பக்கங்கள்

வெங்கிக்கு நோபல் பரிசு

ஏழாம் வகுப்பு படிக்கும் போது, படுக்காளி நண்பன் சொன்னான். ஒண்ணாப்பு ஆரம்பிச்சு, காலேஜ் வரைக்கும் எல்லா புஸ்தகமும் படிச்சு, ஒரே நேரத்தில பரிச்சை வைப்பாங்க, அதுலே பர்ஸ்ட் வந்தா நோபல் பிரைஸ் கிடைக்கும். இன்று சிரிப்போடு அதை நினைக்கிறேன்.

இந்த வருடத்தின் நோபல் பரிசு. வெங்கிட ராமன் ராதா கிருஷ்ணன் அவரது வேதியியல் ஆராய்ச்சிக்காக என ஊடகங்கள், அரசு பாராட்டும்போது தான் நமக்கு தெரிகிறது. சொல்லவே இல்ல, சொல்லாமலே இப்படி ஒரு தேர்வு, போட்டி முடிவு எல்லாமா. சத்தம் இல்லாம நடக்குதே. சரி தெரிஞ்சு கிட்ட்துக்கு அப்புரமாவது என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்ப்போமே, என யோசித்த்தே இந்த பதிவு.

1900 வருடம் தொடங்கிய சர்வதேச அளவில் இலக்கியம், அறிவியல், சமூகம் சார்ந்த மிக உயரிய பரிசு, அடையாளம். படத்தில் உள்ள ஆல்பிரட் நோபலுக்கு ஒரு சல்யூட், இப்படி ஒரு காரணத்திற்காக தன் சொத்தை எழுதி வைத்த்தற்கு.

இந்திய சரித்திரம் சிலிர்க்கும் நாள். ஈன்ற பொழுதினும் பிரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டாள் நம் இந்திய தாய். நம்ம வெங்கிட ராமன் ராதா கிருஷ்ணன் நோபல் பரிசு வாங்கிய ஒன்பதாவது இந்தியர்.

ரிப்போசோம் தான் உடலில் புரோட்டின் தயாரிக்குது. தாவர, விலங்கிய மனித உயிரையும் சேர்த்து தான்.எல்லோருக்கும் ரிப்போசோம் தான். அதனுடைய தன்மையை பரிமாணத்தை எக்ஸ் ரே மூலமாய் கலாய்ச்சு, படம் போட்ட்து தான் இவர் சாதனை. காய்ச்சல், ஜலதோஷம் எனும் உபாதைக்காக நாம் சாப்பிடும், ஆண்டி பயோட்டிக்க் எப்படி இதனுடம் ஒட்டிக் கொள்கிறது என்பதை விளக்கும் மூலக் கூறும் கண்டுபிடித்ததால் இந்த பரிசு.

இதில் ஆச்சர்யம் உலகில் மூவர் இந்த ஒரே ஆராய்ச்சியில் தனித்தனியாய் ஈடுபட்டு, ஒரே எக்ஸ் ரேயின் மூலமாய் தீர்வும் கண்டுள்ளனர். எனவே எல்லோருக்கும் பரிசு பணம் பங்கிட்டு கொடுக்கப் பட்டு உள்ளது. நம்மாளின் பங்கு 7.3 கோடி.

இது மனிதனை மனித உயிரை இன்னும் கொஞ்சம் நொண்டி அடிக்க
வைக்கும். ஊசலாடும் உயிரை இன்னும் கொஞ்சம் ஊதி விடும்.

சிதம்பரம் பெற்றுத் தந்த சீரிய சிந்தனையாளருக்கு வாழ்த்துக்கள்.இது டிரைலர் தான் இன்னும் என் ஆராய்ச்சி முடிவு பெறட்டும் மெயின் பிக்சர் இன்னும் இருக்கே என்ற அவரது தன்னம்பிக்கையும் தன்னடக்கத்தையும் வியந்து பாராட்டுகிறேன்.

இதை செய்தியாய் வெளியிடும் சர்வதேச பத்திரிக்கை இந்த பதிவை வேறு திசைக்கு கூட்டிச் செல்கிறது.

இந்தியனாய் பிறந்து இன்று அமெரிக்கன் ஆகி விட்டாரே நம்ம வெங்கி. சர்வதேச பத்திரிக்கை எல்லாம் அவரை அமெரிக்கன் என்று தானே கொண்டாடுகிறது.

சிதம்பரத்து மண்ணும் தில்லை அம்பலமும் அன்னியமாகி விட்டதே.
சட்டென இடைமறித்து ஒரு சிந்தனை. இல்லை இதில் இந்தியன் எனும் அடையாளம் தேடுவது தவறோ!!

1979ல் அன்னை திரேசா பரிசை, நமது என்று கொண்டாடிய மனது, அவர் வந்தடைந்த பூமிதானே நம் இந்தியா என பார்க்க மறந்த்தே.
அன்று பார்த்த்து மனித்த்தை தானே. மனித நேயம் தானே.

1 கருத்து:

  1. //ஏழாம் வகுப்பு படிக்கும் போது, படுக்காளி நண்பன் சொன்னான். ஒண்ணாப்பு ஆரம்பிச்சு, காலேஜ் வரைக்கும் எல்லா புஸ்தகமும் படிச்சு, ஒரே நேரத்தில பரிச்சை வைப்பாங்க, அதுலே பர்ஸ்ட் வந்தா நோபல் பிரைஸ் கிடைக்கும். இன்று சிரிப்போடு அதை நினைக்கிறேன்.//

    அப்போ அது இல்லையா... நான் கூட இதான் உண்மையோன்னு நெனச்சேன் "தல"..

    //1900 வருடம் தொடங்கிய சர்வதேச அளவில் இலக்கியம், அறிவியல், சமூகம் சார்ந்த உயரிய அடையாளம். படத்தில் உள்ள ஆல்பிரட் நோபலுக்கு ஒரு சல்யூட், இப்படி ஒரு காரணத்திற்காக தன் சொத்தை எழுதி வைத்த்தற்கு.//

    இந்த ஒரு உயரிய சிந்தனை கொண்ட ஆல்ஃப்ரட் நோபல் அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு ராயல் சல்யூட்...

    //இந்திய சரித்திரம் சிலிர்க்கும் நாள். ஈன்ற பொழுதினும் பிரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டாள் நம் இந்திய தாய். வெங்கிட ராமன் ராதா கிருஷ்ணன் ஒன்பதாவது இந்தியர்.//

    ப‌டுக்காளி.... வெங்கிட‌ ராம‌ன் ராதாகிருஷ்ண‌ன் ஒன்ப‌தாவ‌து இந்தியர்? ச‌ரியான‌ விப‌ர‌ம் த‌ர‌லாமே...

    //தாவர, விலங்கிய மனித உயிரையும் சேர்த்து தான், புரோட்டின் தயாரிக்கும் ரிப்போசோம் எனும் உட்டாலங்கடி தன்மையும், நம் உடலில் செலுத்தும் அண்டி பயோட்டிக்க் எப்படி இதனுடம் ஒட்டிக் கொள்கிறது என்பதை விளக்கும் மூலக் கூறும் கண்டுபிடித்ததால் இந்த பரிசு.//

    இது என‌க்கும் தெரியுமே... இப்போ, என‌க்கு நோப‌ல் ப‌ரிசு கிடைக்குமா? இல்ல... எனக்கு தா‌ருவீய‌ளா?

    //இதில் ஆச்சர்யம் உலகில் மூவர் இந்த ஒரே ஆராய்ச்சியில் தனித்தனியாய் ஈடுபட்டு, ஒரே எக்ஸ் ரேயின் மூலமாய் தீர்வும் கண்டுள்ளனர். இது மனிதனை மனித உயிரை இன்னும் கொஞ்சம் நொண்டி அடிக்க வைக்கும். ஊசலாடும் உயிரை இன்னும் கொஞ்சம் ஊதி விடும்.//

    நாம‌ என்னா சொன்னாலும், அவிய்ங்க‌ அவ‌ர‌, அமெரிக்க‌ர்னு சொல்லிட்டாய்ங்க‌ளே... ஆகவே, இந்த நோபல் பொறுத்தவரை, இந்தியாவுக்கு "நோ ப‌ல்".. நம்ம‌ பாஷையில் சொன்னால் "ஆஹா...வட போச்சே...."

    //சிதம்பரம் பெற்றுத் தந்த சீரிய சிந்தனையாளருக்கு வாழ்த்துக்கள்.இது டிரைலர் தான் இன்னும் என் ஆராய்ச்சி முடிவு பெறட்டும் மெயின் பிக்சர் இன்னும் இருக்கே என்ற அவரது தன்னம்பிக்கையும் தன்னடக்கத்தையும் வியந்து பாராட்டுகிறேன்.//

    நானும் உங்க‌ளுட‌ன் இணைந்து அவ‌ரின் சாத‌னையை பாராட்டுகிறேன்...

    //இந்தியனாய் பிறந்து இன்று அமெரிக்கன் ஆகி விட்டாரே நம்ம வெங்கி. சர்வதேச பத்திரிக்கை எல்லாம் அவரை அமெரிக்கன் என்று தானே கொண்டாடுகிறது. இதில் இந்தியன் எனும் அடையாளம் தேடுவது தவறோ!!//

    ஆமாம் சார்... ஆமாம்... அதை தான் முந்தைய பத்தியில் சொல்லியிருக்கிறேன்..

    //சிதம்பரத்து மண்ணும் தில்லை அம்பலமும் அன்னியமாகி விட்டதே. இல்லை, 1979ல் அன்னை திரேசா பரிசை, நமது என்று கொண்டாடிய மனது, அவர் வந்தடைந்த பூமிதானே நம் இந்தியா என பார்க்க மறந்ததோ. அன்று பார்த்த்து மனித நேயம் தானே. //

    சமாதானம்தானே... இப்படி ஏதாவது சொல்லி, ஆகிவிடலாம் (சமாதானத்தை சொன்னேன்..)

    எனிவே "தல"க்கு என் வாழ்த்துக்கள்... ஹலோ... நம்மாளும் யாராவது இதை பற்றி கொஞ்சம் யோசிச்சு வைங்கப்பா...

    பதிலளிநீக்கு