
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம்...
அதே போல் ஒரு தமிழக கட்சியின் அரசியல் வாதி சொன்னாராம். தேன் பானையில கை விடுறோம், கையில ஓட்டின தேனை துடைச்சு போடணுமா, சரி வேண்டாம்ன்னு சாப்பிடுறோம் என்றாராம்.. லஞ்சத்த பத்தி லஜ்ஜையே இல்லாம சொன்ன பொறுப்பற்ற ஒரு ஸ்டேட்மெண்ட்.
சிந்தனையில் ஒன்றிணைந்தோமே. உற்சாகப் படுத்தினோமே, அதே குடும்ப உணர்வில் இன்று நாம் இணைய வேண்டிய அவசியம் உள்ளது.இப்பயிரை கண்ணீர் விட்டு காப்போம்
ஒரு கோப்பையிலே நம் குடியிருப்பு....!!!
ஒட்டு மொத்த தேசமுமே, பேட், பால் எடுத்துட்டு அதிரடியா நுழைஞ்சு, கிரிக்கெட் வி
ளையாடி, 2011 உலக கோப்பைய செயிச்சுருச்சு. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு ஆர்வலர், திரை உலகத்தினர், பொது மக்கள் என எல்லோருமே…. அத்தனை இந்தியருமே… மொகாலியிலும், மும்பையிலும் டேரா போட்டு, டிவி/ ரேடியோ முன்னால பட்டரைய போட்டு, உற்சாகப்படுத்தி வெற்றி பெற்றனர்.
இந்த ரெண்டு நாட்களுமே நாட்டுல எந்த வேலையுமே பெரிசா நடக்கல. ஆபிஸுக்கு மட்டம் போட்டுட்டு, ஸ்கூலுக்கு ஸ்கூட்டடிச்சுட்டு, அரசியல்வாதி கூட ஆபிசுக்கு லீவு விட்டுட்டு ஒரு 9-10 மணி நேரம் இந்த விளையாட்டுக்கு வீரராயிட்டாங்க… ஒரு தேசமே… ஒரே உணர்வோட ஒன்றிணைந்து உணர்ச்சிகரமா நின்னது…. நினைக்கும் போது பெருமையா இருக்குது.
நாட்டையும் நாட்டு மக்களையும் ஒண்ணா சேர்த்த கிரிக்கெட்டுக்கு ஒரு சலாம்.
ஒவ்வொரு படியா கவனமா ஏறி, வெற்றியின் இலக்கை எட்டியது மிக நல்ல சாதனை. நம் நாட்டு விளையாட்டு அணியின் எல்லோருக்கும் ஒரு சபாஷ்.
தோசை சுட்டவன்… சாப்பிட்டதா சரித்திரம் இல்ல!!!. மேட்ச் நடத்துனவன் நாட்டுக்கு கப்பு கிடைச்சதில்லைன்னு ஒரு குருட்டு நம்பிக்கை ஸ்டாட்டிஸ்டிக்ஸாம்… அடப் போங்கடான்னு நம்ம செல்லக் குட்டிகள் பெற்ற வெற்றி பட்டைய கிளப்பிறுச்சு. இந்த வெற்றி, மூட நம்பிக்கைய மூடி விட்டு, சுடர் விட்டு ஒளிர்ந்த பகுத்தறிவின் பிரகாசம்.
வெற்றிக்கு முக்கிய காரணம் இத்தனை கோடி மக்களின் எண்ணமும் பிரார்த்தனையும் தான் என்றால் மிகையில்லை. எல்லைக் கோட்டுக்கு வெளியில் நின்று கொண்டு பிரார்த்தனை செய்த அந்த வயசு முதிர்ந்த பெண்ணையும், பந்து எல்லைக் கோட்டை கடந்ததும் உட்கார முடியாமல் எழுந்து கூக்குரலிட்ட சிறு குழந்தையையும்… கண்ணில் நீர் பனிக்கத்தான் நாம் பார்த்தோம்.
இது எப்படிங்க என கேட்க, கேப்டன் தோனி இதற்கு குழுவே முக்கிய காரணம் என்றார். உண்மைதான், ஒத்துக் கொள்வோம்…. என்றாலும் மலை அசைந்தாலும் கலங்காத மன உறுதியுடன் நின்ற தலைவனின் தோரணை… சூப்பர். தோனி, தோணி மாதிரி நின்னு செயிச்சாரு. இவர நினைக்கும் போது ஒரு பாட்டு மனசுல ஒடுது.
ஆளானாலும் ஆளு, இவரு அழுத்தமான ஆளு,
மிச்ச விவரம் வேணும்ன்னா …
மச்சான் தோனிய கேளு…. கேளு,,,
சேவாக்கும், சச்சினும் அவுட்டானதும், துருப்பு சீட்டான யுவராஜாவ இருக்க சொல்லிட்டு, நான் வர்றேண்டா என களம் இறங்கிய முடிவாகட்டும். எடுத்த முடிவில் அசையாது இருந்து, 91 ரன்களை குருவி சேர்த்த மாதிரி சேர்த்த பாங்காகட்டும்… தோனி… நீ நிச்சயமா ஞானிதான்…
இந்த வெற்றியை சச்சினுக்கு அர்பணிக்கிறோம் என தோளில் தூக்கி கொண்டு கண்ணில் நீருடன் வலம் வந்த குழுவின் அந்த எளிமைக்கு, வயசில் பெரியவங்களுக்கு நம் கலாச்சாரம் தரும் மரியாதை மின்னுகிறது. அதே லெவல்ல, வெளி நாட்ட சேர்ந்தாலும் கோச்சையும் தூக்கி சுத்துனது சூப்பர்டா. நன்றி மறக்காத அந்த குணம், மனித நேயம் மின்னிய அந்த செயல், நம்ம நாட்டுக்கே பெருமைடா சிங்கக் குட்டிங்களா….
சூப்பரா நினைச்சத முடிச்சுட்டீங்க. இனி நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நாடு கொஞ்சம் அதெது வேலைய பார்க்கட்டும். இப்ப ரிலீஸ் பண்ணா, படம் படுத்துறும்ன்னு, பயந்து போயி பம்முன திரையுலகம் அது பங்குக்கு … கலை????!!!! வளர்க்கட்டும். இதையே திருப்பி திருப்பி போட்டு நீயூஸ்ன்னு சொல்ற ஊடகங்கள், மிச்ச விசயத்த கவர் பண்ணட்டும். சராசரி மனுசன் தன் கடமைகள் செய்யட்டும்.
விதை - குறும்படம்
விதை என்ற சொல்லில் அற்புதம் உண்டு. மொழியின் அமைப்பில், அந்த ஒரே வார்த்தை… ஒரு பொருளாகவும், ஒரு செயலாகவும்…..2 இன் 1 ஆக இருக்கிறது. அதுவே…. தான், செயல்படும் விதத்தில் இன்னும் ஆச்சரியமாய் இருக்கிறது. தன்னை மாற்றி, ஒரு தாவரமாக, மரமாக வளர்ந்து நிற்கும் ஆற்றலும் அதற்குள்ளே உள்ளது. என்றாலும் விதை தன் வித்தை காட்ட சில தேவைகள் உண்டு. நிலம், நீர், வளம் இன்ன பிற.
யேசு அவரது போதனைகள், பற்றி கூறும் போது, விதை குறித்து ஒரு குட்டி உவமானக் கதை சொல்லுவார். விதைகள் சிதறி பல்வேறு நிலங்களில் விழுந்தது. முதலாவதாக பாறையிலும், பாலைவனத்திலும் விழுந்தவை. அவை நீர் இல்லாமல், வளர இயலாமல் காய்ந்து போனது. அதுவே சில விதைகள் புதர்களுக்குள் விழுந்தன. விதைகள் துளிர்த்தாலும் பக்கத்தில் உள்ள புதர்கள் அவற்றை வளர விடாமல் தடுத்து விட்டன. நல்ல நிலத்தில் விழுந்தவை மாத்திரம், வளர்ந்து பன் மடங்கு பலன் தந்தது என சொன்னார்.
ஒரு ஆழமான சிந்தனையை விதைக்க, எங்கள் குழு மீண்டும் ஒரு குறும்படம் வாயிலாக வருகிறது. கதை வடிவமோ, அல்லது தொழில் நுட்பமோ எங்கள் கருத்தை சொல்லும் வாகனமே. நாங்கள் சொல்ல விரும்பிய கருத்து பரவலாய் சென்றடைந்தால் மிகப் பெரிய ஆக்கபூர்வமான தாக்கம் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் சமர்பிக்கிறோம்.
http://www.youtube.com/watch?
தங்கள் ஆலோசனையும் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
மிதக்கும் அதிசயம்... உங்களாலும் முடியும்!!!
சின்னஞ்சிறு வயதில் நீரில் மிதக்கும் மனிதர்களை பற்றிய செய்தி கேட்டிருக்கிறே
ன். ஸ்ரீரங்கத்து அரங்க நாதனின் வரலாறில் நீர் மேல் நடப்பான் பற்றி படித்த போது ஆரம்பித்தது, பைபிளில் யேசு, கடல் நீரில் நடந்து வருவதாகவும் வாசிக்க கேட்டேன்.
நடைமுறையில் நீரில் மிதப்பது சாத்தியமில்லை என பெர்மூடாஸ் ட்ரையங்குள் ரீதியில் மனதில் தோன்றியதால் கதை, பேண்டஸி என முத்திரை குத்தப்பட்டு, அன்றைய காலக் கட்டாயத்தில், அது நினைவில் பதிக்கப் பட்டது.
காலம் சற்று சுழன்றோட, அதே நீரில் மிதக்கும் தகவல் வேறு ரூபத்தில் வந்தது. தாடி மீசை வைத்திருந்த ஒரு சாமியார், ஆற்றில் மிதந்து கொண்டிருப்பது போல், புகைப்படத்தில் பார்த்த போது, சற்று அதிர்ந்து போனேன். இதெல்லாம் கற்பனை என நான் நினைத்திருந்தது, இறங்கி வந்து, சாத்தியம், ஆனால் மகான்களுக்கும், யோகிகளுக்கும் மட்டுமே சாத்தியம் என ஆனது.
பின்னர், சென்ற முறை விடுமுறை சென்ற போது, அண்ணன் மகன்…. வெகு அனாசியமாக நீச்சல் குளத்தில், இதையே செய்து காட்டிய போது, வியப்பும் ஆச்சரியமும் என்னுள் மேலோங்கியது. அவனோ, சித்தப்பு, இது ஈசிதான் என எனக்கு செய்முறை விளக்கம் சொல்லி தந்தான். உடனே முயன்றேன், முடியவில்லை.
பின்னர் ஒரு நாளில் தனியனாய் இருந்த போது, ஆழம் குறைந்த கடலில் இதை பரிசோதித்தேன். கால்கள் அகற்றி நிற்க வேண்டும், வயிற்று பகுதியை முன்னுக்கு தள்ளி, தோள் விரித்து, நெஞ்சு நிமிர்த்தி, தலை பின்னுக்கு தள்ளி உடலை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
எந்த தசையிலும் பிடிப்பு இல்லாமல், ஒரு தியானம் செய்யும் உடல் நிலையில் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…. என கட்டளை கொடுத்து கொண்டே இருந்தேன். அப்போது அந்த அதிசயம் நடந்தது. என் வயிற்று பகுதி மெதுவாக மேலேழுந்து, கடலின் வெளியே நீர் மட்டத்துக்கு உயர்ந்தது. கால்கள் கூட லேசாய் மேல் நோக்கி நகர்ந்தது.
சட்டென்று பகுத்தறிவோ!!!.... என்னவோ முழித்தது… என்னது நான் மிதக்கிறேனா. இப்படி ஒரு கேள்வியை எனக்குள் தூக்கி போட்டது. அந்த நினைவின் தாக்கத்தில், அந்த ஒரு நொடியில், அந்த ஒரு நினைப்பில் சட்டென்று நீருக்குள் அமிழ்ந்தேன்….. அடடா…. என மனம் சலித்து கொண்டாலும். மீண்டும் செய்வோம்…. என முயற்சி கட்டளை இட்டது.
இப்போது, எதிர்பார்ப்பு, இருப்பதால், உடல் தளரும் வினை கொஞ்சம் சிரமமானது. நேரம் அதிகரித்து கொண்டே இருக்க, உடல் இலகுவாவதில் தாமதம் உள்ளதால், மிதக்க முடியவில்லை.
சரி, எதிர்பார்ப்பை உதறுவோம், என சொல்லி, சிந்தனையை வெக்கேஷன் அனுப்பி விட்டு. செய்ய வேண்டிய வேலை ஒன்றும் இல்லை, எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை. சும்மா இரு…. அமைதியாய் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… என சொல்ல துவங்கினேன். சட்டென வயிறு உயர, கால்கள் உயர, மிதக்க துவங்கினேன். முந்தைய அனுபவம் தந்த நினைவால், சிந்தனையை கட்டுக்குள் வைத்திருந்து, உடலை முடிந்த வரை ரிலாக்ஸ்டாக வைத்திருக்க… யெஸ்… என்னால் மிதக்க முடிந்தது.
கைகள் விரித்தேன். கால்கள் சற்று விரித்தேன். மிக சரியாக உடல் ஒரு தக்கை போல், நீரில் மிதக்க துவங்கியது. அப்படியே சில நிமிடங்கள் படுத்திருந்தேன்.
கற்பனை என நான் நினைத்தது, மகான்களுக்கு மட்டுமே முடியும் என எண்ணியது, என்னைப் போல் சாமான்யனுக்கும் முடியும் என உணர்ந்த போது, கான்பிடன்ஸ் மின்னியது.
என்ன இது விந்தை. மனித உடலை வெறுமே ரிலாக்ஸ் செய்தால் இப்படியும் நடக்குமா. அப்படியென்றால், நீரில் மூழ்கி உயிர் விடுவது, பயத்தினால் தானா.
நான்…. எனது….. என்னை காப்பாற்றுவேன்…. என நாமே நினைத்து கொள்ளும் தகிடுதத்தம் தானா …!!!! நம்மை கொல்கிறது. நடப்பது நடக்கட்டும் என இருந்தால் நம்மால் அதிசயங்கள் செய்ய முடியுமோ….
தெரிந்து கொண்ட சில தகவல்களை சொல்லும் ஆர்வத்தில் இந்த பதிவு எழுதியுள்ளேன், என் முயற்சி ஒரு 2 அல்லது மூன்று மணி நேரத்தில் முடிந்திருக்கும். அடுத்த முறை தண்ணீருக்கு செல்லும் போது, முயற்சித்து பாருங்கள். உங்களாலும் முடியும்….
ஆம்… நம் மனித சக்தியின், மர்மங்களும் மகோன்னதங்களும் !!!! நம்மால் இன்னும் உணர பட வேண்டியதே….
சிந்தனையில் விருத்தி

”அடேயப்பா……. அவன் ரொம்ப பிரில்லியண்ட்”
இப்படி, சொல்லும் வார்த்தைகள் நாம் அன்றாட வாழ்வில் கேட்பது தானே. வியப்பாய் வெளியிடும்.... ஒரு நுண்ணிய குணம்… இண்டெலிஜண்ட்டு…………!!!!
புத்திசாலியா இருந்தா சூப்பர், காசு பணம் கூட எப்ப வேணும்னா சம்பாதிச்சிரலாம், ஆனா புத்தி இல்லேண்ணா வேலைக்காவாது. ரொம்ப அவசியம் என நம்மால் பகுக்கப்பட்ட ஒரு குணாதிசயம் இந்த இண்டெலிஜந்து.
புத்திசாலித்தனத்துக்கு, அர்த்தம் சொல்ல முடியுமா???
புத்திசாலித்தனத்தை விளக்க முடியுமா ???? இதை புரிந்து தெளிந்து, நம்மால் அதை மேம்படுத்த முடியுமா, என சிந்திப்பதே இந்த பதிவு.
டாட்டா ஒரு பேட்டியில்.... உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன ????? என கேட்க, ஒரிறு வினாடிகள் யோசித்து விட்டு அமைதியாய் சொன்னார் ‘தகவல்கள்’
முதலில்... என்னது தகவல்களா, !!!! அதுவா வெற்றி தேடித்தரும்…. சே… சே… அது இல்லீங்க... என நாம் தள்ளினாலும், ஆற அமர யோசிக்கும் போது, நமக்கு தகவல்களின் அவசியம் புரியும். கற்று, கேட்டு கருதி நாம் சேகரிக்கும் தகவல்களின் அளவே, நம் வெற்றியை நிர்ணயிக்கிறது என்பது மிகையல்ல.
என்றாலும், தகவல்கள் மிகுந்திருப்பது அல்ல.... புத்திசாலித்தனம்.
உதாரணத்துக்கு.... ஒரு கல்லூரியின் பேராசிரியராய் !!! ஒருவர் இருப்பார். மாணவர்களும் சக ஆசிரியர்களும் ஒரு சேர பிரமித்து, அவர் புத்திசாலி என ஒத்துக் கொள்வர்.
கல்லூரியில் பிரில்லியண்ட் என முத்திரை குத்தப்பட்ட குமார சாமி.... வீட்டிலே மனைவியிடம் அதை பெறாமல் இருக்கலாம். மனைவியிடம் மொத்தும் குத்தும் வாங்கலாம். ”உங்களுக்கு ஏதாவது தெரியுதா, இந்த வீட்டுல நான் மட்டும் இல்லாங்காட்டி சிரிப்பா சிரிச்சுப்புடும்” என மணந்தவள் மடக்கலாம்.
புத்திசாலித்தனம் என்பது நம், சிந்தையின் வெளிப்பாடு. வெளிப்படும் சிந்தனை, பரவலான அங்கீகாரம்
பெற்று..... பாராட்டப்பட்டால் புத்திசாலி.
பரவலான அங்கீகாரம் தருவது, சமூகம் என்பதால், சக மனிதன் என்பதால்... நாம் வாழும் காலம் என்பது மிகப் பெரிய தளமாக இருக்கிறது.
சண்டை போடுவதில் மிக வலுவான ஆயுதம் எது, என ஒரு கேள்வி வந்த போது, அஹிம்சை தான் ..... போராடுவதின் மிக பலமான ஆயுதம் என காந்தி சொன்னார், அது அன்றைய காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடை பிடிக்க பட்டது.
அவரே… ஒரு ஆயிரம் வருசங்களுக்கு முந்தி பிறந்திருந்து, இதே வார்த்தையை சொல்லியிருந்தால்..... முப்பதிரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணுற்றாறு காயங்களை ..... ஆபரணமாக !!!! பூண்டிருந்த விஜயாலய சோழர் காலத்தில் எடுபட்டிருக்குமா… சந்தேகம்தான்.
காலம், அங்கீகாரம்..... படைக்கும் வேள்வியே .....புத்திசாலித்தனம்!!! எனும் போது, புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போமா.
சிந்தனையை மூன்று படிவங்களாக பிரித்து அதை ஆராய்வோமே... மூன்று நிலைகள் தான் ஒரு சிந்தனை வெளிப்பாடு.
1. புரிதல் 2. அலசுதல் 3. அறிவித்தல்
இந்த மூன்று நிலைகளை இன்னும் ஆழமாய் பார்க்க, வாசக தோழமையே ஒரு பிரச்சனையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.
பிரச்சனையை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்.??? அது கழுத்தை நெருக்கும் கயிறாக !!!சிந்திக்கிறோமா, அல்லது.... காலை வருடும் பயிராக சிந்திக்கிறோமா.
நான் எடுக்கும் இந்த முடிவு ..... என்ன விளைவுகள் ஏற்படுத்தும் !!! என கவனம் கொள்கிறோமா, அல்லது வருவது வரட்டும் என ஈசியாக இருக்கிறோமா.... எனும் மெமரி இன்பர்மேஷன் ஃப்ளாக்கே (Flag) புத்திசாலித்தனத்தின் முதல் படி. சுருக்கமாக சொல்வதென்றால் நம் சிந்திப்பில் முனைப்பு இருக்கிறதா, ஏனோதானா என முயல்கிறோமா அல்லது ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் யோசிக்க துவங்குகிறோமா என்பதே..... புத்திசாலித்தனத்திற்கான பாதை.
முனைப்பு இல்லாத முயற்சியால், இலக்கை எட்ட முடியாது. நம்மை புத்திசாலி எனும் ஊருக்கு கொண்டு போய் சேர்க்கும் டிக்கெட், வாங்க வேண்டியது முதல் படியில் தான். முதல் படி எடுத்து வைத்து, நம் சிந்தனை செலுத்தும் பாதை ..... அடுத்து வருவது அலசுதல் கட்டத்துக்கு.
நம் பிரச்சனையின் தீர்வுகள் என்ன என்ன, எப்படி சமாளிக்கலாம், என நாம் தேடும் இடம் நம் நினைவுகளே... தகவல்கள் ஆற்றும் மிக பெரிய பணி இங்குதான்.
இது மிக முக்கியமான ஒரு கட்டம். இப்படி இருக்குமோ, இப்படி செய்யலாமோ, இப்படி செய்தால் இப்படி ஆகி விடுமோ என நமக்குள் நடக்கும் ஒரு கருத்து மோதல்கள்.
முதலில் நம் முந்தைய அனுபவங்களை தேடுவோம், இது போல் எப்போதேனும் நடந்ததா.... இல்லை வேறு யாருக்கேனும் நடந்து, அவர்கள நமக்கு சொன்னது.... தகவல்களாய் இருக்கிறதா என நாம், சல்லடை போட்டு தேடுவோம். சில சமயம் புத்தக தகவல்களாகவோ, கதையாகவோ, கூட இந்த தகவல்கள் நமக்குள் இருக்கலாம். இந்த நிலையில் நாம் எவ்வளவு அலசுகிறோம் என்பதே புத்திசாலித்தனம்.
பல கோணங்கள் சிந்திக்கப் படுகிறதா... பல பரிமாணங்கள் பார்க்கப் படுகிறதா..... இப்படி பரந்து விரியும் சிந்தனையின் விசுவரூபம் தான் ஒரு புத்திசாலித்தன யோசனை.... என குறிக்கப் படுகிறது.
வீக்கான, குட்டி சிந்தனைகள் நம்மை முட்டாள் என முடிவு கட்டி விடுகிறது....
எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதும், எவ்வளவு ஆழமாய் இந்த நிலையில் சஞ்சரிக்கிறோம் என்பதுமே புத்திசாலி எனும் முத்திரை வாங்கும் குணம் கொண்டது. அவசரப் பட்டு, கொஞ்சம் மட்டுமே சிந்தித்த சிந்தனை பலன் இல்லை.
அப்படி நம்மை புல் ஸ்டாப் போட வைக்கும் சக்தியே இந்த மூன்றாம் நிலை. முதல் இரண்டு நிலைகளையும் நிற்க வைப்பதே இந்த அறிவித்தல் நிலை. போதும்... இது சரியா இருக்கும் .... இப்படி செய்தால் போதுமானது என நாம் சிந்திக்கிறோம் அல்லவா, அதுவே இந்த நிலை.
இந்த அறிவித்தல் ஒன்று வார்த்தையாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படலாம்.
நிறைய சமயங்களில், அறிவிப்பதில் நாம் அவசரப் படுவோம். ஓகே… முடிஞ்சுருச்சு…. யோசிச்சாச்சு, இனிம அறிவிக்கப் போகிறேன் என ஒரு முடிவெடுக்கும் போதே, நாம் முதல் இரண்டு நிலைகளை மூடி விடுவோம். அனேகமாக இந்த மூன்றாம் நிலை வந்த பின்பு முதல் இரு நிலைகளுக்கு திரும்பி செல்வது கடினம். செல்ல முடியாது என்பதில்லை, போவதில் நடைமுறை சிரமம் என்பது மட்டும் நிதர்சனம்.
நம்மால் புரிந்து கொள்ள வேண்டியதும், மிக முக்கியமானதும் ஒன்றே. வேகம் மிக அவசியம் என்றாலும், வேகம் மட்டும் முக்கியமில்லை, விரிந்து பரவும் அடர்த்தியே முக்கியம். பல தளங்களில் விரிந்து, பல கோணங்களை தரிசித்து, ஒரு நினைவு வெளி வருமானால் அதுவே புத்திசாலித்தனம் எனும் முத்திரை குத்தப் படுகிறது.
ரஜினி... பார்க்கத் தவறும் கோணம்
ஒரு முண்ணனி தொலைக்காட்சி, 'இந்த டீகேட்டின் சிறந்த இந்தியன்’ எனும் விருதை சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்துக்கு வழங்கி கௌரவப்படுத்தியது. அவார்டு வாங்க அவர் மேடைக்கு
அழைக்கப்பட, மின்னலென வந்து, அன்பாக…. ஒரு நிறைந்த அமைதியாய் நின்றார்.
மேடையில் ரஜினி பாந்தமாக நிற்க, மிச்சமிருந்தவர்கள் எல்லோரும் ஒரு வித பரவசத்தில் இருந்தனர். பிரணாய் ராய், சிதம்பரம், வித்யா பாலன், திரிஷா என எல்லோருமே ஒரு குழந்தை போல் குதூகலத்துடன் இருந்தனர். அதிலும் வித்யா பாலன் எங்கள் அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என மகிழ்ந்து கூறினார். ரஜினி எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு திரை உருவம் என்பதை, அந்த ஒரு காட்சியே விளக்கி சொன்னது.
1996 தொடங்கி இன்று வரை, ரஜினி எங்கு சென்றாலும் கேட்கப்படும் ஒரு கேள்வி, அரசியலுக்கு வருவீர்களா…. இல்லையா????. இக்கேள்வி எல்லோராலும், எல்லா நேரத்திலும் கேட்கப்பட்டும் கூட, இன்றும் ஓயவில்லை.
ஆச்சரியமாக இருக்கிறது, இப்படி ஒரு கேள்வி பதில் பெறாமல் இத்தனை நாட்களுக்கு நீண்டிருக்கிறதே…. என்றாலும் இன்றும் இந்த கேள்விகளும், அவர் எண்ணம் தெரிந்து கொள்ளும் முயற்சியும் சலிக்கவில்லை என்பது ஆச்சரியமான நிசர்சனம்.
வழக்கமாக கேட்கப்படும், அதே!!! கேள்வி இன்றும் கேட்கப்பட்டது. அவரோ சிரித்துக் கொண்டே, இல்லை அரசியல் பற்றி கருத்து சொல்ல விருப்பமில்லை என்றார். இது குறித்து எனக்கு தோன்றியதையே இங்கு பதிக்கிறேன்.
ரஜினி தன் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்தவர் மிகப்பெரிய சாதனைகள் செய்தவர், அவருக்கான வாழ்வு பற்றிய புரிதலும், தெளிவும் நிச்சயம் ஒரு கோணத்தில் இருக்கும் என்பது நமக்கு புரிகிறது. நாம் அறியாத, நாம் புரியாத பரிமாணங்களை அவர் தரிசித்திருக்கலாம், என்றாலும், எனது சில எண்ணங்கள்.
சரணாகதி தத்துவத்தின் மிகச் சரியான எடுத்துக்காட்டு ரஜினிதான். அடைந்துள்ள வெற்றி, தன் உழைப்பால் அல்ல, தன் சிந்தனையால் அல்ல, எல்லாம் இறைவன் அருள், இறைவன் அருள் மட்டுமே, வேறு ஒன்றுமே இல்லை, என 100 சதவிகிதம் உள்ளுக்குள் நம்புகிறார், அதையே பேசுகிறார்.
அவரது எத்தனையோ செய்கைகள் இதைத்தான் நமக்கு சொல்கின்றன. இல்லையென்றால், எந்திரன் எனும் திரைப்படம் வெளி வந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற நேரத்தில் கூட நாலு முழ வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, கையில் தட்டு வைத்து புளியோதரை சாப்பிடும் அளவுக்கு ஒரு யதார்த்தம் மிகப் பெரிய ஆச்சரியமே.அவரை அரசியலுக்கு வா… வா… எனச் சொல்லும் பொது மக்களின் மனதை பார்த்தால், அந்த விண்ணப்பத்தில் ஒரே ஒரு எண்ணம்தான் உண்டு. நம்மை ஆள நல்ல ஒரு மனிதன் வேண்டும், நேர்மையான திடமான வீர்மான ஒரு தலைவன் வேண்டும் என நினைக்கும் நினைப்பு மட்டுமே இருக்கிறது. தமிழகத்தின் நிறைய பேருக்கு தெரிந்த இந்த குணங்கள் உள்ளவர் ரஜினிகாந்த். எனவேதான் எங்களை ஆள வாருங்கள் என அழைக்கிறார்கள்.
என்றாலும், அரசியலுக்கு வருவதென்பது, ஓப்பன் வேனில் சிரித்து கையாட்டி, மைக்கில் பேசுவது மட்டுமல்ல. ஓட்டுக்களை வாங்கி, தேர்தலில் வெற்றி பெற்று, கோட்டையில் அமர்வது மட்டுமல்ல. அரசியலின் அடி நாதம் நிர்வாகம். அவரை வரச் சொல்லி வற்புறுத்தும் மக்களுக்கு, இதை விளக்க ஒரு சிறு கற்பனை சம்பவம்.
தமிழ் நாட்டின் ஒரு முக்கிய நகரத்தின் மையத்தில், பரபரப்பான ஒரு சாலையின் ப்ளாட்பார்ம் கடைகள் மிகுந்து இருக்கிறது.
எங்களால் நடக்க முடியவில்லை. சாலையில் விபத்துக்கள் அதிகரிக்கிறது. மிகவும் தொந்தரவா இருக்கு இந்த நடைபாதைக் கடைகளை நகர்த்துங்க எனும் மனு ஆட்சியாளரான தங்களை வந்தடைகிறது.
இல்லைங்க இதுதான் எங்க பொழப்பு, எங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கு. வேற இடம் போக சொன்னீங்கன்னா பிசினஸ் ஓடாது. தயவுசெஞ்சு எங்கள இங்கயே இருக்க விடுங்க எனும் மக்கள் கூட்டம் இன்னொரு பக்கம்.
நாடு என்பதே, டார்வின் தத்துவப்படி சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட், என நம்பும் மக்களின் போராட்டங்கள் நிறைந்ததே. இதில் எந்த பிரிவை ஆதரிப்பது என்பது மிகவும் நுணுக்கமான ஒரு முடிவு எடுத்தல். இது போல் ஒன்றல்ல இரண்டல்ல, ஓராயிரம் பிரச்சனைகள் வரும். ஒரு நாளைக்கு 25 மணி நேரத்துக்கான வேலை பளுவோடு வருவது தான் முதல்வர் பதவி. மேற்கூரிய இந்த முடிவு எடுக்க உச்சகட்டமாக ஒன்றிரண்டு வினாடிகள் தான் உங்களுக்கு கிடைக்கலாம்.
இத்தகைய ஒரு நிர்வாகப் பணியை ஆர்வத்துடன் ஆத்மார்த்ததுடன், நேர்மையுடன் மனிதாபிமானத்துடன் செய்யும் முனைப்பு ஒரு நல்ல முதல்வருக்கு வேண்டும். எடுக்கும் முடிவில் ஒரு பிரிவினருக்கு சாதகமும், இன்னொரு பிரிவுக்கு பாதகமும் இருக்க வாய்ப்புண்டு. தொலை நோக்கு பார்வையும், கட்சியை கட்டி காப்பாற்றி, அரசியலும் செய்து, ஆட்சியும் செய்யும் மிக கடினமான ஒரு பணியே முதல்வர் நாற்காலி.
மீண்டும் ரஜினியின் மன நிலையில் பார்க்கும் போதும், அவரது ஆழமான நம்பிக்கையில், என் கையில் எதுவும் இல்லை, தான் இறைவன் இயக்கும் ஒரு கருவி மட்டுமே, இறைவன் சித்தம் இருந்தால்…. அவரது கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என நினைக்கிறார். 
அரசியலுக்கு வரணுமா … வேண்டாமான்னு, எனக்கு தெரியாது என தெளிவாய் இருக்கிறார். வருவேன் வரமாட்டேன் என தெரியாது என்கிறார். ஆனால் அவரது இந்த நிலைப்பாடு அவர் குழப்புகிறார், சுய விளம்பரம் தேடுகிறார் என மற்றவரால் புரிந்து கொள்ளப்படுகிறது.
இது எல்லா வற்றிற்கும் அடிப்படையில் என்ன இருக்கிறது.
ரஜினி காணும் அந்த இறை சக்தி மட்டும் தான் இருக்கிறதா…. தனி மனித முயற்சிகள் இல்லையா….
நாமோ தொடர்ந்து அவரை, உங்கள் முயற்சியால் வந்தது என பார்க்க சொல்லி நிந்திக்கிறோம். இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருப்பதால் தான் இந்த நிலை.
ஒன்று நிச்சயம், என்று ரஜினி,…. தான்…… தனது முயற்சி, தன்னால் இந்த வெற்றி என அவர் பார்க்கத் துவங்கினால் நாம் இப்போது அறியும் ரஜினி காணாமல் போவார்.