பக்கங்கள்

IPL ன் டேஞ்சர் ரூட்

டிவியில் கிரிக்கெட்டு ஓடினால்.... அது லைவா இல்லையா!!!......  என்று கூட பார்க்காமல், நாம் டைவ் அடிப்போம். அப்படி ஒரு ஈடுபாடு. இருக்கிற வேலய ஈசியா கிடப்புல போடுற அளவுக்கு அதுல ஒரு ஈடுபாடு... என்னவோ தெரியல...  பச்ச புல்லும்... அந்த கோமணம் மாதிரி பிட்சும், நடுவுல ஸ்டம்பும், பேட்ஸ்மேன், பௌலர் என பார்த்ததுமே குஷியாகி விடுகிறோம்.

கிரிக்கெட் எங்களின் மதம்..... என ஃபீல் பண்ணும் ஒரு கூட்டம் உண்டு... ஒரு  ரசிகர் இப்படி கூட சிலேடையாய் சிலாகித்திருக்கிறார். கடவுள் கிரிக்கெட்டு விளையாட ஆசைப்பட்டார் டெண்டூல்கராய் மண்ணில் பிறந்தார் என.... கிரிக்கெட்டை உயிருக்கும் மேலாய் என டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு எடுத்துக் கொள்ளும்... ரசிகர்கள் கூட்டமும் இங்கு உண்டு.

தமிழ் திரையுலகம் கூட மொக்கையாய் ஒரு படம் எடுத்து விட்டு அது ஓடவில்லை யென்றால் ஹூம்... IPL நடக்கும் போது நாம என்ன செய்யுறது... டிவியில மேட்ச் ஓடும் போது தியேட்டருக்கு யார் வருவா........  யாரு நம்ம கூத்துக்கு வருவா என குன்சாக குறை சொல்லி... கும்மியடிக்கும். வீட்டில் உள்ள பெண்கள்... இல்லத்தரசிகள் கூட சலித்து கொள்கிறார்கள்.... ஹூம்.. நல்லா கண்டுபிடிச்சாங்கய்யா இந்த விளையாட்ட, என்ன இருக்குதோ தெரியல.. இந்த விளையாட்டுல... ம்...  வீட்டுல நிம்மதியா ஒரு சீரியல் பார்க்க முடியுதா என சீரியஸாய் புலம்புகிறார்கள்.

சரி என்ன இந்த கிரிக்கெட்டு.. எப்போ தொடங்கியது...  என பார்த்தால். இதன் தொடக்கம் அல்லது ஆ..ரம்பம்... 16ம் நூற்றாண்டு. லண்டனை சுத்தியுள்ள நாடுகளில் இருந்து மட்டை என குறிக்கும் டச்சு மொழியின் கிரிக் என அழைக்கப்பட்ட நாமகரணமே.

இது ஆரம்பத்தில் பச்ச புள்ள விளையாட்டுதான். பெரியவங்க யாரும் மட்டைய தொடல. அப்புறம் தான் பெரியவங்களும் கையில எடுத்தாங்களாம்.... அதுவே பின்னர், சூதாட்டமாய் உறுவெடுத்தது. (அப்பவே தொடங்கிட்டாங்களா.....) சூது என்று வந்த பின்னால சும்மா இருக்க முடியுமா....  பெரிசுங்க எல்லாம் களத்தில் குதித்து, ஸ்டாராங் டீம் எல்லாம் உறுவாக்கி கனகச்சிதமா நடந்துச்சு இந்த விளையாட்டு...

இரண்டு போர்களின் காரணமாய் 19ம் 20 நூற்றாண்டின் சில வருடங்களில் இந்த விளையாட்டு காணாமலும் போயிருந்தது. பின்னர் வெள்ளைக்காரன் விளையாடினான்.  சூரியன் அஸ்தமிக்காத ராஜ்யம் என வெள்ளைக்காரன் நாடு இருந்ததாலேயே.. இந்த விளையாட்டு... அவன் போன இடத்துக்கெல்லாம் இதுவும் சென்றது.. அதனாலேயே கிரிக்கெட்டு...  உலகெங்கும் வைரஸ் போல்  பரவியது.

இந்த கிரிக்கெட்டில் இரண்டு குழுக்கள் உண்டு. விளையாடுற மொத்த பயலுவவும் உள்ள வந்துருங்க... பந்த பொறுக்கி போடுங்க.. என தொடங்கிய விளையாட்டு... குளிர் காலம் போய், வெயில் அடிக்கும் போது.. அதில் சுகமாய் நிற்க.. என உருவாக்கப்பட்டதாகவும் ஒரு செவி வழிச் செய்தி உண்டு...

ஆரம்பத்தில் இது ஜெண்டில் மேன் கேம், மிச்ச எல்லா விளையாட்டுக்கும், இந்த விளையாட்டுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், இதில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. யேய்.. யாரும் செயிக்கல.. யாரும் தோக்கல... ம்... ஒக்கே....

முதலில் கொண்ட டெஸ்ட் வடிவத்தில் இந்த விளையாட்டில்... ஏறக்குறைய எல்லா மேட்சும் டிராதான். ஆனால் இன்று காலம் மாறி விட்டது.. பாஸ்ட்.. பாஸ்ட்.. என வேகமாகி விட்ட உலகில்... கிரிக்கெட்டின் வடிவமும் மாறி விட்டது... அந்த ஐந்து நாள் பொறுமை எல்லாம் இல்லாது ... சீக்கிரம் முடிங்கப்பா... சோலி இருக்குதுல்ல என சொல்ல ஆரம்பித்ததே.. என்று இந்த விளையாட்டு.. விளையாடுவது என்கிறதை...  விட்டு விட்டு... பார்த்து ரசிக்க துவங்கினோமோ அன்றிலிருந்து...

அதிலும்... லேட்டஸ்ட் நிலவரப்படி... விளையாட்டை துவங்கிய சில மணிகளில் பெட்டியை கட்டும் நூதன் டொண்டி டொண்டி என வடிவமைத்து விட்டோம். இந்த வடிவத்தில்.. தொடங்குறதும் தெரியாது.. முடியுறதும் தெரியாது...

டிவி நம்மை அறுக்கும்..... ஆனால் டிவியில் அறுப்பது போல் ஒரு சுவையான காட்சி இந்தியன் திரைப்பட்த்தில் வரும்.

அதில் கமல்ஹாசன், ஒரு கொலை செய்வார், அதை லைவ்வாய் டிவியில் ரிலே செய்வதுதான் ஐடியா. பேச வேண்டிய வசனம் பேசிவிட்டு, கமல் இப்படி சொல்வார்... “சரி இதுக்கு மேல, கர்ப்பிணி பெண்கள், இதய நோய் உள்ளவங்க எல்லாம் வேற சேனலுக்கு போயிடுங்க” என சொல்லிவிட்டு கொல்லி விடுவார்.


அதுபோல், IPLன் சில மேட்சுக்கும் சொல்லலாம் சாலப் பொருத்தம். இல்லேண்ணா பாருங்களேன், கடைசி ரெண்டு ஓவர்ல 30 ரன் அடிக்கணும். என எக்குத்தப்பாய் ஒரு டென்ஷனை கொடுத்து விடுகிறது இந்த வடிவம்...

ஒரு ஆட்டத்தில... அடிச்சுப் புட்டாரு நம்ம சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவர் தோனி. பந்து பறக்கும் போது.. நமக்கு பரபரன்னு இருக்குது.... நமக்கு மட்டுமா... அவர் அடிச்சு முடிச்சதும் எல்லைக்கோட்டில இருந்து ஓடி வந்த.... அவர் பாய்ஸெல்லாம் பார்க்கணுமே. ................அதிலேயும் நம்ம முரளி ஓடி வந்தத பார்க்கும் போது யேயப்பா............., என்ன உணர்ச்சியப்பா சாமி.... என கேட்கத் தோணுது.

 IPL நல்லாத்தான் இருக்குது.. இந்த புது வடிவமும் நல்லாத்தான் இருக்குது.. ஆனா  IPL முளைச்சு இன்னும் மூணு இலை விடல, அதுக்குள்ள இந்திய பாராளுமன்றம் போய், மூணு நாள் வேலைய மொடக்கிருச்சு.... நம்ம IPL. அது மட்டுமா இந்த IPL ஐய்யனார் வாங்கின முதல், மந்திரி பதவி காவு நம்ம சசி தரு. திரு திருன்னு முழிக்கிறார்.........., ஏண்டா இந்த துபாய் சுனந்தா அழகு கலை நிபுணர்கிட்ட காதல் வலையில விழுந்தோம்ன்னு.

பாய்ஸ் சித்தார்த்தும், வெங்கடேசும் டெக்கானின் சியர், அவர்கள் மட்டுமா, ஒரு பெரிய கேங்கே எல்லைக் கோட்டுக்கு அப்பால இருந்துகிட்டு பிலிம் காட்டுது. பூரா சினிமா இண்டெஸ்டிரியுமே பலாப்பழத்த மொய்க்கிற மாதிரி.............. பணம் இருக்குது புகழ் இருக்குதுன்னதும் இங்கனக்குள்ளயும் வந்திருச்சு.

அமெரிக்காவில படிக்கிற காலத்தில டிரக் அடிச்சு, துப்பாக்கி முனையில வழிப்பறி கேஸ்ல மாட்டிக்கிட்ட மோடி மஸ்தான் தான் இன்னிக்கு IPL சேர்மன். இந்த விசயமெல்லாம் ஊழல் குப்பைய கிண்டினவுடன வெளிய வருது.

நேத்து மேட்சில ஜெவிச்சவுடனே தோனிய கூப்பிட்டு கேட்டாங்க, தம்பி, தங்கக் கம்பி.. பிச்சுல பின்னிட்ட...  பிச்சுமணி, அடேயப்பா பிச்சு உதறிட்டியேப்பான்னு கேக்குறாங்க...

தோனி...  அத்தனை சந்தோசத்திலேயும் அமைதியா சொன்னாரு... பின்ன  நம்ம தோனியில்லையா,.......  ”சந்தோசங்க, ஆனா எப்பவுமே இப்படி அடிக்க முடியாதுங்க. இவ்வளவு காசு செலவழிச்சு ஸ்பான்ஸர்ஸ் படுற சிரமத்துல அட்லீஸ்ட் செமி பைனல்ஸ் வரைக்குமாவது வந்துரணும். அதை செஞ்சுப்புட்டேன், அதுக்கப்புறம் ஒண்ணும் சொல்ல முடியாது. நாலுமே நல்ல டீமுதான், யாராவது ஒரு ஆளு பிரமாதமா விளையாடிட்டாலோ, அல்லது ஒரு ஓவர் ஓவர்பிலிம் காட்டிட்டாலோ போதும் மேட்ச் பீச்சாயிரும்ன்னு பாந்தமா சொன்னாரு.

ரொம்ப கரெக்ட் சார்.

விளையாட்டு என்பதும்... அதில் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையும் என்பதையும்... பார்க்கும்... பக்குவம் நம்மை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறது...

நல்ல வேளை இது வரை விளையாடும் அணிகளுக்கிடையே போட்டியும் பொறாமையும் பாதிக்கும் அளவில் இல்லை. ஆரம்ப நாட்கள் தானே என்று சொல்லவும் வேண்டியும் இருக்கிறது...  ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்பு உண்டு. .................அப்படி எடுக்கும் போது டேஞ்சர்...........!!!!!!!!!!!!!!

மிதமிஞ்சிய வெறுப்பு சில சமூக விரோதிகளுக்கு வேலை கொடுக்கும். பணமும், பாலியலும் தன் சேட்டையை தொடங்கும். கோட்ச் கொலைகள், தில்லுமுல்லுகள், பாலியல் குற்றச்சாட்டு என அசிங்கமாய் வளரும் (சில /மிச்ச கவுண்டி விளையாட்டை போல்) இது பாதை மாறாமல் இருத்தல் அவசியம்.

இன்று அரசியலை பதம் பார்த்திருக்கும் இந்த விளையாட்டு விபரீதமாக கூடாது. வினையாக்க கூடாது. எச்சரிக்கை.

ஆனாலும் என்னவோ.. நாம் அனைவருமே பொறுப்பானவர்கள்.. ஆழமாய் சிந்திப்பவர்கள்.. நம்மை கூறு போடும் விஷயங்களை நாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை... ஆம்.... ஒரு லிமிட்டை தாண்டும் போது.. அது நம்மை பாதிக்கும் என்பதை உணரும் போது.. அதை சட்டை செய்யாமல்... விலக்கும்... குணம் உள்ளவர்கள்...

 IPL அப்படி ஒரு டேஞ்சர் ரூட் போகாமல் நாம் திசை திருப்ப வேண்டும்...

6 கருத்துகள்:

  1. //அமெரிக்காவில படிக்கிற காலத்தில டிரக் அடிச்சு, துப்பாக்கி முனையில வழிப்பறி கேஸ்ல மாட்டிக்கிட்ட மோடி மஸ்தான் தான் இன்னிக்கு IPL சேர்மன்//

    என்ன சார் இவ்வளவு தைரியமா கிளிக்கிறீங்க....நன்றாக அலசி காயப்போட்டுள்ளீர்கள்...


    ஒன்னு சொல்லவா கிரிக்கெட் எனக்கு பிடிக்காது...அதனால நான் தெளிவா இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க கிளியனூர் இஸ்மத், மிக்க நன்றி.

    /// என்ன சார் இவ்வளவு தைரியமா கிளிக்கிறீங்க....நன்றாக அலசி காயப்போட்டுள்ளீர்கள்... ////

    தேங்க்ஸ் சார். பாவம் மஸ்தான்,ரிசைன் பண்ணிட்டு வெளிய போற அவசரத்துல இருக்கிறாருன்னு தெரிஞ்சதால தைரியமா எழுதிப்புட்டேன். நீங்க அவர்கிட்ட சொல்ல மாட்டீங்களே... ஹா...ஹா...ஹா....

    /// ஒன்னு சொல்லவா கிரிக்கெட் எனக்கு பிடிக்காது...அதனால நான் தெளிவா இருக்கேன்////

    அதிர்ஷடக்காரர் சார் நீங்கள். மாட்டிக்கிட்டு முழிக்கிற எங்களப் போல சில பரிதாபமானவர்க்ளை எச்சரிக்க ஆசைப்பட்டு எழுதியதே இப்பதிவு.

    இப்ப பாருங்களேன் இதன் விழுதுகள் இன்று கருப்புப் பணம், மேட்ச் பிக்ஸிங், ஹவாலா என்றெல்லாம் கிளம்பி விட்டதே.

    பதிலளிநீக்கு
  3. நான் ஒரு தீவீர கிரிக்கெட் ரசிகன் !
    என்னை பொறுத்தவரை முறையான கிரிக்கெட் என்பது 5 நாள் ஆட்டம், மட்டும் 50 ஓவர் ஆட்டம் மட்டுமே.இதை வியாபார நோக்கத்தில் கொண்டு வந்த 20 /20 கிரிக்கெட் இன் தரத்தை அதாவது batsman இன் முறையான ஆட்டத்தை கெடுக்க கூடுபவையே ! அந்த அடி படையில் நன் 20 /20 இக்கு எதிரானவன்.

    நான் விரும்பும் கிரிக்கெட் க்கு அல்ல !

    சச்சின் எப்பவும் நம்பர் ஒன் batsman தான் அதில் சந்தேகம் வேண்டாம் !

    அன்புள்ள
    அபுதாஹர்

    பதிலளிநீக்கு
  4. விஷயமுள்ள பதிவு. மோடியின் மூலம் இதைப் படித்த பிறகுதான் தெரிந்தது.

    எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். 20-20 பிடிக்கும். ஆனால், ஐபிஎல் பிடிக்காது. அப்படியே ஐரோப்பிய கால்பந்தாட்ட க்ளப் விளையாட்டின் பிரதி. சியர் கேர்ள்ஸ் மட்டும் அமெரிக்க பள்ளிக்கூட விளையாட்டுகளிலிருந்து உலக 20-20 வழியாக இறக்குமதி பண்ணி விட்டார்கள். ஐரோப்பிய கால்பந்தாட்ட க்ளப் முறையில் பிரச்சினை என்னவென்றால் ஒரு க்ளப்புக்கு ஆடுபவர்கள் அந்த க்ளப்புக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று தேவைவில்லை. எங்கேயிருந்து வேண்டுமானாலும் ஆட்டக்காரர்களை வருவித்துக் கொள்ளலாம். ஆட்டக்காரர்கள் வெறும் பணத்திற்காக மட்டுமே ஆடுகிறார்கள். அணியை நடத்துகிறவர்கள் பணத்திற்காக மட்டுமே அதை நடத்துகிறார்கள். ஆட்டத்தை நிர்வகிக்கிறவர்களும் அப்படியே. இப்படி பணம் 100%; ஆட்டத்தின் மேலுள்ள பாசம் 0%. இதுதான் ஐபிஎல்.

    கடந்த வாரம் இந்தியாவில் இருந்தேன். எங்கே பார்த்தேன் என்று நினைவில்லை. ஆனால் என்ன பார்த்தேன் என்று நினைவிருக்கிறது. நான்கு பேர் கிரிக்கெட் ஆடுகிறார்கள். லுங்கியணிந்த வீரர்கள். 17-18 வயதிருக்கலாம். பள்ளி விடுமுறையில் ஆடும் கிராமத்து நண்பர்களாயிருக்கலாம். அந்த நேரத்தில் ஒருவர் பந்தை வீசுகிறார். மட்டையாளர் பந்தை எதிர் நோக்குகிறார். அவர் பந்தை எப்படி அடித்தார் என்று பார்க்கும் ஆவலுடன் தலையைத் திருப்புகிறேன். நான் செல்லும் வாகனம் கணநேரத்தில் தெருவைக் கடந்து விட்டது. ஏமாற்றமாக உணர்கிறேன். இந்த ஏமாற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றால் உணரப்படுவதில்லை. மாத்யூ ஹைடனுக்கும் சென்னைக்கும் என்னய்யா தொடர்பு, சென்னை ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன என்றுதான் தோன்றுகிறது.

    இவ்வளவு விமர்சனம் இருந்தாலும் இரண்டு விஷயங்களுக்காக ஐபிஎல்லைப் பாராட்ட வேண்டும். ஒன்று, இந்திய பெருநகரங்களில் மாலை நேரங்களில் பொழுது போக்கிற்கான வழி ரொம்பவும் குறுகலாக இருந்து வந்தது. அதைக் கொஞ்சம் விரிவு படுத்தியதற்காக. இரண்டாவது, விளையாட்டுப் போட்டிகளை வணிக ரீதியாக வெற்றியாக்குவது எப்படி என்று நிரூபித்தமைக்கு. கிரிக்கெட்டிற்கு சிறிய ஊர்களில் மைனர் லீக்குகள் உருவாவது, ஹாக்கி, கூடைப்பந்து போன்றவற்றிற்கு மேஜர் லீக்குகள் ஏற்படுவது, ஏற்கனவே இருக்கும் கால்பந்து க்ளப் ஆட்டங்கள் இன்னும் வணிக ரீதியாக வெற்றியடைவது முதலானவை படிப்படியாக நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தியுள்ளது ஐபிஎல்.

    நல்ல கட்டுரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //// Abu சொன்னது…
    நான் ஒரு தீவீர கிரிக்கெட் ரசிகன் ! /////

    வாங்க அபு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி


    //// என்னை பொறுத்தவரை முறையான கிரிக்கெட் என்பது 5 நாள் ஆட்டம், மட்டும் 50 ஓவர் ஆட்டம் மட்டுமே.இதை வியாபார நோக்கத்தில் கொண்டு வந்த 20 /20 கிரிக்கெட் இன் தரத்தை அதாவது batsman இன் முறையான ஆட்டத்தை கெடுக்க கூடுபவையே ! அந்த அடி படையில் நான் 20 /20 க்கு எதிரானவன். நான் விரும்பும் கிரிக்கெட் க்கு அல்ல !/////

    என்ன செய்வது இன்றைய அவசர உலகில் சுருக்கமாவும் இருக்கோணும், சுள்ளுன்னு இருக்கோணும்ன்னு மாத்திப் புட்டாங்க..

    ///// சச்சின் எப்பவும் நம்பர் ஒன் batsman தான் அதில் சந்தேகம் வேண்டாம் !////

    ஆமாயில்ல !!!! ????

    பதிலளிநீக்கு
  6. //// விக்டர் சுரேஷ் சொன்னது…
    விஷயமுள்ள பதிவு. மோடியின் மூலம் இதைப் படித்த பிறகுதான் தெரிந்தது. /////

    வாருங்கள், நன்றி. நேரம் உருவாக்கி ஒரு நல்ல பின்னூட்டம் இட்டதற்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

    //// எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். 20-20 பிடிக்கும். ஆனால், ஐபிஎல் பிடிக்காது. பணம் 100%; ஆட்டத்தின் மேலுள்ள பாசம் 0%. இதுதான் ஐபிஎல்.///

    நச்சென்று ஒரு நெத்தியடி.

    //// கடந்த வாரம் இந்தியாவில் இருந்தேன். எங்கே பார்த்தேன் என்று நினைவில்லை. ஆனால் என்ன பார்த்தேன் என்று நினைவிருக்கிறது. நான்கு பேர் கிரிக்கெட் ஆடுகிறார்கள். லுங்கியணிந்த வீரர்கள். 17-18 வயதிருக்கலாம். பள்ளி விடுமுறையில் ஆடும் கிராமத்து நண்பர்களாயிருக்கலாம். அந்த நேரத்தில் ஒருவர் பந்தை வீசுகிறார். மட்டையாளர் பந்தை எதிர் நோக்குகிறார். அவர் பந்தை எப்படி அடித்தார் என்று பார்க்கும் ஆவலுடன் தலையைத் திருப்புகிறேன். நான் செல்லும் வாகனம் கணநேரத்தில் தெருவைக் கடந்து விட்டது. ஏமாற்றமாக உணர்கிறேன். இந்த ஏமாற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றால் உணரப்படுவதில்லை. மாத்யூ ஹைடனுக்கும் சென்னைக்கும் என்னய்யா தொடர்பு, சென்னை ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன என்றுதான் தோன்றுகிறது. /////

    என்ன ஒரு ஆழமான கருத்தை எளிமையாய் ஒரு நிகழ்வின் மூலம் சொன்ன தங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.


    நம்ம தோனி கூட சொன்னாரு, நிறைய பேர் எங்கிட்ட வந்து தமிழ்ல பேசுறாங்கன்னு.

    //// இவ்வளவு விமர்சனம் இருந்தாலும் இரண்டு விஷயங்களுக்காக ஐபிஎல்லைப் பாராட்ட வேண்டும்.

    ஒன்று, பொழுது போக்கிற்கான வழி விரிவு படுத்தியதற்காக.

    இரண்டாவது, விளையாட்டுப் போட்டிகளை வணிக ரீதியாக வெற்றியாக்குவது எப்படி என்று நிரூபித்தமைக்கு. ////

    மிக சரியான அற்புதமான அலசல்.

    தங்களது பின்னூட்டம் மிளிர்கிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு