அதுவே…. தான், செயல்படும் விதத்தில் இன்னும் ஆச்சரியமாய் இருக்கிறது. தன்னை மாற்றி, ஒரு தாவரமாக, மரமாக வளர்ந்து நிற்கும் ஆற்றலும் அதற்குள்ளே உள்ளது. என்றாலும் விதை தன் வித்தை காட்ட சில தேவைகள் உண்டு. நிலம், நீர், வளம் இன்ன பிற.
யேசு அவரது போதனைகள், பற்றி கூறும் போது, விதை குறித்து ஒரு குட்டி உவமானக் கதை சொல்லுவார். விதைகள் சிதறி பல்வேறு நிலங்களில் விழுந்தது. முதலாவதாக பாறையிலும், பாலைவனத்திலும் விழுந்தவை. அவை நீர் இல்லாமல், வளர இயலாமல் காய்ந்து போனது. அதுவே சில விதைகள் புதர்களுக்குள் விழுந்தன. விதைகள் துளிர்த்தாலும் பக்கத்தில் உள்ள புதர்கள் அவற்றை வளர விடாமல் தடுத்து விட்டன. நல்ல நிலத்தில் விழுந்தவை மாத்திரம், வளர்ந்து பன் மடங்கு பலன் தந்தது என சொன்னார்.
ஒரு ஆழமான சிந்தனையை விதைக்க, எங்கள் குழு மீண்டும் ஒரு குறும்படம் வாயிலாக வருகிறது. கதை வடிவமோ, அல்லது தொழில் நுட்பமோ எங்கள் கருத்தை சொல்லும் வாகனமே. நாங்கள் சொல்ல விரும்பிய கருத்து பரவலாய் சென்றடைந்தால் மிகப் பெரிய ஆக்கபூர்வமான தாக்கம் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் சமர்பிக்கிறோம்.
http://www.youtube.com/watch?
தங்கள் ஆலோசனையும் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
கதையின் கருத்து சிறப்பாக உள்ளது. யதார்த்தமான நடிப்பும், இசையும் முந்தைய குறும்படத்தை விடவும் ஒருபடி உயர்ந்துள்ளது. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு/// Mrs. Krishnan சொன்னது…
பதிலளிநீக்குகதையின் கருத்து சிறப்பாக உள்ளது. யதார்த்தமான நடிப்பும், இசையும் முந்தைய குறும்படத்தை விடவும் ஒருபடி உயர்ந்துள்ளது. வாழ்த்துக்கள் ////
மிக்க நன்றி, மேடம்.
இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என ஆசை. நடைமுறையில் நிறைய சோதனைகள். என்றாலும் முழுமைக்கான எங்கள் முயற்சிகள் சோர்வின்றி தொடரும்.
தங்கள் ஊக்குவித்தலும் ஆதரவும் எங்களை மென்மேலும் வலுப்படுத்துகிறது, ரொம்ப தேங்க்ஸ்..