கைகள் நகர்ந்து மெலிதாய் வருடியது. வருடிய இடம் வழவழப்பு, லேசான வியர்வை. தாகம் உட்சத்தில். தொண்டை சூட்டில் கண்கள் மூடியது.
நகர்ந்த கைகள் தொட்ட இடத்தில சூடு .... கைகள் உணர்ந்தது. விலக்கி கொண்டு மறு பக்கம் நகர்ந்தது. சில்லென்று ஒரு குளுமை. ஆ... இது தான் தேடியது என்பதாய் மூடி விலக்கி தண்ணிர் குவளையில் சேந்தி குடித்தேன். வெயில் காலத்திற்கு குளிர்ந்த நீர் தான் சூடு நீர் யார் குடிப்பார்.
என்ன இது சப்புன்னு முடிச்சிட்டியே என்பவருக்கு, இன்னொரு கதை.
இதுவும் ஒரு சப்பு தான். நாம் கேள்விப்பட்ட கதை தான்.
ஆர்தர் தன் மகனுடன் வேகமாய் காரில் சென்றார். கார் விபத்து. ஆர்தர் அந்த இடத்திலே இறந்து போனார். மகன் பலமான காயங்களோடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டான். வந்து பார்த்த டாக்டர் சொன்னார் 'இவரை நான் அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன், ஏனெனில் இவர் என் மகன்"
அதான் செத்து போயிட்டாரே....
அவர் எப்படி...
ஆவியா...
இல்லை ஆர்தர் பிள்ளைக்கு இரண்டு அப்பனா என்று பாமர மனம் விடை தேடும் போது, உண்மை விடை நம்மை சிந்திக்க வைக்கும்.
'அந்த டாக்டர் அவர் அம்மா" .... யம்மா....
எளிமையான விடை ஏன் ஒளிந்து கொண்டது.
டாக்டர் என்றவுடன் அனாவசியமாய் ஆண் பால் என்று கருத்து மேலாக்கம் செய்து கொண்டு முன்னேரி சிந்திப்போம்
நம் மூளையின் பலவீனம் அது.
1. எளிமையாய் சிந்திக்க தெரியாது. அல்லது அடிப்படையாய் சிந்திக்க மறுக்கும்
2. நம் நினைவுகளை எப்போதும் அலசி இடு குறி காரணம் விளக்கம் செய்ய துடிக்கும்.
இந்த மூளையின் அடிப்படை ஊனம் தெரிந்து விட்டால் நம் சிந்தனை சீர் பெரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக