பக்கங்கள்

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம்...

எண்ணை குடித்த வடை, என்பது நாம் பழக்கப்படுத்திக் கொண்ட ஒரு உணவு. ஆயில் ஜாஸ்தியா போச்சுன்னா, ஒரு நியூஸ் பேப்பர எடுத்து பொத்தி, ஒத்தி, சுத்தி போட்டுட்டு வடைய சாப்பிட்டுறலாம். எண்ணையே இல்லாத வடை என்பதை நாம் யோசிப்பதே இல்லை. அதே போல் ஒரு தமிழக கட்சியின் அரசியல் வாதி சொன்னாராம். தேன் பானையில கை விடுறோம், கையில ஓட்டின தேனை துடைச்சு போடணுமா, சரி வேண்டாம்ன்னு சாப்பிடுறோம் என்றாராம்.. லஞ்சத்த பத்தி லஜ்ஜையே இல்லாம சொன்ன பொறுப்பற்ற ஒரு ஸ்டேட்மெண்ட்.

தமிழக தேர்தல் களம் அனல் பறக்கும் இந்த சூழ் நிலையில் பரபரப்பாக பேசப்படுவது இந்த கையூட்டு தான். ஒரு குடும்பமே குத்தகைக்கு எடுத்து ஆட்டைய போட்ட கதை தெரியுமா என தெருவுக்கு தெரு முழங்கப்படுகிறது மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது நமக்கும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. என்றாலும் செய்வதறியாது நிற்கிறோம். சரி இவர் ஊழல் என அகற்றி விட்டு என்ன செய்யலாம். எதிரணிக்கு செல்ல முடியுமா. அங்கே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஊழலற்ற ராஜ ராஜ்யம் நடக்கும் என எதிர்பார்க்க முடியுமா. சந்தேகம் தான்.
சில இடர்களை களைய முடியாத போது, அதை பழக்கப்படுத்தி கொள்வதும், அதிலே நகைச்சுவை தேடுவதும் நம் இயல்பாகி விட்டது. புலம்புவதிலேயே நம் புகலிடம் என புரிந்து கொண்டது நம் துரதிருஷ்டம்.

என்றாலும் சிங்கமென எழுந்து நின்று, 71 வயதில் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம் தொடங்கிய அந்த மகானை நினைக்கும் போது, உணர்ச்சி பொங்குகிறது. ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து வறுமைக்கு உறவாகி, ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்து, காந்தி, வினோபாவே, விவேகானந்தரின் கொள்கைகளுக்கு நெருக்கமாகி தன்னை பண்படுத்தியவர் அன்னா ஹஸ்ரே. உடன் பிறந்தவர்கள் இருந்தாலும், திடமாய் உறவுகளை உதறிவிட்டு சார்புகள் வேண்டாம், எனக்கு குடியிருக்க வீடு வேண்டாம் என தன் தேவைகளை சுருக்கி கொண்டு, எல்லைகளை விரிவு படுத்திய மாவீரன்.
எனக்கு மரணம் குறித்த பயம் இல்லை, என்னை சார்ந்த குடும்பம் இல்லை, சத்தியம் என் பக்கத்தில் நிற்கும் என நிமிர்ந்து நிற்கும் இந்த மாமனிதனுக்கு நாம் சொல்ல வேண்டும். பிரதமரோ முதல்வரோ எவரும் எனக்கு பொருட்டில்லை என மரியாதையுடன் அதே நேரத்தில் மறுமொழி கேட்கும் பண்பாகட்டும், அவர் பரிமளிக்கிறார்.

குடும்பம் இல்லை, நான் தனி என அவர் முழங்குகிறார். ஆனால் நாங்கள் இருக்கிறோம் உங்கள் குடும்பத்தின் அங்கத்தினர். இந்த பாரத தாயின் பிள்ளைகள். கிரிக்கெட் போட்டியில் ஒரு தேச சிந்தனையில் ஒன்றிணைந்தோமே. உற்சாகப் படுத்தினோமே, அதே குடும்ப உணர்வில் இன்று நாம் இணைய வேண்டிய அவசியம் உள்ளது.

எங்களுக்காக குரல் கொடுக்கிறாயே தலைவா, என் தந்தையே, என் அன்பிற்குறிய அண்ணனே . உன் உண்ணா விரதம் வெற்றி பெறட்டும். உணவு இல்லாமல் ஒரு வேளை உடல் துவளலாம், உள்ளம் துவளாது. என்னை நினைந்து கொள், உனக்காக நான் இருக்கிறேன் என நாம் சொல்ல வேண்டும்.

நாடும் ஊடகமும் இன்று இணைந்து நிற்கும் தீரத்தில் திடத்தில் நல்ல முடிவு எட்டும் எனும் நம்பிக்கை பிறக்கிறது.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீர் விட்டு காப்போம்

என நாமும் முழங்குவோம். ஜெய் ஹிந்த்…

5 கருத்துகள்:

  1. சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

    அதற்கு நல்ல காலம், நேரம்...

    இணைந்து வர...

    சிங்கம் ஒன்று புறப்பட்டதே.......

    உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு... இரண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும், ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்....

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி.

    மிகவும் பொருத்தமான பாடல் வரியை மனதில் ஒட விடும் அற்புதமான பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ’’அன்னா ஹஸ்ரே’’ அவர்களின் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஆதரவு அளித்தது போல், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆதரவு அளிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. /// R.Gopi சொன்னது… சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆதரவு அளிக்க வேண்டும்...////

    மிக சரியான வேண்டுகோள். செய்வார் என எதிர்பார்போம்....

    பதிலளிநீக்கு
  5. தலைவா..
    ஊழலுக்கு எதிரா நீங்கள் உன்ன விரதம் இருகிறிர்கள்.. ஆனால் நம் மக்கள்... பிரியாணிக்கும், காசுக்கும் வாக்குகளை விற்கும் போது , அரசியல் வியாதிகளை என்ன பண்ண முடியும்... தங்களால் நல்லது நடந்தால் மகிழ்ச்சியே..

    வாழ்த்துக்கள்..

    செல்லத்துரை

    பதிலளிநீக்கு