பக்கங்கள்

வரவு 8 அண்ணா செலவு 10 அண்ணா

வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடல் இன்றைய சூழலுக்கு புரியாது. காசின் மதிப்பு குறைந்து அணாக்கள் எல்லாம் மலை ஏறி போச்சு. என்பதால் வரவு 8 அண்ணா செலவு 10 அண்ணா.

இன்று சம்பள தினம். சராசரி அலுவலக ஊழியனின் திருவிழா நாள். சந்தோசம் கொப்பளிக்கும். அன்னைக்கும் அப்படித்தான்.

மாசம் பூரா மொக்கைய போட்டு, வெரும் கையில மொளத்த போட்டு, நெட்டைய போட்டு மட்டைய போட்டு, சம்பளத்த தேத்தியாச்சு. இனி என்ன. ஜாலியா செலவு செய்யலாமே எனும் போது, ஒரு சிந்தனை.

கூட வேலை செய்யும் வெள்ளைக்கார நண்பன் - ஏற்கனவே அறிமுகமான நம் லவ்வர் பார்ட்டி. சுருசுருப்பாய் தின வேலைகளை முடிக்கும் அவசரத்தில். தெரியாத்தனமாய் நான் போய் அவனிடம் கேட்டேன், ஊருக்கு பணம் அனுப்பும் இடம் எங்கே என்று. திருவிழாவில் தொலைந்து போன குழந்தை மாதிரி பேந்த பேந்த முழித்தான். 'தெரிஞ்ச்சா சொல்லு இல்லைன்னா விட்டுறு, ஏண்டா இப்படி முழிக்கற என்று சொல்ல நினைத்தாலும் முடியவில்லை.

ஏன் அவன் சேமிப்பது இல்லை!!!

அவன் சம்பளம் முழுவதும் அவனே செலவழிப்பான். உடுத்துவான், உண்ணுவான், குடிப்பான், பயணிப்பான். சேமிக்க வேண்டிய அவசியமே இல்லை. கல்யாணம் பண்ண அவன் வீட்டுக்காரியும் இது போலே சம்பாதிச்சு செலவளிப்பா. சரி பிள்ளை குட்டி பிறந்தா வளர்ற வரைக்கும் வளர்ப்பான். தோளுக்கு மிஞ்சினா துரத்தி விட்டுருவான் அல்லது அந்த பிள்ளையே ஓடி போயிரும்.

என்னய்யா புளிப்பு இது
சாகப் போகும் இறுதி நாளில் நடு ரோட்டில் நிறைய இந்திய தகப்பன். சரி இத்தனை நாள் நீ சம்பாதித்தது எங்கே என்றால் மனைவியை காட்டுவான், மகனை மகளை காட்டுவான். சரி மனைவியிடம் போய் உன் வாழ்க்கை யாருக்காய் வாழ்ந்தாய் என்றால் புருசனை காட்டுவாள். மகனிடத்தில் போனால் அங்கேயும் அதே கதி தான்.

இதனோடு தொடர்புடைய இன்னொரு நிகழ்வும் மனதில் ஆடுகிறது. ஒரு விமான பயணத்தில் என்னருகில் ஒரு வெள்ளை காரி. வயது சுமார் 75 இருக்கும். முகத்தில் தான் வயது தெரிகிறதே இல்லாமல் அவள் நினைப்பிலோ செயலிலோ இல்லை. எங்கே செல்கிறாய் என்ற போது உல்லாச பயணம் என்றாள். இன்னும் உழைக்கிராளாம், சம்பாதித்து கொஞ்சம் பணம் சேர்ந்தால் கூட எடுத்து கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விட்டுவேன் என்கிறாள். மேலும் துளைத்து கேட்டேன். பிள்ளை குட்டி இருக்கா என்று. ஒரு பெண்ணும் இரண்டு மகன்களும், பெண் அடிக்கடி தொலைபேசியில் உறவாடுவதாகவும் மகன் எப்போவாவது பேசுவானாம். இன்னொருதன்ன் எங்கே இருக்கான் தெரியலே என்றாள்.


சம்பாதிக்கற மொத்த பணத்தயும், உங்களுக்கே செலவழித்தால் என்னவாகும். என் காசு எனக்கு. நான் சம்பாதிப்பது எனக்கு என்ற வெள்ளை கார வாழ்வும் நம் இந்திய வாழ்வின் வித்தியாசம் யோசிக்கத் தோன்றுகிறது.

எனக்குனு நான் ஒன்னுமே செய்யல என்ற இந்திய தகப்பன், இறுதி நாட்களில் சொல்வது சற்று பரிதாபப் பட வைக்கிறது

வயது முதிர்ந்தாலும் என் வாழ்கை என் கையில் என்று கிளம்பிவிடும் அவர்கள் சார்பற்ற வாழ்வின் நல்லதும்,

ஒன்று பிள்ளைகளோடவே அல்லது முதியோர் இல்லத்தில் முடக்கி போகும் நம் சார்பு வாழ்கையின் கெட்டதும் தெரிகிறது.

நம் கலாச்சாரத்தின் நல்லதை எடுத்து கெட்டதை / கேட்டதை மாற்றி யோசித்து வெள்ளை காரனை போலே இறுதி நாட்களை வாழ ஆசை வருகிறது

1 கருத்து:

  1. படுக்காளி

    நல்ல ஒரு பதிவை வெகு அனாயசமாக போட்டு இருக்கிறீர்கள்.

    நாம்தான் கயமை கலாச்சாரத்தை மட்டுமே குத்தகை எடுக்கும் கும்பலில் உள்ள ஆசாமிகள் ஆச்சே. அதனாலே, மேல்நாட்டு கலாச்சாரத்தில் இருந்து, நமக்கு தேவையான செக்ஸ் கலாச்சாரத்தை மட்டும் எடுத்து கொண்டோம்.

    மேலும் பல மேலைநாடுகளில் உள்ள பல அருமையான விஷயங்களை பற்றி பேசுவதற்கே அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    உங்களின் இந்த ஆழமான சிந்தனையில் இருந்து ஒரே ஒரு நடப்பு அரசியலை பற்றிய பதிவு வருமா என்று பார்க்கிறேன், ஊம், ஹூம் என்றல்லவா சொல்லிக்கொண்டு நடையை கட்டுகிறீர்கள்.

    எங்களுக்காக, ஒரே ஒரு முறை, அதையும் எழுதுங்களேன். பார்க்கிறோம் உங்கள் சிந்தனை எப்படி உள்ளது, இந்த அவல அரசியலை பற்றி என்று?

    நான் இந்த அவலத்தை பற்றி எழுதியது, இதோ உங்கள் பார்வைக்கு :

    உண்மையை உரக்க சொன்ன படுக்காளியே
    உனக்கு கிடையாது அரசியல் நாற்காலியே

    இதெல்லாம் அரசியல் விளையாட்டு
    நீ ஆம் என்று மட்டும் தலையாட்டு

    எங்கெங்கு காணினும் அயோக்கியர்கள்
    தேடியும், காணவில்லை யோக்கியர்கள்

    தேனில் தோய்த்த வாக்குறுதி
    பின், ஆனது நமக்கு வாக்கரிசி

    நீட்டிய நோட்டை வாங்கினோம்
    காட்டிய சீட்டில் குத்தினோம்

    அவர்கள் சின்னத்தில் முத்திரை விழுந்தது
    பின், அந்த சின்ன புத்தி எட்டி பார்த்தது

    வாக்கை குத்திய மை காயும்முன்
    அவர்கள் நம்மை குத்திய கதை கேளு

    அவர்கள் கேட்ட ஓட்டை போட்டு விடு
    பின், ஒட்டிய வயிறோடு இருந்து விடு

    இது அரசியல் சூது விளையாட்டு
    நீ வெறுமே பார்த்து தலையாட்டு

    பதிலளிநீக்கு