பக்கங்கள்

தேருதல் என்ற ஒரு நாறுதல்

மாறுதல் வேண்டுவதால் ஒரு தேருதல் என்ற ஒரு நாறுதல். அரசியல் ஒரு சாக்கடை என்று பல பேர் சொல்லிய வாசகம் வருத்தத்தோடு ஒத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவித்தாயிற்று. ஜனநாயகம் ஜரூராய் ராஜ பாட்டையில். அவசரம் அவசரமாய் கொள்கைகளை காற்றில் பரக்க விட்டு கட்சிகள் கச்சை கட்டும். கட்சிகள் வெக்கமே இல்லாமல் வியாபாரம் நடத்தும் ஒரு விபரீத விளையாட்டு இங்கே வினயமாய் அரங்கேறும். சேவை என்ற பெயரில் வெட்கம் கெட்டு கட்சி நடத்தும் 4 வகை கட்சிகள் நம் நாட்டிலே உண்டு. அக்கடா, துக்கடா, விக்கடா, விட்டுருடா.

அக்கடா - பெரிய கட்சிகள்: முதுகெலும்பு இல்லாமல் தனியாய் நின்று வெற்றி பெற முடியாததால் கூட்டணி என்று கும்மி அடிக்கும்

துக்கடா - வெற்றி பெற முக்கியமான குட்டி கட்சி இது, தன்னால் ஆகாது தமையனை துணைக்களைக்கும் கையாலாகத கட்சி

விக்கடா - கட்சி ஆரம்பித்து பின்னர் எப்படி நடத்துவது என்று தெரியாமல் விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாத முக்கும் கட்சி

விட்டுருடா - பருப்பு வேகததால் கடையை இழுத்து மூடிய பாவம் கட்சி


வாக்காளனுக்கு உள்ள முடிவு என்ன.

இருப்பதில் நல்லவன் எவன் என்று பார்க்கலாமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. வெற்றி வேண்டியே கூட்டணி என்ற கூத்து அரங்கேறும். தன்னலம் தவிர்த்து நாட்டு நலன் கருதி கூட்டணி என்று எந்த கட்சியாவது முடிவு செய்யுமா.

கூட்டணி கூடியதும் பழைய பகை மறந்து தோளில் கை போட்டு போட்டோ போஸ் கொடுக்கும். நாயே பேயே என்று ஏசியவனை இன்று கூடப் பிறந்ததாய் கொண்ட்டாடும். அப்பாடி உண்மை உரக்கச் சொல்லப் படுகிறதே.

இனி சிரித்த முகத்தோடு நம் ஓட்டுக்கள் வேண்டி ஒரு கூட்டம் வரும். உஷாரையா உஷார், பாவம் நம் பாமரத்தனம். வெளுத்த தோல்களும், ஓங்கிய ஆளுமையும், நாவின் வன்மையும் நம் மனதை வெல்லும்.

ஒட்டு போட காசு கேட்கும் கேவலம் இங்கே சாதாரணம். வருமையை காரணம் சொன்னாலும் உன் தன் மானம் எங்கே மலம் தின்னப் போனதா என்று மனம் வெதும்பும். வன்முறையில் விருப்பம் இல்லை என்றாலும், ஒட்டுக்கு காசு கொடுப்பவனை ஒட ஒட அடிக்கத் தோன்றும். காது கிழிய கிழிய பிரச்சார பாடல் கேட்கும். தேர்தல் திருவிழா போலே நடக்கும். கள்ள ஒட்டு எனும் கயமை தனம் நடக்கும்,உணர்ச்சிகள் எல்லை மீறியதால் பகை மிகும். ரௌடி தன் புஜ பல பராக்கிரமம் காட்டுவார். அவர் ஆழ் மன விகாரக்களை மது, ஆயுதத்தின் துனை கொண்டு நடதுவார். வெட்டுவார், வெட்டப்படுவார்

தேர்தல் முடிவு சொல்லுவேன் என்று நருவீசாய் உடை உடுத்தி வெள்ளை காரன் போலே ஊடகங்கள் கல்லா கட்டும், நாள் பூராய் முளித்திருக்கும், நடு நடுவே விளம்பரம் காட்டும். வெட்டியாய் ஒரு கூட்டம் அதை வாய் பிழந்து பார்த்து நிற்கும். தேர்தல் முடிந்த பின்னும், குதிரை பேரம் நடக்கும்.

பரபரபுக்கு ஏங்கும் மனதோடு சராசரி வாசகன், எனக்கும் இதர்க்கும் சம்மந்தமில்லை என்பதாய் சில அரை வேக்காடு மேதாவிகள், என்னையும் சேர்த்துத்தான்.

பாரதத்தாய் பாவமாய் பார்க்கிறாள்..

1 கருத்து:

  1. ஒரு வழியாக படுக்காளியை அரசியலுக்கு இழுத்து வந்துவிட்டேன் (வேட்பாளராக அல்ல, பதிவு எழுதுபவராக). இதில், என் நுண்ணரசியல் ஏதும் இல்லை என்று எங்களூர் அய்யனார் மேல் ஆணை (மறுபடியும் அய்யனாரா??). போகட்டும் .....

    முதல் பதிவே சரவெடி "தல". தங்களின் இந்த பதிவிற்கு என் பதில், என் பதிவன்றி வேறென்ன?? இதோ என் அரசியல் கயமைத்தனத்தை தோலுரித்த அந்த பதிவு, தங்கள் பார்வைக்கு :

    http://edakumadaku.blogspot.com/2009/03/blog-post_23.ஹ்த்ம்ல்

    தேர்தல் கூட்டணி - களவாணி கயவர்கள்

    அரசியல் ஆடுகளம்
    ஆனதிங்கு போர்க்களம்

    கடலென ஓடும் கள்ளப்பணம்
    அவை அனைத்தும் நம் வரிப்பணம்

    ஏழைகளின் வயிற்றில் அடித்து சேர்த்தது
    மொத்தமும் டாஸ்மாக் கடைக்கு போய் சேர்ந்தது.

    எங்கெங்கு காணினும், பார்க்கும் இடமெங்கும் வண்ண வண்ண போஸ்டர்கள்
    இருக்கும் ஏழை பாழைகளுக்கு என்ன செய்தார்கள் இந்த போஸ்டர் மாஸ்டர்கள்?

    களவாணி கயவர்கள், பல கரைவேட்டிகளில்
    பட்டி தொட்டியெங்கும், பலபல தட்டிகளில்

    நேற்றுவரை வசைபாடிய எல்லோரின் வாய்கள்
    நம்மை பார்த்து, கூசாமல் கூப்புது கைகள்

    எதிரே நின்றவனை ஏசி ரூமில் இருந்து ஏசியவர்கள்
    இன்று அதே ஏசி ரூமில் கூட்டணிக்கு பேசுவார்கள்

    கையில் உருப்படியாய் இருக்கும் நம் ஓட்டை
    துருப்பாய் வைத்து ஆடுவோம் வேட்டை

    நம் கைகளில் இருக்கும் அந்த துருப்பு சீட்டை
    வைத்து, பிடிப்போம் கள்ளர்களின் கழுத்தை

    சிறிது அசந்தாலும், நம் ஓட்டு நம்மிடம் இல்லை
    தெளிவாய் இல்லையேல், நாமே நம்மிடம் இல்லை.

    பிடிப்பார்கள் கள்ளர்கள் நம்ம ஊரு கோட்டை
    பிடித்ததும் போடுவார்கள் நாட்டை - ஆட்டை!!

    மக்களே பாருங்கள் களவாணிகளின் கூட்டணி
    பார்த்ததும் சொல்லுங்கள், மவனே மாட்டுனடா நீ ............

    பதிலளிநீக்கு