத்த பள்ளி இங்கு உண்டு. எங்கள் ஊரில் மிகுந்த சேட்டை செய்யும் சிறுவரை பயமுறுத்த ‘ஒழுங்கா இரு, இல்ல தட்டாப்பாறை செயில்ல தள்ளிருவேன்’ என்று திட்டுவார். என் சோட்டு பையன்கள் எல்லோருக்கும் இந்த தட்டாப்பாறை என்றால் பயம் உண்டு.
சிகு புகு என வேகமாய் செல்லும் ரயிலின் கம்பி சன்னல்களூடே ஒரு வித பயம் கலந்து பார்ப்பது வழக்கம். ஒரே ஒரு முறை ரயிலில் எங்களோடு சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு செல்லும் இளைஞன் ஒருவன். கருத்த கைகளில் பள பள விலங்கு. சவரம் செய்யாத, காற்றின் தயவில் கலைந்த அழுக்கு தலை, காவியேறிய பற்கள், மெலிந்த தேகம். இவன் என்ன செய்திருப்பான் என அறியத் துடிக்கும் மனது பக்கத்தில் உள்ள விறைப்பான காக்கி உடை பார்த்ததும் சுருங்கிக் கொண்டது.
மணியாச்சி வந்த்தும் எங்கள் பெட்டியை விட்டுவிட்டு, ரயில் சென்று விடும். இனி நெல்லையில் இருந்து வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் வரும் வரை காத்திருப்போம்.
காத்திருக்கும் அதே நேரத்தில் ஒரு கதை சொல்லுவார்.
சுதந்திர போராட்ட்த்தில் உயிர் பலி வாங்கிய கதை அது. தீவிரவாதம் தொடங்கிய அத்தியாயம். பலியானது ஆஷ் எனும் வெள்ளையர். கொன்று பின் கழிவரையில் தன்னையும் சுட்டு தற்கொலை செய்தவர் வாஞ்சி ஐயர்.
காலச்சுவடு தந்த அரிய தகவல்கள். ரொம்ப பிரமாதம்.
வாஞ்சியின் இறந்த உடலில் – எடுக்கப்பட்ட கடிதம்
ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta
தூத்துக்குடி சுதந்திரப் போராட்டமும்.
1906 இன் தொடக்கத்தில் தூத்துக்குடியில் சுதேசியம் முகிழ்த்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் சுதேசியம் என்றால் மெழுகுவத்தி செய்தல், வளையல் அறுத்தல் என்றிருக்க, தூத்துக்குடியிலோ சுதேசிக் கப்பல் கம்பெனி என்ற பிரம்மாண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
12 மார்ச் 1908இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அடுத்த நாள் திருநெல்வேலி நகர், தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய ஊர்களில் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ‘திருநெல்வேலி கலகம்’ என்று அரசு ஆவணங்களில் அறியப்படும்
தூத்துக்குடியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர் மட்டுமல்லாமல், பெஸ்ட் அன் கோ பணியாளர், நகர்மன்றத் துப்புரவு ஊழியர், கசாப்புக் கடைக்காரர், ஜட்கா ஓட்டுநர், சவரத் தொழிலாளர் என அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். 144 செயலில் இருந்த பொழுதும் அன்று பிற்பகல் வண்டிப்பேட்டையில் ஒரு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது.
12 மார்ச் 1908இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அடுத்த நாள் திருநெல்வேலி நகர், தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய ஊர்களில் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ‘திருநெல்வேலி கலகம்’ என்று அரசு ஆவணங்களில் அறியப்படும்
தூத்துக்குடியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர் மட்டுமல்லாமல், பெஸ்ட் அன் கோ பணியாளர், நகர்மன்றத் துப்புரவு ஊழியர், கசாப்புக் கடைக்காரர், ஜட்கா ஓட்டுநர், சவரத் தொழிலாளர் என அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். 144 செயலில் இருந்த பொழுதும் அன்று பிற்பகல் வண்டிப்பேட்டையில் ஒரு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது.
எங்க ஊரை பற்றி பத்தி எழுத்தி இருக்கிய.
பதிலளிநீக்குநன்றிங்க :)
வாங்க நிலா ரசிகன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குநீங்களும் நம்ம ஊரா. ரொம்ப சந்தோசம்.
உங்க பேரு நல்லா இருக்கு, நிலா ரசிகன். அதுக்கு நான் ரசிகன்.