ஒரு முண்ணனி தொலைக்காட்சி, 'இந்த டீகேட்டின் சிறந்த இந்தியன்’ எனும் விருதை சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்துக்கு வழங்கி கௌரவப்படுத்தியது. அவார்டு வாங்க அவர் மேடைக்கு அழைக்கப்பட, மின்னலென வந்து, அன்பாக…. ஒரு நிறைந்த அமைதியாய் நின்றார்.
மேடையில் ரஜினி பாந்தமாக நிற்க, மிச்சமிருந்தவர்கள் எல்லோரும் ஒரு வித பரவசத்தில் இருந்தனர். பிரணாய் ராய், சிதம்பரம், வித்யா பாலன், திரிஷா என எல்லோருமே ஒரு குழந்தை போல் குதூகலத்துடன் இருந்தனர். அதிலும் வித்யா பாலன் எங்கள் அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என மகிழ்ந்து கூறினார். ரஜினி எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு திரை உருவம் என்பதை, அந்த ஒரு காட்சியே விளக்கி சொன்னது.
1996 தொடங்கி இன்று வரை, ரஜினி எங்கு சென்றாலும் கேட்கப்படும் ஒரு கேள்வி, அரசியலுக்கு வருவீர்களா…. இல்லையா????. இக்கேள்வி எல்லோராலும், எல்லா நேரத்திலும் கேட்கப்பட்டும் கூட, இன்றும் ஓயவில்லை.
ஆச்சரியமாக இருக்கிறது, இப்படி ஒரு கேள்வி பதில் பெறாமல் இத்தனை நாட்களுக்கு நீண்டிருக்கிறதே…. என்றாலும் இன்றும் இந்த கேள்விகளும், அவர் எண்ணம் தெரிந்து கொள்ளும் முயற்சியும் சலிக்கவில்லை என்பது ஆச்சரியமான நிசர்சனம்.
வழக்கமாக கேட்கப்படும், அதே!!! கேள்வி இன்றும் கேட்கப்பட்டது. அவரோ சிரித்துக் கொண்டே, இல்லை அரசியல் பற்றி கருத்து சொல்ல விருப்பமில்லை என்றார். இது குறித்து எனக்கு தோன்றியதையே இங்கு பதிக்கிறேன்.
ரஜினி தன் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்தவர் மிகப்பெரிய சாதனைகள் செய்தவர், அவருக்கான வாழ்வு பற்றிய புரிதலும், தெளிவும் நிச்சயம் ஒரு கோணத்தில் இருக்கும் என்பது நமக்கு புரிகிறது. நாம் அறியாத, நாம் புரியாத பரிமாணங்களை அவர் தரிசித்திருக்கலாம், என்றாலும், எனது சில எண்ணங்கள்.
சரணாகதி தத்துவத்தின் மிகச் சரியான எடுத்துக்காட்டு ரஜினிதான். அடைந்துள்ள வெற்றி, தன் உழைப்பால் அல்ல, தன் சிந்தனையால் அல்ல, எல்லாம் இறைவன் அருள், இறைவன் அருள் மட்டுமே, வேறு ஒன்றுமே இல்லை, என 100 சதவிகிதம் உள்ளுக்குள் நம்புகிறார், அதையே பேசுகிறார்.
அவரை அரசியலுக்கு வா… வா… எனச் சொல்லும் பொது மக்களின் மனதை பார்த்தால், அந்த விண்ணப்பத்தில் ஒரே ஒரு எண்ணம்தான் உண்டு. நம்மை ஆள நல்ல ஒரு மனிதன் வேண்டும், நேர்மையான திடமான வீர்மான ஒரு தலைவன் வேண்டும் என நினைக்கும் நினைப்பு மட்டுமே இருக்கிறது. தமிழகத்தின் நிறைய பேருக்கு தெரிந்த இந்த குணங்கள் உள்ளவர் ரஜினிகாந்த். எனவேதான் எங்களை ஆள வாருங்கள் என அழைக்கிறார்கள்.
என்றாலும், அரசியலுக்கு வருவதென்பது, ஓப்பன் வேனில் சிரித்து கையாட்டி, மைக்கில் பேசுவது மட்டுமல்ல. ஓட்டுக்களை வாங்கி, தேர்தலில் வெற்றி பெற்று, கோட்டையில் அமர்வது மட்டுமல்ல. அரசியலின் அடி நாதம் நிர்வாகம். அவரை வரச் சொல்லி வற்புறுத்தும் மக்களுக்கு, இதை விளக்க ஒரு சிறு கற்பனை சம்பவம்.
தமிழ் நாட்டின் ஒரு முக்கிய நகரத்தின் மையத்தில், பரபரப்பான ஒரு சாலையின் ப்ளாட்பார்ம் கடைகள் மிகுந்து இருக்கிறது.
எங்களால் நடக்க முடியவில்லை. சாலையில் விபத்துக்கள் அதிகரிக்கிறது. மிகவும் தொந்தரவா இருக்கு இந்த நடைபாதைக் கடைகளை நகர்த்துங்க எனும் மனு ஆட்சியாளரான தங்களை வந்தடைகிறது.
இல்லைங்க இதுதான் எங்க பொழப்பு, எங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கு. வேற இடம் போக சொன்னீங்கன்னா பிசினஸ் ஓடாது. தயவுசெஞ்சு எங்கள இங்கயே இருக்க விடுங்க எனும் மக்கள் கூட்டம் இன்னொரு பக்கம்.
நாடு என்பதே, டார்வின் தத்துவப்படி சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட், என நம்பும் மக்களின் போராட்டங்கள் நிறைந்ததே. இதில் எந்த பிரிவை ஆதரிப்பது என்பது மிகவும் நுணுக்கமான ஒரு முடிவு எடுத்தல். இது போல் ஒன்றல்ல இரண்டல்ல, ஓராயிரம் பிரச்சனைகள் வரும். ஒரு நாளைக்கு 25 மணி நேரத்துக்கான வேலை பளுவோடு வருவது தான் முதல்வர் பதவி. மேற்கூரிய இந்த முடிவு எடுக்க உச்சகட்டமாக ஒன்றிரண்டு வினாடிகள் தான் உங்களுக்கு கிடைக்கலாம்.
இத்தகைய ஒரு நிர்வாகப் பணியை ஆர்வத்துடன் ஆத்மார்த்ததுடன், நேர்மையுடன் மனிதாபிமானத்துடன் செய்யும் முனைப்பு ஒரு நல்ல முதல்வருக்கு வேண்டும். எடுக்கும் முடிவில் ஒரு பிரிவினருக்கு சாதகமும், இன்னொரு பிரிவுக்கு பாதகமும் இருக்க வாய்ப்புண்டு. தொலை நோக்கு பார்வையும், கட்சியை கட்டி காப்பாற்றி, அரசியலும் செய்து, ஆட்சியும் செய்யும் மிக கடினமான ஒரு பணியே முதல்வர் நாற்காலி.
மீண்டும் ரஜினியின் மன நிலையில் பார்க்கும் போதும், அவரது ஆழமான நம்பிக்கையில், என் கையில் எதுவும் இல்லை, தான் இறைவன் இயக்கும் ஒரு கருவி மட்டுமே, இறைவன் சித்தம் இருந்தால்…. அவரது கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என நினைக்கிறார்.
அரசியலுக்கு வரணுமா … வேண்டாமான்னு, எனக்கு தெரியாது என தெளிவாய் இருக்கிறார். வருவேன் வரமாட்டேன் என தெரியாது என்கிறார். ஆனால் அவரது இந்த நிலைப்பாடு அவர் குழப்புகிறார், சுய விளம்பரம் தேடுகிறார் என மற்றவரால் புரிந்து கொள்ளப்படுகிறது.
இது எல்லா வற்றிற்கும் அடிப்படையில் என்ன இருக்கிறது.
ரஜினி காணும் அந்த இறை சக்தி மட்டும் தான் இருக்கிறதா…. தனி மனித முயற்சிகள் இல்லையா….
நாமோ தொடர்ந்து அவரை, உங்கள் முயற்சியால் வந்தது என பார்க்க சொல்லி நிந்திக்கிறோம். இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருப்பதால் தான் இந்த நிலை.
ஒன்று நிச்சயம், என்று ரஜினி,…. தான்…… தனது முயற்சி, தன்னால் இந்த வெற்றி என அவர் பார்க்கத் துவங்கினால் நாம் இப்போது அறியும் ரஜினி காணாமல் போவார்.
/நாமோ தொடர்ந்து அவரை, உங்கள்
பதிலளிநீக்குமுயற்சியால் வந்தது என பார்க்க
சொல்லி நிந்திக்கிறோம் . இந்த
விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருப்பதால்
தான் இந்த நிலை .
ஒன்று நிச்சயம், என்று ரஜினி,….
தான்…… தனது முயற்சி, தன்னால்
இந்த வெற்றி என அவர் பார்க்கத்
துவங்கினால் நாம்
இப்போது அறியும் ரஜினி காணாமல்
போவார் ./
-
தன் பலம் யானைக்கு தெரியாது என்பது போல தலைவர் தன் பலத்தை இன்னும் உணரவில்லையோ!
தலைவா...
பதிலளிநீக்குநீங்க கேப்டன் ரசிகராச்சே... இப்போ, ரஜினிய பத்தி புகழ்மாலை பாடியிருக்கீங்க...
தேமுதிக கட்சில இருந்து விலகிட்டீயளா?
பின்குறிப்பு : எங்கள் தலை மக்கள் நாயகன் பற்றி ஒரு பதிவு எழுதுவீர்களா!!
(இவண் : பசுநேசன் ரசிகர்கள் மன்றம் - படித்துறை)
R.Gopi சொன்னது… நீங்க கேப்டன் ரசிகராச்சே... இப்போ, ரஜினிய பத்தி புகழ்மாலை பாடியிருக்கீங்க...
பதிலளிநீக்குதேமுதிக கட்சில இருந்து விலகிட்டீயளா? ////
தலைவா, நான் உங்க அதிரடி கமெண்ட்சுக்கு ரசிகன்..
அப்புறமா, எனக்கு தெரியவே இல்லையே.. நான் தேமுதிக விலயா இருக்கேன்.... அப்டியா...
புவர் மேன்ஸ் ரஜினிதான நம்ம விஜி.... தேமுதிக வில இருந்தாக் கூட ரஜினி புகழ் பாடலாமே...!!!
அப்புறமா... ஒரு ரகசியம். ரஜினிய பத்தி நடு நிலையா எழுதியதாத் தான் நினைச்சேன். புகழ் பாடுற மாதிரியா இருக்குது....
//// பின்குறிப்பு : எங்கள் தலை மக்கள் நாயகன் பற்றி ஒரு பதிவு எழுதுவீர்களா!!(இவண் : பசுநேசன் ரசிகர்கள் மன்றம் - படித்துறை)///
பாசத்திற்குரிய பண்பாளர் அண்ணன், படித்துறை பால்பாண்டி அவர்களே... பொருளாளர், ஜெய் சுக்கு அவர்களே, துணை தலைவர் அண்ணன், மொக்க மூக்கன் அவர்களே.
நம் தலைவர், பசு நேசன் பற்றி, பதிவு என்ன ஒரு புத்தகமே போட்டுடலாம்.... நம்ம எடக்கு மடக்கு காரர் கிட்ட ஒரு வார்த்தை பேசிடுறேன்.... அவர் ஓகேன்னா, நம்ம வேலைய தொடங்கிறலாம்...